ஆண்கள் மாதிரி வாழ பெண்கள் நினைக்கக் கூடாது; பேரரசு பேச்சு

ஆண்கள் மாதிரி வாழ பெண்கள் நினைக்கக் கூடாது; பேரரசு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரத்தன் லிங்கா தயாரித்து இயக்கி உள்ள படம் ‘லாக்’.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேசும்போது…

” இது காவல்துறை விழா போல் இருக்கிறது. அவ்வளவு காவல்துறையினர் கலந்து கொண்டுள்ளார்கள். காவல்துறையினருக்கும் திரைப்படத்துறைக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு.

ஒரு ராசியும் உண்டு. ஏனென்றால் காக்கி சட்டை போட்டு ஒரு பெரிய வெற்றிப் படம் கொடுத்த பிறகு தான் அந்த நடிகர்கள் நட்சத்திரங்களாக உயர்ந்து அவர்களுடைய மதிப்பு கூறியிருக்கிறது. ‘தங்கப்பதக்கம் ‘படத்தில் எஸ் பி சவுத்ரியாக நடிகர்திலகம் நடித்த போது அந்தக் கம்பீரத்தை உணர்ந்தோம்.

காவல்துறை மீது மதிப்பு வந்தது .அந்தப் பாத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. அதேபோல் யார் காக்கி சட்டை போட்டு நடித்தாலும் அந்த எஸ்பி சவுத்ரியின் பாதிப்பு இருக்கிற வகையில் அந்த பாத்திரமும் அமைந்திருந்தது. அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ‘மூன்று முகம் ‘ படத்தில் அலெக்ஸ் பாண்டியன் எஸ்பியாகத் தோன்றினார். அதுவும் இன்றளவும் பேசப்படுகிறது.

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் ‘ஊமை விழிகள் ‘படத்தில் காக்கி சட்டை போட்டு அனைவரையும் கவர்ந்தார். லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தியும் ‘வைஜெயந்தி ஐபிஎஸ்’ படத்திற்குப் பிறகு பெரும் உயரத்திற்குப் போனார்.

அதன் பிறகு ஏராளமான போலீஸ் வேடங்களில் நடித்து புகழ் பெற்றார் .புரட்சித் தமிழன் சத்யராஜ் எவ்வளவு நடித்திருந்தாலும் ‘வால்டர் வெற்றிவேல் ‘மறக்க முடியாது.

எம்ஜிஆர் அவர்களால தன் கலை வாரிசு என்று சொல்லப்பட்ட பாக்யராஜ் அவர்கள் ‘அண்ணா என் தெய்வம் ‘படத்தை ‘ அவசர போலீஸ் ‘என்று முடித்தார். பாதியில் விடப்பட்ட படத்தை தான் நடித்து முடித்தார்.

அந்த வகையில் எம்ஜிஆரும் பாக்கியராஜ் சார் அவர்களும் சேர்ந்து நடித்த படம் அது. இப்படி காக்கி சட்டை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

பாக்யராஜ் எவ்வளவு நல்ல கருத்துக்களை நல்ல கதைகளை சொல்லியிருக்கிறார். அவர் செய்த ஒரே தவறு முருங்கைக்காய் மேட்டரைப் படத்தில் வைத்தது தான்.

இந்த விழாவுக்கு வந்த பலரும் அதைப் பற்றி பேசும் போது அவர் செய்த பெரிய தவறு இது என்று தோன்றுகிறது.

ஒரு படத்தில் இடைவேளையில் வருவதை இன்டர்வெல் பிளாக் என்பார்கள். இன்டர்வெல் லாக் என்பார்கள். சாதாரணமாக இருக்கிறது என்றால் இன்டர்வெல் பிளாக். அதில் ஒரு முடிச்சு போட்டுப் பிறகு அவிழ்த்து விடுவது தான் லாக்.

பாக்யராஜ் சார் அவர்களைத் திரைக்கதை மன்னன் என்பதை விட இடைவேளை மன்னன் என்று கூறலாம். ஏனென்றால் அவரது படங்களில் இடைவேளையில் அப்படி ஒரு முடிச்சு போட்டு விடுவார்.

அந்த முடிச்சை சரியாக அவிழ்த்தால் அந்த படம் வெற்றிப் படம். அவிழ்ப்பதற்குத் திணறினால் அது தோல்விப்படம்.

இயக்குநர் ரத்தன் லிங்காவைப் பார்க்கிறேன் ,20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இயக்குநர் ஆவது என்பது சிரமம். சில ஆண்டுகள் உதவி இயக்குநராக இருந்து, பிறகு இணை இயக்குநராகச் சில ஆண்டுகள் பணியாற்றி ,வெளியே வந்து கதை சொல்லி தயாரிப்பாளர் பிடித்து பிறகு தான் இயக்குநராக முடியும்.

ஆனால் இப்போதெல்லாம் எல்லாமே அவசரக்காலம். இரண்டு ஆண்டுகளுக்குள் படம் இயக்கி விட வேண்டும் என்று இன்று இருக்கிறார்கள். ஆனால் ரத்தன் லிங்கா படிப்படியாகக் குறும்படம், திரைப்படம் என்று வளர்ந்துள்ளவர். அப்படி வளர்ந்து இப்போது இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். அவரது குறும்பட காலத்திலேயே அவரை இயக்குநர் சிகரம் பாலச்சந்தர், பிரதாப் போத்தன், மதன் போன்றவர்கள் பாராட்டி இருக்கிறார்கள் .அவர் நிதானமாகத்தான் படிப்படியாக முன்னேறியுள்ளார்.

அவசரத்தில் எதுவும் வெற்றி பெறாது .இந்தப் படத்தில் நமக்கு நாமே துணை என்று பெண்களுக்கு கருத்து சொல்லி உள்ளார். பெண்களைக் காப்பாற்ற எந்த கதாநாயகர்களும் வர மாட்டார்கள். அவர்கள் தான் அவர்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

பெண்கள் ஆண்களுக்கு நிகராகப் பல பணிகளைச் செய்யலாம் . ஆனால் ஆண்களைப் போலவே, ஆண்கள் மாதிரி வாழ நினைக்கக் கூடாது அங்கே தான் நிறைய பெண்களுக்கு பிரச்சினை வருகிறது. நிறைய தவறுகள் நடப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

பெண்கள் ஆண் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். தனது நண்பர்களைத் தைரியமாக அப்பா அம்மாவிடம் அறிமுகப்படுத்த வேண்டும் .

அப்படி அறிமுகப்படுத்தாமல் மறைத்தால் பிரச்சினை வரும். குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தப்படும் நண்பன் எப்படிப்பட்டவன் என்று குடும்பத்தினர் கவனித்து விடுவார்கள். ஏனென்றால் அவர்கள் அனுபவசாலிகள் .

இருமல் தும்மல் போன்றது தான் காமமும் .நம்மை மீறி வந்து விடும். எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதனால் தான் பெண்களுக்குப் பெண்களே தான் பாதுகாப்பு என்று இந்தப் படத்தில் கூறி இருக்கிறார். இந்த படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்” என்றார்.

Women should not think to live like men; Perarasu speech

‘சின்ன வீடு’ கல்பனாவுக்கு தினமும் அல்வா கொடுத்தேன்..; பாக்யராஜ் ஓபன் டாக்

‘சின்ன வீடு’ கல்பனாவுக்கு தினமும் அல்வா கொடுத்தேன்..; பாக்யராஜ் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரத்தன் லிங்கா தயாரித்து இயக்கி உள்ள படம் ‘லாக்’.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் பேசும் போது..

“இங்கே தயாரிப்பாளர் ராஜ்குமார் வேலுச்சாமி ஈராக், துபாய் என்று பரபரப்பாக ஓடிக் கொண்டு இருக்கிறார். அங்கேயும் தனியாக இருப்பதாகச் சொல்கிறார். தனியாக என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று நான் கேட்டேன்.

படத்தின் இயக்குநர் ரத்தன் லிங்கா பேசும் போது பல்வேறு சிரமங்கள் இடைஞ்சல்களைக் சந்தித்துதான் இந்தப் படம் உருவானது என்றார். நல்லது நடக்கும் போது இது மாதிரி இடையூறுகள் வந்து கொண்டுதான் இருக்கும். அதையும் தாண்டித் தான் வர வேண்டும்.

எவ்வளவு முயன்றாலும் வரவேண்டிய இடையூறுகள் வந்தே தீரும். எனக்கு இப்போது ஒரு கதை ஞாபகம் வருகிறது. மூன்று திருடர்கள் தினமும் விநாயகரை வேண்டி விட்டு திருடப்போவார்கள் ஒன்றும் கிடைக்காவிட்டால் வந்து சண்டை போடுவார்கள். அப்படிப் பல நாள் எதுவும் கிடைக்கவில்லை.

அன்று வேண்டும் போது இன்று மட்டும் எதுவும் கிடைக்காவிட்டால் எங்களுக்கு கெட்ட கோபம் வரும் என்று எச்சரித்துவிட்டு திருடச் சென்றார்கள் .அன்றும் ஒன்றுமே கிடைக்காது போகவே, ஒவ்வொருவராக விநாயகர் கோவிலுக்குள் கல் வீசினார்கள்.

ஆனால் மூன்றாவது திருடன் மட்டும் கொஞ்சம் தயங்கினான். விநாயகர் தண்டித்து விட்டால் என்ன செய்வது? என்று பயந்து அந்த கல்லைத் தூக்கி கோயிலுக்கு வெளியே உயரமாக இருந்த மரத்தின் மீது வீசினான் .அதே நேரத்தில் கண்வலித்தது. என்ன என்று பார்த்தால் எதிரே விநாயகர் நின்றார், தலையில் ரத்தத்தோடு. நான் எதுவுமே செய்யவில்லையே நான் கல்லை கோயிலைத்தாண்டித் தானே வீசினேன்? என்றான் எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை கொடுத்தாய் விநாயகா ?என்றான்.

விநாயகர் நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று நான் தான் மரத்தின் மீது ஏறி ஒளிந்து கொண்டு உட்கார்ந்திருந்தேன் என்றார் .அதுபோல இடையூறுகள் வருவது என்றாலும் எப்படியென்றாலும் வந்தே தீரும்.

இத்தனைக் காலம் கடந்தும் எனது முருங்கைக்காய் கதையை எங்கு பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன பெரிய ரகசியம்? என்று கேட்டால் . எந்த ஒரு விசேஷ காரணமுமில்லை. எனது பாட்டி எங்களுக்கு உணவு பரிமாறும் போது
எனக்கு முருங்கக்காய் துண்டுகளை குறைவாகத்தான் போடுவார்.

உடன் சாப்பிடும் மாமாவுக்கு நிறைய போடுவார். இன்னும் ரெண்டு பீஸ் போடச் சொல்லி நான் கேட்பேன். இது உனக்குப் போதும். இரண்டுக்குமேல் வேண்டாம் இது போதும் என்பார் பாட்டி.

எப்போதும் வேண்டாம் என்பதில் தான் மனம் சுற்றிச் சுற்றி வரும். எங்கள் ஊரில் ஒரு பெரியவர் சின்னப் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருப்பார். அவரிடம் இந்தச் சந்தேகத்தைக் கேட்டபோதுதான் அதன் அர்த்தம் புரிந்தது. அதுவரை விளையாட்டாகத் தான் என் படத்தில் வைத்தேன். அப்போது அதைப்பற்றி பெரிதாக நினைக்கவில்லை.

ஆனால் இவ்வளவு காலம் கடந்தும் முருங்கைக்காய் கதை பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது அது ஒரு வகையில் எனக்கு மகிழ்ச்சி தருகிறது .

படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மதுஸ்ரீ இங்கே எடைக் குறைப்பு பற்றிப் பேசினார் .இப்படி சிரமப்பட்டு வெற்றி பெறுவதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது.

நான் சின்ன வீடு படத்தில் கல்பனாவுக்கு தினசரி அல்வா கொடுத்தேன். ஏனென்றால் அவர் உடல் எடை கூட வேண்டும் என்பதற்காக. சிரமப்பட்டு உழைத்தால் தான் அதன் மதிப்பு நமக்குத் தெரியும். வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள்.

நான் ‘தூறல் நின்னு போச்சு’ படத்தில் கம்பைச் சுற்றி பயிற்சி எடுத்துக் கொண்டேன். அப்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த கோபியில் 30 நாட்கள் பயிற்சி எடுத்துக் கொண்ட பிறகு தான் அப்படி நடித்தேன் .

அப்போது நான் ஒரு கையால் சுற்றி விளையாடுவது போல் இருக்கும் .இரண்டு கையாலும் சுற்றிப் பிடிப்பது போல் பயிற்சி பெற வேண்டும் என்று அழகிரிசாமி மாஸ்டரிடம் கேட்டேன். அது முடியாது கஷ்டம் என்றார். அதன் நுட்பத்தைச் சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டேன்.

அவருக்கு நம்பிக்கை இல்லை ஆனாலும் நான் கற்றுக் கொண்டதைப் படத்தில் வைத்தேன். மிகவும் சிரமப்பட்டு கற்றுக்கொண்டு படத்தில் சுற்றி இருப்பேன். படத்தை பார்த்து எம்ஜிஆர் எத்தனை வருடமாக இதற்குப் பயிற்சி எடுத்தாய் என்று கேட்டார். நான் விசயத்தை சொன்னபோது அவர் நம்பவே இல்லை .பொய் சொல்லாதே என்றார்.அப்போது நான் சொன்னேன் மனது வைத்தால் எதுவும் முடியும் என்றேன் .

இங்கே தொழில்நுட்பக் கலைஞர்கள் பேசியபோது மன நிறைவோடு பேசினார்கள். மகிழ்ச்சியாக இருந்தது.

இங்கே காவல்துறையைச் சேர்ந்த இளங்கோவன் தன் மகனை நடிக்க வைத்துள்ளார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் எங்கள் காலத்தில் நான் நாடகம் பார்க்கப் போகிறேன் என்றாலே வீட்டில் பெல்ட்அடி விழும்.

சத்யராஜ் மகன் சிபிராஜும் சரி என் மகன் சாந்தனுவும் சரி சினிமா கனவுடன் இருந்ததால் படிப்பில் பெரிதாக வர முடியவில்லை.

அதனால் மாலை நேரக் கல்லூரியில் சேர்ந்து படித்தார்கள். அவர்கள் மனதில் உள்ள கனவை நிறைவேற்றவே பெரிதும் விரும்பினார்கள். எனவே மனம் வைத்தால் எதுவும் நடக்கும்.

படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் “என்று கூறினார்.

‘லாக்’ படக் குழுவினர் சார்பில் இந்த விழாவில் கேக் வெட்டி இயக்குநர் பாக்யராஜுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் நடிகர் விஜய் சூரிய பாலாஜி, மதன் ,படத்தொகுப்பாளர் மகேந்திரன் கணேசன், காவல்துறை உயர் அதிகாரியான ராஜகோபால், தொழிலதிபர்கள் ரஜினிகாந்த் சண்முகம் ,ரஞ்சித் கருணாகரன், ஜூலியஸ் கிறிஸ்டோபர்,உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரஜினிகாந்த் சண்முகம், சுண்டாட்டம் பட இயக்குநர் பிரம்மா மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

I gave Alwa daily to actress Kalpana..; Bhagyaraj

ஹைதராபாத்தில் புகழ்பெற்ற கோவிலுக்கு சென்ற ‘பீஸ்ட்’ நடிகை

ஹைதராபாத்தில் புகழ்பெற்ற கோவிலுக்கு சென்ற ‘பீஸ்ட்’ நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பூஜா ஹெக்டே ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள புகழ்பெற்ற பெத்தம்மா கோயிலில் தரிசனம் பெற்றார் .

அதற்கு ஏற்ப, அவர் பாரம்பரிய தோற்றத்தில் காணப்பட்டார்.

செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டிய சக பக்தர்களால் பூஜா ஹெக்டே வை மற்ற பக்தர்கள் சூழ்ந்து கொண்டனர் .

அக்கினேனி நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக ஒரு விளம்பரப் படத்தின் படப்பிடிப்புக்காக பூஜா ஹெக்டே அங்கு வந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் நடிகர் நாகர்ஜுனா உடன் நடிக்கும் குளிர்பான விளம்பரத்தில் பூஜா ஹெக்டே தோன்ற உள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

Pooja Hegde visits famous Hyderabad temple

தொலைக்காட்சி தொகுப்பாளர் திவ்ய தர்ஷினிக்கு ஐக்கிய அரபின் ‘கோல்டன் விசா’..!

தொலைக்காட்சி தொகுப்பாளர் திவ்ய தர்ஷினிக்கு ஐக்கிய அரபின் ‘கோல்டன் விசா’..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் நடிகர் விக்ரமுக்கும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கும்,இயக்குனர் விஜய்க்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ‘கோல்டன் விசா’ வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தற்போது பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி என்று அழைக்கப்படும் திவ்ய தர்ஷினிக்கு ‘கோல்டன்’ விசாவை வழங்கியுள்ளது.

கோல்டன் விசா என்பது ஒரு நீண்ட கால வசிப்பிடமாகும், இது வெளிநாட்டினர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தேசிய ஸ்பான்சர் தேவையின்றி வாழவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது மற்றும் அவர்களின் வணிகத்தின் முழு உரிமையையும் வழங்குகிறது.

திவ்ய தர்ஷினி

கோல்டன் விசாவைப் பெற்ற படங்களை தனது ட்விட்டர் பகிர்ந்து கொண்ட திவ்ய தர்ஷினி, “எனது கெளரவ யுஏஇ கோல்டன் விசா இன்று கிடைத்தது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுக்கு நன்றி, திரு.அட்னான்மூசா திரு.இக்பால் மார்கோனி திருமதி.சாரா திரு.சாம்” என கூறி இருந்தார்.

மேலும், பார்த்தீபன், நாசர், ரஹ்மான்,வெங்கட் பிரபு, கமல்ஹாசன், அமலா பால், த்ரிஷா மற்றும் ராய் லட்சுமி ஆகியோரும் கோல்டன் விசாவைப் பெற்றுள்ளனர்.

திவ்ய தர்ஷினி

United Arab Emirates ‘Golden Visa’ for Dhivya Dharshini

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ‘ஹனுமன்’: ரிலீஸ் தேதி

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ‘ஹனுமன்’: ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேஜா சஜ்ஜா நாயகனாக நடித்துள்ள ‘ஹனுமன்’ திரைப்படம் மே 12ஆம் தேதி திரைக்கு வருகிறது. உலகம் முழுவதும் வெளியாகும் இப்படத்தில் வினய் ராய் வில்லனாக நடித்துள்ளார்.

இன்று வெளியீட்டு தேதியை அறிவித்து, தயாரிப்பாளர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டனர்.

அதில் ஹனுமான் உலகம் அறிந்த மிகப்பெரிய சூப்பர் ஹீரோ என்று வர்ணிக்கப்படுவதைக் காண முடிகிறது .

அனுமனின் முகம் இறுதிவரை பரந்த கோணத்தில் காணப்படுவதால் உலகம் முழுவதும் காவி நிறம் பரவியிருப்பதையும் காண முடிகிறது.

‘Hanu-Man’: Release date made official!

துணிவோடு வாரிசு வந்தாலும் நாங்க வர்றோம்.; வெண்பா – ரவியின் காதலே காதலே..

துணிவோடு வாரிசு வந்தாலும் நாங்க வர்றோம்.; வெண்பா – ரவியின் காதலே காதலே..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2023 பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி விஜய் நடித்துள்ள வாரிசு & அஜித் நடித்துள்ள துணிவு ஆகிய இரு படங்கள் வெளியாகிறது.

இந்த இரண்டு படங்களும் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் என்பதால் மற்ற எந்த படங்களும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் நடிகை வெண்பா நடித்துள்ள ‘காதலே காதலே..’ என்ற வெப் தொடர் ஒரு யூ ட்யூப் தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ரவி நாயகனாக நடிக்க வெண்பா நாயகியாக நடித்துள்ளார்.

இந்த ஜோடியுடன் ராஜேஷ் ஹேமலதா மனோ தர்ஷன் முஸ்தபா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அஜய் ஒளிப்பதிவு செய்ய பவன் இசை அமைத்துள்ளார். இந்த வெப் தொடர் டியூப் லைட் என்ற இணையதளத்தில் வெளியாகிறது.

பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டாலும் தேதி அறிவிக்கப்படவில்லை. விரைவில் ட்ரைலர் வெளியாக உள்ளது.

இந்த வெப் தொடரை நரேஷ் குமார் என்பவர் இயக்கியுள்ளார். ராஜா வெங்கடேசன் சரவணகுமார் உள்ளிட்டோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

Venba – Ravi’s Kadhale Kadhale will release on pongal

KADHALAE KADHALAE ❤?

@Ravi_vj_actor @VenbaOfficial @SirappaSeivom

#kadhalekadhale
@Ravi_vj_actor @Tubelightnew @SonyMusicSouth @SunTV

More Articles
Follows