தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த், மோகன்லால், தமன்னா நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ‘ஜெயிலர்’ ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இதில் ரஜினியுடன் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த்ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘ஜெயிலர்’ பட இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 29ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்த நிலையில் ‘காவலா…’ என்ற பாடல் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியானது. பொதுவாகவே ரஜினி பட பாடல்கள் என்றால் ரஜினியின் அறிமுக பாடல் அல்லது தத்துவ பாடல் ஏதாவது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தமன்னா குத்தாட்டம் போட்ட காவலா என்ற பாடல் வெளியானது.
இதனால் ரஜினி ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் காவாலா பாடல் குறித்து பல மீம்ஸ்கள் உருவாகி வருகின்றன.
மேலும் ரஜினியை விட தமன்னா ஐட்டம் சாங் கிளாமருக்காக ‘ஜெயிலர்’ படத்தை பார்க்கலாம் எனவும் கலாய்த்து வருகின்றனர்.
அதில் ஒரு மீம்ஸ் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.
அதில் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் சமுத்திரக்கனி ஒரு காட்சியில் போன் போடும் காட்சியை பகிர்ந்துள்ளனர்.
அதில்…
Hello சீமான் அண்ணே வீடா, அண்ணே Englishல “Jailer” ன்னு Title வச்சிகிட்டு, ஒரு கன்னட நடிகர், ஒரு இந்திக்கார பொண்ணு கூட தெலுங்கு பாட்டுக்கு ஆடிட்டு இருக்காரு. கேட்டா தமிழ்ப் படம்ன்னு சொல்றாங்க. கொஞ்சம் என்னான்னு கேளுங்கண்ணே” என வாசகங்களை கொடுத்து டிசைன் செய்துள்ளனர்.
Rajinis Jailer song Kaavaalaa troll goes viral