தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‛கருத்துக்களை பதிவு செய்’ பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட பாக்யராஜ் பொள்ளாச்சி பாலியல் கொடூரம் பற்றி பேசியிருந்தார்.
24 மணி நேரமும் செல்போனில் மூழ்கி இருக்கும் பெண்கள் மீதும் தவறுள்ளது. யாரை நம்புவது என தெரியாமல் அவர்கள் வழி தவறி போய்விடுகின்றனர்.
மேலும் ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என பாக்யராஜ் கூறியிருந்தார். இதனை பெண்கள் அமைப்புகள் எதிர்த்தன.
மேலும் பாக்யராஜ் மீது போலீசிலும் புகார் கொடுக்க தமிழக மகளிர் ஆணையமும் பாக்யராஜிற்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதனையடுத்து பாக்யராஜும் தன் பக்க விளக்கத்தை கொடுத்தார்.
இந்த நிலையில் பாக்யராஜ் பேசியதில் தவறில்லை என ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.