தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நாம் எத்தனையோ போராட்டங்களை பார்த்திருக்கிறோம். கேள்விப்பட்டு இருக்கிறோம்.
ஆனால் ஒரு தலைவன் இல்லாமல், எந்த ஒரு அரசியல் தலையீடும் இல்லாமல் நேர்மையான ஒரு போராட்டம், எந்த ஒரு அழைப்பும் இல்லாமல் நடந்தது என்றால் அது நிச்சயம் ஜல்லிக்கட்டு போராட்டம்தான்.
மதுரை அலங்காநல்லுரில் ஜல்லிக்கட்டு நடத்த 2015 & 2016 ஆண்டுகளில் தடை விதிக்கப்பட்டது. ஆனால் 2017ல் அந்த ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என மதுரையில் தொடங்கிய இந்த போராட்டம் சென்னை மெரினாவில் மிகப்பெரிய அளவில் தொடர்ந்தது.
10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டபோதும் ஒரு சின்ன அசம்பாவிதம் கூட நடக்கவில்லை. பெண்களை கண்ணியமாக நடத்தினர் இளைஞர்கள். இத்தனைக்கும் காவல்துறை கூட இதை செய்யவில்லை.
தமிழக இளைஞர்களால் அறவழியில் நடத்தப்பட்ட மெரினா புரட்சி போராட்டம் இறுதிநாளில் சில சமூக விரோதிகளால் கலவரமானது. இறுதியாக மெரினா கடற்கரையில் மீனவர்களை தாக்கினர்.
இந்த நிகழ்வுகளின் தொகுப்பை படமாக்கியுள்ளார் இயக்குனர் எம்.எஸ். ராஜ்.
இப்போராட்டம் எங்கு ஆரம்பிக்கப்பட்டது, ஏன் ஆரம்பிக்கப்பட்டது, யாரால் ஆரம்பிக்கப்பட்டது, அதன் வெற்றி எப்படி? நன்மைகள் என்ன? என்பதை விளக்கியுள்ளார்.
ஆனால் யூடிப் சேனல்கள் மற்றும் செய்தி சேனல்களில் வந்தவற்றை அப்படியே காட்சியாக வைத்து காட்டியுள்ளார் என்பதுதான் பலவீனம்.
இந்த விளக்க படத்தில் யூடியுப் புகழ் ராஜ்மோகன், நவீன், ஸ்ருதி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த போராட்டம் 8 பேரால் தொடங்கப்பட்டு 18 பேரால் சாதிக்கப்பட்டது போல் சொல்லியுள்ளார்.
நிச்சயம் இந்த போராட்டத்தில் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் பங்குள்ளது.
அவரால் முடிந்தது… இவரால் சாத்தியமானது என்று சொல்லக்கூடாது என்பதுதான் சற்று வருத்தமாக உள்ளது. நல்லவேளை அவற்றை காட்சியாக வைக்காமல் மேலோட்டமாக சொல்லிவிட்டார்.
ஆக.. டிஜிட்டல் யுகத்தில் தமிழர்கள் நெஞ்சம் நிமிர்த்தி சொல்லிக் கொள்ள பொக்கிஷமாக அமைந்த போராட்டம் இந்த மெரினா புரட்சி.
Marina Puratchi movie review










