லோகேஷை கௌரவப்படுத்தி நெல்சனை அசிங்கப்படுத்திய விகடன்.; ரஜினி அட்வைஸ்

லோகேஷை கௌரவப்படுத்தி நெல்சனை அசிங்கப்படுத்திய விகடன்.; ரஜினி அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கோலமாவு கோகிலா’ & ‘டாக்டர்’ என இரு வெற்றி படங்களை கொடுத்து ‘பீஸ்ட்’ என்ற படத்தை இயக்கினார் நெல்சன்.

விஜய் நடித்திருந்த இந்த படம் மாபெரும் தோல்வியை தழுவியது. இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தன்னுடைய ‘ஜெயிலர்’ படத்தை இயக்கும் வாய்ப்பை நெல்சன்க்கு வழங்கினார் ரஜினிகாந்த்.

எனவே ‘பீஸ்ட்’ தோல்வியால் நெல்சனுக்கு அந்த வாய்ப்பை வழங்கக் கூடாது என ஒரு சிலர் கூறி வந்தனர். ஆனாலும் நெல்சன் மீது நம்பிக்கை வைத்து அந்த படத்தை கொடுத்தார் ரஜினிகாந்த்.

மறுபக்கம் ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என அதிரடியாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார் லோகேஷ். தற்போது விஜய்யின் ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் லோகேஷ் மற்றும் நெல்சன் ஆகிய இருவரும் சமீபத்தில் விகடன் நடத்திய விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது காரிலிருந்து இறங்கும் லோகேஷை மேடை வரை பவுன்சர்கள் பத்திரமாக அழைத்து சென்றனர்.

ஆனால் நெல்சன் வரும்போது யாரும் கண்டு கொள்ளவில்லை. அவராகவே சென்று மேடையருகே அமர்ந்தார்.

இந்த சம்பவம் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. சினிமாவில் ஒரு தோல்வி கொடுத்து விட்டால் அவருக்கு திறமை இல்லையா.? எப்போதும் வெற்றிக்கு மட்டும் தான் மரியாதையா? என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தை அறிந்த ரஜினிகாந்த் நெல்சனுக்கு அட்வைஸ் வழங்கியதாக தகவல்கள் வந்துள்ளன.

“கண்ணா இதுபோல பல அவமானங்களை நான் கடந்து இருக்கிறேன்.. அதை எல்லாம் கடந்து தான் இன்று இந்த நிலைக்கு உயர்ந்து இருக்கிறேன்.

எனவே நீங்கள் அதை பெரிது படுத்தாமல் உங்கள் திறமை மீதும் தொழில் மீதும் கவனம் செலுத்துங்கள். ‘ஜெயிலர்’ படத்தை மிக வெற்றி படமாக கொடுங்கள்” என அட்வைஸ் செய்தாராம் ரஜினி.

இதனால் நெகிழ்ந்து போனாராம் நெல்சன்.

Rajinikanth’s advice to director nelson

அன்றைய ‘விடுதலை’ பட நாயகன் ரஜினி இன்றைய ‘விடுதலை’ படத்திற்கு பாராட்டு

அன்றைய ‘விடுதலை’ பட நாயகன் ரஜினி இன்றைய ‘விடுதலை’ படத்திற்கு பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் நாவலை அடிப்படையாக கொண்டு ‘விடுதலை’ படம் உருவானது.

இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கி இருக்கிறார். இதன் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இளையராஜா இசையில் உருவான இந்த படத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதி கௌதம் மேனன், ராஜுவ் மேனன், பவானி ஸ்ரீ, சேத்தன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தை பார்த்த பலரும் பாராட்டி வரும் வேளையில் நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தை பாராட்டி படக்குழுவினரை அழைத்து பேசியுள்ளார்.

மேலும் தன் ட்விட்டர் பக்கத்தில் விடுதலைப் படம் குறித்து பாராட்டி பதிவிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

அதில்..

“விடுதலை இதுவரை தமிழ் திரையுலகம் பாத்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம்!

சூரியின் நடிப்பு – பிரமிப்பு
இளையராஜா- இசையில் என்றும் ராஜா
வெற்றி மாறன் – தமிழ் திரையுலகின் பெருமை தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

இரண்டாவது பாகத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்…

1986 ஏப்ரல் 11 தேதி கே விஜயன் இயக்கத்தில் ‘விடுதலை’ படம் வெளியானது. இதில் சிவாஜி கணேசன் ரஜினிகாந்த் மாதவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அன்றைய ‘விடுதலை’ படத்தின் நாயகன் ரஜினி இன்றைய ‘விடுதலை’ படத்தை பாராட்டி இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Rajinikanth praises Vetri maaran’s viduthlai

மாலையும் கழுத்துமாக.. பிரபல நடிகருடன் நெருக்கமாகிய கீர்த்தி சுரேஷ்

மாலையும் கழுத்துமாக.. பிரபல நடிகருடன் நெருக்கமாகிய கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான தெலுங்கு படம் ‘தசரா’.

தமிழில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘மாமன்னன்’, ’சைரன்’, ’ரகு தாத்தா’ மற்றும் ’ரிவால்வர் ரீட்டா’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

தெலுங்கில் நானி உடன் இணைந்து நடித்த ’தசரா’ படம் சமீபத்தில் வெளியாகி ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளது.

தமிழ் – தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படம் நல்ல வசூலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் ‘தசரா’ பட வெற்றியை நானி – கீர்த்தி சுரேஷ் உஉள்ளிட்ட படக்குழுவினர் கொண்டாடி உள்ளனர்.

அது குறித்த புகைப்படங்களை கீர்த்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில் ஒரே மாலையில் நானி மற்றும் கீர்த்தி இருக்கும் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

நானி - கீர்த்தி சுரேஷ்

Keerthy Sureshs recent photo goes viral

ஹாட்ரிக் வெற்றிக்காக 3வது முறையாக இணையும் விஷால் – ஹரி கூட்டணி

ஹாட்ரிக் வெற்றிக்காக 3வது முறையாக இணையும் விஷால் – ஹரி கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் விறுவிறுப்பான டைரக்டர் என்றால் அவர் ஹரி.

அதுபோல ஆக்ஷன் காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர் விஷால்.

இவர்கள் இருவரும் இணைந்த படம் ‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’.

இந்த இரு படங்களும் நல்ல வசூலை அள்ளிக் கொடுத்தன.

இந்த நிலையில் ஹரி – விஷால் இருவரும் விரைவில் ஒரு புதிய படத்திற்காக இணைய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சமீபத்தில்தான் ஹரி மற்றும் அவரது மனைவி பீரித்தா இணைந்து குட் லக் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினர்.

இன்று அவர்களின் நிறுவனத்திற்கு வருகை தந்தார் விஷால் என்பது குறிப்பிடத்தக்கது.

Director hari teamsup with vishal for 3rd time

2வது வாரத்திலும் 300+ தியேட்டர்களில் கெத்து காட்டும் ‘பத்து தல’

2வது வாரத்திலும் 300+ தியேட்டர்களில் கெத்து காட்டும் ‘பத்து தல’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், சௌந்தரராஜா, கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்த படம் ‘பத்து தல’.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.

மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய 2 வெற்றி படங்களுக்குப் பிறகு சிம்புவின் நடிப்பில் ‘பத்து தல’ வெளியானதால் ரசிகர்கள் அதனை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

படமும் முதல் நாளில் உலகளவில் ரூ 12 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இன்று ஏப்ரல் 7 தேதி 300-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக பட குழுவின் அறிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

2வது வாரத்திலும் பத்து தல வெற்றி நடை போடுவதால் சிம்பு ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பத்து தல

Pathu Thala Marching into 2nd week with 300 screens

KPY பாலாவிற்கு ‘ருத்ரன்’ மேடையில் ரூ 10 லட்சம் வழங்கிய ராகவா லாரன்ஸ்

KPY பாலாவிற்கு ‘ருத்ரன்’ மேடையில் ரூ 10 லட்சம் வழங்கிய ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ருத்ரன்’.

இந்த படத்தின் மூலம் ‘பொல்லாதவன்’ & ‘ஆடுகளம்’ படங்களின் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இதில் லாரன்ஸ் உடன் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ருத்ரன்

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.

வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ‘ருத்ரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டனர்.

(இந்த இசை விழாவின் ஒளிபரப்பு உரிமையை பிரபல டிவி சேனல் பெற்றுள்ளதால் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.)

இந்த நிலையில் இதே நிகழ்ச்சியில் ஏழை குழந்தைகளின் படிப்புக்கு உதவி வரும் விஜய் டிவி KPY பாலாவிற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் அவரது தாயார் கையில் ரூ. 10 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார்.

ருத்ரன்

கூடுதல் தகவல்…

நடந்த இயக்குனர் நடிகர் இயக்குனர் ஆகியவற்றை தாண்டி மனிதநேயமிக்கவர் ராகவா லாரன்ஸ். இவர் தனது தாயார் பெயரில் அறக்கட்டளை நிறுவி ஊனமுற்ற குழந்தைகளை வளர்த்து வருகிறார்.

மேலும் பல ஏழை மாணவர்களின் படிப்புக்கும் உதவி வருகிறார். இவை இல்லாமல் தீவிர நோயால் அவதிப்படும் ஏழை மக்களின் சிகிச்சைக்கும் உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ருத்ரன்
Raghava Lawrence donated Rs 10 lakhs to KPY Bala

More Articles
Follows