தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தேசிய விருது நாயகன் நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும், மனு ரஞ்சித் என்பவரும் நேற்று (ஜூலை 10) திருமண நிச்சயத்தார்த்தம் நடைபெற்றது.
கெவின் கேர் குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது திமுக தலைவர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் தேன்மொழியின் மகன்தான் மணமகன். இதனை நாம் முன்பே தெரிவித்திருந்தோம்.
நிச்சயதார்த்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இவ்விழாவில் திரையுலக பிரபலங்கள் யாரும் பங்கேற்கவில்லை.
மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அப்போது ஒட்டு மொத்த திரையுலகினரையும் அழைக்க விக்ரம் திட்டமிட்டு இருக்கிறாராம்.