மோடி-சின்னய்யா-சின்னம்மா… கலாய்த்து தள்ளும் யோகி பாபு

Yogi Babus Dharmaprabhu Teaser slams Indian Political Leadersவிமல், வரலட்சுமி ஜோடியாக இணைந்துள்ள `கன்னிராசி’ படத்தை இயக்கியவர் முத்துகுமரன்.

அந்த படம் இன்னும் வெளியாகாத நிலையில் தற்போது யோகிபாபுவை நாயகனாக வைத்து `தர்மபிரபு’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இதில் யோகிபாபு எமதர்மனாக நடித்துள்ளார். அவரின் தந்தையாக ராதாரவி மற்றும் தாயாக ரேகா நடித்துள்ளனர்.

இவருடன் `வத்திக்குச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டார்.
அதில் ‘இங்கு எல்லோரும் தகுதியுடன் தான் இருக்கிறார்களா?, அம்மா போனால் சின்னம்மா, ஐயா போனால் சின்னய்யா என்ற அரசியல் வசனங்கள் வருகிறது.

மேலும் இந்தியர்கள் வங்கி கணக்கில் ரூ 15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று பிரதமர் மோடி சொன்னதையும் கிண்டல் செய்துள்ளனர்.

இது தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Yogi Babus Dharmaprabhu Teaser slams Indian Political Leaders

Overall Rating : Not available

Related News

காமெடியில் கொடி கட்டிப்பறக்கும் யோகிபாபு தர்மபிரபு,…
...Read More
ஏமாலி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான…
...Read More

Latest Post