தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆர்பி பாலா இயக்கத்தில் பரத் வாணி போஜன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘லவ்’.
இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் பரத் பேசியதாவது…
இந்தப்படத்தின் கதை முழுக்க ஒரு அபார்ட்மெண்டில் நடப்பது, அதற்கேற்ற பரபரப்பான திரைக்கதை இருக்கிறது. திரைக்கதையில் நிறைய திருப்பங்கள் இருக்கிறது. இந்தப்படக்குழு என் குடும்ப நண்பர்கள் மாதிரி பழகினார்கள். RP Films R.P.பாலா தயாரிப்பாளராக மாறிவிட்டார். மிக நல்ல இயக்குநர்.
அவருடன் இந்தப்படத்தில் இணைந்தது மகிழ்ச்சி. என்னுடைய 50 வது படமாக இப்படம் அமைந்தது மகிழ்ச்சி. R.P.பாலா சாருக்கு நன்றி. P G முத்தையா சார் ஒளிப்பதிவு மட்டுமல்லாமல் இப்படத்திற்கு மிகப்பெரிய முதுகெலும்பாக இருந்துள்ளார் அவருக்கு நன்றி.
வாணி போஜனுடன் மிரள் படத்தில் நடிக்கும் போது இந்தக்கதை கேட்க சொன்னேன், அவர் உடனே பிடித்து இப்படத்தில் வந்தார். அவருக்கு எனக்கு இணையான பாத்திரம் மிகச் சிறப்பாக போட்டி போட்டு நடித்துள்ளோம்.
டேனி இதில் வித்தியாசமாக நடித்துள்ளார். விவேக் மிகச்சிறந்த ஆக்டர். இப்படம் உங்களை கண்டிப்பாக திருப்திப்படுத்தும் அனைவருக்கும் நன்றி.