JUST IN நந்தினிக்கு வைர நெக்லஸ்; சோஷியல் மீடியாக்களில் பொய்..; மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்

JUST IN நந்தினிக்கு வைர நெக்லஸ்; சோஷியல் மீடியாக்களில் பொய்..; மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் கல்வி விருது விழா தற்போது சென்னை நீலாங்கரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விருது விழாவில் நடிகர் விஜய் பேசி இருந்தார்.. அவர் பேச்சின் சில துளிகள்…

உங்களைப் பார்க்கும் போது என்னுடைய பள்ளி நாள்கள் ஞாபகம் வருகின்றன.

எனக்கு பிடித்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். பிடித்தால் எடுத்து கொள்ளுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள்.

கல்லூரி போறோம், பட்டம் வாங்குறோம். இது மட்டுமே முழுமையான கல்வி கிடையாது என்பதற்கு விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஒன்று சொல்லியிருக்கிறார்.

‘நாம் பள்ளிக்கு போய் கத்துக்கிட்டது படிச்சது எல்லாமே மறந்த பிறகு என்ன எஞ்சி இருக்கிறதோ அதுதான் கல்வி.’

நீங்கள் முதல் முறையாகப் பெற்றோரின் கண்காணிப்பிலிருந்து வெளியே சென்று மேற்படிப்பு படிக்கப் போகிறீர்கள்.

வெளியே செல்லும்போது நிறையச் சுதந்திரம் கிடைக்கலாம். ஆனால் முறையாக பயன்படுத்த வேண்டும். ஜாலியாக அனுபவித்து வாழுங்கள். உங்க சுய அடையாளத்தை இழந்துவிடாதீர்கள்.

நீங்க பணத்தை இழந்துட்டீங்கன்னா… ஆரோக்கியத்தை இழந்துடீங்கன்னா எதையோ ஒன்றை இழக்குறீங்க. குணத்தை இழந்துட்டீங்கன்னா எல்லாத்தையும் இழந்துவிடுவீர்கள்.

சோஷியல் மீடியாக்களை அதிகமாகப் பயன்படுத்துகிறீர்கள். ஆனால், அங்கே அதிகமான பொய்ச் செய்திகள் இருக்கின்றன.

அதிலெல்லாம் ஏமாறாமல் இருக்க நிறைய படிக்கனும்.. பாடப் புத்தகத்தைத் தாண்டியும் நிறையப் படிக்க வேண்டும்.

அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்”

நம்மக்கிட்ட காடு இருந்தா எடுத்துகிடுவானுவ, ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ, ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது.

நீங்கள் நினைப்பதைத் தைரியமாகச் செய்யுங்கள். உங்களால் முடியாது என யாராவது நெகட்டிவ்வாக சொன்னால் அவர்களின் பேச்சை கேட்காதீர்கள்.

உங்களுக்குள்ள ஒருத்தன் இருப்பான். அவன் என்ன சொல்றானோ அதை மட்டும் செய்யுங்க” என பேசினார்.

மேலும்…

தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களுடன் நிறைய நேரத்தை செலவழியுங்கள். அவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள்.

மாணவர்கள் எப்போதும் எக்காரணம் கொண்டு தவறான முடிவுகளை எடுக்கவே கூடாது.” என பேசினார் விஜய்.

மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசாக அளித்தார் விஜய்.

Actor Vijay advice to students in Vijay Students meet

JUST IN கல்வி விருது விழா: மேடையில் ஏறாமல் மாணவர்களுடன் அமர்ந்த விஜய்

JUST IN கல்வி விருது விழா: மேடையில் ஏறாமல் மாணவர்களுடன் அமர்ந்த விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 10. 12-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது.

இதற்காக நீலாங்கரை பகுதியில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விஜய் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து சான்றிதழையும், ரொக்கப் பரிசையும் வழங்க இருக்கிறார்.

தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை 234 தொகுதிகளிலும் கணக்கெடுத்து அவர்களைப் பெற்றோர்களுடன் நீலாங்கரை பகுதியில் இருக்கும் ஆர்.கே. கன்வென்சன் சென்டருக்கு வரவழைக்கப்பட்டது.

பெற்றோர்கள், மாணவர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது.

நடிகர் விஜய் தனது இல்லத்திலிருந்து நீலாங்கரை மண்டபத்திற்கு காரில் சென்றார்.

இவருடன் ரசிகர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து சென்றனர்.

பின் அவர் நடிகர் விஜய் 11:00 மணி அளவில் நிகழ்ச்சி நடைபெறும் நீலாங்கரையில் உள்ள அரங்கத்திற்கு வந்தடைந்தார்.

இந்நிலையில், விஜய் மாற்றுத் திறனாளி மாணவி ஒருவருக்கு அவர் அமர்ந்திருக்கும் இடத்திற்கே சென்று சான்றிதழையும், ரொக்கப் பரிசையும் வழங்கினார்.

அங்கு விஜய்க்கு மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவர் பரிசு வழங்கினார். இதையடுத்து மாணவர்கள் மத்தியில் அமர்ந்திருந்தார்.

பிறகு, நடிகர் விஜய் தற்போது பேசி வருகிறார்.

Vijay sat with the students without going on the stage

மாண்புமிகு மாணவர்களுக்கு விஜய் கல்வி விருது.. வாத்தி கம்மிங்.; உதவித்தொகை எவ்வளவு.?

மாண்புமிகு மாணவர்களுக்கு விஜய் கல்வி விருது.. வாத்தி கம்மிங்.; உதவித்தொகை எவ்வளவு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை எப்போது உறுதி செய்துவிட்டார். அதற்கு முன்னோட்டமாக தன்னுடைய விஜய் மக்கள் இயக்கத்தினரை தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வைத்தார்.

அதில் 50+க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.

மேலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் மக்கள் பணிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் ரொக்கத் தொகையும் விஜய் வழங்க உள்ளார்.

இதற்கான விழா இன்று ஜூன் 17 சென்னை நீலாங்கரையில் நடைபெற்று வருகிறது.

அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள R.K Convention Centre-ல் விழா நடைபெறுகிறது.

இந்த விழா நடைபெறும் மண்டபத்திற்கு மட்டும் ரூபாய் 40 லட்சம் வாடாக எனக் கூறப்படுகிறது மாணவர்களும் பெற்றோர்களும் வந்து செல்ல போக்குவரத்து செலவு உள்ளிட்டு செலவுகள் உணவு உள்ளி தேவைகளுக்கு சேர்த்து ரூபாய் ரெண்டு கோடி வரை செலவானதாகவும் கூறப்படுகிறது இந்த விழா நிகழ்வில் செல்போன் ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி இல்லை எனவும் தகவல்கள் வந்துள்ளன

மாணவர்கள் அனைவரும் பெற்றோர்களுடன் நேற்று சென்னை அருகே வந்து தங்க வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை உணவை முடித்துக் கொண்டு வண்டலூர், கேளம்பாக்கம் வழியாக வந்து நீலாங்கரையை சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று காலை 7:30 மணி முதலே மாணவர்களும் பெற்றோர்களும் மண்டபத்திற்கு வருகை தரத் தொடங்கினர்.

நடிகர் விஜய் 11:00 மணி அளவில் நிகழ்ச்சி நடைபெறும் நீலாங்கரையில் உள்ள அரங்கத்திற்கு வந்தடைந்தார்

முதல் இடத்தை பிடித்த மாணவர்களுக்கு ரூபாய் 25,000 இரண்டாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு 15,000 மூன்றாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு ரூ 10,000 காசோலையாக வழங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

Vijay Education Award for Students and How much is the scholarship

தர லோக்கல் பசங்க உருவாக்கிய ‘லார்ட் போயட்ரி’.; இணையத்தை அதிர வைத்த ஆல்பம்

தர லோக்கல் பசங்க உருவாக்கிய ‘லார்ட் போயட்ரி’.; இணையத்தை அதிர வைத்த ஆல்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா படங்களின் பாடல்கள் எந்த அளவிற்கு ரசிகர்களை ஈர்க்குமோ அந்த அளவிற்கு தற்பொழுது ஆல்பம் பாடல்கள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது.

அந்த வகையில் சான் டி என்று அறியப்படும் இசை கலைஞரின் புதிய ஆல்பம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

“லார்ட் போயட்ரி” (Lord Poetry) எனும் தலைப்பில் வெளியாகி இருக்கும் சான் டி-யின் புதிய ஆல்பத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளன.

அடென்டன்ஸ், மை நேம் இஸ், கழிவரா, மம்பிள், நோ ஜோக் மற்றும் லார்ட் போயட்ரி என ஆறு பாடல்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

சப்லையர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு இருக்கும் லார்ட் போயட்ரி ஆல்பத்தின் மிக்சிங் பணிகளை க்ரோனிக்ஸ், மாஸ்டரிங் பணிகளை ஆகாஷ் ஷ்ரவன், கவர் ஆர்ட்-ஐ மிக்கியும் மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆல்பத்தை ஒட்டுமொத்தமாக கே.ஒய்.என். ரெக்கார்ட்ஸ் லேபல் செய்திருக்கிறது.

இசைக் கலைஞரான சான் டி, அல்தாஃப் உடன் இணைந்து கல்லூரி விழாவில் பாடிய பாட்டு அனைவரையும் கவர்ந்தது.

இதுவே இவரின் கலைப் பயணத்தின் ஆரம்ப புள்ளி. இதன் தொடர்ச்சியாக தர லோக்கல் பசங்க இசைக்குழு உருவாக்கப்பட்டது.

இந்த குழுவினர் உருவாக்கிய முதல் பாடல் இணையத்தில் வைரல் ஆகி, இதன் தொடர்ச்சியாக பல்வேறு பாடல்களை வெளியிட்டுள்ளனர். சான் டி-யின் முதல் ஆல்பம் 2021 ஆண்டு வெளியானது.

இந்த ஆல்பம் “நான் கத்துக்கிட்ட ஹிப் ஹாப்,” எனும் பெயரில் உலகம் முழுக்க வெளியிடப்பட்டது.

தற்போது வெளியாகி இருக்கும் லார்ட் போயட்ரி என்னும் ஆல்பம் யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

Lord Poetry by San T – Album songs goes viral

சீனு ராமசாமியின் கவிதைக்கு கமல்ஹாசன் பதில் கவிதை

சீனு ராமசாமியின் கவிதைக்கு கமல்ஹாசன் பதில் கவிதை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் சீனு ராமாமியின் குரு சங்கரன் என்ற கவிதையை இணையத்தில் படித்து விட்டு நடிகர் கமல்ஹாசன் கீழ்காணும் பதில் கவிதையை எழுதியுள்ளார்.

சீனு ராமசாமியின் கவிதைகளில் இருக்கும் அன்பு அம்சம் அவரை வெகுவாக ஈர்த்திருக்கிறது
என நெகிழ்ந்து
இக்கவிதையை அவருக்கு அனுப்பியுள்ளார்.

கமல்ஹாசன் அவர்களின் பதில் கவிதை:

இக்குருட்டுத் தாத்தாவின்
கண்ணுடைப் பேரன்
கல்வியாளன் அல்ல.
கவியை ஊன்றி நடக்கும்
என்னிளம் பேரா
என்றேனும் பள்ளி செல்ல மறக்காதே
அல்லேல்
என்போலே அலைவாய்.

கமல்ஹாசன்.

இப்படி கமல்ஹாசன் அவர்களின் பதில் கவிதை எழுதத்தூண்டிய சீனு ராமசாமியின் கவிதை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

குரு சங்கரன்
………………………
இன்னும் வராது
பள்ளிக்கு போன
சங்கரனை தேடுகிறார்
சங்கரன் தாத்தா.

வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

மாலை வெயிலில் அலைகிறார்
விரல் தடுக்காமல்
பாதங்களை ஊன்றிப் பார்க்கிறார்.

நடக்கமுடியாது

“சங்கரா சங்கரா
இருட்டுதுடா
தாத்தாவுக்கு
கண் தெரியலடா”.

இருள் கவியும்
ஓசைக்கிடையில்
எங்கிருந்தோ
ஓடி வந்தான் சங்கரன்.

“தாத்தா சேவல் சுருட்டு வாங்கிட்டு வர்றேன்
நீ எதுக்கு வந்த” என்றான்.

“இதுக்கா பெரிய ரோட்டத் தாண்டிப் போன ஏய்யா?

“நீ போவியே
அப்புறம் நா தேடுவனே”

“நீ தேடுவயா..
அப்பாடி..
வேணாம்பா
வா..”

தேடி வருபவரிடம்
தேடி வருவது போலொரு அன்பு

சங்கரன் விரல்
பற்றி நடந்த சங்கரன் தாத்தா அவனின் வாத்தியார் போல முழுப்பெயர் சொன்னார்.

“அலைய விட்டுடயே
குருசங்கரசாமி
பாத்துவா”

“நீ பாத்துவா தாத்தா”
என்றான்
சங்கர தாத்தாவின்
பேரன்
சங்கரன்.

சீனு ராமசாமி.

Kamal Haasan’s reply poem to Seenu Ramasamy’s poem

பட்டைய கிளப்பிய ‘பாபா பிளாக் ஷிப்’ பட பங்ஷன்

பட்டைய கிளப்பிய ‘பாபா பிளாக் ஷிப்’ பட பங்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், யூடுயூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பிரமாண்டமான உருவாக்கத்தில், பள்ளிக்கால வாழ்வை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “பாபா பிளாக்‌ ஷீப்”.

இன்றைய தலைமுறையின் மனம் கவர்ந்த பல டிஜிட்டல் ஊடக பிரபலங்கள் வெள்ளித்திரையில் இப்படம் மூலம் கால் பதிக்கின்றனர்.

பெரும் பொருட்செலவில், நாம் அறிந்த முகங்களின் வாயிலாக நம் பள்ளி வாழ்வை அசை போட வைக்கும் அற்புதமான படைப்பாக, இப்படம் உருவாகியுள்ளது.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

தமிழ் திரைப்பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், ஒரு கல்லூரி கலை நிகழ்வு போல் திருவிழாக்கோலமாக இவ்விழா நடைபெற்றது.

இப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகும் புதுமுகங்களை, தமிழ் சினிமாவின் முன்னணி திரைப்பிரபலங்கள், மேடையில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.

முதலாவதாக தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் – இயக்குனர் ராஜ் மோகனை மேடையில் அறிமுப்படுத்தினார்.

இதனைத்தொடர்ந்து
இயக்குனர் லிங்குசாமி – ஹீரோ நரேந்திரபிரசாத்தை அறிமுப்படுத்தினார்,

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் – ஹீரோ அயாஸை அறிமுப்படுத்தினார்,

இளவரசு சார் – குட்டி மூஞ்சி விவேக்கை அறிமுப்படுத்தினார்,

நடிகர் மணிகண்டன் – ராம் நிஷாந்த்தை அறிமுப்படுத்தினார்,

இயக்குனர் ஓபேலி கிருஷ்ணா – பிரகதீஸ்வரனை அறிமுப்படுத்தினார்,

நடிகர் பஞ்சு சுப்பு சார் – குட்டி வினோவை அறிமுப்படுத்தினார்,

நடிகை வாணி போஜன் – சேட்டை ஷெரீப் அறிமுப்படுத்தினார்,

ஈரோடு மகேஷ் & ஹீரோ
தர்ஷன் ஆகியோர் இணைந்து – கதாநாயகியாக அம்மு அபிராமியை அறிமுகப்படுத்தினர்,

விஜய் டிவி நட்சத்திரங்கள் இணைந்து – அதிர்ச்சி அருணை அறிமுகப்படுத்தினர்,

சாய்ராம் நிறுவனத்தின் சாய்பிரகாஷ் – ஹர்ஷத் கானை அறிமுப்படுத்தினார்,

ரியோ & சுட்டி அரவிந்த் – Rj விக்னேஷை மீண்டும் மாணவனாக மேடையில் அறிமுகப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், பெரும் ரசிகர் கூட்டத்தின் முன்னிலையில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியிடப்பட்டது.

இணையத்தில் வெளியான குறுகிய நேரத்தில் டிரெய்லர், பெரும் எண்ணிக்கையிலான பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது. பாடல்கள் அனைத்தும் இளைஞர்களின் விருப்பமாக ப்ளேலிஸ்டில் இடம் பிடித்து வருகிறது.

ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அது பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

நடிகர்கள்
அயாஸ் நரேந்திர பிரசாத்
அம்மு அபிராமி
‘விருமாண்டி’ அபிராமி
RJ விக்னேஷ்காந்த்
சுப்பு பஞ்சு
சுரேஷ் சக்ரவர்த்தி
போஸ் வெங்கட்
வினோதினி வைத்தியநாதன்
சேட்டை ஷெரீப்
மதுரை முத்து
கேபிஒய் பழனி
சுந்தர்
நக்கலைட்ஸ் பிரசன்னா
நக்கலைட்ஸ் தனம்

தொழில்நுட்ப வல்லுநர்கள்
ஒளிப்பதிவு – சுதர்சன் சீனிவாசன்
இசை சந்தோஷ் தயாநிதி
எடிட்டர் – விஜய் வேலுக்குட்டி
கலை இயக்கம் – MSP. மாதவன்
ஸ்டண்ட் – விக்கி
நடன அமைப்பு – அஸார், லீலாவதி குமார்.
விளம்பர வடிவமைப்புகள் – கோபி பிரசன்னா
பாடல் வரிகள் – யுகபாரதி, A.Pa.ராஜா, RJ விக்னேஷ்காந்த், தனிக்கொடி.
ஸ்டில்ஸ் – வேலு
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
இயக்கம் – ராஜ்மோகன் ஆறுமுகம்
தயாரிப்பு நிறுவனம் – ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் – ராகுல்

Baba Black Sheep Official Trailer – https://youtu.be/WImmhKZQhLc

Baba Black Sheep movie audio launch event

More Articles
Follows