சசிகுமாரின் ராஜவம்சத்தில் இணையும் நிக்கி கல்ராணி

சசிகுமாரின் ராஜவம்சத்தில் இணையும் நிக்கி கல்ராணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)சசிகுமார் நடிப்பில் `நாடோடிகள் 2′, கொம்புவச்ச சிங்கம்டா, கென்னடி கிளப் உள்ளிட்ட படங்கள் திரைக்கு வருகிறது.

தற்போது கே.வி.கதிர்வேலு இயக்கத்திலும், என்.வி.நிர்மல்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார் சசிகுமார்.

இதில் கே.வி.கதிர்வேலு இயக்கும் படத்திற்கு ராஜ வம்சம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.

இவர்களுடன் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார் மற்றும் சிங்கம்புலி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

மகாபாரத கதையில் ஹீரோ துரியோதணன்.; திரவுபதியாக சினேகா

மகாபாரத கதையில் ஹீரோ துரியோதணன்.; திரவுபதியாக சினேகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectமகாபாரத புராணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள மெகா பட்ஜெட் கன்னட படம் குருஷேத்திரா.

இதில் நடிகர் அர்ஜுன் கர்ணனாகவும், சினேகா திரவுபதியாகவும் நடித்துள்ளனர். இதன் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

துரியோதணனை நாயகனாக காட்டும் இதில் தர்‌ஷன் அந்த கேரக்டரில் நடித்துள்ளார்.

வி.ரவிச்சந்திரன் கிருஷ்ணராகவும், அம்பரீஷ் பீஷ்மராகவும், சோனு சூத் அர்ஜுனனாகவும் நடித்துள்ளனர்.

நாகன்னா இயக்கியிருக்கும் இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக இருக்கிறதாம்.

திருமணத்திற்குப் பின் ஆர்யா- சாயிஷா ஜோடி சேரும் புதியபடம் டெடி!!

திருமணத்திற்குப் பின் ஆர்யா- சாயிஷா ஜோடி சேரும் புதியபடம் டெடி!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)திரை வாழ்க்கையில் ஜொலித்த ஆர்யா சாயிஷா ஜோடி திருமணம் செய்து நிஜ வாழ்க்கையில் இணைந்த பின் மீண்டும் திரையில் ஜோடியாக தோன்ற இருக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் சார்பில் K.E ஞானவேல்ராஜா தயாரிக்கும் ‘டெடி’ படத்தில் ஹீரோ ஆர்யா. ஹீரோயின் சாயிஷா.

ஆர்யாவின் அர்ப்பணிப்பு மிகுந்த நடிப்பிற்கு பெருந்தீனி கொடுக்கும் வகையில் புதியவகை ஆக்சன் திரில்லர் கதையோடு தயாராகி இருக்கிறார் இயக்குநர் சக்தி சவுந்தரராஜன். இவர் ஏற்கெனவே நாணயம், மிருதன், நாய்கள் ஜாக்கிரதை, டிக் டிக் டிக் ஆகிய படங்கள் மூலமாக ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வைத்திருக்கும் இயக்குநர். இந்த ‘டெடி’ படமும் அவரது டெடி கேஷனில் அசுரப்பாய்ச்சல் பாய இருக்கிறது

இயக்குநரின் ஆளுமைக்கு ஏற்ற தொழில்நுட்ப அணி இருந்தால் தான் அந்தக் கூட்டணி பெரிய வெற்றியடையும். அந்த வகையில் மிகச்சிறப்பான கூட்டணி இது. கேமரா மேனாக ராஜா ரங்கூஸ்கி, பர்மா, ஜாக்சன் துரை ஆகிய படங்களில் கெத்து காட்டிய யுவா. இசை அமைப்பாளராக டி. இமான். இதயங்களை அசைக்கும் ஓசையை கை வசம் வைத்திருக்கும் இசைஞர் அவர். திமிரு பிடித்தவன், காளி படங்களில் சிறப்பான சண்டைக்காட்சிகளை அமைத்த சக்தி சரவணன் ஸ்டண்ட் மாஸ்டராக களம் இறங்க, ஷார்ப்பான எடிட்டிங்கால் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை செறிவாக்கிய எடிட்டர் சிவநந்தீஸ்வரன் எடிட்டராக பணியாற்ற இருக்கிறார். இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடைபெற இருக்கிறது. சொல்லி அடிக்கும் வேட்கையோடு களம் காணும் இந்த டெடி டீம் நிச்சயம் வெற்றி வெடியை அள்ளிக் குவிக்கும் என்கிறார்கள். ஆர்யா சாயிஷா திருமணத்திற்குப் பின் ஒன்றாக நடிக்க வந்திருப்பதால் படத்தின் பலம் கூடியுள்ளது. படத்தில் கூடுதல் எனர்ஜியாக ஆர்யா சாயிஷாவோடு சதிஷ், கருணாகரன் இருக்கிறார்கள்

செல்வராகவன் சினிமாவையும் நடிப்பையும் வேறு கோணத்தில் பார்க்கிறார் – சாய் பல்லவி

செல்வராகவன் சினிமாவையும் நடிப்பையும் வேறு கோணத்தில் பார்க்கிறார் – சாய் பல்லவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போதே இது கோவில் மாதிரி, ஆகையால் கோவிலுக்கு செல்லும்போது எப்படி பக்தியோடு செல்வோமோ அப்படிதான் வரவேண்டும் என்று கூறிவிட்டார் செல்வராகவன். நானும் முதலில் மிக கண்டிப்போடு இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவருடைய சினிமா என்ற பள்ளிக்கூடத்தில் எளிமையாக கற்றுக் கொள்ளலாம் என்று 2, 3 நாட்களில் புரிந்துகொண்டேன். பொதுவாக படப்பிடிப்பு தளங்களில் செல்போன் உபயோகிப்போம், மற்ற படங்களைப் பற்றி பேசுவோம். ஆனால், செல்வராகவன் படப்பிடிப்பு தளத்தில் 100 சதவீதம் அப்போது நடிக்க வேண்டிய காட்சியைப் பற்றிய வசனங்களை வைத்துக் கொண்டு ஆளுக்கொரு இடத்தில் நின்று கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டிருப்போம். ஒழுக்கம் என்றால் என்ன? என்று அங்குதான் கற்றுக் கொண்டேன்.

மேலும், படப்பிடிப்பு நடப்பதற்கு முதல் நாளே அந்த காட்சிக்கு தேவையான வசங்களை முன்பே வாங்கி வீட்டில் பயிற்சி எடுத்து கொண்டு வருவோம். ஆனால், படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பிறகு அவர் சொல்வதைக் கேட்டு நடித்தால் தான் சரியாக இருக்கும். ஒரு வசனத்திற்கு எப்படி முகபாவனை செய்ய வேண்டும்? எப்படி அழ வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக சொல்லிக் கொடுப்பார். அதுமட்டுமில்லாமல் கோபப்பட்டு நடிக்கும் காட்சிகளில் கூட மூச்சுவிடுவது வெளியே தெரியக்கூடாது என்று கூறுவார். அவர் நினைக்கும் நடிப்பு நம்மிடம் வரும்வரை விடமாட்டார்.

நடிப்பு என்றால் என்ன? என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேனோ அதெல்லாம் முற்றிலும் தவறாகிவிட்டது. ஒரு நாள் காலை முதல் மாலை வரை அவர் நினைத்த மாதிரி நடிப்பு வரவில்லை, நாளை பார்க்கலாம் என்று கூறிவிட்டார். அன்று இரவு எனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் என்று என் அம்மாவிடம் கூறிவிட்டேன். அன்று முழுவதும் அழுதுக் கொண்டே இருந்தேன். ஆனால் மறுநாள் ஒரே ‘டேக்’கில் அவர் நினைத்தது வந்துவிட்டது என்று கூறிவிட்டார். அதை நம்பாமல் என் அம்மா உங்களிடம் பேசினார்களா? என்று செல்வராகவனிடம் கேட்டேன், அதற்கு அவர் இல்லை நான் கேட்டது கிடைத்துவிட்டது என்று கூறினார்.

பிறகு சூர்யா சாரிடம் கேட்டபோது, நானும் நிறைய ‘டேக்’ வாங்கித்தான் நடிக்கிறேன் என்றார் சூர்யா சார். அதன்பிறகு தான் சிறிது ஆறுதலாக இருந்தது.

சினிமாவையும் நடிப்பையும் வேறு கோணத்தில் பார்க்கிறார்.

நமக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதில் வல்லவர் செல்வராகவன் – ரகுல் ப்ரீத் சிங்

செல்வராகவன் மற்ற இயக்குனர்களிலிருந்து வேறுபட்டவர். அவர் நமக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிகொண்டு வருவதில் வல்லவர். ஒரு காட்சியில் வசனம் பேசுகிறோம் என்றால், இத்தனை முறை கண்சிமிட்டக் கூடாது, மூச்சு விடும்போது தோள்பட்டை அசையக் கூடாது என்பது போன்ற சிறு சிறு விஷயங்களிலும் கவனமாக இருப்பார். அதேபோல் கார் டிரைவர் போன்ற சிறிய பாத்திரத்திரத்தில் கூட அவரின் உடல்மொழி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார். பாடல் காட்சிகள் என்றால் கூட இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார்.
படப்பிடிப்பு தளத்தில் யாரும் யாருடனும் பேச முடியாது. அவரவர் நடிக்கக் கூடிய வசனங்களையும், இங்கு நிற்க வேண்டும், இப்படி நடக்க வேண்டும் என்று அனைவரும் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

அதேபோல், 3 நொடி விதி என்று ஒன்றை வைத்திருக்கிறார். நடிப்பை வாங்குவது மட்டுமல்லாமல், எடிட்டிங் செய்யும்போது காட்சி தெளிவாக வருவதற்கு ஒருவர் வசனம் பேசி முடித்ததும், மற்றொருவர் உடனே ஆரம்பிக்கக் கூடாது. 3 நொடிகள் தாமதித்துத்தான் ஆரம்பிக்க வேண்டும், ஒருவேளை அதை மறந்து விட்டு நடிக்க ஆரம்பித்தால், ‘கட்’ சொல்லி திரும்ப ஆரம்பிக்கச் சொல்வார். எத்தனை முறை ‘டேக்’ வாங்குகிறோம் என்று கணக்கு தெரியாது. முகத்தில் மட்டுமல்ல, உடலிலும் அந்த கதாபாத்திரம் வரும் வரை விடமாட்டார்.

இப்படத்தில் வரும் ‘அன்பே பேரன்பே’ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

பொதுவாக நான் நடித்த படங்களை படம் வெளியாகும் நாளில் திரையங்கத்திற்கு சென்று தான் பார்ப்பேன். இப்படத்தையும் மே 31 அன்று மும்பையில் தான் பார்ப்பேன்.

சாஹோ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

சாஹோ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)ரெபல் ஸ்டார் பிரபாஸ் பாரம்பரிய நடைமுறை மற்றும் எது முடியும், எது முடியாது என்ற எண்ணங்களை எல்லாம் உடைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். பாகுபலி படத்துக்காக முழுமையாக ஐந்து ஆண்டுகளை அர்ப்பணித்த ஒரே நடிகராக திகழ்ந்தார் பிரபாஸ். அவரது கடின உழைப்புக்கு பலனாக உலகம் முழுக்க பல்வேறு சாதனைகளை புரிந்தது பாகுபலி.

பிரபாஸ் ரசிகர்கள் அவரது அடுத்த படமான “சாஹோ”வுக்காக பொறுமையாக காத்திருக்கிறார்கள், அவர்கள் காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

பிரபாஸ் Instagramல் சுட்டிக் காட்டியது போல காத்திருப்பு முடிந்து விட்டது. பிரபாஸ் மிகவும் தீவிரமாக இருக்கும் சாஹோவின் சமீபத்திய போஸ்டர் ஒன்றை அவரது Instagramல் வெளியிட்டார். அதில் படத்தின் வெளியீட்டு தேதி 15 ஆகஸ்ட் 2019 என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சரித்திர சாதனை படைத்த பாகுபலி படத்துக்கு பிறகு ரெபல் ஸ்டார் பிரபாஸின் நடிப்பில் வெளியாகும் முதல் திரைப்படம் என்பதால் வானளாவிய ஒரு எதிர்பார்ப்பு நிலவுகிறது. கதையை பற்றிய ஒரு துணுக்கு கூட வெளியாகாமலேயே இத்தகைய இமாலய எதிர்பார்ப்புகளை ஒரு திரைப்படம் உருவாக்கியிருப்பது இதுவே முதல் முறை.

‘ஷேட்ஸ் ஆஃப் சாஹோ’ பாகம் 1 மற்றும் பாகம் 2 மேக்கிங் வீடியோக்கள் பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூரின் பிறந்த நாட்களில் முறையே வெளியிடப்பட்டது. ஒரு புதிய பிரபாஸை காட்டியிருக்கும் அந்த வீடியோக்கள் இது ஒரு பிரமாண்ட ஆக்‌ஷன் திரில்லர் படம் என்பதை பறை சாற்றுகிறது. இருந்தாலும் படத்தின் ஒருவரி கதை புதிராகவே உள்ளது.

யு.வி. கிரியேஷன்ஸ் மிக பிரமாண்டமாக தயாரிக்க, சுஜீத் இயக்கியிருக்கும் இந்த சாஹோ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகிறார் ஷ்ரத்தா கபூர். ஜாக்கி ஷெராஃப், மந்திரா பேடி, நீல் நிதின் முகேஷ், சுங்கீ பாண்டே மற்றும் ஈவ்லின் ஷர்மா ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

நமது பாரம்பரியத்தின் பெருமை பேசும் ‘கள்ளன்’

நமது பாரம்பரியத்தின் பெருமை பேசும் ‘கள்ளன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)யதார்த்த சினிமாவிற்கு எப்பொழுதுமே ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும். அப்படியானதொரு யதார்த்த படமாக உருவாகி வருகிறது எழுத்தாளர் சந்திராவின் ‘கள்ளன்’. கதாபாத்திரத்துடன் தன்னை முழுமையாகப் பொருத்திக் கொண்டு சினிமாவை சுவாசிக்கும் ஒரு புகழ்பெற்ற ஆளுமை நடிக்கும்போது, அந்த படைப்பு மேலும் புகழ் பெறுகிறது. அத்தகைய குணங்களைக் கொண்டிருக்கும் கரு பழனியப்பன், எழுத்தாளர் சந்திரா இயக்கும் ‘கள்ளன்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இயக்குநர்கள் அமீர் மற்றும் ராம் ஆகியோரிடம் சினிமா கற்ற இயக்குனர் சந்திரா ‘கள்ளன்’ பற்றிக் கூறும்போது, “கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்பை எழுதி முடித்த போதே இந்த கதையின் மீது பெரிய நம்பிக்கை ஏற்பட்டது.அதை அப்படியே உள்வாங்கியதுடன், இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து தன்னைத் தயார் படுத்திக்கொண்டார் இயக்குனர் கரு.பழனியப்பன் சார். படத்தின் சூழ்நிலை மற்றும் பருவநிலைக்கு ஏற்ப தன்னை தயார் செய்து கொள்ள கதைக்காக நான் செய்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து அவரும் கூடுதல் முயற்சிகள் எடுத்தார். ரொம்பவும் உணர்வுபூர்வமான இந்தப் படத்தை இயக்கியிருக்கிறேன்.

‘கள்ளன்’ இருவேறு காலங்களின் பின்னணியில் அமைந்த ஒரு கதையாகும். 1988-89ல் ஒன்றும், 1975 ஆம் ஆண்டில் இன்னொரு கதையும் நடக்கும். வேட்டையாடும் சமூகம் நம்முடையது. ஆதி மனிதன் வேட்டையிலிருந்து தான் வாழ்வைத் தொடங்கினான். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா என்று நான்கு மாநிலங்களில் பயணிக்கிறது கதை.பரந்து விரிந்த நிலவியலும் காடுகளும் ரசிகர்களுக்கு ஒரு புது விதமான அனுபவத்தைத் தரும்.

தேனி அருகே, கிராமத்தில் வசிக்கும் ஒருவனுக்கு, வேட்டையாடுவதைத் தவிர தனது வாழ்வாதாரத்திற்காக வேறொன்றும் தெரியாது. அரசாங்கம் வேட்டையாடுவதைத் தடை செய்யும் போது, காலம் அவனது வாழ்க்கையை எப்படியெல்லாம் வேட்டையாடுகிறது, சூறாவளியாய் திசைமாறி சுழற்றிப் போடுகிற அவனது வாழ்வின் போக்கையும் யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறேன். இசையமைப்பாளர் கே-யின் இசை படத்திற்கு பெரிய பலமாக இருக்கும். பின்னோக்கிய காலக்கட்டங்களிலும், வேட்டையாடுதலையும் பற்றிய கதை என்பதால் பிரத்யேகமாக பாரம்பரியமான இசைக்கருவிகளைப் பயன்படுத்தி இசையமைத்திருக்கிறார்” என்றார்.

எட்சட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன், ஆர்.ரம்யா தயாரித்துள்ள இப்படத்தை எழுத்தாளர் சந்திரா இயக்கியுள்ளார்.வேட்டை சமூகத்தைச் சேர்ந்த கிராமத்து இளைஞராக இயக்குனர் கரு.பழனியப்பன் நடித்துள்ளார். நாயகியாக நிகிதா அறிமுகமாகியுள்ளார். எம்.எஸ். பிரபு மற்றும் கோபி ஜெகதீஸ்வரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.எழுத்தாளர் வேலா ராமமூர்த்தி, ஃபைட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன், நமோ நாராயணன் , சௌந்தர்ராஜா,முருகன்,அருண்,மாயா என அனைவரும் கதாப்பாத்திரங்களை கண்முன் தோற்றுவிப்பவர்களாக நடித்திருக்கின்றனர்.

காடு, மலை, விலங்குகளின் நிஜ வேட்டைக் காட்சிகள் என சிந்திக்கவைக்கும் படமாக உருவாகியிருக்கும் ‘கள்ளன்’ படத்தின் பாடல்களை மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார். யுகபாரதியும், ஞானகரவேலும் தலா ஒரு பாடலையும் எழுதியுள்ளனர். படத்தின் ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

More Articles
Follows