விஜய் ரசிகர்கள் இல்லாமல் ‘மாஸ்டர்’ இசை விழா.; சன் டிவியில் லைவ்.!

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

அண்மையில் இப்பட படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாக படக்குழு அறிவித்தது.

இதையடுத்து மார்ச் மாதம் முழுக்க மாஸ்டர் படம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர்.

இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

ஏப்ரல் 9-ம் தேதி படத்தைத் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கெனவே குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மார்ச் 15-ம் தேதி மாலை 6.30 மணிக்கு படத்தின் இசைவெளியீட்டு விழா நேரலையாக ஒளிபரப்படும் என சன்டிவி அறிவித்துள்ளது.

இவ்விழாவில் திரைத்துறை பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

விஜய் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை எனவும் கூறப்படுகிறது. ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் விழா நடைபெறும் எனத் தெரிகிறது.

Vijays Master Audio launch on 15th March Sun Tv Live show

Overall Rating : Not available

Latest Post