Meippada Sei – மெய்ப்பட செய் விமர்சனம்.; இன்றே செய்

Meippada Sei – மெய்ப்பட செய் விமர்சனம்.; இன்றே செய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Casting : Adhav Balaji, Madunika, PR Tamil Selvam, Adukalam Jayabal, OAK Sundar, Super Good Subramani, Rajkapoor, Raghul Thatha, Benjamin
Directed By : Velan
Music By : Bharani
DOP : R.Vel
Produced By : SR Harshith Pictures – PR Tamil Selvam

ஒன்லைன்…

குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்ளும் காதல் ஜோடி ஊரை விட்டு ஓடுகின்றனர். அதன் பின் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்கள்? என்பதே ஒன்லைன்.

கதைக்களம்…

நாயகன் ஆதவ் பாலாஜியும், நாயகி மதுனிகாவும் காதலர்கள்.

வழக்கம்போல காதலுக்கு நாயகியின் தாய்மாமன் பி.ஆர்.தமிழ் செல்வனால் பிரச்சனை வருகிறது.

எனவே காதல் ஜோடி திருமணம் செய்து ஊரை விட்டு சென்னைக்கு செல்கின்றனர். இவர்களுக்கு துணையாக 3 நண்பர்களும் செல்கின்றனர். அங்கு தங்கும் வாடகை வீட்டினால் பெரிய பிரச்சனை வருகிறது.

அந்த பிரச்சினையை எதிர்த்து போராடி வில்லன் கும்பலுக்கு தண்டனை வாங்கி கொடுக்க களத்தில் இறங்குகிறார்கள்.

இறுதியில் என்னானது என்பதே ‘மெய்ப்பட செய்’.

கேரக்டர்கள்…

நாயகன் ஆதவ் பாலாஜிக்கு இதுதான் முதல்படம் என்பது போல் இல்லாமல் ரொமான்ஸ், ஆக்சன் என முயச்சித்துள்ளார்.

நாயகி மதுனிகா தன் யதார்த்த நடிப்பால் கவர்கிறார். தாய்மாமனாக வந்த பி.ஆர்.தமிழ் செல்வம் அடாவடி வில்லன். இறுதியில் இவரது கேரக்டர் திருப்புமுனை எதிர்பாராத ஒன்று.

கட்ட கஜா என்ற தாதாவாக ஆடுகளம் ஜெயபால்.. இவரது தோற்றமும், வசன உச்சரிப்பும் பலம்.. நடக்க முடியாமல் உட்கார்ந்த இடத்திலேயே மிரட்டலான நடிப்பு.

ஓ.ஏ.கே.சுந்தர், சூப்பர் குட் சுப்பிரமணி, ராஜ்கபூர், பெஞ்சமின், ராகுல் தாத்தா, பயில்வான் ரங்கநாதன் & நாயகனின் நண்பர்கள் அனைவரும் கச்சிதம்.

டெக்னீஷியன்கள்…

பரணியின் இசையில் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது சிறப்பு. பின்னணி இசையில் கூடுதல் கவனம் தேவை.

ஒளிப்பதிவாளர் ஆர்.வேல் கேமராவில் பாடல் காட்சிகளும் ஆக்சன் காட்சிகளும் ரசிக்கும் படி உள்ளது.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பாலியல் குற்றங்கள் படங்கள் நிறைய வருகின்றன. அந்த வரிசையில் இந்த படமும் இணைந்து இருக்கிறது. அதே சமயம் பாலியல் குற்றங்களுக்கான தீர்வையும் இயக்குனர் வேலன் சொல்லி இருப்பது கவனம் பெறுகிறது. ஆனால் திரைக்கதையில் சொல்ல வேண்டிய விஷயத்தை கமர்சியல் கலந்து சொல்லி இருப்பதால் படம் வேறு பாதையில் பயணிப்பது போல உணர்வைத் தருகிறது..

ஆக.. மெய்ப்பட செய்.. இன்றே செய்

Meippada Sei movie review and rating in tamil

FIRST ON NET துணிவு பட விமர்சனம்.; வங்கி கொள்ளை வல்லவன்

FIRST ON NET துணிவு பட விமர்சனம்.; வங்கி கொள்ளை வல்லவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. வங்கியை கொள்ளை அடிக்கும் கேங் லீடராக அஜித். இவருக்கு துணையாக மஞ்சுவாரியர். போலீசாக சமுத்திரக்கனி.

கதைக்களம்…

ஒரு சிட்டியின் மையப் பகுதியில் இருக்கும் வங்கியை கொள்ளை அடிக்க செல்கிறார் அஜித். இவருக்கு துணையாக செயல்படுகிறார் மஞ்சு வாரியர்.

கணக்கில் வராத பல கோடி ரூபாயை வங்கியில் பதுக்கி இருக்கிறார் வங்கியின் முதலாளி.

இதனை அறிந்து கொண்ட அஜித் கொள்ளை அடிக்க திட்டம் போடுகிறார்.. அதே சமயத்தில் வேறு இரண்டு கும்பலும் கொள்ளை அடிக்கத் திட்டமிடுகிறது.

பணம் யாருக்கு போனது? அஜித் என்ன செய்தார் ? கோடிக்கணக்கான பணத்தை கொள்ளை அடிக்க அஜித் திட்டம் போட்டது ஏன்? என்பதே கதை..

கேரக்டர்கள்…

கொள்ளையடிக்க போனாலும் மாஸ் காட்டியுள்ளார் அஜித்.. ஆரம்பம் முதலே ஆக்சன் காட்சிகளில் அசத்தியுள்ளார்.

இடைவேளை காட்சி எதிர்பாராத ஒன்று.. ஆட்டம் போட்டுக் கொண்டே அஜித் பேசும் ஒவ்வொரு வசனங்களும் வேற லெவல்..

ஸ்டைலிஷ் மஞ்சுவாரியர் கேரக்டர் சூப்பர்.

நேர்மையான கமிஷனராக சமுத்திரக்கனி. கான்ஸ்டபிளாக மகாநதி சங்கர்..்இருவரும் கவனிக்க வைக்கின்றனர்

பேங்க் மேனேஜர் ஆக ஜிஎம் சுந்தர், மெயின் வில்லன் பேங்க் சேர்மன் ஜான் கொகேன், இன்ஸ்பெக்டர் பகவதி பெருமாள் சாமி..

சமுத்திரக்கனி, மஞ்சு வாரியர், வீரா, பகவதி பெருமாள், ஜிஎம். சுந்தர் உள்ளிட்டோர் கச்சிதம்..

பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம் காமெடி ரசிக்க வைக்கிறது. ஆனால் பாலசரவணன் பாவம்.. வங்கி அதிகாரியாக ஜிஎம் சுந்தர் மற்றும் பிரேம்குமார்.. இதில் பிரேம் குமார் கதாபாத்திரம் செம ட்விஸ்ட்.

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவு நீரில் ஷா.. எடிட்டர் விஜய் வேலுக்குட்டி.. வங்கி கொள்ளை காட்சிகள் அதிர வைக்கின்றன.. முக்கியமாக வங்கி செட்டப் ரசிக்க வைக்கிறது..

கலைப்பணி கச்சிதம்… ஸ்டன்ட் இயக்குனர்… தங்கள் பணிகளில் கச்சிதம்.. சண்டைக் காட்சிகளை அமைத்துள்ள சுப்ரீம் சுந்தர் பாராட்டுக்குரியவர்..

ஜிப்ரான் இசையில் உருவான சில்லா சில்லா பாடல் வேற லெவல் ரகம்.. பாடலுக்கு தியேட்டர் அதிருகிறது.. அஜித் மாஸ் லுக்கில் ஆட்டம் போட்டு உள்ளார்.

ஜிப்ரானின் பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளது.

வங்கிக் கொள்ள என்றாலும் அதனை ஹாலிவுட் லெவலில் படமாக்கி உள்ளார் வினோத்..

வெறும் கொள்ளை என்பதோடு முடிக்காமல் அதில் மியுச்சுவல் பண்ட், பேங்க் மினிமம் பேலன்ஸ், டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு என பல விஷயங்களை பாடம் எடுத்துள்ளார்…

ஆனால் படம் முழுவதும் லட்சணக்கணக்கான துப்பாக்கி குண்டுகள் வெடித்து இருக்கும்.. அதுபோல ஆயிரம் பாம்கள் வெடித்து இருக்கும்..

ஆக பொங்கல் பாம் கொடுத்துள்ளனர்.

ஆக ‘துணிவு… வங்கி கொள்ளை வல்லவன்

Thunivu movie review and rating in tamil

FIRST ON NET வாரிசு பட விமர்சனம் 3/5..; விஜய் இருக்கூ.. விஷயம் இருக்கா.?

FIRST ON NET வாரிசு பட விமர்சனம் 3/5..; விஜய் இருக்கூ.. விஷயம் இருக்கா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

தொழில் அதிபர் சரத்குமார் குடும்பத்திற்கு 2 மூத்த மகன்கள் மூலம் பிரச்சினை வருகிறது.. அந்த குடும்பத்தின் 3வது வாரிசு விஜய் தன் குடும்பத்தை எப்படி காப்பாற்றினார்? என்பதே கதை.

கதைக்களம்…

சரத்குமார் ஜெயசுதா தம்பதிக்கு 3 மகன்கள்.. முதல் மகன் ஸ்ரீகாந்த் (தெலுங்கு நடிகர்) 2வது மகன் ஷாம்.. 3வது மகன் விஜய்.

ஒரு கட்டத்தில் தனது பிசினஸை விஜய்யிடம் கவனிக்கு சொல்கிறார் சரத்குமார்.. ஆனால் தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ நினைக்கிறார் விஜய்.

இதனால் அப்பாவுக்கும் மகனுக்கும் மோதல் வெடிக்க குடும்பத்தை விட்டு பிரிந்து செல்கிறார் விஜய்.

இதன் பின்னர் ஸ்ரீகாந்த் மற்றும் ஷாம் என 2 மகன்களும் சொத்தை அடைய சதி திட்டம் தீட்டுகின்றனர்.

மற்றொரு பக்கம் சரத்குமாரின் தொழில் சாம்ராஜ்யத்தை வீழ்த்த நினைக்கின்றனர் பிரகாஷ்ராஜ் மற்றும் கணேஷ் வெங்கட்ராமன்.

இறுதியில் யார் வென்றார்கள்? விஜய் திரும்பி வந்தாரா? சரத்தின் அடுத்த வாரிசு யார்.? வாரிசு என்ன ஆனார் என்பதே கதை..

கேரக்டர்கள்…

ஸ்டைலிஷ் ஆக ஸ்மார்ட்டாக வருகிறார் விஜய்.. அலட்டிக் கொள்ளாத அறிமுகம்.. ஆனால் சில காட்சிகளில் ஹேர் ஸ்டைல் சுத்தமாக செட்டாகவில்லை..

வழக்கமான பன்ச் டயலாக்.. துள்ளல் ஆட்டம்.. அதிரடி ஆக்ஷன் என தெறிக்கவிட்டுள்ளார் விஜய்.. சென்டிமென்ட் காட்சிகளில் இன்னும் கூடுதல் உணர்ச்சிகள் தேவை…

கொஞ்சி கொஞ்சிப் பேசி உடலை ஆட்டி, ஆட்டி நடித்த காட்சிகள் மோசமாக உள்ளது.. சில நேரம் காஞ்சனா பட லாரன்ஸ் காட்சிகளை நினைவுபடுத்துகிறது.. டி ஆர் ஸ்டைலில் இது தமிழ் புலி.. வீர புலி என்பது போல விஜய் பேசும் வசனங்கள் சிரிப்பை கூட வர வைக்க வில்லை..

ராஷ்மிகாவுக்கும் தமிழுக்கும் ராசியியே இல்லை போல.. ஏதோ இரண்டு காட்சிகளில் வருகிறார்.. ஆட்டம் போடுகிறார் கிளைமாக்ஸில் வருகிறார் அவ்வளவுதான்..

பிரகாஷ்ராஜ் சரத்குமார்… வலி மிக்க வலிமையான தந்தையாக சரத்குமார் தெரிகிறார்.. பிரகாஷ்ராஜ் பெரிதாக பிரகாசிக்கவில்லை..

கிளைமாக்ஸ் காட்சியில் சபாஷ் போட வைக்கிறார் ஷாம்.. அதுபோல ஹீரோவுக்கு இணையாக ஸ்மார்ட்டாக இருக்கிறார்..

பிரபு ஸ்ரீகாந்த் ஜெயசுதா ஸ்ரீமன் சுமன் விடிவி கணேஷ் வெங்கட்ராமன் சங்கீதா உள்ளிட்டோருக்கு பெரிய வேலையில்லை..

விடிவி கணேஷ் & ஸ்ரீமன் ஏன்..?? குஷ்பூ படத்தில் இருப்பதாக சொன்னார்கள்?? எங்கே வந்தார் என்றே தெரியல.. அது சரி ராஷ்மிகாவுக்கும் அதே நிலைமைதான்.

யோகி பாபு காமெடி சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். எஸ்ஜே சூர்யா கேரக்டர் டோட்டல் வேஸ்ட்.

டெக்னீஷியன்கள்..

தமனின் பின்னணி இசை சில இடங்களில் மட்டுமே மிரட்டலாக உள்ளது.. காமெடி காட்சிகளில் பின்னணி இசை ஒலிக்கிறது அவைஎல்லாம் குழந்தைத்தனமான இசையாக இருக்கிறது.

ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் மட்டுமே ரசிகர்களை எழுந்து ஆட்டம் போட வைக்கிறது.. பாடல் படமாக்கப்பட்ட விதமும் அருமை.

கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.. முக்கியமாக விஜய்யின் வீடு.. விஜய் அறிமுக காட்சி… ஆபிஃஸ் இடம்… வில்லனுடன் மோதும் காட்சி என ரசிக்க வைக்கிறார்..

படத்தில் ஒரு காட்சியிலாவது சேரி மக்களை காட்ட வேண்டும் என்பதற்காகவே விஜய்யின் அண்ணன் மகள் காணாமல் போகும் காட்சி திணித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பிரவீன் கே எல் எடிட்டிங் செய்துள்ளார். இடைவேளைக்கு பின்னர் வரும் போர்ட் மீட்டிங் காட்சிகள் தேவையே இல்லை.. 170 நிமிடங்கள் ஓடும் படத்தை குறைத்து இருக்கலாம்..

முக்கியமாக சரத் – ஜெயசுதா 60வது கல்யாணம்… அந்த காட்சியில் ஒரு பாடலை வைத்திருக்கலாம்.. குழந்தைகள் பெற்றோருக்கு செய்து வைக்கும் திருமணம் அது ஒன்றுதான்.. அதில் அழகான வார்த்தைகளை போட்டு ஒரு இசையாக கொடுத்திருக்கலாம்.. தேவையில்லாமல் தாளம் மட்டுமே போட்டு ஆட்டம் போட வைத்துள்ளனர்.

வம்சி இயக்கத்தில் உருவான வாரிசு படத்தை தில் ராஜு சிரிஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.. விஜய் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் கமர்ஷியல் கலந்து குடும்ப செண்டிமெண்ட் உடன் விருந்து படைத்துள்ளார் வம்சி.

எவ்வளவு பெரிய கோடீஸ்வர குடும்பம் என்றாலும் அதிலும் சொத்து பிரச்சனை இருக்கும் குடும்ப பிரச்சனை இருக்கும் என்பதை காட்டி இருக்கிறார் இயக்குனர் வம்சி..

அதுபோல மகன்கள் அடித்து கொண்டு பிரிந்து சென்றாலும் தாய் பாசம் என்றுமே குறையாது.. தாய் படும் வேதனைகளை காட்டி இருப்பது தாய்மார்களை கண்கலக்க வைக்கும்..

ஒரு சில வசனங்கள் குடும்ப செண்டிமெண்ட்டை அழகாக சொல்கிறது.. சரத்குமாரை பார்த்து விஜய் பேசும்போது.. “அப்பா நான் உங்க வழியில் நடக்கல.. ஆனால் எனக்கு நடக்க சொல்லி கொடுத்தது நீங்க தான்..

பிடிக்காம வாழ்றதை விட பிரிஞ்சு போயிடலாம்…. உள்ளிட்ட சில வசனங்கள் கவனம் பெறுகின்றன..

குடும்பப் பெண்களை கவரும் வகையில் சில குடும்ப பிரச்சினைகளை காட்டி இருப்பது பெண்களுக்கு பிடிக்கும்.. கூட்டுக் குடும்பம் என்பதால் குழந்தைகளுக்கான சில காட்சிகளை வைத்திருக்கலாம்..

இடைவேளைக்கு முன்னர் வரும் நிறைய காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன..

ஆக இந்த வாரிசு… குடும்பச் சொத்து.!!

விஜய் இருக்கூ.. விஷயம் இருக்கா.??

Varisu Varasudu review and rating..

V3 சினிமா விமர்சனம் 3.5/5.; கற்பழிப்புக்கு ரெட் சிக்னல்

V3 சினிமா விமர்சனம் 3.5/5.; கற்பழிப்புக்கு ரெட் சிக்னல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

ஒரு நடு ராத்திரியில் எப்போது பெண் சுதந்திரமாக தனியாக நடந்து செல்கிறாரோ அப்போதுதான் உண்மையான சுதந்திரம் என்று மகாத்மா காந்தி சொன்னார்.

இதில் தனியாக நடுராத்திரியில் செல்லும் பெண் கற்பழிக்கப்படுகிறார்.. கற்பழிப்புக்கு தீர்வு தண்டனை மட்டுமல்ல என்று மாற்று வழியை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

கதைக்களம்…

ஆடுகளம் நரேன் பேப்பர் ஏஜெண்ட்.

இவர் தனது இரண்டு மகள்களோடு (பாவனா மற்றும் எஸ்தேர்) வாழ்ந்து வருகிறார். ஒருநாள் இரவில் வேலை முடிந்து வீடு திரும்பும் பாவனாவை ஐந்து வாலிபர்கள் கற்பழிக்கின்றனர்.

இதனால் போலீசுக்கும் ஆளுங்கட்சிக்கும் கடும் கண்டனங்கள் வருகிறது.. மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

இதனால் அவசர அவசரமாக வழக்கை முடிக்க என்கவுண்டர் செய்கிறது போலீஸ்.

இதனால் பாதிப்படைந்த 5 வாலிபர்களின் பெற்றோர் மனித உரிமை கழகத்தை நாடுகின்றனர்.

இந்த வழக்கை விசாரிக்க மனித உரிமை கழகத்தின் உறுப்பினரான (ஐஏஎஸ்) வரலக்‌ஷ்மி நியமிக்கப்படுகிறார்.

அந்த ஐந்து வாலிபர்கள் தான் கற்பழித்தார்களா? உண்மை என்ன? போலீஸ் என்ன செய்தது? ஆளுங்கட்சி என்ன செய்தது? வரலட்சுமி என்ன செய்தார்? பாதிக்கப்பட்ட குடும்பம் என்ன செய்தது? பாவனா என்ன செய்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கதையின் நாயகியாக நடித்துள்ளார் வரலட்சுமி.. ஒரு பொறுப்பான அதிகாரியாக அவர் நடந்து கொள்ளும் விதம் சிறப்பு.

பாதிக்கப்பட்ட பெண்ணாக பாவனா.. இதுபோன்ற காட்சியில் நடிக்க நிச்சயமாக ஒரு நடிகைக்கு துணிச்சல் வேண்டும். அதை வெகு சிறப்பாக செய்து இருக்கிறார்.

நிஜமாகவே கற்பழிக்கப்படும் பெண்ணின் வேதனைகளை உணர்வு பூர்வமாக காட்டி இருக்கிறார்.

போலீசாக பொன்முடி.. ஆளுங்கட்சிக்கும் மக்களுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு அவர் எடுக்கும் நடவடிக்கைகள் செம. மிரட்டலான நடிப்பையும் கொடுத்துள்ளார்.

பாவனாவின் தந்தையாக ஆடுகளம் நரேன். மனைவியை இழந்த ஒரு கணவரின் வேதனையையும் அம்மா இல்லாத பிள்ளைகளை வளர்க்கும் தந்தை பாசத்தையும் அழகாக காட்டியிருக்கிறார்.

அதுபோல தங்கையாக நடித்துள்ள எஸ்தரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

டெக்னீஷியன்கள்…

படத்தின் பின்னணி இசையிலும் ஒளிப்பதிவிலும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

இந்த படம் ஆரம்பிக்கும் போதே டைட்டில் கார்டில் எண்ணற்ற கற்பழிப்பு காட்சிகளும் அது தொடர்பான பத்திரிக்கை செய்திகளும் காட்டப்படுகின்றன.. அப்போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு உருவாகிறது.

பொதுவாக இது போன்ற கற்பழிப்பு கொலை கொள்ளை பற்றிய படங்களில் கிளைமாக்ஸ் காட்சியில் மக்கள் பார்வைக்கு விட்டு விடுவார்கள்..

ஆனால் இதில் கற்பழிப்புக்கு ஒரு நிரந்தர தீர்வை சொல்லி இருக்கிறார் இயக்குனர். பள்ளிகளில் கட்டாயமாக செக்ஸ் பாடக்கல்வி தேவை.

மேலும் கற்பழிப்பை குறைக்க விபச்சாரத்தை சட்டமயமாக்கனும் என்ற கருத்தையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் அமுதவாணன்.

ஆளுங்கட்சியும் போலீசும் தங்கள் அதிகாரத்தை காட்டுவதற்கு இது போன்ற வழக்குகளை பயன்படுத்திக் கொள்வதை அப்பட்டமாக காட்டியிருக்கிறார்.

ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் இந்த தீர்வை அவர் சொல்லும்போது மேலோட்டமாக சொல்லி இருக்கிறார். அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. உணர்வுப்பூர்வமாக அழுத்தமாக காட்சிப்படுத்தி இருக்கலாம்.

ஆக வி3.. ஐஏஎஸ் வரலக்‌ஷ்மி நியமிக்கப்படுகிறார்.

Varalaxmi Sarathkumar ( Sivagami)
Paavana ( Vindhya )
Esther Anil ( Viji )
Adukaalam Naren ( Velayutham )
Ponmudi ( Viswanathan)

Visarnai Kathai Asiriyar Chandra Kumar ( logo)
Jai Kumar
Sheeba

Crew

Direction – Amudhavanan
Music – Allen Sebastian
DOP – Siva Prabhu
Editor – Nagooran
Sound design – Udaya Kumar
Colorist – Sreeram Balakrishnan
Stunt – Mirattal Selva
Costumes – Tamil selvan
Make up – Hema – Meera
VFX – Quebec fx – Moses
SFX – Sathish Kumar
Production Manager – Santhosh Kumar | Muthuraman
PRO – Sathish Kumar Siva – Aim
Publicity Designer – NextGen
Executive producer – Pukazhenthi.

Production House : Team A Ventures

V3 movie review and rating in tamil

ராங்கி விமர்சனம் – 3.25/5..; தீவிர(வாதி) காதல்

ராங்கி விமர்சனம் – 3.25/5..; தீவிர(வாதி) காதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் கதையில், எம்.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிப்பில் உருவான ‘ராங்கி’.

சமூக வலைத்தளங்களால் த்ரிஷாவின் அண்ணன் மகளுக்கு (நேரிடை தொடர்பு இல்லை) தீவிரவாத கும்பலுடன் தொடர்பு ஏற்படுகிறது.

அதை பத்திரிக்கையாளர் திரிஷா எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

த்ரிஷா இதில் ஆக்சன் நாயகியாக அவதாரம் எடுத்துள்ளார். முழுக்க முழுக்க பேண்ட் சட்டை போட்டு சிங்க பெண்ணாக களம் இறங்கி இருக்கிறார்.

18 வயது நிரம்பாத இளம் பெண்ணுடன் சாட்டிங் மூலம் திருமணம் ஆனவர்களும் திருமணம் ஆகாதவர்களும் காமத்தை அள்ளி வீசுகிறார்கள். அதனை கண்டுபிடித்த த்ரிஷா ஒரு ரூம் போட்டு அனைவரையும் வரவழைப்பது வித்தியாசமான சிந்தனை.

மேலும் அவர் சொல்லும் ஆலோசனைகள் ஒரு பத்திரிகையாளரின் முதிர்ச்சியை காட்டுகிறது.

ஆனால் அதே திரிஷா (வேறு பெயரில்) தீவிரவாதியுடன் சாட்டிங் செய்வது புரியாத புதிர். இது இன்வேஸ்டிகேஷன் ஜர்னலிசம் என்று சொல்லப்பட்டாலும் அது அழுத்தமாக பதிவாகவில்லை.

த்ரிஷாவின் அண்ணன் மகளாக வரும் அனஸ்வரா ராஜனை வைத்தே கதை.. அவரும் ஒரு பருவப் பெண்ணின் உணர்வுகளை பிரதிபலித்துள்ளார்.

ஆலிம் என்ற கேரக்டரில் நடித்துள்ள சிறுவன் ஒரு பக்கம் காதல்.. ஒரு பக்கம் தன் நாட்டிற்காக போராடும் போராள.. என சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

அதுபோல த்ரிஷாவின் அண்ணியாக வருபவரும் கவனம் ஈர்க்கிறார்.

டெக்னீசியன்கள்…

சி.சத்யாவின் இசையில் பாடல்கள் ஓகே.. பின்னணி இசை சிறப்பு சேர்க்கிறது.

உஸ்பெகிஸ்தான் நாட்டின் அழகான காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேலின் கேமரா சண்டைக் காட்சிகளை சிறப்பாகப் கையாண்டுள்ளது..

இரண்டு மணிநேர படம் என்றாலும் சின்ன கட்டிங் போட்டு இருக்கலாம்.. காரணம் சேட்டிங் செய்வது.. சாட்டிங் ரிப்ளை எதிர்பார்ப்பது என நீண்ட நேரமாக செல்வது போரடிக்கிறது.. சுபாரக் – படத்தொகுப்பு.

ஏ ஆர் முருகதாஸ் கதை எழுத எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கி இருக்கிறார்.

முதல் பாதியில்…இளம் பெண்கள் பேஸ்புக் சாட்டிங்.. முகம் தெரியாத நண்பர்களுடன் ஆபாச சாட்டிங் என காட்சிகளை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார்.

இரண்டாம் பாதியில்… எண்ணெய் வளங்களை திருடும் அமெரிக்க நாடுகளை கண்டிப்பதோடு இந்தியாவில் நாளை எது வேண்டுமானாலும் திருடு போகலாம் என்பதையும் எச்சரித்து இருக்கிறார் இயக்குனர் சரவணன்.

சர்வதேச தீவிரவாதி திடீரென இந்தியா வந்து செல்வது எப்படி? ஆகிய லாஜிக் மீறல்கள் உள்ளது.

ஒரு போலி ஃபேஸ்புக் கணக்கினால் உருவாகும் சின்ன சின்ன பிரச்சினை எப்படி உலகளவில் தீவிரவாதம் வரை செல்கிறது என்பதை சொன்ன விதத்தில் முருகதாஸ் பாராட்டு பெறுகிறார்.

ஆக… ராங்கி.. தீவிர (வாதி) காதல்

Raangi movie review and rating in Tamil

காலேஜ் ரோடு விமர்சனம் 4/5.; கண்ணீரில் கல்வி கடன்

காலேஜ் ரோடு விமர்சனம் 4/5.; கண்ணீரில் கல்வி கடன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

உயர்கல்வி படிக்க ஆசை இருந்தும் திறமை இருந்தும் மதிப்பெண் இருந்தும் கல்விக் கடன் மறுக்கப்படும் ஏழை மாணவர்களின் அவல நிலையை சொல்லும் படம் காலேஜ் ரோடு.

கதைக்களம்…

இந்தியாவில் டாப் 10 யூனிவர்சிட்டியில் ஒன்றான ஒரு கல்லூரியில் முதலாமாண்டு மாணவராக சேர்கிறார் லிங்கேஷ். இவர் வங்கிகளின் பாதுகாப்பை மேன்மைப்படுத்தும் (CYBER SECURITY) ப்ராஜெக்ட் ஒன்றின் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.

இந்தக் கல்லூரி இருக்கும் அதே சாலையில் ஒரு பெரிய வங்கியில் ஒரு கும்பல் கொள்ளை அடிக்கிறது. அப்போது அதனைப் பார்த்த லிங்கேஷை அடிக்கடி விசாரணைக்கு அழைக்கிறார் கமிஷனர்.

ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து வங்கிகளும் கொள்ளை அடிக்கப்படுகிறது. இதற்கு போலீசுக்கு நாயகன் லிங்கேஷ் எப்படி உதவினார்?

அவர் ப்ராஜக்ட் ஆராய்ச்சியில் சாதித்தாரா.? கொள்ளையர்களை கண்டுபிடித்தார்? கொள்ளையர்களின் நோக்கம் என்ன.? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நாயகனாக லிங்கேஷ்.. கல்லூரியில் கொஞ்சமே கலகலப்பாக இருக்கிறார்.. அப்போதே இவரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எகிறுகிறது. அதற்கு ஏற்ற போல் பிளாஷ்பேக் காட்சிகளில் லிங்கேஷ்.. கிங்-கேஷாக தெரிகிறார்.

நாயகி மோனிகா பாத்திரம் கொடுத்த வேலையை குறைவின்றி செய்திருக்கிறார். பொறுப்பான தோழியாகவும் தன் கேரக்டரை மெருகேற்றி இருக்கிறார்.

மோனிகா, ஆனந்த்நாகு, KPY அன்சர்.. ஆகியோர் நம்மை அதிகமாகவே கவர்கின்றனர்.. ஆனந்த்நாகு க்ளைமாக்ஸ் காட்சியில் கைத்தட்டல் பெறுகிறார்.

லிங்கேஷின் கிராமத்து நண்பர்களாக வரும் விக்கி உள்ளிட்ட நால்வரும் நல்ல தேர்வு. உயர்கல்விப்படிக்கு ஏங்குவதும்.. குடும்ப பாரத்தை சுமப்பதும்.. நட்புக்காக துணை நிற்பதும் என சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.

டெக்னீசியன்கள்…

இசை – ஆப்ரோ
ஒளிப்பதிவு- கார்த்திக் சுப்ரமணியம்.
எடிட்டர்- அசோக்.

இசை பெரிதாக கவரவில்லை.. இது போன்ற காலேஜ் படங்களுக்கு அருமையான காதல் பாடலையும் நட்பு பாடலையும் கொடுத்திருக்கலாம்.. ஆனால் அதனை தவற விட்டுள்ளார் இசையமைப்பாளர் ஆப்ரோ.

ஒளிப்பதிவு கண்களுக்கு கலர்ஃபுல் விருந்து.. முக்கியமாக படத்தின் எடிட்டிங் சிறப்பாக உள்ளது.

இயக்கம் பற்றிய அலசல்..

ஒரு பக்கம் வங்கி கொள்ளை.. ஒரு பக்கம் கல்வி கடன் பிரச்சனை என இரண்டு கதைகள் பயணிக்கும் போது இரண்டையும் ஒன்றோடு ஒன்றாக கலந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

கல்வி என்பது நம் தேவை மட்டுமல்ல..அது நம் உரிமை என்பதை காலேஜ் கலாட்டா உடன் பேசியிருக்கிறது காலேஜ் ரோடு

கல்வி கடன் கொடுக்கச் சொல்லி அரசு அறிவித்தாலும் வங்கி அதிகாரிகள் கமிஷன் கேட்பதும் கொள்ளை அடிப்பதும் என அப்பட்டமான காட்சிகளை வைத்துள்ளனர்.

மேலும் படிப்பை முடித்த பின்தான் வட்டி + தொகையை கேட்கப்பார்கள்.. ஆனால் சில வங்கிகள் அரசுக்கு தெரியாமல் மாணவர்களை துன்புறுத்தும் காட்சிகள் நம் கண்களை கலங்க வைக்கிறது.. இது நம் வாழ்விலும் நிஜத்திலும் நடப்பது என்பது மறுக்க முடியாத உண்மை..

லட்சம் லட்சமாக பணமிருந்தும் உயர் கல்வி படிக்க நினைக்கும் பணக்கார மாணவர்களுக்கு கல்வி கடன் கொடுக்கும் வங்கி அதிகாரிகள் ஏழை மாணவர்களை வஞ்சிப்பதையும் காட்டி இருக்கிறார் இயக்குனர்.

வசனங்களும் நம்மை கவர்கின்றன.. கல்வி கடன் மறுக்கப்பட்ட ஒரு ஏழை மாணவன் பேசும் வசனங்கள் செம.

அதுபோல கல்லூரி கலாட்டா வசனங்களும் ரசிக்க வைக்கிறது… MOONக்கு போன ஆம்ஸ்ட்ராங்கே 3 போட்டோ தான் எடுத்திருப்பார்… முட்டை போண்டா சாப்பிட போற இவளுக 300 போட்டோ எடுக்குறாங்க.. என்ற கிண்டலும் ரசிக்க வைக்கிறது..

ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனி ஆகிவிடக்கூடாது என்பதை முதல் படத்திலே பதிவு செய்த இயக்குநர் ஜெய் அமர் சிங் பாராட்டுக்குரியவர்.

நடிகர்கள்… லிங்கேஷ், மோனிகா, ஆனந்த்நாகு, KPY அன்சர், அக்சய்கமல், பொம்முலக்‌ஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அறுவிபாலா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இசை – ஆப்ரோ
ஒளிப்பதிவு- கார்த்திக் சுப்ரமணியம்.
எடிட்டர்- அசோக்

MP எண்டர்டெயின்மெண்ட் பிரவீன் மற்றும் சரத். இவர்களுடன் ஜனா துரைராஜ் மனோகர் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

ஆக… இந்த காலேஜ் ரோடு.. கண்ணீரில் கல்வி கடன்

College road movie review and rating in tamil

More Articles
Follows