மும்தாஜ் கண்டிப்பை மீறி மஹத்துக்கு முத்தம் கொடுப்பாரா யாஷிகா.?

மும்தாஜ் கண்டிப்பை மீறி மஹத்துக்கு முத்தம் கொடுப்பாரா யாஷிகா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will Mahat Kiss Yaashika in Bigg Boss 2 Homeகமல் நடத்தும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது.

மமதி வெளியேற்றதற்கு பின்பு இது 3 -ஆவது வாரத்தில் 15 போட்டியாளர்களுடன் தொடர்கிறது.

தற்போது வீட்டிற்குள் பாலாஜி – நித்யா இடையே இருந்து வந்த சண்டை முடிவுக்கு வந்து, நண்பர்களாக இருந்த மஹத், யாஷிகா, ஷாரிக், ஐஸ்வர்யா இடையே சண்டையும் மனக்கசப்பும் தொடங்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து இதன் இன்றைய புரமோ வீடியோவில் புதுவித டாஸ்க் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

அதன்படி தண்ணீரை டேங்குக்குள் நிரப்பி, அதை வீணாக்காமல் ஒவ்வொருவரும் சேமிக்க வேண்டுமாம்.

இந்த டாஸ்க்கை மஹத் செய்ய, அருகில் இருக்கும் யாஷிகா அவரை அந்த டாஸ்க்கை விட்டு விட சொல்கிறார். இதற்கு பதிலளிக்கும் மஹத் தனக்கு ஒரு முத்தம் கொடுத்தால் விட்டுவிடுகிறேன் என்கிறார்.

ஆனால் இதைப் பார்க்கும் மும்தாஜ் மஹத்தை கண்டிக்கிறார். எனினும், மும்தாஜ் வரும்போது வேண்டுமென்றே யாஷிகாவை அழைத்துப் பேசுவேன் எனவும் மஹத் கூறுகிறார்.

இதனால் மகத்துக்கு யாஷிகாவின் முத்தம் கிடைக்குமா? என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Will Mahat Kiss Yaashika in Bigg Boss 2 Home

கோச்சடையான் விவகாரம்: லதா ரஜினிக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

கோச்சடையான் விவகாரம்: லதா ரஜினிக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Latha Rajinikanth pulled up by SC over non payment of duesலதா ரஜினி தயாரிப்பில், சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு கோச்சடையான் திரைப்படம் வெளியானது.

இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரெடக்சன் பணிகளை செய்த ஆட் பிரு அட்வர்டைசிங் நிறுவனம், 6 கோடியே 20 லட்சம் ரூபாயை லதா ரஜினிகாந்த் செலுத்தவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இதை எதிர்த்து, லதா ரஜினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், 3 மாதத்தில் பணத்தை செலுத்துமாறு கடந்த பிப்ரவரி மாதத்தில் உத்தரவிட்டது.

ஆனால், இதுவரை லதா ரஜினி பணத்தை தரவில்லை என ஆட் பிரு அட்வர்டைசிங் நிறுவனம் முறையிட்டது.

இதையடுத்து, இதுவரை பணம் செலுத்தாதது ஏன் என்றும், எப்போது தொகையை செலுத்தப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியதுடன் பணத்தை செலுத்தவில்லை என்றால் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Latha Rajinikanth pulled up by SC over non payment of dues

ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளின் வாழ்வியலை சொல்லவரும் *கூத்தன்*

ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளின் வாழ்வியலை சொல்லவரும் *கூத்தன்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Koothan movie based on Story about Junior Artist and their lifeதிரைப்படத்துறை தொடர்பான திரைப்படங்கள் நிறைய வெளிவந்திருக்கிறது. நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் தொடங்கி லைட்மேன்கள் வாழ்க்கை வரை சினிமாவாகி இருக்கிறது.

இப்போது ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் எனப்படும் சினிமா துணை நடிகர்களின் வாழ்வியலை மையமாக வைத்து கூத்தன் என்ற படம் தயாராகி வருகிறது.

நீல்கிரீஸ் ட்ரீம் என்ற நிறுவனத்தின் சார்பில் முருகன் தயாரிக்கிறார். ஏ.எல்.வெங்கி இயக்குகிறார்.

ராஜ்குமார், ஸ்ரிஜிதா, சோனாஸ், கீரா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத், பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா ஸ்ரீரஞ்சனி, ராம்கி, கலா மாஸ்டர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

பாலாஜி இசையமைக்கிறார், மாடசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி இயக்குனர் வெங்கி கூறியதாவது:

பளபளப்பான சினிமா உலகில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளின் வாழ்க்கை மிகவும் கடுமையானது. வாய்ப்புகள் கிடைப்பது, கிடைத்த வாய்ப்புக்கு கூலி கிடைப்பது என அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம்.

எல்லா ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளுமே சினிமாவில் ஹீரோ, ஹீரோயின்களாக வேண்டும் என்கிற கனவுகளோடு வந்தவர்கள் தான்.

அவர்களின் வாழ்வியலை சொல்லும் படம் இது. சினிமா பற்றி நிறைய படங்கள் இதற்கு முன் வந்திருந்தாலும் இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். என்றார்.

Koothan movie based on Story about Junior Artist and their life

koothan stills (10)

கமல் பாடலை பாடி ஷங்கர் மகாதேவனிடம் வாய்ப்பு பெறும் கூலித்தொழிலாளி

கமல் பாடலை பாடி ஷங்கர் மகாதேவனிடம் வாய்ப்பு பெறும் கூலித்தொழிலாளி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raakeshs melodious singing goes Viral impresses Shankar Mahadevanகமலின் விஸ்வரூபம் படத்தில் இடம் பெற்ற “உன்னை காணாத…” பாடல் மிகவும் பிரபலம். கமலும், ஷங்கர் மகாதேவனும் இணைந்து பாடியிருந்தனர்.

இந்த அழகான பாடலை எவரும் மறந்திருக்க முடியாது.

இந்நிலையில், கேரளாவில் தோட்டத்தில் வேலை பார்க்கும் கூலி தொழிலாளி ஒருவர், இந்தப்பாடலை மிக அழகாக பாடி சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

இதனை எல்லாரும் பகிர ஆரம்பித்துள்ளனர்.

இது அந்த ஒரிஜினல் பாடகர் ஷங்கர் மகாதேவனை சென்றடைந்துள்ளது.

எனவே அவர் தன் ட்விட்டரில் அந்த வீடியோவை ரீ-டுவீட் செய்து, “யாராவது இவரை கண்டுபிடிக்க உதவுங்கள், இவருடன் இணைந்து பாட ஆசை” என கூறியிருந்தார்.

தற்போது அந்த இளைஞர் யார் என்ற விபரம் தெரியவந்துள்ளது. இவர் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ராகேஷ் உன்னி நூரநாடு என தெரியவந்துள்ளது.

அதோடு அவரின் மொபைல் நம்பரும் இணையதளங்களில் வெளியானது.

எனவே ஷங்கர் மகாதேவனும், ராகேஷை போனில் தொடர்பு கொண்டு பாராட்டியிருக்கிறாராம்.

விரைவில் இருவரும் இணைந்து பணியாற்றவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Raakeshs melodious singing goes Viral impresses Shankar Mahadevan

Exclusive: கே.வி. ஆனந்த் படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக ஆர்யா..?

Exclusive: கே.வி. ஆனந்த் படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக ஆர்யா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arya to play Suriyas villain in KV Anand filmசெல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா.

இப்படத்தை தொடர்ந்து கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா தயாரிக்கிறது.

இதன் பூஜையில் அண்மையில் நடைபெற்றதை தொடர்ந்து இதன் சூட்டிங் லண்டனில் நடந்து வருகிறது.

இப்படத்தில் சூர்யாவுடன் ஆர்யா இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவுமில்லை.

Arya to play Suriyas villain in KV Anand film

*குருதிப்புனல்* வரிசையில் அதர்வாவின் *குருதி ஆட்டம்*.?

*குருதிப்புனல்* வரிசையில் அதர்வாவின் *குருதி ஆட்டம்*.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

atharvaa‘8 தோட்டாக்கள்’ படத்தை இயக்கியவர் ஸ்ரீகணேஷ்.

இந்த படத்தை தொடர்ந்து அதர்வாவை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறாராம்.

இந்த படத்துக்கு ‘குருதி ஆட்டம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த படம் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாக இருக்கிறதாம்.

23 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற ஒரு பெயரில் கமலின் *குருதிப்புனல்* படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows