விமர்சனம் : ஷாங்க் சி – த லெஜெண்ட் ஆஃப் த டென் ரிங்ஸ் – எப்படி இருக்கிறார்.?

விமர்சனம் : ஷாங்க் சி – த லெஜெண்ட் ஆஃப் த டென் ரிங்ஸ் – எப்படி இருக்கிறார்.?

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் (MCU) 25-வது படம்.

ஒரு புதிய சூப்பர் ஹீரோவை மீண்டும் தன் தங்கள் பி்ரம்மாண்ட திரையுலகுக்கு அழைத்து வந்திருக்கிறது மார்வெல்.

சக்தி வாய்ந்த 10 (ரிங்ஸ்) வளையங்களை வைத்துக் கொண்டு சாம்ராஜ்யத்தை வீழ்த்தி சாதனை படைத்த தந்தையை எதிர்க்கிறான் அவரது மகன்.

யார் வெற்றி அடைந்தார்.? என்பதே ஒன்லைன்.

அவெஞ்சர்ஸ் – எண்ட் கேம் என்ற படத்தின் கதையின் தொடர்ச்சியாக இந்தக் கதை தொடங்குகிறது.

டென் ரிங்க்ஸ் அமைப்பின் தலைவனான வென்வூ, தன்னிடம் உள்ள வளையங்களின் சக்தியால் ஆட்சி செய்ய நினைக்கிறான்.

அற்புத சக்திகள் கொண்ட மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சிறிய மர்ம கிராமத்தைக் கைப்பற்றி அதை ஆள நினைக்கிறார்.

ஆனால், அந்த கிராமத்தைச் சேர்ந்த லெய்கோ வு என்ற பெண் மீது காதல் கொண்டு தன் லட்சியத்தை மறந்து அவளை திருமணம் செய்து கொள்கிறார்.

இவர்களுக்கு ஷாங்க் சி என்ற மகனும், மெங்கர் சாங் என்ற மகளும் பிறக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் மீண்டும் (டோனி லியுங்) அந்த 10 ரிங்ஸ் கொண்டு அந்த மர்ம கிராமத்தைப் பிடிக்க நினைக்கும் போது அவருக்கு எதிராக அவரின் மகன் ஷாங் ச்சி, மகள் மெங்கர் சாங் திடீரென திரும்புகின்றனர்.

இதன்பின்னர் இவர்களுக்குள் நடக்கும் அமிரனியான சாகசங்களே ‘ஷாங் சி’ – தி லெஜெண்ட் ஆப் தி டென் ரிங்ஸ்’ படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஷாங்க் சி யாக வரும் சிமு லியு ஆக்சன் காட்சிகளில் தெறிக்கவிட்டுள்ளார்.

இவரின் தோழியாக நடிகை ஆவ்க்வாஃபினா. காமெடி காட்சிகளில் வேற லெவல்.

டோனி லியுங் மனைவியான ஃபலா சென் ரசிகர்களின் அனுதாபத்தையும் அள்ளிவிடுகிறார்.

மந்திர சக்திகள், காஸ்ட்யூம் என பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

இந்த படத்தில் விலங்குகள் பேசுவது குழந்தைகளை வெகுவாக கவரும்.

சீட் நுனியில் உட்கார வைக்கும் திரில்லர் காட்சிகள் உள்ளன. கிராபிக்ஸ் காட்சிகள் பிரம்மிக்கும் வகையில் அமைந்துள்ளன.

மொத்தத்தில் ஷாங் சீ அண்ட் த லெஜெண்ட் ஆஃப் த டென் ரிங்ஸ் படத்தை குடும்பத்துடன் ரசிக்கலாம்.

Shang Chi And The Legend Of The Ten Rings movie Review

Related Articles