எத்தனை நாளைக்குத்தான் விஜய்-அஜித் இப்படியே இருப்பாங்க.?

எத்தனை நாளைக்குத்தான் விஜய்-அஜித் இப்படியே இருப்பாங்க.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

When will Ajith Vijay break their silence on TN Govt Tax on Cinemaதமிழக அரசின் 30% வரியை ரத்து செய்யக்கோரி கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

தற்போதும் இது தொடர்பாக பல கட்ட ஆலோசனைகள் தமிழக அரசுடன் நடைபெற்று வருகிறது.

விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்கள் இது தொடர்பாக குரல் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் தமிழகத்தின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

சில நேரங்களில் விஜய்யாவது ஏதாவது பேசுவார். ஆனால் பெரும்பாலும் எந்த விஷயத்திலும் அஜித் பேசவே மாட்டார்.

அவர்கள் சம்பந்தப்பட்ட சினிமாவில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும்போது அவர்கள் வாய் திறக்காமல் மௌனம் காப்பது ஏன்? என அவர்களின் ரசிகர்களே கேட்க தொடங்கிவிட்டனர்.

When will Ajith Vijay break their silence on TN Govt Tax on Cinema

ஒரே நேரத்தில் ரஜினியின் நல்லதும் கெட்டதும் ட்ரெண்ட்டாகுதே

ஒரே நேரத்தில் ரஜினியின் நல்லதும் கெட்டதும் ட்ரெண்ட்டாகுதே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini casino game and selfie video goes viralதமிழகத்தில் உள்ள அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளதால், தினமும் ரூ. 18 கோடி நஷ்டத்தை சந்தித்து வருகிறது சினிமா துறை.

தமிழக அரசின் வரியை நீக்க திரையுலகை சேர்ந்த பல்வேறு சங்கங்களும் அரசிடம் ஆலோசனை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ள ரஜினி அங்கு தங்கியுள்ளார்.

அங்கிருந்தப்படியே கேளிக்கை வரி தொடர்பாக தமிழக அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதை ரசிகர்கள் கொண்டாடி டிரெண்ட்டாகினர்.

அதன்பின்னர் ஒரு சூதாட்ட கிளப்பில் அமர்ந்துக் கொண்டு கேசினோ விளையாடுவது போல ரஜினியின் படம் ஒன்று வெளியானது.

மேலும் பாஜக கட்சியை சேர்ந்த சுப்ரமணிய சுவாமியும் ரஜினியின் இந்த படத்தை பதிவிட்டு கிண்டலடித்துள்ளார்.

அதில்… “தனது உடல்நலத்தை அமெரிக்க கேசினோவில் மேம்படுத்தும் ரஜினிகாந்த்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அவரது சொத்துகள் எங்கிருந்து வந்தது என்று அமலாக்கத்துறை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

நேற்று 2.0 படத்தின் 3டி டிஜிட்டல் மீட்டிங் நடைபெற்றது. இதுவும் ஒரு பரவலாக பேசப்பட்டது.

இதனையடுத்து முதன்முறையாக ரஜினியின் ஒரு செல்பி வீடியோவும் வெளியாகியுள்ளது.

அதில் காரை ஒருவர் ஓட்ட அருகில் அமர்ந்தவாறு பேசிக்கொண்டே ரஜினி இருப்பது போல ஒரு வீடியோவும் வந்துள்ளது.

ஒரு பக்கம், ரஜினி ரசிகர்கள் இதனை கொண்டாடி வந்தாலும், மற்ற தரப்பினர் திரையுலகமே ஸ்தம்பித்துள்ள நிலையில் ரஜினி அமெரிக்காவில் ஜாலியாக இருக்கிறார் என்ற கடும் விமர்சனங்களை முன் வைக்கின்றனர்.

Rajini casino game and selfie video goes viral

ரஜினி-கமல்-தனுஷ் படங்களை தவிர்த்து 6 படங்களை தயாரிக்கும் லைக்கா

ரஜினி-கமல்-தனுஷ் படங்களை தவிர்த்து 6 படங்களை தயாரிக்கும் லைக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth dhanushஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கத்தி படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்தது.

இதனையடுத்து ஜிவி பிரகாஷ் நடித்த எனக்கு இன்னொரு பேரு இருக்கு, சிரஞ்சீவியின் கைதி எண் 150 மற்றும் விஜய் ஆண்டனியின் எமன் உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தது.

தற்போது மிகப்பிரம்மாண்டமாக ரஜினியின் 2.0 படத்தை தயாரித்து வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு 2018 ஜனவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதனையடுத்து கமல் நடிக்கும் சபாஷ் நாயுடு, தனுஷ் நடிக்கும் வடசென்னை, உதயநிதி நடிக்கும் இப்படை வெல்லும், விஜய் இயக்கத்தில் சாய்பல்லவி நடிக்கும் கரு உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறது.

இவையில்லாமல் இன்னும் நாலு படங்களை தயாரித்து வருகிறது.

ஆனால் தற்போது தியேட்டர்கள் ஸ்டிரைக் மற்றும் ஜிஎஸ்டி வரிகள் உள்ளிட்ட பிரச்சினைகள் நடைபெற்று வருவதால், இது முடிந்தபின் மற்ற அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தெரிவித்தார் லைக்கா நிறுவன ராஜீ மகாலிங்கம்.

Lyca Productions producing nearly 6 movies in 2017 year

பாகுபலி2 சாதனையை 2.0 முறியடிக்கும்…. திருப்பூர் சுப்ரமணியம் பேச்சு

பாகுபலி2 சாதனையை 2.0 முறியடிக்கும்…. திருப்பூர் சுப்ரமணியம் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

baahubali 2 2point0ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் 2.0 படத்தை லைக்கா நிறுவனம் ரூ. 400 கோடியில் தயாரித்து வருகிறது.

இப்படத்தை 2டியில் எடுத்து பின்பு 3டியாக மாற்றாமல், நேரிடையாக 3டி படமாகவே இயக்கியுள்ளார் ஷங்கர்.

எனவே தமிழகத்தில் உள்ள தியேட்டர் உரிமையாளர்களை அழைத்து 3டி டிஜிட்டல் மீட்டிங்கை இன்று லைக்கா நிறுவத்தினர் சென்னையில் நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில், கலந்துக் கொண்ட கோவை மாவட்ட தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கத் தலைவரும் பிரபல விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியன் பேசியதாவது….

புதிய தொழில்நுட்ப வந்தால், சினிமா இன்னும் வளர்ச்சி பெறும். இந்திய சினிமாவையே பாகுபலி 2 வசூலில் மிரட்டியது.

ஒரு தமிழனாக 2.0 படம் பாகுபலி2 வசூலை மிஞ்சும்” என பேசினார்.

2pointO will beat Baahubali2 collection says Tiruppur Subramaniam

மோகன்லாலுக்கும் அவரது மகன் படத்திற்கும் ஒரே நாளில் பூஜை

மோகன்லாலுக்கும் அவரது மகன் படத்திற்கும் ஒரே நாளில் பூஜை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mohan lal and pranav mohan lalகேரளாவில் மோகன்லால் மற்றும் மம்மூட்டி இருவருக்கும் ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதில் மம்மூட்டி மகன் துல்கர் சல்மான் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது மோகன்லாலின் மகன் ப்ரணவ் மோகன்லாலும் ஆதி என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இந்நிலையில் மோகன்லால் நடிக்கும் ஒடியன் மற்றும் அவரது மகன் நடிக்கும் ஆதி ஆகிய 2 படங்களின் பூஜையும் ஒரே நாளில் இன்று பூஜை போடப்பட்டது.
கேரளாவில் வாழ்ந்த ஒடியன் எனும் மலைவாழ் இனத்தின் கடைசி மனிதராக ஒடியன் மாணிக்கன் என்ற கேரக்டரில் நடிக்கிறாராம்.

இப்படத்தை புதுமுகம் ஸ்ரீகுமார் மேனன் இயக்க, முக்கிய வேடத்தில் மஞ்சு வாரியர் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படம் எவரும் எதிர்பாராத வகையில் இந்திய சினிமாவிலேயே முதன் முறையாக ஆயிரம் கோடி ரூபாய் எடுக்கப்பட உள்ளதாம்.

ஆதி என்ற படத்தை த்ரிஷ்யம் புகழ் ஜீத்து ஜோசப் இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீலை மாதத்தில் சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

ஜீலை மாதத்தில் சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Suriyaவிக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, சுரேஷ்மேனன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் சூட்டிங் தொடங்கி ஓரிரு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இப்படம் தொடர்பான போஸ்டர், டீசர் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இன்னும் சில தினங்களில் இந்த ஜீலை மாதத்திலேயே இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிடவிருகிறார்களாம்.

மேலும் சூர்யா பிறந்தநாளில் ஓர் இன்ப அதிர்ச்சி உள்ளது என்கிறது படக்குழு.

அது இப்படத்தின் டீசராக இருக்கலாம் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

More Articles
Follows