தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இளையராஜா திறந்துள்ள புதிய இசை ஸ்டூடியோவுக்கு நடிகர் விவேக் சென்று இணைஞானியை சந்தித்துள்ளார்.
இதுப்பற்றி விவேக்…
“இளையராஜா சாரை மரியாதை நிமித்தமாக அவரது புதிய ஸ்டுடியோவில் சந்தித்தேன். அப்போது புத்தர் சிலை ஒன்றை பரிசாக அளித்தேன்.
என் மகன் வாசித்த பியானோவில் இசைஞானியின் பாடல்களை வாசிக்க பழகினேன்.
அதில் எனக்கு மிகவும் பிடித்தமானது உன்னால் முடியும் தம்பி திரைப்படத்திற்காக அவர் இசை அமைத்த இதழில் கதை எழுதும் நேரமிது… பாடல்.
இளையராஜாவிடம் பேசும் போது, உங்கள் இன்ஸ்பிரேஷனில் நான் பியானோ வாசிக்க கற்றுக் கொண்டேன் என தெரிவித்தேன்.
பின்னர் நான் வாசித்த.. “இதழில் கதை எழுதும் நேரமிது…” அந்த பாடல் வீடியோவை காண்பித்தேன். அதை பார்த்துவிட்டு இளையராஜா பாராட்டினார்.
Comedy actor Vivek met maestro Ilayaraja recently






