பிக்பாஸ் வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகும் சனம் ஷிவானி ரம்யா கேப்ரில்லா..; அர்ச்சனா அதிரடி எண்ட்ரீ

பிக்பாஸ் வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகும் சனம் ஷிவானி ரம்யா கேப்ரில்லா..; அர்ச்சனா அதிரடி எண்ட்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vj archana in bigg boss 4அக்டோபர் 4-ஆம் தேதி முதல் பிக்பாஸ் 4-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிகழ்ச்சியில் ரேகா, சுரேஷ், ரியோ, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், சனம் ஷெட்டி உள்ளிட்ட 16 பேர் போட்டியாளர்களாக உள்ளனர்.

தற்போது 17-வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார் விஜே அர்ச்சனா.

அவரை அந்த வீட்டிலுள்ள போட்டியாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்கும் புரமோ வீடியோவும் வெளியானது.

சனம், ஷிவானி, சம்யுக்தா, ரேகா, ரம்யா பாண்டியன், கேப்ரில்லா, ஆஜித் ஆகியோர் இந்த வாரம் வெளியேற்றப்படுவோர் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்களாம்.

VJ Archana enters Bigg Boss 4 house

அனிருத் பிறந்தநாளில் தளபதி விஜய் தரும் ‘மாஸ்’டர் ட்ரீட்

அனிருத் பிறந்தநாளில் தளபதி விஜய் தரும் ‘மாஸ்’டர் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

quit pannudaவிஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’.

இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், கடந்த ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் மார்ச் மாத இறுதி வாரம் முதல் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அந்த படத்தின் வெளியீடு இன்று வரை (7 மாதங்களாக) தள்ளிப் போய் கொண்டே உள்ளது.

இதனிடையில் மாஸ்டர் படத்தை பார்த்த விஜய் சிலாகித்து போனாராம்.

அடுத்தாண்டு 2021 பொங்கலுக்கு திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை பயன்படுத்தி மாஸ்டர் படத்தில் சில திருத்தங்களை செய்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

இதனிடையில் மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கில், “‘மாஸ்டர்’ திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும்” என்று அறிவிப்பு வெளியானது.

ஆனால் அது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பது தெரிய வந்தது.

இந்நிலையில் நாளை அக்டோபர் 16 மாஸ்டர் பட இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படத்திலிருந்து QUIT PANNUDA என்ற பாடலின் லிரிக் வீடியோ மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது என அறிவித்துள்ளது படக்குழு.

Quit Pannuda lyric video will be out tomorrow

காதலின் இரண்டு பக்கங்களைக் கூறும் ‘ஐஸ்வர்யா முருகன்’!*

காதலின் இரண்டு பக்கங்களைக் கூறும் ‘ஐஸ்வர்யா முருகன்’!*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

iswarya muruganகாதல் என்பது சுகமானதுதான் சுவையானதுதான். அதன் விளைவுகள் இன்பமானது தான். ஆனால் அதற்குப் பின் காதலர்களின் குடும்பங்களில் நிகழும் விளைவுகள் பல நேரங்களில் வலிநிறைந்தவை. அப்படி வாழ்வின் வலி நிறைந்த இருள் பக்கங்களை வெளிச்சமிட்டுக் காட்டும் படம் தான் ‘ஐஸ்வர்யா முருகன்’.

இப்படத்தை ‘ரேணிகுண்டா’ புகழ்
இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம் இயக்கியுள்ளார்.மாஸ்டர் பீஸ் திரைப்பட நிறுவனத்தின் சார்பில் ஜி .ஆர். வெங்கடேஷ் மற்றும் கே. வினோத் தயாரித்துள்ளனர்.

அருண் பன்னீர்செல்வம். வித்யா பிள்ளை ,ஹர்ஷ் லல்வானி ஜி. சாய் சங்கீத், குண்டு கார்த்திக், தீனா, ராஜா, சங்கீதா, ராஜன், தெய்வேந்திரன் ,நாகேந்திரன் என முற்றிலும் புதுமுகங்களின் ஆக்கிரமிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

படத்திற்கு ஒளிப்பதிவு அருண் ஜெனா . இவர் பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் .இசை -கணேஷ் ராகவேந்திரா. இவர், ஏற்கெனவே ‘ரேணிகுண்டா’ படத்திற்கு இசையமைத்தவர். எடிட்டிங் ஆண்டனியின் உதவியாளரான ஜான் ஆபிரகாம் .கலை -முகமது. சண்டைப்பயிற்சி -தினேஷ் .இவர் சண்டை இயக்குநர் ராஜசேகரின் உதவியாளர். நடனம் தஸ்தா.

படத்தை பற்றி இயக்குநர் பன்னீர்செல்வம் பேசும்போது “காதல் அழகானது தான் .இயல்பானதுதான்.ஆனால் அந்தப் பூ எந்த சந்தர்ப்பத்தில் மலரும் என்பதை யாரும் கணிக்க முடியாது .அப்படி இருவர் இடையே மலரும் காதல் சில நேரம் இரு குடும்பத்தையும் இலைகளும் கிளைகளும் தாண்டி வேரோடும் ஆணிவேரோடும் அசைத்து நிலை குலைத்து விடுகிறது.ஒரு புன்னகை மலரும் போது ஒரு கண்ணீர்த்துளி அரும்ப வேண்டும் என்கிற நியதி எதுவுமில்லை .ஆனால் காதலில் அது நிகழ்கிறது.அப்படி ஒரு காதலின் வலி நிறைந்த பக்கங்களைச் சொல்வதுதான் ‘ஐஸ்வர்யா முருகன்’.

அப்படி என்றால் இந்தப் படம் காதலுக்கு எதிரானது என்று கேட்கலாம் .அப்படி இல்லை. காதலும் இயல்பானதுதான் . அதை நாம் எடுத்துக் கொள்வதில்தான் சிக்கல் இருக்கிறது .அதை சம்பந்தப்பட்ட இரு குடும்பங்களும் எவ்வாறு எதிர்கொள்கின்றன? அதன் விளைவுகள் எப்படி இருக்கின்றன? என்பதையும் ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும் -இருவரும் சேர்ந்து விட்டதுடன் அந்தக் காதல் கதை முடிவதில்லை .அதன் பின்னான விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கின்றன. தாங்கள் ஏதோ இழந்துவிட்டதாக இரண்டு குடும்பங்களும்
பரிதவிக்கின்றன; தத்தளிக்கின்றன; கொந்தளிக்கின்றன. அதன் விளைவுகள் மூர்க்கமாக வன்முறையாக வெளிப்படுகின்றன. நம் சமுதாயத்தில் அதன் சாட்சி சொல்லும் காட்சிகளாக ரத்தமும் சதையுமாக எத்தனையோ சம்பவங்கள் காணப்படுகின்றன.எந்தப் பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு அல்ல. காதலுக்கு மட்டும் ஏன் அதை ஒரு தீர்வாக எடுத்துக் கொள்கிறார்கள்? என்று இந்தப் படம் கேள்வி கேட்கிறது . இப்படத்தின் நோக்கம்
எந்தத் தீர்வையும் சொல்வதல்ல.
கலை என்பது கேள்விகள் கேட்பதும் சிந்திக்க வைப்பதும்தான் என்கிற வகையில் நானும் இந்தப் படத்தில் சில கேள்விகளை வைத்திருக்கிறேன். நல்ல நட்பு பற்றிய காட்சிகளும் படத்தில் உள்ளன.

இப்படம் கதையையும் உணர்வுகளையும் மட்டும் நம்பி எடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ற புதுமுகங்களைப் பயன்படுத்தி இருக்கிறேன். படப்பிடிப்பை 45 நாட்கள் திண்டுக்கல், பழனி, மதுரை பகுதிகளில் ஒரே மூச்சில் நடத்தி முடித்திருக்கிறோம். மண்ணும் மக்களும் இயல்பாக இருக்க பெரும்பாலும் அசலான மண்ணின் மைந்தர்களைப் பயன்படுத்தி இருக்கிறோம். மதுரையில் நெரிசல் நிறைந்த தெருக்களில் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம். உணர்வு எங்கெங்கு தேடிச் செல்கிறதோ அதற்கு ஏற்றபடிதான் காட்சிகள் என்ற வகையில் எந்தச் சமரசமும் இல்லாமல் இடங்களைத் தேர்வு செய்து படப்பதிவு செய்திருக்கிறோம்.

இப்படத்தில் நடிகர்கள் என்று யாரும் இல்லை. அனைவரும் கதை மாந்தர்களாகவே தோன்றுவார்கள்.

கணேஷ் ராகவேந்திரா இசையில் யுகபாரதியின் வரிகளில் இப்படத்தில் 4 பாடல்கள் உள்ளன. ‘யாரோ இவன் ?’ என்று சைந்தவி பாடும் பாடலும், ‘அம்மம்மா’ என்ற இன்னொரு பாடலும் காதலுணர்வு சொல்வன. ‘எங்கிருந்தோ கத்து தம்மா செங்குருவி காதலெனும் கல்லடியை தாங்காமல்’
என்கிற பாடல், காதலர்களுக்குச் சில நேரம் நேரும் அவலங்களைக் கண்டு பதறும் நம் மனசாட்சியின் குரலாக ஒலிக்கும்.

படத்தைப் பார்த்துவிட்டு உணர்வுகளின் அசலான பதிவாக இருக்கிறது என்று பலரும் பாராட்டியிருக்கிறார்கள்.

‘ஐஸ்வர்யா முருகன்’
விரைவில் திரையரங்குகளில் ஓர் அசலான திரைப் பதிவாக வெளிவரவிருக்கிறது “என்று
இயக்குநர் நம்பிக்கையோடு கூறுகிறார்.

Director Panneer Selvam talks about his upcoming film Iswarya Murugan

ஊரடங்கு காலத்தில் கட்டுப்பாடுகளுடன் நடந்த சுந்தர். சி படப்பிடிப்பு!

ஊரடங்கு காலத்தில் கட்டுப்பாடுகளுடன் நடந்த சுந்தர். சி படப்பிடிப்பு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor ashwinதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் சுந்தர்.சி தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளின்படி நடைபெற்று வருகிறது.

சுந்தர். சியின் அவ்னி மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பத்ரி இயக்குகிறார்.இப்படத்தில் பிரசன்னா, ஷாம் ,அஸ்வின் காக்குமனு, யோகி பாபு, ரித்திகா சென்,ஸ்ருதி மராத்தே ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இந்தப் படப்பிடிப்பு தொடர்ந்து 26 நாட்களாக நடைபெற்று வருகிறது. சென்னை ஈசிஆர் சாலையில் ரோஸ் கார்டன்
எம்ஜிஎம் டிஸ்ஸி வேர்ல்டு அருகிலுள்ளது.

26 வது நாளாக அங்கு படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில்

படப்பிடிப்பு அனுபவம் பற்றி
அஸ்வின் காக்குமனு பேசும்போது,
”இந்த அனுபவம் புதிதாக இருக்கிறது .வழக்கமாக பட செட்டில் சந்திக்கும் போது ஒருவரை ஒருவர் கை குலுக்கி கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்திக் கொள்வோம். இப்போது அதற்கெல்லாம் இடமில்லாமல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அரசின் பாதுகாப்பு முறைகளோடு நடக்கிறது .முதலில் வெப்ப சோதனை நடத்துவதில் இருந்து கிருமி நாசினி பயன்படுத்துவது வரை எல்லாமும் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

ஒருநாள் படப்பிடிப்புத் தளத்திற்கு சுந்தர்.சி சார் வந்தார். எல்லோரிடமும் கலகலப்பாக பேசி ஊக்கப்படுத்தினார்.
பிரசன்னாவுடன் பேசியது நல்ல அனுபவமாக இருந்தது .அவர் தனது திரை வாழ்க்கையைப் பற்றியும் அதில் அவர் கற்ற பாடங்களைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

யோகி பாபு அனைவருடனும் ஜாலியாக பேசி படப்பிடிப்புத் தளத்தைக் கலகலப்பாக மாற்றினார்.சரியான சமூக இடைவெளியுடன் பழக வேண்டி இருந்ததால் தள்ளி நின்று பேசவும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் பழகினோம்.”எனறார்.

கதைப்படி கதாநாயகியின் வீட்டில் நடப்பதாக காட்சி எடுக்கப்பட்டது.
நாயகியாக நடிக்கும் ரித்திகா சென் அன்றுதான் முதல் நாளாக படப்பிடிப்புக்கு வந்திருந்தார்.

அவர் படப்பிடிப்பு அனுபவம் பற்றி பேசும் போது,

“முதலில் எனக்குப் பயமாக இருந்தது. இந்தச் சூழலுக்கு பொருந்துவது கடினமாக இருந்தது .ஆனால் போகப் போக எல்லாம் சரியாகி விட்டது .அந்த சமூக இடைவெளி என்கிற அந்த அசௌகரியத்தை உணரமுடியாத படி அனைவரும் நல்ல ஒத்துழைப்போடு படப்பிடிப்பு நடத்தினார்கள். எனவே முதலில் பயந்திருந்த நான் மெல்ல மெல்ல அந்த சூழலோடு ஒன்றி விட்டேன்.” என்கிறார்.

யோகி பாபு பேசும்போது, “அண்ணன் சுந்தர் சி எனது குடும்ப நண்பர் போன்றவர் .அவரது நிறுவனம் எனது குடும்ப நிறுவனம் போன்ற உணர்வு எனக்கு உண்டு.அவர் எப்போது கூப்பிட்டாலும் நான் வந்து விடுவேன். கதையெல்லாம் கேட்க மாட்டேன் .அப்படித்தான் இந்தப் படத்திலும் கதை கேட்காமல் நடிக்க வந்து விட்டேன் பிறகு வந்து கதையைக் கேட்டபோது அருமையான கதையாக இருந்தது”என்றார்.

26 வது நாளான அன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்து முடிவடைந்தது.

இயக்குநர் பத்ரி பேசும்போது,
” குறைந்த ஆட்களைக் கொண்டு 70 பேருக்குள் இருக்குமாறு படப்பிடிப்பு நடத்துவது முதலில் சிரமமாக இருந்தாலும் அதற்கான முன் தயாரிப்புகளைச் சரியாகச் செய்து கொண்டு எந்தக் குறையும் இல்லாமல் நாங்கள் நடத்திக் கொண்டு வருகிறோம். இதற்குக் காரணம் சுந்தர்சி சார் அவர்களிடம் கற்றுக் கொண்ட அந்த திட்டமிடலும் சரியான நேரம் பராமரிப்பதும்தான். அதுமட்டுமல்லாமல் படக்குழு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து கொண்டே இருப்போம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சரியாகத் திட்டமிட்டு இந்த படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறோம்.இன்று இருபத்தி ஆறாவது நாள். எல்லாவற்றையும் விட பாதுகாப்புதான் முக்கியம் என்பதால் எல்லா சிரமங்களையும் அசௌகர்யங்களையும் மறந்துவிட்டு அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள்..” என்கிறார்.

செப்டம்பரில் தொடங்கிய இந்த படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும் நிலையில் உள்ளது.

Sundarc in Mayabazar tamil version update

முன்னாள் எம்எல்ஏ அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்

முன்னாள் எம்எல்ஏ அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ammk vetrivelகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்.

அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அரசியல்வாதி வெற்றிவேல் அரசியல் பயணம் குறித்து ஒரு பார்வை…

காங்கிரஸ் கட்சியில் இணைந்து தன் அரசியல் பயணத்தை தொடங்கியவர் வெற்றிவேல்.

பிறகு அதிமுகவில் இணைந்து 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்டு எம்எல்ஏவானார்.

அதன்பின்னர், 2014-ல் சிறை சென்று வந்த ஜெயலலிதாவுக்கு தான் வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதியை விட்டுக்கொடுத்தார்.

பின்னர் 2016 தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாக உடைந்த போது சசிகலாவை ஆதரித்தார்.

அதாவது தினகரனுக்கு ஆதரவாக 18 எம்எல்ஏக்கள் பிரிந்தபோது, அதில் ஒருவராக இருந்தவர் வெற்றிவேல்.

இதனையடுத்து தினகரனின் அமமுக கட்சியின் பொருளாளர் ஆனார்.

AMMK treasurer Vetrivel passed away due to covid-19

தனுஷ்-அனிருத் கூட்டணியை மீண்டும் இணைக்கும் சன் பிக்சர்ஸ்

தனுஷ்-அனிருத் கூட்டணியை மீண்டும் இணைக்கும் சன் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush anirudhஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவான படம் ‘3’.

இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் அனிருத்.

இந்த படத்தில் இடம்பெற்ற கொல வெறி பாடல் இன்றும் யூடிப்பில் தன் சாதனையை தொடர்ந்து வருகிறது.

இந்த படத்தில் ஆரம்பமான கூட்டணி தனுஷ் அனிருத் கூட்டணி பல படங்களில் இணைந்தே இருந்தது.

இந்த கூட்டணிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

ஆனால், சில கருத்து வேறுபாடுகளால் ‘தங்கமகன்’ படத்திற்கு பிறகு பிரிந்தது.

அதன்பின்னர் தனுஷ் படங்களுக்கு மற்ற இசையமைப்பாளர்கள் இசையமைத்தனர்.

இந்த நிலையில் ரசிகர்கள் விரும்பிய இந்த கூட்டணியை மீண்டும் இணைக்கிறது சன் பிக்சர்ஸ்.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகவுள்ள தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Dhanush and Anirudh to team up for sun pictures next film

More Articles
Follows