கதாநாயகன் விமர்சனம்

கதாநாயகன் விமர்சனம்

நடிகர்கள் : விஷ்ணுவிஷால், விஜய்சேதுபதி, கேத்ரீன் தெரசா, சூரி, ஆனந்த்ராஜ், சரண்யா பொன்வண்ணன், மொட்டை ராஜேந்திரன், அருள்தாஸ், மற்றும் பலர்.
இயக்கம் : சூப்பர் ஜீ புகழ் முருகானந்தம்
இசை : ஷான் ரோல்டான்
ஒளிப்பதிவு: லட்சுமணன்
எடிட்டர்: ஸ்ரீதரன்
பி.ஆர்.ஓ. : ரியாஸ் கே அஹ்மது
தயாரிப்பு : விஷ்ணுவிஷால்

கதைக்களம்…

ஊரு வம்பு நமக்கு எதுக்குடா? பிரச்சினைக்கு போகாதே என தன் மகன் விஷ்ணுவை பொத்திவைத்து வளர்த்து வருகிறார் அம்மா சரண்யா.

விஷ்ணுவுக்கு கேத்ரீன் மீது காதல்வர, பெண் பார்க்க செல்கின்றனர். ஆனால் ஒரு கோழைக்கு பெண்தர மறுக்கிறார் அவரின் அப்பா.

இதனால் விரக்தியில் இருக்கிறார் விஷ்ணு. இதனிடையில் தன் சகோதரியின் திருமண செலவுக்காக கிட்னியை ஆனந்த்ராஜீக்கு விற்க சம்மதிக்கிறார்.

அதன்பின் நடக்கும் சம்பவங்களை நகைக்சுவையாக கொடுத்துள்ளார் இந்த கதாநாயகன் குழுவினர்.

கேரக்டர்கள்…

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ஸ்டைலில் அடுத்த ஹிட்டையும் கொடுக்க நினைத்துள்ளார் புரொடியூசர் கம் ஹீரோ விஷ்ணுவிஷால்.

கேரக்டருக்கு ஏற்ற அலட்டிக்கொள்ளாத நடிப்பு. ஆனால் பயப்படும் காட்சிகளில் முகபாவனைகளில் நடிப்பு அனுபவத்தை காட்டியிருக்கலாம்.

காஷ்மீர் ஆப்பிள் போன்ற முகம், வாழைத்தண்டு கால்கள் என படு ப்ரெஸ்ஸாக வருகிறார் கேத்ரீன்.

நீயெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறமா ஃபர்ஸ்ட நைட் பண்ற ஆளா?’ என விஷ்ணுவை கேத்ரீன் கேட்கும் காட்சிகளில் நம்மையும் சூடேற்றுகிறார். (இந்த பொண்னுங்களே இப்படித்தான்)

காதல் கண் கட்டுதே படத்தில் நம்மை ஈர்த்த அதுல்யா இதில் தோழி கேரக்டரில் வருகிறார். சில நிமிடமே என்றாலும் இதிலும் கவர்கிறார்.

சூரிக்கு சில கதாநாயகன்களுடன் மட்டுமே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும். அதில் ஒருவராக விஷ்ணு வை சொல்லலாம்.

சூரி மொபைலுக்கு விஷ்னு ஐ லவ் யூ மேசேஜ் அனுப்பும்போது அங்கு சூரியும் அவரது மனைவியும் செய்யும் ரகளை ரசிக்க வைக்கிறது.

இரண்டாம் பாதியில் சூரி கிட்னியை பறிகொடுக்கும் காட்சிகளும், மொட்டை ராஜேந்திரன் பாடும் காட்சிகளில் சிரிப்பை கன்ட்ரோல் செய்ய முடியாது.

ஆனால் மொட்டை ராஜேந்திரன் ஒரே மாதிரியான ரோல்களை தவிர்ப்பது நலம்.

ஆனந்த்ராஜ் வந்தபிறகு படத்தின் காமெடி அதிகமாக களைகட்டுகிறது. அசத்தல் சார்.

கௌரவ டாக்டராக வருகிறார் விஜய்சேதுபதி. அவர் ஸ்கோர் செய்தாலும், தற்போது முன்னணி நடிகராக இருக்கும் அவரை இந்த சிறிய கேரக்டருக்கு பயன்படுத்தியிருக்க வேண்டாமே என தோன்ற வைக்கிறது.

இதுபோன்று குழப்பமாக பேசும் காட்சிகளில் பார்த்திபன், அல்லது எஸ்.ஜே.சூர்யாவை பயன்படுத்தி இருக்கலாமே எனவும் யோசிக்க வைக்கிறது.

அருள்தாஸ் மற்றும் சிங்கம் பாஸ் இருவரும் ரசிக்க வைக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

உன் நெனப்பு, டப்பு டிப்பு பாடல்கள் ரசிக்க வைக்கிறது. ஷான் ரோல்டனின் பின்னணி இசை காட்சிகளுக்கு பொருத்தமாக இருந்தாலும் டாஸ்மாக் பார் சண்டைக்காட்சிக்கு பொருந்தவில்லை. இரைச்சலாக உள்ளது.

மேலும் அதுநாள் வரை டம்மியாக இருக்கும் ஹீரோ திடீரென எல்லாரையும் அடிப்பது ரொம்ப ஓவர்.
ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் படத்திற்கு கைகொடுத்துள்ளது.

இயக்கம் பற்றி அலசல்…

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, மரகத நாணயம் என சில படங்களில் காமெடி கேரக்டரில் நடித்துள்ள முருகானந்தம், இந்த படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

இவரின் பிரபலமான சூப்பர் ஜீ டயலாக்கை படத்தில் ஒரு கடைக்கு வைத்துள்ளது கவனிக்க வைக்கிறது.

இயக்குனர் ஒரு காட்சியில் வருகிறார். இவரும் நடித்திருந்தால் படத்திற்கு கூடுதல் பலம் கிடைத்திருக்கும்.

காமெடி படம் என்றால் லாஜிக் வேண்டாம் நினைத்துவிட்டார் போல. எல்லாவற்றையும் காமெடியாகவே கொடுத்துவிட்டார்.

கதாநாயகன்… காமெடி நாயகன்

Comments are closed.

Related News

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தை தொடர்ந்து…
...Read More
வேலைன்னு வந்துட்ட வெள்ளைக்காரன் படத்தை தொடர்ந்து…
...Read More
அறிமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கிவரும் கதாநாயகன்…
...Read More