அருவி விமர்சனம்

அருவி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : அதிதி பாலன், லட்சுமி கோபால்சாமி, மதன்குமார் தட்சினாமூர்த்தி, ஸ்வேதா சேகர், திருநங்கை அஞ்சலி வரதன்
இயக்கம் : அருண்பிரபு புருஷோத்தமன்
இசை : பிந்து மாலினி, வேதநாத் பரத்வாஜ்
ஒளிப்பதிவு: ஷேல்லி கார்லிஸ்ட்
எடிட்டிங்: ரேமண்ட் டெர்ரிக் க்ராஸ்டா
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு: டீரீம் வாரியர்ஸ் (எஸ்ஆர் பிரபு)

Aruvi movie stills (13)

கதைக்களம்…

அருவி என்பது இப்பட நாயகியின் பெயர். அழகான குடும்பம். இவருக்கு ஒரு தம்பி. அம்மா அப்பா. அழகான கிராமத்தில் இருக்கும் இவர்கள் அப்பாவின் பணி காரணமாக சென்னைக்கு செல்கின்றனர்.

நகரத்து வாழ்க்கை பிடிக்காத அருவி, வேறுவழியின்றி வாழ்க்கிறாள். தோழியின் தவறான பழக்கத்தால் இவரது வாழ்க்கை பயணம் மாறுகிறது.

ஒரு சூழ்நிலையில் உடலால் கெட்டு போகிறாள். (அதை சொன்னால் படத்தின் ட்விஸ்ட் போய்விடும்)

இதனால் தன் குடும்பத்தினாரால் வெளியேற்றப்படுகிறார். அதன்பின்னர் தோழி வீட்டில் தங்குகிறாள். அங்கிருந்து வெளியேறும் இவருக்கு ஒரு திருநங்கையின் நட்பு கிடைக்கிறது.

அதன்பின் ஒரு டிவி ரியால்ட்டி சொல்வதெல்லாம் சத்தியம் என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறாள்.

அப்போது தன்னுடைய இந்த நிலைமைக்கு 3 ஆண்கள் காரணம் என்கிறாள். அதன்பின்னர் படத்தில் நடைபெறும் சம்பவங்களும், அதன் விளைவுகளுமே எதிர்பாராத க்ளைமாக்ஸ்.

Aruvi movie stills

கேரக்டர்கள்…

எத்தனை பேர் நடித்தாலும் மற்ற கேரக்டர்களை தன் அருவி கேரக்டரால் மறைத்துவிடுகிறார் அதிதிபாலன். அருவிக்கு கேரக்டருக்கு இவர் ஒரு ஜெராக்ஸ்.

புதுமுக நாயகி என்று படக்குழு சொன்னாலும் நம்ப மறுக்கிறது நம் உள்ளம். க்ளைமாக்ஸ் காட்சி அந்த வீடியோ நம் மனதை கலங்கடிக்கும். இவர் ஒரு பொம்பள சீயான் என்று சொல்லுமளவுக்கு உடலை வருத்தி நடித்திருக்கிறார்.

டிவி ஷோ டைரக்டராக வரும் கவிதா பாரதி கலக்கல். ஷோ நடத்திக் கொண்டிருக்கும் போதே அதிதிக்கு ரூட் விடுவதும் வழிவதும் டைரக்டர் டச்.

உதவி இயக்குனராக வரும் அந்த இளைஞர் பிரதீப் ஆண்டனி செம. பெரிய டைரக்டர்களிடம் அவர்கள் படும் அவஸ்தையை சரியாக செய்திருக்கிறார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் லட்சுமி கோபால்சாமி அவர்கள் நடிகைக்கு உரிய நளினம், ஆடம்பரம் என அசத்தல்.

முக்கியமாக ரோலிலிலி…ங்ங் சார் என்று அடிக்கடி சொல்லும் அந்த கேமராமேன் அனைவரையும் கவர்வார்.

சுபாஷ் ஆக வரும் சின்ன பையன், செக்யூரிட்டி என அனைவரும் கைத்தட்டல்களை அள்ளுகின்றனர்.
இவருடன் நடித்த பெரும்பாலானோர் புதுமுகங்களே.

திருநங்கை கேரக்டர் நிறைய படத்தில் வந்தாலும், இதில் ரசிக்கும்படி செய்திருக்கிறார் அஞ்சலி வரதன். எமிலி கேரக்டருக்கு இவரால் ஏற்றம் கிடைத்துள்ளது.

Aruvi movie stills (20)

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பிந்துமாலினி – வேதாந்த் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டும் அழகு சேர்க்கிறது. படத்தின் கதையுடன் ஒன்றிப் போவதால் ரசிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் படத்திற்கு பக்கபலம். முக்கியமாக கிராமத்து காட்சிகள் அருவி காட்சிகள் அந்த அழகு மழலை செல்வங்கள் நிச்சயம் ரசிக்க வைக்கும்.

இப்படி ஒரு கதையை எடுக்க துணிந்த இயக்குனரையும் தயாரிப்பாளரையும் பாராட்டியே ஆகவேண்டும்.

இப்படியாக நிறைய ப்ளஸ்கள் சொன்னாலும் படத்தின் முக்கியமான அந்த நோய் எப்படி வந்தது? அப்படி வருவது சாத்தியமா? என்ற கேள்வி பலரின் மனதில் எழுவது நிச்சயம். அதை நல்ல மருத்துவர்களின் ஆலோசனைப்படி செய்திருக்கலாம்.

இந்த அருவி பெண்ணை சமூகம் புரிந்துக் கொள்ளவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். அதற்காக தன்னுடைய சந்தோஷத்திற்காக மற்றவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி பணிய வைப்பது எந்த விதத்தில் நியாயம்?

அந்த வீடியோ பதிவு வந்தபின்பே அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். அதன்பின்னர்தான் அவர்களுக்கு அனுதாபம் வந்ததா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.

காவல்துறைக்கு இது எப்படி தெரியாமல் போனது? என்ற பல கேள்விகள் எழுகிறது. சில லாஜிக்குகளை மறந்துவிட்டு நிச்சயம் பார்க்கலாம்.

அருவி… நிச்சயம் நனையலாம்

மாயவன் விமர்சனம்

மாயவன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சந்தீப் கிஷன், லாவண்யா, டேனியல் பாலாஜி, கே.எஸ்.ரவிக்குமார், ஜெயப்பிரகாஷ், அமரேந்திரன், மைம் கோபி, பக்ஸ் பகவதி மற்றும் பலர்
இயக்கம் : சிவி. குமார் (வசனம் நலன்குமாரசாமி)
இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவு: கோபி அமர்நாத்
எடிட்டிங்: லியோ ஜான்பால்
கலை: கோபி ஆனந்த்
பி.ஆர்.ஓ. : நிகில்
தயாரிப்பு: திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்

கதைக்களம்…

சந்தீப் கிஷன் ஒரு போலீஸ். படத்தின் ஆரம்ப காட்சியில் குற்றவாளி ஒருவனை துரத்துகிறார். அப்போது ஒரு திறந்திருக்கும் வீட்டில் ஒருவர் அவரது மனைவியை கொலை செய்கிறார்.

இதனால் அதிர்ச்சியைடையும் சந்தீப், அவரை பிடிக்க இருவருக்கும் சண்டை நடக்க, இறுதியில் கொலையாளியை கொன்று விடுகிறார் சந்தீப்.

அவர் அடித்த அடியில் இவருக்கு மனநிலை சரியில்லாமல் போக, வேலையில் சேரக்கூடாது என்கிறார் மருத்துவர்.

ஆனால் மெடிக்கல் ரிப்போர்ட்டை மாற்றி பணியில் சேர்கிறார் சந்தீப்.

இந்நிலையில் மற்ற சில கொலைகள் அதே பாணியில் அதுபோன்ற கொலையாளி நடத்துகிறான்.

இறந்த கொலையாளி போல மற்ற கொலைகளும் நடப்பது எப்படி சாத்தியம்? அவன் சாகவில்லையா? என குழம்புகிறார் சந்தீப்.

அந்த கொலையாளியை இயக்குவது யார்? என்று மாயவனை தேடி அலைகிறார்.

இறுதியில் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நல்ல உயரம், உடல்வாகு என அசத்தலாக வருகிறார் சந்தீப். காதல் காட்சிகள் கைகொடுக்கா விட்டாலும் ஆக்சன் காட்சிகள் கை கொடுத்துவிடுகிறது.

ஆனால் முறுக்கு மீசையை ஒட்டி வைத்து நடித்துவிட்டார். அதிலும் க்ளோசப் காட்சிகள் அசிங்கமாக காட்டி விடுகிறது. டைரக்டர் சார் இப்படி பண்ணலாமா?

டேனியல் பாலாஜிக்கு இதுபோன்ற படம் என்றால் அல்வா சாப்பிடுவது போல. மனிதர் அநியாயத்திற்கு மிரட்டியிருக்கிறார்.

கடைசியில ஜேக்கி ஷெராப் இராணுவ அதிகாரியாக மிரட்டியிருக்கிறார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு பலம்.

மற்றொரு போலீஸ் ஆக பக்ஸ் பகவதி. நன்றாக நடித்துள்ளார்.

இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், ஜெயப்பிரகாஷ், அமரேந்திரன், மைம் கோபி ஆகியோரும் உண்டு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பின்னணி இசையில் ஜிப்ரான் செம மிரட்டல். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு. கிராபிக்ஸ் காட்சிகள், அந்த ஆய்வு கூடம் என நன்றாக காட்டியுள்ளனர். கலை இயக்குனருக்கும் பாராட்டுக்கள்.

படத்தின் இடைவேளை வரை என்ன மாதிரியான படம்? யார் மாயவன்? என த்ரில்லாக படத்தை கொண்டு சென்றிருக்கிறார் டைரக்டர் சி.வி. குமார்.

மனிதன் மூளையை காப்பி எடுத்து அதை மற்றவர்கள் மூளையில் ஏற்றி, அவரை சாகாவரம் பெற்று வாழ வைப்பது புதுசு.

ஆனால் இது எல்லா தரப்பு மக்களையும் சென்றடையுமா? என்பதுதான் புரியவில்லை. இடியாப்ப சிக்கல் கதையை சுவையாக கொடுத்திருக்கிறார்.


மாயவன்… மாயஜாலக்காரன்

ரிச்சி விமர்சனம்

ரிச்சி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : நிவின் பாலி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், லட்சுமி பிரியா சந்திரமவுலி, பிரகாஷ் ராஜ், நட்டி என்ற நட்ராஜ், ஜிகே. ரெட்டி மற்றும் பலர்.
இயக்கம் : கௌதம் ராமச்சந்திரன்
இசை : அஜனீஷ் லோக்நாத்
ஒளிப்பதிவு: பாண்டிகுமார்
எடிட்டிங்: அதுல்விஜய்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு: காஸ்ட் அண்ட் க்குரூ மற்றும் எஸ்.சினிமா கம்பெனி

கதைக்களம்…

சிறுவயதில் தான் செய்யாத குற்றத்திற்காக நிவின்பாலி சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு செல்கிறார்.

அங்கு அவர் நன்றாக படித்தாலும் வெளியே வந்து தாதா (விஷாலின் அப்பா ஜிகே.ரெட்டி) உடன் இணைகிறார்.

ஏன்டா இப்படி இருக்கிற என்று கேட்டால்… சில பேர் படிச்சிட்டு என்ஜினியரா இருக்காங்க. டாக்டராக இருக்காங்க. நான் ரவுடியா இருக்கேன் என்கிறார்.

இந்த ரவுடியின் வாழ்க்கையை மற்றும் அவர் செய்யும் கொலைகளை மையப்படுத்தி ஒரு தொடர் எழுத ஆரம்பிக்கிறார் ரிப்போர்ட்டரான ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

இதனால் ரிச்சி சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து அவரின் கதை கேட்கிறார்.

அவர்கள் ஒவ்வொருவரும் சொல்லும் கதைதான் இந்த ரிச்சி.

richie hit

கேரக்டர்கள்…

நிவின்பாலியை எங்கும் நாம் ரவுடியாக பார்க்க முடியவில்லை. அழகாக நல்லவனாகவே தெரிகிறார். படத்தில் ஆடுகளம் முருகதாஸ் சொல்வதுபோல் செம ஸ்டைலிஷ் ஆக வருகிறார்.

தமிழில் சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கிறார். (அடிபொலி) சபாஷ் சேட்டா. ஆனால் இவர் கெட்ட வார்த்தைகள் பேசும்போது மொழி தெரியாதவர் பேசுவது போல் அழகாக உள்ளது.

இவரைத் தவிர படத்தில் முக்கிய கேரக்டர்களாக பிரகாஷ்ராஜ், நட்டி, ஷ்ரத்தாஸ்ரீநாத், லட்சுமி, ஆடுகளம் முருகதாஸ், ராஜ்பரத் என நிறைய பேர் வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு இன்னும் சில காட்சிகளை கொடுத்து சிறப்பாக்கி இருக்கலாம்.

richie poster

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இடைவேளை வரை படத்தின் கதையோட்டம் எதை நோக்கி செல்கிறது என்பதை புரிந்துக் கொள்வது கஷ்டம்தான்.

படத்திற்கு அஜனீஷ் லோகேஷின் பின்னணி இசை அசத்தல். ரிச்சி அறிமுக காட்சி முதல் அவர் செய்யும் ரவுடித்தனம் வரை என அருமையான இசையை கொடுத்திருக்கிறார்.

ஆனால் இவரது இசைக்கு படத்தின் வேகம் போதவில்லை. திரைக்கதை ஆமை வேகத்தில் நகர்கிறது.

ஒளிப்பதிவாளர் பாண்டிகுமார் மற்றும் எடிட்டர் அதுல்விஜய் ஆகியோர் தங்கள் பணிகளில் நிறைவு.

ஆக்சன், கடல் காட்சிகள் என நிறைவாக கொடுத்திருக்கிறார்கள்.

பலவீனமான திரைக்கதையால் ரிச்சி ரசிகர்களிடம் ரீச்சாகுமா? என்பது சந்தேகம்தான்.

ரிச்சி… ரீச் லெவல் குறைவு

சத்யா விமர்சனம்

சத்யா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி, ஆனந்த்ராஜ், சதீஷ், ஷெரின் (பேபி), யோகிபாபு, நிழல்கள்ரவி மற்றும் பலர்.
இயக்கம் : பிரதீப் கிருஷ்ணமூர்த்தி
இசை : சைமன் கிங்
ஒளிப்பதிவு: அருண்மணிபழனி
எடிட்டிங்: கௌதம் ரவிச்சந்திரன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு: சத்யராஜ் நாதம்பாள் பிலிம்ஸ்

sathya yogi babu

கதைக்களம்…

தெலுங்கில் ஹிட்டான ‘க்‌ஷணம்’ படத்தின் ரீமேக்தான் இப்படம். தெலுங்கு படத்தில் கல்லூரி இருக்கும். ஆனால் இதில் ஐ.டி நிறுவனம் என மாற்றம் செய்திருக்கிறார்கள்.

சிபிராஜின் முன்னாள் காதலி ரம்யா நம்பீசன். சிபிராஜ் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது நண்பர் யோகிபாபு.

ஒரு நாள் சிபிக்கு போன் செய்து என் மகளை கடத்திவிட்டார்கள். நீதான் அவளை காப்பாற்ற வேண்டும் என உதவி கேட்கிறார் ரம்யாநம்பீசன்.

இதனால் இந்தியாவுக்கு வருகிறார் சிபிராஜ்.

அவர் கண்டுபிடிக்க செல்ல இதில் பல பிரச்சினைகள் இருப்பது தெரிய வருகிறது.

அப்படி ஒரு குழந்தையே இல்லை, ரம்யா நம்பீசனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என அவளது கணவர் உட்பட பலரும் சொல்கின்றனர்.

இதனால் குழம்பி நிற்கிறார் சிபி.

ஆனால் தன்னை நினைவில் வைத்துக் கொள்ளும் அவளுக்கு நிச்சயம் குழந்தையும் நினைவில் இருக்கும் என தேடுதல் வேட்டையில் களம் இறங்குகிறார்.

அதன்பின் என்ன ஆனது? குழந்தை உண்மையில் இருந்ததா? மற்றவர்கள் அதை மறைக்க காரணம் என்ன? என்பதே மீதிக்கதை.

sathya movie still

கேரக்டர்கள்…

நாய்கள் ஜாக்கிரதையில் நாய், ஜாக்சன் துரையில் பேய்யை நம்பிய சிபிராஜ் இதில் கதையை நம்பி இறங்கியிருக்கிறார். இந்த சத்யா மூலம் சிபிராஜ் சிக்ஸரும் அடித்துள்ளார்.

கதைக்கு எது தேவையோ? அதை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆனால் ரம்யா போன்ற ஒரு அழகான நாயகி இருந்தும் இவருக்கு ரொமான்ஸ்தான் வரமறுக்கிறது.

ரம்யா மற்றும் வரலட்சுமி இரு நாயகிகள். ரம்யா அழகு என்றால் வரலட்சுமி திமிர் அழகு. க்ளைமாக்ஸ் காட்சியில் வரலட்சுமி ஸ்கோர் செய்கிறார்.

இதில் காமெடி நாயகன் சதீஷ் சீரியஸ் நாயகனாக மாறியிருக்கிறார்.

காமெடியும் மிரட்டலும் கலந்த போலீஸ் ஆனந்த்ராஜ்.

யோகிபாபு சில காட்சிகளில் வந்தாலும் நம்மை நிச்சயம் சிரிக்க வைக்கிறார்.

பேபி ரியா அழகு குட்டி. ஆனால் இவர் காணாமல் போனபிறகு பேச்சுக்கு ஒரு வார்த்தை கூட அம்மாவை (ரம்யா) கூப்பிடவில்லையே அது ஏன்..?

sathya varalaxmi and team

தொழில்நுட்ப கலைஞர்கள்..

யவ்வனா’ பாடல் ரசிக்க வைக்கிறது. சைமன் கிங் அவர்களின் பின்னணி இசை பெரிதாக பேசப்படும். இதுபோன்ற த்ரில்லர் படங்களுக்கு இசைதான் பலம். அதை சரியாக செய்திருக்கிறார்.

அதுபோல் அருள்மணியின் ஒளிப்பதிவில் ஐடி கம்பெனி, குழந்தை கடத்தல், போலீஸ் என ரசிக்கும்படி காட்சிகளை கொடுத்திருக்கிறார்.

தெலுங்கு ரீமேக் என்றாலும் அதில் சில மாற்றம் செய்து தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தப்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

நிறைய ட்விஸ்ட்டுக்கள் இருப்பதால் சொன்னால் சுவாரஸ்யம் குறைந்துவிடும்)

ஆனால் கிளைமாக்ஸில் அந்த குழந்தை யாருடையது? அதற்கு ஆனந்த்ராஜ்ம் சிரித்துக் கொண்டே துணை போவது எல்லாம் ரொம்ப ஓவர்.

சத்யா… ரசிக்க தகுந்தவன்

திருட்டுப் பயலே2 விமர்சனம்

திருட்டுப் பயலே2 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : பிரசன்னா, பாபி சிம்ஹா, அமலாபால், எம்ஸ். பாஸ்கர், பிரதீப் கே விஜயன் (சேட்ஜீ), முத்துராமன் மற்றும் பலர்.
இயக்கம் : சுசி கணேசன்
இசை : வித்யாசாகர்
ஒளிப்பதிவு: பி. செல்லத்துரை
எடிட்டிங்: ராஜா முகம்மது
பி.ஆர்.ஓ. : நிகில்
தயாரிப்பு: ஏஜிஎஸ் நிறுவனம்

கதைக்களம்…

பாபி சிம்ஹாவும் அமலாபாலும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள்.

அமலா பால் ஒரு பேஸ்புக் பைத்தியம். போட்டோ போட்டு லைக்ஸ் பெறுவதே இவரது வேலை. இதனால் பல ஆண்களுடன் நட்புடன் பழகி வருகிறார்.

விஐபி.களின் செல்போன் மற்றும் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கும் போலீஸ் வேலை பார்க்கிறார் பாபி சிம்ஹா. பாபி மீது உள்ள நம்பிக்கையால் அவருக்கு ஒரு புதிய ப்ராஜக்ட்டை கொடுக்கிறார் முத்துராமன்.

ஆனால் ஒட்டுக்கேட்டு சில ரகசியங்களை தெரிந்துக் கொண்டு அதிகாரிகளுக்கு தெரியாமல் பல கோடிகளை சுருட்டுகிறார் பாபி.

பேஸ்புக் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் பல பெண்களை தன் வலையில் விழவைத்து வாழ்க்கையை அனுபவிக்கிறார் பிரசன்னா.

ஒருநாள் பாபி மற்றவர்களின் பேச்சை ஒட்டுக் கேட்கும்போது தன் மனைவி அமலாபால் பிரசன்னாவுடன் பேசுவது தெரிகிறது.

அதை பிரசன்னாவிடம் கேட்கப் போகும்போது நீ என்ன யோக்கியனா? நீயும் கோடிகளை சுருட்டும் திருட்டுப்பயல்தானே.

நீ என்னை போட்டுக் கொடுத்தால், உன் மனைவி பேச்சை, படங்களை லீக்காகிவிடுவேன் என்கிறார்.

இந்த இரண்டு திருட்டுப்பயலுகளுக்கும் நடக்கும் யுத்தமே படத்தின் க்ளைமாக்ஸ்.

 

DP8QyOnUEAApBRT

கேரக்டர்கள்…

யார் வில்லன்? யார் ஹீரோ என தெரியாத அளவுக்கு பிரசன்னா மற்றும் பாபி சிம்ஹா இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.

இதில் ரொமான்ஸ் ஸ்மார்ட், மிரட்டல் என அதிகம் ஸ்கோர் செய்திருக்கிறார் பிரசன்னா. கண் முன்னால் நிகழும் மரணத்தை அசால்ட்டாக பார்த்தபடி பீட்சா சுவைப்பது என ரசிக்க வைக்கிறார்.

தான் ஒரு போலீஸாக இருந்தபோதிலும் எதையும் செய்ய முடியாமல் மனதுக்குள் தவிக்கும் தவிப்பை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார் பாபி.

அமலாபால்.. அழகான அருமையான பாலாக பளிச்சிடுகிறார். பிரச்சினையை கணவனிடம் சொல்லமுடியாமல் தவிப்பதும், பேஸ்புக் பொழுதை கழிப்பதும், அதன்பின் வரும் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் திணறுவதும் என கைத்தட்டல் பெறுகிறார்.

கிளாமர், ஹோம்லி என இரண்டிலும் அசத்துகிறார் அமலாபால். வெல்கம் பேக்.

எம்ஸ். பாஸ்கர், பிரதீப் கே விஜயன் (சேட்ஜீ), முத்துராமன் ஆகியோர் தங்கள் பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்.
இவர்களுடன் சுசி கணேசனும் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார்.

ஆனால் அவரது காட்சிகளை இன்னும் மெருக்கேற்றியிருக்கலாம்.

DP9CFpOVAAEl8Y2

 

தொழில்நுட்ப கலைஞர்கள்..

ஒரு நேரத்தில் அருமையான பாடல்களை தந்தவர் வித்யாசாகர். இதில் பாடல்கள் சுவாரஸ்யம் இல்லை. ஸ்மைலி பாடல் கேட்கலாம்.
பின்னணி இசை கைகொடுக்கிறது.

செல்லத்துரையின் ஒளிப்பதிவில் காட்சிகள் கச்சிதம்.
அமலாபாலை ரசித்து படம் பிடித்திருப்பார் போல.
அதுபோல் கலை இயக்குனரின் கைவண்ணத்தில் அமலா வீடு, அந்த பாரீன் கெஸ்ட் ஹவுஸ் என அனைத்தும் ரசிக்க வைக்கிறது.

இயக்கம் பற்றிய அலசல்…
இந்த ஊழல் நிறைந்த தொழில்நுட்ப நாட்டில் எவனும் தவறை தட்டிக் கேட்க தகுதியற்றவன் ஆகிறான். எனவே நாம்தான் நம்மை திருத்திக் கொள்ள வேண்டும்.
அதுவும் கேமரா, மொபைல் மற்றும் சோஷியல் நெட்வொர்க் கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி ஜெயிக்கிறார் சுசி கணேசன்.
திருட்டுப்பயலே.. இணைய திருடன்.

அண்ணாதுரை விமர்சனம்

அண்ணாதுரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விஜய்ஆண்டனி, டயானா சம்பிகா, ராதாரவி, காளிவெங்கட், நளினிகாந்த், செந்தில்குமரன், மஹிமா மற்றும் பலர்.
இயக்கம் : சீனிவாசன்
இசை : விஜய்ஆண்டனி
ஒளிப்பதிவு: தில்ராஜ்
எடிட்டிங்: விஜய்ஆண்டனி
பி.ஆர்.ஓ. : சுரேஷ்சந்த்ரா
தயாரிப்பு: ராதிகா சரத்குமார் மற்றும் விஜய்ஆண்டனி

annadurai movie set

கதைக்களம்…

அண்ணாதுரை மற்றும் தம்பிதுரை இருவரும் இரட்டை குழந்தைகள். அண்ணாதுரை அப்பாவுடன் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

தம்பி தம்பிதுரை ஒரு பள்ளியில் பி.டி மாஸ்டராக பணியாற்றியிருக்கிறார். இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.

ஒரு நாள் தற்செயலாக போதை பழக்கத்தால் ஒரு கொலைக்கு காரணமாகி விடுகிறார் அண்ணாதுரை.

அதன்பின் அந்த குடும்பமே பல பிரச்சினைகளை சந்திக்கிறது. தம்பிக்கு வேலை போகிறது. ரவுடி ஒருவன் மிரட்டலால் ஜவுளிக் கடையும் போகிறது.

இதனால் தம்பியின் வாழ்க்கையும் பறிபோகிறது. அதன்பின் அண்ணாதுரை என்ன செய்தார்? குடும்பம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

annadurai stills

கேரக்டர்கள்…

படத்தின் தயாரிப்பாளர், இசையமைப்பாளர், எடிட்டர், நடிகர் என நான்கு தூண்களாய் படத்தை தாங்கி நிற்கிறார் விஜய்ஆண்டனி.

முதலில் நடிப்பை பற்றி சொல்லிவிடுகிறோம். ஆக்சன் என்றால் விஜய் ஆண்டனிக்கு அல்வா சாப்பிடுவது போல. வெளுத்து கட்டியிருக்கிறார்.

ஆனால் இருவேடத்தை ஏற்றிருப்பதால் இன்னும் அதிக வித்தியாசம் காட்டியிருக்கலாம். தாடியை தவிர வேறு வித்தியாசங்கள் இல்லை.

ஹீரோயின் சாம்பிகா நல்லா Chubbya வருகிறார். டயானா சாம்பிகா உடன் ரொமான்ஸ் காட்சிகள் நன்றாக உள்ளது. சாம்பிகாவும் காதல் மொழியை கண்களால் பேசி வசீகரிக்கிறார்.

மற்ற இரண்டு நாயகிகள் இருந்தாலும் அது படத்தின் நீளத்தை அதிகரிக்கிறது.

காளிவெங்கட் இதில் குணச்சித்திர நடிகராக ஜொலிக்கிறார். ஆனால் இவர் சைட் அடிக்கும் பெண் நண்பனின் காதலி என காட்சி நீளுகிறது.

நாயகியின் அப்பாவாக வரும் செந்தில்குமரன் சினிமாவுக்கு கிடைத்த புதிய குணசித்திர நடிகர்.

நாயகனின் அப்பா நளினி காந்த், அம்மா, அரசியல் தலைவர் ராதாரவி, ஜவுளிக்கடையை அபகரிக்கும் வில்லன் சேரன்ராஜ், மொட்டை வில்லன் ஆகியோரும் கவனம் ஈர்க்கின்றனர்.
annadurai stills 1

தொழில்நுட்ப கலைஞர்கள்..

வழக்கம்போல இசையமைப்பாளராக ஸ்கோர் செய்து விடுகிறார் விஜய் ஆண்டனி.

அண்ணாதுரையின் புகழ் பாடும் ‘தங்கமா வைரமா…’, பாடலும் ‘இஎம்ஐய போல வந்து என்ன செய்யுற..’ பாடல்களும் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. விஷுவல் எஃபெக்ட்ஸும் நன்றாக உள்ளது.

நிறைவான ஒளிப்பதிவை கொடுத்து படத்துடன் ஒன்றாக வைத்துவிட்டார் ஒளிப்பதிவாளர் தில் ராஜ். ஆனால் எடிட்டர் விஜய் ஆண்டனி இன்னும் காட்சிகளை கட் செய்திருக்கலாம். இரண்டாம் பாதி, அந்த பெண் ஈஸ்வரி கேரக்டர் எதற்கு எனத் தெரியவில்லை?.

annadurai team live

இயக்கம் பற்றிய அலசல்…

இரட்டையர்கள், ஆள் மாறாட்டம் என்ற கலவையை கொஞ்சம் புதுப்பித்து கொடுத்திருக்கிறார்.

ஆனால் சில காட்சிகள் புதிராக உள்ளது. ஒரு காட்சியில் அண்ணன் கேரக்டர் தம்பியைப் பற்றி சொல்லும்போது ’அவன் சின்னப் பையண்டா. இன்னும் அவன் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கலை’ என்கிறார். ட்வின்ஸ் பிரதர்ஸ்தானே அதற்கு ஏன் இந்த டயலாக்?

அண்ணாதுரை..  ரசிக்கலாம்

More Articles
Follows