தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று செப்டம்பர் 10ஆம் தேதி சென்னை அருகே உள்ள பனையூரில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். 40 ஆயிரம் இருக்கைகள் மட்டுமே அங்கு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் நிலையில் மாறாக ஒரு லட்சத்திற்கு அதிகமான ரசிகர்கள் திரண்டதாக கூறப்படுகிறது.
ரூ 2000 5000 10,000 விலையிலான டிக்கெட் அதிகப்படியாக விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஏ சி டி சி என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது .
முறையான ஏற்பாடுகள் எதுவும் அங்கு அமைக்கப்படாத காரணத்தினால் இருக்கைகளை ரசிகர்கள் தூக்கிச் சென்றனர். மேலும் டைமண்ட் பிளாட்டினம் என இருக்கைகள் பிரிக்கப்பட்டிருந்தாலும் குளறுபடி காரணமாக வெவ்வேறு பிரிவுகளில் ரசிகர்கள் அமர்ந்தனர்.
மேலும் அங்கு முறையான பார்க்கின் வசதிகள் அமைக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இவை மட்டுமில்லாமல் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்டோர் மிகவும் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது.
நிகழ்ச்சி அரங்கத்திற்கு வெளியே மிகவும் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. எனவே போக்குவரத்து நெரிசல் காரணமாக முதலமைச்சரின் வாகனமும் பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று செப்டம்பர் 11ஆம் தேதி நிகழ்ச்சி நடந்த இடத்தை தாம்பரம் காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விசாரணை செய்த பின் விவரங்கள் தெரியவரும்.
இந்த நிலையில் “இந்த குளறுபடிகளுக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம்.” என ஏ ஆர் ரகுமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் தங்களது டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்து ஏ சி டி சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கவும் ஏ ஆர் ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது போன்ற நிகழ்ச்சிகளில் பெண்கள் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மிக முக்கியம் எனவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் ஏ ஆர் ரகுமான்.
AR Rahman concert issue Police enquiry at spot
கூடுதல் தகவல்..
ARR நிகழ்ச்சி – டிஜிபி உத்தரவு
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி குறித்து விசாரிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு;
இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்திடம் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க தாம்பரம் காவல் ஆணையருக்கு டிஜிபி உத்தரவு.
கூடுதல் தகவல்கள்…
ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நோட்டீஸ்…!
இசை நிகழ்ச்சி குளறுபடி எதிரொலி ACTC ஏற்பாட்டாளர் ஹேம்நாத் மற்றும் அவரது மனைவி யாழினி மற்றும் மற்றும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஆர்ச்சிட் உரிமையாளர் பூங்கொடி ஆகியோர் நேரில் ஆஜராக கானாத்துர் காவல் ஆய்வாளர் சதீஸ் உத்தரவு..