தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் படம் ‘பிஸ்கோத்’.
மசாலா பிக்ஸ், எம்.கே.ஆர்.பி.புரடொக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.
சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பலா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த நாயகிகளுடன் பிரபல சௌகார் ஜானகி, ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக இப்பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் அனைத்தும் தடைபட்டது.
தற்போது தமிழக அரசு அனுமதி அளித்ததையடுத்து இதன் பணிகள் வேகமெடுத்துள்ளன.
இந்நிலையில், இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஆர்.கண்ணன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
பிஸ்கோத் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது. இந்த மாத இறுதிக்குள் இது முடிவடைந்துவிடும். எடிட்டர் செல்வா உடன் பணி புரிகிறேன் என தெரிவித்துள்ளார்.