ஆணாதிக்கத்தை அழித்த அரசியல் அம்மா.. தலைவி விமர்சனம் 3.5/5

ஆணாதிக்கத்தை அழித்த அரசியல் அம்மா.. தலைவி விமர்சனம் 3.5/5

தலைவி படம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்த படமானது 1965 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த இன்ப துன்ப சம்பவங்களை மையப்படுத்தி படத்தை இயக்கியுள்ளார் விஜய்.

அதாவது நடிகையான தன் பயணத்தை தொடங்கியது முதல் தமிழக முதல்வராக அரியணையில் அமரும் வரை படமாக்கியிருக்கிறார்.

கேரக்டர்கள்…

ஜெயலலிதா என்பது ஒரு இரும்பு பெண்மணியின் கனமாக பாத்திரம் அதை ஏற்று நடிப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அதற்கு டிரெஸ் எடுத்த தைத்தது போல செம பிட்டாகி இருக்கிறார் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத்.

திமிர்த்தனம், வெகுளி, பாசம், காதல், அழுகை, ஏக்கம், கம்பீரம், ஆணவம் என அசால்ட்டாக செய்துள்ளார் கங்கனா.

எம்.ஜி.ஆர்.ஆக நடித்திருக்கிறார் அரவிந்த் சாமி. சில நேரங்களில் இவர் எம்ஜிஆரா? என கேட்க வைத்தாலும் பார்த்துக் கொண்டிருக்கும் போது பொருந்திப் போகிறார்.

ஆனால் ஒரு காட்சியில் சுத்தமாக ஒட்டவில்லை. எம்ஜிஆரை எம்ஆர். ராதா சுட்ட பிறகு எம்ஜிஆர் குரலில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஆனால் இங்கே அரவிந்த்சாமி குரலில் எந்த மாற்றமுல் இல்லை. அது முக்கியமான நிகழ்வு ஆச்சே.. அதை இயக்குனர் ஏனோ கவனிக்கவில்லை.

கருணாநிதி கேரக்டரில் நாசர். அசல் கருணாநிதியின் குரல் போலவே உள்ளது. நாசருக்கும் கங்கனாவும் சந்திக்கும் காட்சிகளில் தான் படமே தொடங்குகிறது. அதில் கங்கனா விடும் சவால்கள் பெண்களை உயர்த்தும்.

இதில் முக்கியமாக பாரட்டப்பட வேண்டியவர் ஆர்.என்.வீரப்பன் (அதாவது ஆர்.எம். வீரப்பன்). அந்த கேரக்டரில் மிரட்டி இருக்கிறார் சமுத்திரகனி. பேசும் பேச்சிலும் பார்க்கும் பார்வையிலும் 1000 அர்த்தங்கள் கொடுத்திருக்கிறார்.

நான் எம்ஜிஆரின் கேடயம் என சொல்லும்போதே செம கெத்தாக இருக்கிறார். அந்த கேடயம் வார்த்தை ஜெயா ஒருமுறை பயன்படுத்துவது செம சீன்.

எம்.ஆர்.ராதாவாக வரும், ராதாரவி சசியாக பூர்ணா. ஜெயாவின் அம்மாவாக பாக்யஸ்ரீ, பெரிதாக வேலையில்லை. ஆனால் காட்சிகள் கச்சிதம். ஜானகியாக மதுபாலா. மாதவனாக தம்பி ராமையா. இவரின் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

விஜேந்திர பிரசாத்தின் வசனங்கள் சூப்பர். மனதை விட்டு அகலவில்லை.

ஆர்ட் டைரக்டர் மற்றும் ஒளிப்பதிவாளரை நிச்சயம் பாராட்டனும். விஷால் விட்டலின் ஒளிப்பதிவு அருமை. படத்தின் கலை இயக்குனர் ராமகிருஷ்ணா, மோனிகா நிகோட்ரிக்கு அதிக வேலை

ஜிவி.பிரகாஷின் இசையில் பாடல்கள் பெரிதான கவரவில்லை என்றாலும் பின்னணி இசையில் அதிகமாகவே ஸ்கோர் செய்துவிடுகிறார்.

அண்ணா கருணாநிதி எம்ஜிஆர் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. ஆனால் அதில் இயக்குனர் நிறைய ரகசியத்தை மறைத்துவிட்டதாக சீனியர்கள் சொல்லி கேட்டோம். அதை சரி செய்திருக்கலாம். (நாளைய தலைமுறை இதையே உண்மை என நம்பிவிடும்)

அதுபோல் ஜெயலலிதாவின் சினிமா காட்சிகளை குறைத்துவிட்டு இன்னும் கொஞ்சம் அரசியல் பயணத்தை காட்டியிருக்கலாம்.

அரசியலில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய நிலையிலும் ஒரு பெண் எப்படி தைரியமாக நடந்துக் கொண்டாள் என்பதை ஆணித்தரமாக சொன்ன விஜய்க்கு நன்றிகள். சிங்கப்பெண் ஜெயாவின் வாழ்க்கை ஒரு சரித்திரம்தான்.

Jayalalithas biopic Thalaivi movie review rating

Related Articles