எம்எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி திரை விமர்சனம்

எம்எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சுஷாந்த் சிங் ராஜ்புட், அனுபம்கெர், பூமிகா, திஷா பட்டானி, கியாரா அத்வானி, ராஜேஷ் சர்மா மற்றும் பலர்.
இசை : அமால் மாலிக், ரோசக் கோஹ்லி
ஒளிப்பதிவு : சந்தோஷ் துண்டில்
படத்தொகுப்பு : ஸ்ரீ நாராயணன் சிங்
இயக்கம் : நீரஜ் பாண்டே
பிஆர்ஓ : ரியாஸ் கே அகமது
தயாரிப்பாளர் : அருண் பாண்டே (பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ்)

கதைக்களம்…

கிரிக்கெட்டை நேசிக்கும் ரசிகர்கள் மட்டுமில்லாது அனைவருக்கும் பிடித்த மனிதர் எம்.எஸ்.தோனி. அவரது கிரிக்கெட் வாழ்க்கை நம்மில் பலருக்கும் தெரிந்து இருக்கலாம்.

ஆனால் அவர் பிரபலமாவதற்கு முன்னால், அவர் பெரிய கிரிக்கெட் வீரர் ஆவதற்கு மேற்கொண்ட பயிற்சிகள் என்ன? எப்படி ஆனார் என்பதே இதுவரை சொல்லப்படாத கதை. அதாவது எம்.எஸ்.தோனி – தி அண் டோல்ட் ஸ்டோரி.

ஒரு சராசரி மாணவன், பின் கிரிக்கெட் ஆர்வம், அதன் பின்னர் மாநில அளவில், தேசிய அளவில் பங்கேற்பு. இதன் தகுதி அடிப்படையில் இந்திய ரயில்வே துறையில் டிக்கெட் கலெக்ட்டர் பணி.

அதன் பின்னர் அவர் எப்படி கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் ஆனார்? என்பதே முழுக்கதை.

CthnLsZWcAAT0WA

கதாபாத்திரங்கள்…

சுஷாந்த் சிங் ராஜ்புட் தான் இந்த தோனி. இவருக்கும் நிஜ தோனிக்கும் அவ்வளவு பொருத்தம்.

புட் பால் மட்டுமே விளையாடி கொண்டிரும் ஹீரோ, கிரிக்கெட் மீது, தன் கோச்சால் ஆர்வம் ஏற்பட, அதன்பின் அவர் பிடிக்கும் ஒவ்வொரு கேட்ச்சும் நமக்கும் பிடிக்கும். ஆரம்பத்தையே அசத்தலாய் உருவாக்கி இருக்கிறார்.

தன் கிரிக்கெட் கனவுகள் நிஜமாகாதா? என தனிமையில் அமர்ந்து ஏங்கும் அந்த காட்சிகள் நிச்சயம் ஒரு வெறியை ரசிகர்கள் மனதில் உருவாக்கும்.

முன்னாள் காதலி இல்லாதபோது, அடுத்த காதலியே தன் மனைவி என ஒரு யதார்த்த மனிதராக வாழ்ந்திருக்கிறார்.

காதலியாக வரும் திஷா பட்டானி ஒரு அழகு என்றால் மனைவி ஆவதற்கு முன்னாள் வரும் 2வது காதலி கியாரா அத்வானி அழகு கவிதை.

இருவரையும் அவர் நேசிக்க சொல்லப்பட்ட காரணங்கள் நச். அதிலும் தன் லட்சியத்திற்காக காதலை ஒதுக்குவதும், மீடியா வெளிச்சத்தில் இருந்து ஒளிய வேஷமிடுவதும் மறக்க முடியாதவை.

தோனியை சந்திக்கும் போது, கியாராவின் தோழியாக வரும் பெண்ணின் முகபாவனைகள் அசத்தல்.

உலக கோப்பையை வென்ற பின், அனுபம் கெர், பூமிகா உள்ளிட்டவர்களின் ஆனந்த கண்ணீரில் நிச்சயம் நாமும் கரைந்து போவோம்.

ஸ்கூல் கோச், கிரிக்கெட் வாரிய தலைவர், நண்பர்கள், ராஞ்சி வாழ்க்கை, என ஒவ்வொரு பாத்திரமும் சபாஷ் சொல்ல வைக்கிறது.

CtmGQEJUEAA9iwA

தொழில்நுட்ப கலைஞர்கள்…

அமால் மாலிக் மற்றும் ரோசக் கோஹ்லி இசையில் பாடல்கள் இனிமை.

சந்தோஷ் துண்டில் ஒளிப்பதிவில் கிரிக்கெட் உலகமே அழகாய் தெரிகிறது.

படத்தின் ப்ளஸ்…

  • இரண்டாம் பாதியில் காதல், திருமணம் என கலந்து ரசிக்க வைக்கிறார்.
  • அருமையான வசனங்கள் + ஒளிப்பதிவு. கலர்புல்லான காதலிகள்
  • நிஜ கிரிக்கெட்டையும் சினிமா கிரிக்கெட்டையும் சேர்த்தாலும் கிராபிக்ஸ் தெரியவில்லை.

CtmPq38VIAAaPa9

வசனங்கள் படத்தின் மிகப்பெரிய பலம்

  • இந்திய கிரிகெட் அணியில் இருக்கும் இவரை ஒருவருக்கு தெரியாத போது, சாரி என்று சொல்வார். அப்போது… என்னை நீங்கள் தெரிந்துக் கொள்ளும் அளவு நான் இன்னும் சாதிக்கவில்லை. அதற்கு ஏன் நீங்கள் சாரி சொல்கிறீர்கள்.
  • இவர் பிரபலமாக இருந்தாலும் ஹோட்டல் ரிசப்டனிஸ்ட்டுக்கு இவருக்கு தெரியாமல் ஐடி கார்ட்டை கேட்கும்போது உள்ள வசனங்கள்.

இப்படி பல காட்சிகளில் உள்ள வசனங்களை உதாரணமாக சொல்லலாம்.

  • முக்கியமாக இவரது ரயில்வே நண்பராக வரும் சத்யாவின் காமெடிக்கு சிரிக்காதவர்கள் இருக்கமுடியாது.
  • அந்த பொண்னுக்கு காசு இல்ல போல. குட்ட பாவாடை போட்டு இருக்கு. டிரெஸ் எடுத்து கொடுப்பா என்னும்போது நிச்சயம் கைத்தட்டி ரசிக்கலாம்.

படத்தின் மைனஸ்

  • கிரிக்கெட்டை மட்டுமே முதல் பகுதியில் சொல்லிக் கொண்டிருப்பதால் இந்த விளையாட்டை பிடிக்காதவர்களுக்கு சலிப்பு வரலாம்.
  • பள்ளி பருவத்தில் உள்ள அவரது குறும்புகளையும் படமாக்கியிருக்கலாம்.

அழகான கிரிக்கெட் கதையை யதார்த்த குடும்ப வாழ்க்கையுடன் பின்னி கமர்ஷியல் பைட் எதுவும் கொடுக்காமல் அசத்தியிருப்பதற்கு இயக்குனருக்கு பொக்கே கொடுக்கலாம்.

எம்எஸ்.தோனி… இவரது வாழ்க்கையும் சிக்ஸர்தான்.

ஆண்டவன் கட்டளை விமர்சனம்

ஆண்டவன் கட்டளை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விஜய்சேதுபதி, ரித்திகா சிங், யோகி பாபு, சிங்கம் புலி, பூஜா தேவ்ரியா, நாசர், தீபா, ஏ.வெங்கடேஷ் மற்றும் பலர்.
இசை : கே
ஒளிப்பதிவு : சண்முக சுந்தரம்
படத்தொகுப்பு : அனுசரண்
இயக்கம் : மணிகண்டன்
பிஆர்ஓ : நிகில்
தயாரிப்பாளர் : கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன்

கதைக்களம்…

காந்தி (விஜய் சேதுபதி) மற்றும் பாண்டி (யோகி பாபு) இருவரும் நண்பர்கள்.

ஊரில் ஏற்பட்ட கடன் தொல்லையால், ஊரில் தலைக் காட்ட முடியாமல் லண்டன் சென்று சம்பாதிக்க நினைக்கின்றனர்.

பாஸ்போர்ட் எடுக்க சென்னை வருகின்றனர். ஆனால் உடனடியாக பாஸ்போஸ்ட் வேண்டும் என்பதால், ஏஜெண்ட்களை நாடுகின்றனர்.

அவர்களோ லண்டனில் செட்டில் ஆகிவிட இலங்கை அகதி போல் செட்டப் செய்யலாம் என்று கூறி, இங்கே தவறான முகவரிகளை கொடுக்க சொல்கின்றனர்.

இதன்மூலம் விஜய்சேதுபதிக்கு திருமணம் ஆகிவிட்டதென்றும் மனைவி பெயர் கார்மேக குழலி என்றும் பாஸ்போர்ட் ரெடி செய்து விடுகின்றனர்.

ஆனால் இண்டர்வியூவில் அவர் பெயில் ஆகிவிட யோகிபாபு மட்டும் லண்டன் செல்கிறார்.

அதன்பின்னர் மனைவி பெயரை எடுக்க விஜய்சேதுபதி போராடும் போராட்டங்களே இப்படத்தின் மீதிக்கதை.

Aandavan kattalai movie stills

கதாபாத்திரங்கள்…

எந்த வேடம் என்றாலும், அதிலும் தன் யதார்த்த நடிப்பை கொடுத்து அந்த கேரக்டருக்கு உயிரூட்டியிருக்கிறார் விஜய்சேதுபதி.

காந்தி என்ற பெயரில் நேர்மையாக இருக்க முடியாமலும், தவறான வழியில் செல்லும் போதும் முகபாவனைகளால் ரசிக்க வைக்கிறார்.

அதிலும் ஊமையாக நடிக்கும்போது ரசிகர்களுக்கு கலகலப்பாக்கியிருக்கிறார்.

இறுதிச்சுற்று ரித்திகா சிங்கா இது…? இதில் முற்றிலும் ஆளே மாறியிருக்கிறார். ஆனாலும் மீடியா பெண்ணாக போல்டாக நடித்திருக்கிறார்.

படம் முழுவதும் இவர் வரவில்லையே என யோகிபாபு ஏங்க வைக்கிறார். படத்தின் எனர்ஜிக்கு முக்கிய காரணமாகிறார் யோகிபாபு.

இவருடன் சிங்கம்புலி சேர்ந்துக் கொண்டு சென்னையில் வீடு தேடும் காட்சிகள் நிச்சயம் எவராலும் மறக்க முடியாது.

இவர்களுடன் நாசர், பூஜா தேவ்ரியா, தீபா, உள்ளிட்டோர்களை இன்னும் வேலை வாங்கியிருக்கலாம்.

Aandavan kattalai movie stills

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கே இசையில் பாடல்களுக்கு பெரிதாக வேலையில்லை. பின்னணி இசை ஓகே.

சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவில் கோர்ட், சென்னை வாடகை வீடுகளின் அவலம் என அனைத்தையும் சல்லடை போட்டு காட்டியிருக்கிறார்.

காக்கா முட்டை, குற்றமே தண்டனை ஆகிய வித்தியாசமான படங்களை கொடுத்தவர் இயக்குநர் மணிகண்டன்.

இதிலும் அதே பாணியை பின்பற்றியிருக்கிறார். சென்னையில் வீடும் தேடுபவர்கள் பிழைப்புக்காக மட்டுமே சென்னை வருகிறார்கள். அவர்களை அசிங்கபடுத்த வேண்டாம் என்பதையும் தெளிவு படுத்தியிருக்கிறார்.

பாஸ்போர்ட் ஏஜெண்டுகளால் எவ்வளவு பேர்கள் பாதிக்கப்படுகிறார்கள்? அகதிகள் என்றாலும் அவர்களுக்கும் அழகான மனசு இருக்கிறது என்று கூறும்போது கண்கலங்க வைக்கிறார்.

நாயகன், நாயகியை கதை சுற்றி வந்தாலும், இருவருக்கும் காதல் இல்லாமல் கடைசியில் முடிச்சு போடுவது அருமை.

ஒரு பொய் சொன்னால், அதை மறைக்க ஆயிரம் பொய்களை சொல்ல வேண்டும் என்பதை கோர்ட் காட்சிகளிலும், நேர்மையான அரசாங்க அதிகாரிகள் இருக்கும்போது ஏஜெண்டுகளை நம்பி மோசம் போக வேண்டாம் என்பதையும் பாஸ்போர்ட் ஆபிஸ் காட்சிகளிலும் விளக்கியிருக்கிறார்.

மொத்தத்தில் ஆண்டவன் கட்டளை… பாஸ்போர்ட்டுக்கான பயணம்

தொடரி விமர்சனம்

தொடரி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : தனுஷ், கீர்த்தி சுரேஷ், ராதாரவி, கணேஷ் வெங்கட்ராமன், கருணாகரன், தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன், இமான் அண்ணாச்சி, ஆர்.வி. உதயகுமார், கும்கி அஸ்வின், ஏ.வெங்கடேஷ், சின்னி ஜெயந்த் மற்றும் பலர்.
இசை : இமான்
ஒளிப்பதிவு : வெற்றிவேல் மகேந்திரன்
படத்தொகுப்பு : எல்.வீ.கே. தாஸ்
இயக்கம் : பிரபு சாலமன்
பிஆர்ஓ : நிகில் முருகன்
தயாரிப்பாளர் : சத்யஜோதி பிலிம்ஸ், God Pictures

கதைக்களம்…

பூச்சியப்பனாக தனுஷ் – சரோஜாவாக கீர்த்தி சுரேஷ்
டெல்லியிலிருந்து சென்னைக்கு பயணிக்கிறது தொடரி.. (அதாங்க ரயில்)

இந்தியன் ரயில்வேயில் கேண்டின் பாயாக வேலை செய்கிறார் தனுஷ். அதே ரயிலில் சினிமா நடிகையின் டச்சப் கேர்ளாக பணி புரியும் கீர்த்தி சுரேஷ் பயணிக்கிறார்.

ரயில் வேகத்தை விட படுவேகமாக பார்த்ததும் இவர்களுக்குள் காதல் வருகிறது.

ஒரு சூழ்நிலையில் இருவரும் பிரியும் நேரம் வரும்போது, என்ஜின் மாஸ்டருக்கு ஹார்ட் அட்டாக்.

இதனிடையில் தீவிரவாதிகள், கொள்ளையர்கள், அமைச்சர் கடத்தல் என பல பிரச்சினைகளும் வருகிறது. அப்போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் செல்கிறது.

அதன்பின் ரயில் பயணிகள் என்ன ஆனார்கள்? இவர்களின் காதல் கைகூடியதா? ரயில் நின்றதா? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை கொடுத்து, ஸ்டேஷனில் இறக்கி விடுகிறார் டைரக்டர் பிரபு சாலமன்.
CsJS2srUEAAWCHb
கதாபாத்திரங்கள்..

இதில் முதன்முறையாக காமெடியில் பயணம் செய்துள்ளார் தனுஷ். அவை ரசிக்கும்படியே அமைந்திருப்பது சிறப்பு.

ஒரு அக்மார்க் கேண்டீன் பாயாக வந்து அசத்துகிறார்.

இவருடன் கருணாகரன், தம்பி ராமையா ஆகியோரும் காமெடி காட்சிகளுக்கு கைகொடுத்துள்ளனர்.

ஒரு யதார்த்த பெண்ணாக இருந்தாலும், லட்சியத்தை அடைய போராடும் பெண்ணாக கீர்த்தி. (அவ்ளோ அப்பாவியாக) தன் அழகை போல் நடிப்பிலும் குறை வைக்கவில்லை.

கணேஷ் வெங்கட்ராமன், ஏ. வெங்கடேஷ், ராதாரவி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் பொருத்தமான தேர்வு.

CsI7rzJVUAIMdUU

தொழில்நுட்ப கலைஞர்கள்..

இமானின் பாடல்களும் பின்னணி இசையும் மிகப்பெரிய பலம். அடடா.. இது என்ன? இது என்ன? மற்றும் ஊரெல்லாம் கேட்குதே… பாடல்கள் ரசிக்கும் ரகம்.

போன உசுரு பாடல் எந்த ரயில் பயணம் என்றாலும் நம் நினைவில் நிற்கும். (ஆனால் தேவையில்லாத இடத்தில் இப்பாடல் வந்தது வேதனைதான்)

நாம் என்னதான் ரயில் பயணம் செய்தாலும் இப்படி ஒரு ரூட்ல நாம போனதில்லையே என வியக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர்

கண்களுக்கு போரடிக்காமல் காட்சிகளை நகர்த்தியிருப்பது ஒளிப்பதிவாளரின் கைவண்ணம்.

படத்தொகுப்பாளருக்கு வேலையில்லை. அவ்வளவு வெட்ட வேண்டியிருக்கு.

CsIemSUUIAAVbhM

படத்தின் ப்ளஸ்…

  • முழுக்க முழுக்க ரயில் பயணம்
  • டிஆர்பி ரேட்டிங்குங்காக விவாதம் நிகழ்ச்சி நடத்தும் சேனல்கள்
  • இரண்டாம் பாதியின் விறுவிறுப்பான காட்சிகள்
  • ஒளிப்பதிவும் பாடல்களும்

படத்தின் மைனஸ்…

  • பேசிக் கொண்டே இருக்கும் கேண்டீன் ஆட்கள்
  • கிராபிக்ஸ் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்
  • பற்றி எரியும் ரயிலில் டூயட் பாட்டு
  • டிரைவர் இல்லாத ரயிலில் ஜாலியான பயணிகள்
  • ஒரே அடியாக கீர்த்தியை பாட்டு பாடச் சொல்லி லூஸ் பெண்ணாக காட்டியிருப்பது

இயக்குனர் பற்றி…

விவாத மேடை அமைக்கும் டிவி சேனல்கள் இறுதிவரை அதற்கு முடிவு சொல்லாமல் இருப்பதை அப்பட்டமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

மேலும் டிஆர்பிக்காக மனிதர் உயிரோடு விளையாடும் சேனல்களையும் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

முதல் பாதி, காமெடி, பயணிகள் என செல்வதால் ரயில் எதை நோக்கி செல்கிறது என கொஞ்சம் குழப்பம் வரலாம்.

ஆனால் பிற்பாதியில் நம்மை ரயில் பயணத்தில் ஒன்ற வைத்து ஸ்டேஷனில் சேர்கிறார் பிரபு சாலமன்.

இதுநாள் வரை காடு, அழுக்கு மனிதர்கள் என சென்ற இயக்குனர் இம்முறை சற்று வித்தியாச ரயில் களத்தில் கொண்டு சென்று அதை யதார்த்தமாக கொடுத்திருக்கிறார்.

இவ்வளவு ரயில் வேகத்தில் இப்படி எல்லாம் சண்டை போட்டு, பாட்டு பாடி ஆட முடியுமா? பயமே இல்லாமல் பயணிக்க முடியுமா? என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.

தேவையில்லாத காட்சிகள் மற்றும் சினிமாவுல லாஜிக் பார்க்கக் கூடாதுன்னா இந்த ரயில் பயணம் சிறக்கும்.

மொத்தத்தில் தொடரி: கெட்டியா புடிச்சிட்டு ஏறுங்க

ரெமோ டிரைலர் விமர்சனம்

ரெமோ டிரைலர் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள படம் ரெமோ.

இதில் இவர் பெண் வேடமிட்டு நடித்துள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் நர்ஸ் வேடம், மர்லின் மன்றோ உள்ளிட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே கிளுகிளுப்பையே உண்டாக்கியுள்ளது எனலாம்.

மேலும் மீசை பியூட்டி, செஞ்சிட்டாளே, சிரிக்காதே உள்ளிட்ட அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இணையங்களில் டிரெண்டாகி உள்ளது.

பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, கே.எஸ்.ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன், சதீஷ், ஆடுகளம் நரேன், ராஜேந்திரன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கௌரவ தோற்றத்தில் ஸ்ரீதிவ்யாவும் நடித்திருக்கிறாராம்.

இந்நிலையில் சற்றுமுன் இதன் டிரைலர் வெளியானது. 2 நிமிடங்கள் 5 நொடிகள் ஓடக் கூடியது. இந்த ட்ரைலர் பற்றிய ஒரு பார்வை இதோ….

இதில் முதல் காட்சியே சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் கபாலியின் மிகப்பெரிய பேனர் உள்ளது.

அதை பார்க்கும் சிவகார்த்திகேயன், நம்முடைய பேனரும் இங்கு இதுபோல் இருக்கவேண்டும். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரை பார்த்து சான்ஸ் கேட்க வேண்டும் என நினைக்கிறார்.

அதற்கு இவரது அம்மா சரண்யாவோ, உனக்கு நடிப்பு வராது என மட்டம் தட்டுகிறார்.

இருந்தாலும் பிடிவாதம் பிடிக்கும் சிவா, கே.எஸ். ரவிக்குமாரை சந்தித்து நடிக்க வாய்ப்பு கேட்கிறார்.

remo ks ravikumar

இப்போ எடுக்கிற படத்துக்கு நர்ஸ் கேரக்டர்தான் இருக்கு. அதுல ஹீரோ அப்படித்தான் இருக்கனும் என்கிறார்.

அதன்பின்னர் சிவா, கீர்த்தி சுரேஷ் பின்னாடி ஜொள்ளு விட்டு அலைவதும், நர்ஸ் வேடம் அணிந்து ரகளை செய்வதும் ரசிக்கும் படி உள்ளது.

இதனிடையே வரும் அனிருத் பின்னணி இசையை ரசிகர்களுக்கு செம ட்ரீட்தான்.

நர்ஸ் ஆக இருக்கும் சிவகார்த்திகேயனிடம் யோகி பாபு ஐ லவ் யூ சொல்லி ரோஜா கொடுக்கிறார்.

பிசி ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு ப்ரேமும் பக்கா கலர்புல்லா இருக்கிறது.

remo trailer sivakarthikeyan

சிவா காதலில் ஏதோ பிரச்சினை சந்திக்கிறார். அப்போது அவர் பேசும் வசனம் நிச்சயம் இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

காதலிக்கிறது பொண்னு கிடைக்கம்முன்னு முயற்சி பண்ணாதவன், அந்த பொன்னு கிடைக்கலையேன்னு வருத்தப்படறதுக்கு தகுதியே இல்லாதவன் என்று பன்ச் டயலாக் பேசுகிறார்.

இதில் ஆக்ஷனிலும் குறை வைக்கவில்லை இயக்குனர் பாக்யராஜ் கண்ணன்.
ஆண் வேடத்தில் இருக்கும் சிவாவுக்கும் பெண் வேடத்திற்கும் என அதிரடியானை பைட்களை வைத்திருக்கிறார்.

இடையே சதீஷ்ம் மொட்டை ராஜேந்திரனும் வந்து கலகலப்பூட்டி செல்கிறார்கள்.

remo sivakarthi keerthy suresh

இறுதியாக அப்பாடா பெண் வேஷம் போடுறது ரொம்ப கஷ்டம்டா சாமி என்று அலுத்துக் கொண்டே கூந்தல் விக்கை அவுத்து விடுகிறார் சிவா.

அந்நேரம் பார்த்து வரும் கீர்த்தி சுரேஷ், எனக்கு 23 வயசாகியது. அம்மா அப்பா பார்க்கும் பையனைத்தான் கல்யாணம் செய்வேன் என கத்திவிட்டு செல்கிறார்.

அப்போது சிவாவின் ஆண் வேஷத்தை பார்த்து விடுகிறார். ஆனால் ஒன்று சொல்லாமல் செல்லவே… ஐய்ய்யோ பாத்துட்டான் பாத்துட்டான் என ரிக்ஷா மாமா ஸ்டைல் கவுண்டமணி போல் பேசி இன்னும் ரசிக்க வைக்கிறார் சிவா.

ஆக மொத்தம் இந்த 2016 விஜயதசமி நாட்கள், ரெமோ நாயகியால் களை கட்டும் என தெரிகிறது. வாழ்த்துக்கள் ரெமோ டீம்.

உச்சத்துல சிவா விமர்சனம்

உச்சத்துல சிவா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கரண், நேகா, ஆடுகளம் நரேன், இளவரசு, ரமேஷ் கண்ணா, பேராசிரியர் ஞானசம்பந்தம், கும்கி அஸ்வின், சங்கிலி முருகன், கோவை சரளா (குரல் மட்டும்) மற்றும் பலர்.
இசை : வித்யாசாகர்
ஒளிப்பதிவு : ஹார்முக்
இயக்கம் : ஜேப்பி
பிஆர்ஓ : யுவராஜ்
தயாரிப்பாளர் : கே என்டர்டெயின்மென்ட் – தேவி கரண்

karan uchathula siva 3

கதைக்களம்…

கால் டாக்சி டிரைவர் கரண் ஒரு பகவத் கீதை கிருஷ்ண பக்தர். அம்மா சொல் கேட்டும் பிள்ளை.

நாளை காலை பெண் பார்க்க செல்லவிருக்கும் போது, முதல் நாள் இரவு சவாரிக்கு செல்கிறார்.

அப்போது எதிர்பாரா விதமாக மணப்பெண் (நேகா) ஒருவர் இவர் காரில், தன்னை காப்பாற்ற லிப்ட் கேட்கிறார்.

அவர் மீது கரனுக்கு காதலும் வருகிறது. ஆனால் அப்போதுதான் ஹீரோயின் அவர் போதை கும்பலில் சிக்கியது தெரிய வருகிறது.

அந்த பெண்ணை காப்பாற்ற போய், இவர் போலீசில் மாட்டிக் கொள்கிறார்.

அதன் பின்னர் தன்னை நிரபராதி என நிரூபித்தாரா? பெண் பார்க்க போனாரா? அல்லது காதலியை கரம்பிடித்தாரா? என பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் இந்த சிவா.

karan uchathula shiva

கதாபாத்திரங்கள்…

நீண்ட நாட்களுக்கு பின் வந்தாலும், அதே இளமை. ரெப்ரிஜிரேட்டில் இருந்து வந்தவர் போல படு ப்ரெஷ்ஷாக இருக்கிறார்.

ஆக்ஷனில் அனல் பறக்க செய்திருக்கிறார். இதில் கொஞ்சம் காமெடிக்கு டிரை செய்து பாஸ் மார்க் பெறுகிறார்.

காதலுக்கும் காதலிக்கும் பெரிதாக வேலையில்லை. நேகா அழகாக வருகிறார்.

இளவரசு, ரமேஷ் கண்ணா காமெடி போலீசாக வந்தாலும், காமெடிக்கு பஞ்சமே.

கும்கி அஸ்வின் காட்சிகளை அதிகப்படுத்தியிருந்தால் சிரிக்க வைத்திருக்கலாம்.

வெறும் குரலாக மட்டும் வரும் கோவை சரளாவுக்கு காட்சிகள் கொடுத்திருந்தால், அவர் இன்னும் படத்தை கலகலப்பாக்கி இருப்பார்.

ஆடுகளம் நரேன், டானாக வந்து செல்கிறார். சங்கிலி முருகனும் இருக்கிறார்.

uchathula siva stills 1

தொழில்நுட்ப கலைஞர்கள்…

டைட்டில் கார்டு பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் வித்யாசாகர். அப்போது வரும் கிராபிக்ஸ் காட்சிகளும் படத்தின் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.

பேசு பேசு இசை மொழி … உச்சத்துல சிவன் தான் பாடல்கள் கொஞ்சம் ஓகே. வித்யாசாகரின் வழக்கமான மெலோடி இதில் மிஸ்ஸிங்.

பேராசிரியர் ஞானசம்பந்தன் காட்சிகளில் ஒரே அட்வைஸ் மழையாக இருக்கிறது.

ஜேப்பி இயக்கத்தில் சண்டை காட்சிகள் ஆக்ஷன் பிரியர்களுக்கு விருந்துதான். ஒரே இரவில் நடக்கும் கதையில் கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கிறார். இடைவேளை ட்விஸ்ட் ரசிக்க வைக்கிறது.

உச்சத்துல சிவா… ஆக்ஷன் மேஜிக்

பகிரி விமர்சனம்

பகிரி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : பிரபு ரணவீரன், ஷ்ரவியா, ரவிமரியா, ஏ.வெங்கடேஷ், சரவண சுப்பையா, மாரிமுத்து, டி.பி. கஜேந்திரன், கே.ராஜன், பாலசேகரன், சுப்ரமணியன் மற்றும் பலர்.
இசை : கருணாஸ் எம்எல்ஏ
ஒளிப்பதிவு : வீரகுமார்
இயக்கம் : இசக்கி கார்வண்ணன்
பிஆர்ஓ : A. ஜான்
தயாரிப்பாளர் : லட்சுமி கிரியேஷன்ஸ் (இசக்கி கார்வண்ணன்)

கதைக்களம்…

தாம்பரம் தாண்டி முடிச்சூரிலிருந்து வேலை தேடி சென்னை வரும் இளைஞனின் கதைதான் இந்த பகிரி.

நாஸ்மாக்கில் (டாஸ்மாக் என்று படித்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை) வேலையில் சேரவேண்டும் என்பதை வாழ்க்கை லட்சியமாக வைத்திருக்கிறார் ஹீரோ.

இதனிடையில் காதல், விவசாயம் என கதை பயணிக்கிறது.

ஒரு சூழ்நிலையில நாஸ்மாக் திட்டத்தை எதிர்கட்சிகள் எதிர்க்கின்றன. இதனிடையில் வாட்ஸ் அப்பில் பரவும் தகவல்களால் தமிழக அளவில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது.

இதனால் ஹீரோவின் லட்சியம் என்ன ஆனது? நாஸ்மாக் திட்டம் மூடப்பட்டதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

Pagiri- Prabhu Ranaveran, Sharviya (2)

கதாபாத்திரங்கள்…

பிரபு ரணவீரன் தன் முதல் படத்திலேயே காதலிப்பதையும் வேலையையும் லட்சியமாக கொண்டு கேரக்டராக வாழ்ந்திருக்கிறார்.

தன் அம்மாவிடம் காதலியை மோதவிட்டு, தன் காதலை சொல்லுமிடத்தில் ரசிக்கி வைக்கிறார்.

நாயகி ஷ்ரவியாவுக்கு அறிமுக காட்சியே அசத்தல். பெண் பார்க்க வந்தவர் இவரது அம்மாவை சைட் அடிக்க, அதன் பின் இவர் எகிறும் காட்சிகள் ரகளை.

இவரிடம் நடிகை விசாகா சிங்கின் சாயல் தெரிகிறது.

காதலனுக்காக இவரும் இவரது அம்மா செய்யும் உதவிகள் ரசிக்க வைக்கிறது.

ரவிமரியா, ஏ.வெங்கடேஷ், டிபி.கஜேந்திரன் ஆகியோர் காமெடி ட்ராக்கை கவனித்து கொள்கிறார்கள்.

அதிலும் ரவி மரியாவின் ஆண்ட்டி சைட் அடிக்கும் காமெடி ‘ஜொள்’ ரகம்.

சரவண சுப்பையா, சுப்ரமணியன் ஆகியோரும் பொருத்தமான தேர்வு.

Pagiri Stills-Prabhu Ranaveera, Shravya, Ravimariya, A (4)

தொழில்நுட்ப கலைஞர்கள்…

நடிகர் கருணாஸ்தான் இதன் இசையமைப்பாளர். இரண்டு பாடல்கள் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை ஓகே.

வீரக்குமாரின் ஒளிப்பதிவில் பார் காட்சிகள் அச்சு அசலாக உள்ளது.

படத்தின் ப்ளஸ்…

  • சரக்கு பாக்டரியை பெண்கள் நடத்தும் போது நாங்க சரக்கு கடை வைக்க கூடாதா? என கேட்பது நச்.
  • மதுவிலக்கை வைத்து தலைவர்கள் ஆடும் அரசியல் விளையாட்டு
  • மக்களை சுரண்டும் ஊழல் வாதிகளை பற்றிய சாட்டையடி வசனங்கள்
  • போராட்டம் நடத்துபவர்கள் அனைவரும் தினக்கூலியை எதிர்பார்த்து செய்வதன் மூலம் அவர்களின் போலித்தனத்தை காட்டியிருக்கிறார்.

படத்தின் மைனஸ்…

  • படம் முழுக்க நாஸ்மாக்கை காட்டிவிட்டு க்ளைமாக்ஸில் ஒரு காட்சியில் விவசாயத்தை காட்டியிருப்பது கொஞ்சம் ஒட்டவில்லை. படம் முடிந்துவிட்டதா? என யோசிக்க வைக்கிறது.
  • விவசாயத்தின் அருமையை இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம்.
  • எடுத்துக் கொண்ட கதையை அரசியல் காரணங்களால் வெட்டி விட்டார்களா? எனத் தெரியவில்லை. கனெக்ஷன் மிஸ்ஸிங்.

Director Esakki Karvannan (3)

இயக்குனர் பற்றி…

படத்தின் ஆரம்பத்தில் வரும் டிவி விவாதங்களும் அதில் முடியும் சண்டை காட்சிகளும் இன்றைய டிவியின் நிலைமையை எடுத்துக் காட்டுகிறது.

பொதுவாக இதுபோன்ற பார் சம்பந்தப்பட்ட படங்களில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருக்கும். ஆனால் இதை குடும்ப கதையோடு கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் இசக்கி.

படம் முழுக்க டாஸ்மாக் காட்சிகள் என்றாலும், ஐட்டம் டான்ஸ் இல்லை என்பது ஆச்சரியம்தான்.

மதுவிலக்கு படத்தை மிக தைரியத்தோடு எடுத்து சொல்லியிருக்கிறார். அதற்கு மஞ்சள் துண்டு போட்ட தலைவர்களை காண்பிப்பதும் ரசிக்க வைக்கிறது.

பகிரி – மது குடிப்பவர்களுக்கும் குடிக்காதவர்களுக்கும் பிடிக்கும்.

More Articles
Follows