அவனே சிறப்பு போலீஸ்… அவனே ஸ்ரீமன் நாராயணா விமர்சனம் 3.5/5

அவனே சிறப்பு போலீஸ்… அவனே ஸ்ரீமன் நாராயணா விமர்சனம் 3.5/5

கதைக்களம்…

ஆந்திரா மாநிலத்தில் உள்ள அமராவதி நகரில் படத்தின் மொத்த காட்சிகளை படமாக்கியுள்ளனர். ஆனால் 1960களில் நடக்கும் கதை என்பதால் போட்டோ ஷாப்பில் நாம் பயன்படுத்தும் செபியா டோனை படம் முழுக்க பயன்படுத்தியுள்ளார்.

அமராவதி நகரில் ஒரு நாடகம் குழு உள்ளது. அவர்களில் 6 பேர் ஒரு பெரிய புதையலை கொள்ளையடிக்கிறார்கள். இதனையறிந்த ஒரு டான் அவர்களை கொன்று விடுகிறார். ஆனால் அவருக்கு புதையல் இருக்கும் ரகசியம் தெரியவில்லை.

இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். ஒருவர் இவரின் மனைவிக்கு பிறந்தவர். மற்றொரு மகன் வேலைக்காரிக்கு பிறந்தவர்.

இதனால் இரு மகன்களுக்கும் ஒருவருக்கொருவர் ஆகாது.

இதனையறிந்த மதுசூதனன் ராவ் (டான்) மரணிக்கும் போது தன் சொந்த மகனிடம் எந்த காலத்திலும் இன்னொரு மகனை கொன்றுவிட கூடாது என சத்தியம் வாங்கி இறக்கிறார்.

அவரின் மரணத்திற்கு பிறகு இருவரும் அரியணை பதவியில் ஏற துடீக்கிறார்கள். அதே சமயம புதையரை தேடும் முயற்சியிலும் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் கிட்டதட்ட 15 வருடங்களுக்கு பிறகு அமராவதி போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராக வருகிறார் ரக்‌ஷித் ஷெட்டி பார்ப்பதற்கு கம்பீரமாக இருந்தாலும் நிறைய வெத்து காமெடி செய்கிறார்.

இவர் வந்தது முதலே புதையலை தேடுதல் வேட்டையில் இறங்குகிறார்.
புதையல் யாருக்கு கிடைத்தது? அதிர்ஷ்டசாலி யார்? ரக்‌ஷித் ஷெட்டிக்கும் புதையலுக்கு என்ன தொடர்பு? படத்தில் நாயகி இருக்கிறாரா? அவரின் வேலை என்ன என்பதே படக்கதை.

கேரக்டர்கள்…

கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி படத்தின் திரைக்கதை முதல் தயாரிப்பு வரை என அனைத்திலும் கவனம் செலுத்தியுள்ளார்.

இவர் நாயகியை லட்சுமி அவர்களே லட்சுமி அவர்களே என அழைக்கும் ஸ்டைலே தனியழகு. அதாவது மரியாதையாக சொல்லி அழைக்கிறார். இனி நாமும் இதே போல் பெண்களை சொல்லி அழைத்தாலும் தவறில்லை.

காமெடி, ஆக்‌ஷன் என கலந்துக் தன் ஸ்டைலில் புகுந்து விளையாடியிருக்கிறார். சுருட்டு பிடித்துக் கொண்டும் அவன் யார் தெரியுமா? அவனே ஸ்ரீமன் நாராயணன் என கெத்து காட்டும்போது நம்மை ரசிக்க வைக்கிறார்.

படத்தில் நாயகி உட்பட எல்லாரும் 1960 உடைகளில் இருக்க இவர் மட்டும் செம ஸ்டைலாக இன்றைய ட்ரெண்ட்டுக்கு பிட் ஆக போலீஸ் உடை அணிந்திருக்கிறார். அதற்கான எந்த காரணமும் படத்தில் இல்லை என்பதுதான் வருத்தம்.

ஒரு சர்போர்ட்டிக் கேரக்டர் போல நாயகி ஷான்வி நடித்துள்ளார். அதே சமயம் அழகு அண்ட் அமைதி இவரது ப்ளஸ் பாய்ண்ட்.
மற்றொரு போலீசாக வரும் அச்யுத் குமார் (ரஜினி முருகன் படத்தில் கீர்த்தியின் அப்பா) நிறைய காட்சிகளில் நாம் சிரிக்க உதவியுள்ளார்.

இவர்களுடன் பாலாஜி மனோகர், பிரமோத் ஷெட்டி, மதுசூதன் ராவ், கோபால கிருஷ்ண தேஷ்பாண்டே ஆகியோரும் அசத்தல்.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

உல்லாஹ் ஹைதூரின் கலை பணிகளை பாராட்டாமல் இந்த படத்தை நாம் ரசிக்கவே முடியாது. அப்படியொரு அழகை விருந்தளித்துள்ளார்.

அதுபோல் கரம் சாவ்லாவின் ஒளிப்பதிவில் அமராவதி அருமை.

பின்னணி இசையில் அஜனீஷ் லோக்நாத், சரண்ராஜின் இருவரும் கச்சிதம். பாடல்களும் ரசிக்க வைக்கின்றன.

கன்னட படத்தை பார்த்த உணர்வு இல்லாமல் நேரடி தமிழ் பட டப்பிங் அருமை. ரக்‌ஷித் ஷெட்டியும் திரைக்கதை எழுதியிருக்கிறார்.

வசனங்களை எழுதியுள்ள விஜயகுமாருக்கும் பாராட்டுக்கள்.

ஆக மொத்தம் அவனே ஸ்ரீமன் நாராயணா… அவனே சிறப்பு போலீஸ்

Avane Srimannarayana review rating

Comments are closed.