நா ரெடி.. விஜய் பிறந்தநாளில் லோகேஷ் கனகராஜ் தரும் செம மாஸ் ட்ரீட்

நா ரெடி.. விஜய் பிறந்தநாளில் லோகேஷ் கனகராஜ் தரும் செம மாஸ் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதில் விஜய்யுடன் மன்சூர் அலிகான், த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

லோகேஷின் முந்தைய படத்தை போன்று இதிலும் எல்சியு இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு முதல் பாடலை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

நா ரெடி…’ என குறிப்பிட்டுள்ள அந்த பாடல் பற்றி வெளியிடப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில்.. வாயில் சிகரெட்.. கையில் துப்பாக்கி உடன் இருக்கிறார் விஜய்.

பின்னணியில் போதையில் பாட்டில்களுடன் கும்மாளம் அடிப்பதையும், சிங்கம் தோற்றம் இருப்பதையும் காண முடிகிறது.

லியோ

vijay’s leo movie first single will be releasing in vijay birthday

மாணவர்களை உற்சாகப்படுத்தும் விஜய்.; கல்வி உதவித் கொகையுடன் விருந்து. நீலாங்கரையில் ஏற்பாடுகள்.!

மாணவர்களை உற்சாகப்படுத்தும் விஜய்.; கல்வி உதவித் கொகையுடன் விருந்து. நீலாங்கரையில் ஏற்பாடுகள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 10. 12-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற இருக்கிறது.

நடிகர் விஜய் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து இந்த சான்றிதழையும், ரொக்கப் பரிசையும் வழங்க இருக்கிறார்.

10, 12-ம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை 234 தொகுதிகளிலும் கணக்கெடுத்து அவர்களைப் பெற்றோர்களுடன் நாளை நீலாங்கரை பகுதியில் இருக்கும் ஆர்.கே. கன்வென்சன் சென்டருக்கு வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்காக நீலாங்கரை பகுதியில் பிரமாண்டமான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

பெற்றோர்கள், மாணவர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது.

நாளை நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்காக இன்று முதலே நீலாங்கரை பகுதியில் சுவர் ஓவியங்கள் அலங்கார ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தனது கட்அவுட்கள் எதுவும் வைக்கக்கூடாது என்று விஜய் தரப்பில் கூறப்பட்டிருப்பதால் சுவர் ஓவியங்கள் வரையும் பணியில் ரசிகர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் கூறியதாவது:-

மாணவர்கள் அனைவரும் பெற்றோர்களுடன் வந்து மேல்மருவத்தூர், தாம்பரம் பகுதியில் இருக்கும் குறிப்பிட்ட 2 மண்டபங்களில் வந்து தங்கி தயாராகி விடுவார்கள்.

அங்கேயே காலை உணவை முடித்துக் கொண்டு வண்டலூர், கேளம்பாக்கம் வழியாக வந்து நீலாங்கரையை அடைந்து விடுவார்கள்

நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சினாக்ஸ், தண்ணீர் பாட்டில் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 8.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி சரியாக 1 மணிக்குள் அனைவருக்கும் “12 வகை காய்கறிகளோடு சைவ விருந்துக்கு ஏற்பாடு” செய்யப்பட்டுள்ளது என்றார்.

actor vijay will meet students tomorrow grand arrangements at neelangarai

கமல் – வினோத் இணையும் புதிய படத்தில் வில்லனாகும் பிரபல நடிகர்

கமல் – வினோத் இணையும் புதிய படத்தில் வில்லனாகும் பிரபல நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘விக்ரம்’ படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்த தகவல்களும் அப்டேட்டுகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தி வருகின்றன.

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் கமலின் அடுத்த படத்தை மணிரத்னம் இயக்குவார் என சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.

ஆனால் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் எனக் கூறப்படுகிறது.

இதனிடையில் கமல் – வினோத் கூட்டணி உறுதியாகியுள்ளது. ‘வலிமை’, ‘துணிவு’ படங்களை தொடர்ந்து வினோத் இயக்க உள்ள புதிய படத்தில் கமல் நடிக்க உள்ளார்.

இந்த படம் விவசாயம் குறித்த படம் எனக் கூறப்படுகிறது. எனவே தான் சில தினங்களுக்கு முன் கமல் வினோத் சந்திப்பில் பல விவசாயிகள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பார் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

அதற்கான பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Vijay Sethupathi as baddie in Kamal Vinoth new project

மக்கா மக்கா..: ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அஸ்வின் – முகேன்ராவ் – ஜிபி. முத்து ஆட்டம்

மக்கா மக்கா..: ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அஸ்வின் – முகேன்ராவ் – ஜிபி. முத்து ஆட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் சுயாதீன இசை ஆல்பங்களை ஊக்குவிக்கும் வகையில், தொடர்ந்து சிறந்த இசை ஆல்பம் பாடல்களை தயாரித்து வரும் MM Originals நிறுவனத்தின் சார்பில், ப்ரதிமா குப்பாலா, HK ரவூஃபா வெளியிட, Etcetera Entertaiment சார்பில் V. மதியழகன் தயாரிப்பில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், புதிதாக உருவாகியிருக்கும் பாடல் “மக்கா மக்கா”. சமீபத்தில் இணையத்தில் வெளியான இப்பாடல் குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான பார்வைகளை குவித்து சாதனை படைத்து வருகிறது.

நட்பை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள இப்பாடலில், தமிழ் திரையுலக பிரபலங்களான அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன், முகேன் ராவ் இணைந்து நடித்துள்ளனர். கார்த்திக் அரசகுமார் இப்பாடலை இயக்கியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். பா விஜய் வரிகளில், இப்பாடலை பம்பா பாக்யா மற்றும் சத்ய பிரகாஷ் பாடியுள்ளனர்.

அஸ்வின் - முகேன்ராவ்

இளைஞர்களை கவரும் வகையில் ஃப்ரஷ்ஷான ஃபர்ண்ஷிப் பாடலாக உருவாகியுள்ள இப்பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

RD ராஜசேகர் ஒளிப்பதிவு, ஆண்டனி எடிட்டிங் பணிகளை செய்துள்ளனர். Etcetera Entertaiment சார்பில் V. மதியழகன் இந்த பாடலை தயாரித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்பாடல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இளைஞர்கள் ப்ளேலிஸ்டில் தவறாது இடம் பிடிக்கும் உற்சாகமிக்க பாடலாக YouTube தளத்தில் பெரும் எண்ணிக்கையிலான பார்வைகளை குவித்து சாதனை படைத்து வருகிறது.

தமிழ் இசை உலகில் தொடர்ந்து சிறப்பு மிக்க சுயாதீன ஆல்பம் பாடல்களை தயாரித்து வரும் MM Originals நிறுவனம் Media Masons நிறுவனத்தின் ஒரு அங்கமாகும்.

Media Masons நிறுவனம் தமிழின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் பல புகழ்மிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறது. தமிழ் இசையுலகில், சுயாதீன கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ப்ரதிமா குப்பாலா, HK ரவூஃபா ஆகியோர் MM Originals நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகின்றனர்.

அஸ்வின் - முகேன்ராவ்

Ashwin and Mugen Rao celebrates the Carnival of Friendship

விஷால் பட சூட்டிங்கை எப்போது தொடங்குகிறார் கார்த்திக் சுப்புராஜ்.?

விஷால் பட சூட்டிங்கை எப்போது தொடங்குகிறார் கார்த்திக் சுப்புராஜ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டைரக்டர் ஹரி இயக்கிய ‘தாமிரபரணி’, ‘பூஜை’ ஆகிய படங்களில் விஷால் நடித்திருந்தார்.

தற்போது மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைகிறது என்று அறிவிப்பை சில தினங்களுக்கு முன் பார்த்தோம்.

இந்த படத்தை இயக்குநர் ஹரி இயக்கத்தில் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சௌத் இணைந்து தயாரிக்கிறது.

ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாக உள்ள இதன் படப்பிடிப்பு அடுத்த ஜூலை மாதம் துவங்க உள்ளதாம்.

தற்போது விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படம் விரைவில் வெளியாக உள்ளது.

Vishal-Hari super hit combo’s new movie shooting start july month

2018 படம் பார்த்துட்டு ரஜினி விஜய் அஜித் அழைக்க மாட்டார்களா.? என காத்திருக்கும் ஜூட் ஆண்டனி ஜோசப்

2018 படம் பார்த்துட்டு ரஜினி விஜய் அஜித் அழைக்க மாட்டார்களா.? என காத்திருக்கும் ஜூட் ஆண்டனி ஜோசப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில வாரங்களுக்கு முன் மலையாளத்தில் ‘2018’ என்கிற படம் வெளியானது. கடந்த 2018ல் கேரளாவையே புரட்டி போட்ட பெருமழை வெள்ளத்தையும் அதை கேரள மக்கள் எப்படி எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டு வந்தனர் என்பதையும் மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி இருந்தது..

இந்தப்படத்தை இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர் இயக்கியுள்ளார்.

நிவின்பாலி, நஸ்ரியா இணைந்து நடித்த ‘ஓம் சாந்தி ஒசானா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், ஒரு முத்தச்சி கதா, சாரா’ஸ் என மூன்று படங்களை இயக்கியுள்ளார். அந்த மூன்று படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ஒரு நிஜ நிகழ்வை மையப்படுத்தி இந்த 2018 படத்தை எடுத்துள்ளார்.

இந்தப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை குறையாத வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கு முன்பு அதிக வசூல் சாதனை செய்த மோகன்லாலின் புலிமுருகன், லூசிபர் போன்ற படங்களின் சாதனைகளையும் முறியடித்து 200 கோடி வசூலை எட்டியுள்ளது.

மலையாளத்தில் மட்டுமல்ல, தமிழ் உள்ளிட்ட மற்ற தென்னிந்திய மொழிகளிலும் வெளியான இந்தப்படம் கேரளாவை போலவே இங்கேயும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தநிலையில் இந்தப்படம் உருவான விதம் குறித்தும், இந்த வெற்றி குறித்தும் நம்மிடம் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப்.

*சினிமா மீதான ஆர்வம் உங்களுக்கு எப்போது வந்தது ?*

பத்தாம் வகுப்பு படிக்கும்போதே சினிமா மீது ஒரு ஈர்ப்பு உருவாகி விட்டது. பின்னர் சினிமாவில் நுழைந்ததும் இயக்குனர் வினீத் சீனிவாசனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து பணியாற்றினேன்.. அவர்களுடைய நட்பு வட்டாரத்தில் இருந்ததால் இயக்குனரான முதல் படத்திலேயே நிவின்பாலி, வினீத் சீனிவாசன் ஆகியோரை நடிக்க வைத்து இயக்குனராக மாறினேன்.

*உங்களது முந்தைய மூன்று படங்களின் ஜானரில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ஒரு படத்தை உருவாக்கவேண்டும் என நினைத்தது ஏன் ?*

வேறு ஜானரில் பண்ணுகிறோம் என்றெல்லாம் நினைக்கவில்லை. ஸ்கிரிப்ட் நன்றாக இருக்க வேண்டும்.. மக்களுக்கு பிடிக்க வேண்டும்.. அவர்கள் அந்த கதையுடன் எளிதாக தங்களை பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டும்.. இது இருந்தாலே போதும்.. இந்த 2018 கதையில் இந்த மூன்றுமே இருந்தது..

2018

*குறிப்பாக இந்த 2018 படத்தை எடுக்க உங்களை தூண்டியது எது ?*

2018ல் பெரும் மழை பெய்து வெள்ளம் வந்தபோது என்னுடைய வண்டியும் கூட அதில் போய்விட்டது. அதன்பிறகு மக்கள் ஒரு வழியாக இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்த சமயத்தில் தான், வாழ்க்கை இத்துடன் முடிந்துவிடவில்லை, இன்னும் இருக்கிறது என்று மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக இது பற்றி ஒரு தன்னம்பிக்கை வீடியோ எடுக்கலாம் என முடிவெடுத்தோம்.

வெள்ளம் வந்த சமயத்தில் அது எதையும் நான் நேரில் பார்க்கவில்லை.. இதற்காக சேனல்களில், யூடியூப்பில் வந்த வீடியோக்களை, செய்திகளை சேகரிக்க ஆரம்பித்தேன். அவற்றை எல்லாம் பார்க்கும்போது தான் இந்த பேரிடர் தருணத்திலும் பொதுமக்களும் அதிகாரிகளும் இந்த மீட்பு பணியில் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் ஈடுபட்ட ஒரு உண்மைக் கதை இருப்பது தெரிய வந்தது. அந்த கதையை இந்த உலகத்திற்கே தெரியவைக்க வேண்டும் என்று தான் இதனை படமாகவே எடுக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தேன்.

*கதை, அதை சொல்லும் விதம் என மலையாளத் திரையுலகம் டாப் லெவலில் இருந்தாலும் கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளிலும் இந்தப்படத்தில் அசத்தியிருந்தீர்கள்.. எப்படி சாத்தியமானது ?*

இந்த படத்தின் கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகளுக்காக முன்கூட்டியே மிகத்தெளிவாக திட்டமிட்டு இதற்காக மினியச்சர் செய்து, ஸ்டோரி போர்ட் உருவாக்கி இருந்தோம். அது இந்த படத்தில் மிக சரியாக ஒர்க் அவுட் ஆகிவிட்டது. அதனால் தான் இந்த படத்தில் எது நிஜமான காட்சி எது கிராபிக்ஸ் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் தொலைக்காட்சி சம்பந்தப்பட்ட காட்சிகளைத் தவிர மற்றவை எல்லாம் பெரும்பாலும் நிஜமாகவே படமாக்கப்பட்டன. லூசிபர், மாமாங்கம் போன்ற படங்களுக்கு தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றிய மோகன்தாஸ் இந்த பணிகளுக்கு தலைமை ஏற்று அத்தனை வேலைகளையும் சிறப்பாக கையாண்டார்

*இந்த மாதிரி படங்களுக்கு ப்ரீ புரொடக்சன் ஒர்க் ரொம்பவே முக்கியம் இந்தப்படத்தில் நிறைய நட்சத்திரங்கள் இருந்தார்கள். அவர்களை சமரசம் பண்ண வேண்டிய சிரமம் ஏதும் இருந்ததா ?*

இந்த படத்தில் நடிக்க அழைத்தபோது யாருமே தயங்கவில்லை. காரணம் ஒரு பக்கம் ஸ்கிரிப்ட் பக்காவாக இருந்தது என்றால், இன்னொரு பக்கம் இது கேரளாவின் ஒற்றுமையை வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்டும் ஒரு படம் என்பதால் கூடுதல் அர்ப்பணிப்புடன் நடித்தார்கள். இத்தனைக்கும் அவர்களில் பலரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் வெவ்வேறு படங்களில் நடித்து வந்தார்கள். இருந்தாலும் இந்த படத்திற்காக தாங்களாகவே நேரத்தை ஒதுக்கி நடித்தார்கள்.

இந்த படத்தில் நடித்தவர்களில் நடிகர் டொவினோ தாமஸ் தான் அதிகப்படியாக கிட்டத்தட்ட 45 நாட்களுக்கு மேல் ஒதுக்கி இதில் நடிக்க வேண்டி இருந்தது. பெரும்பாலான நேரங்களில் அவர் நீருக்குள்ளேயே இருக்கும்படி காட்சிகள் அதிகம் இருந்தன. இந்த படத்திற்காக அனைவருமே கஷ்டப்பட்டு இருந்தார்கள் என்றாலும் அதிக நாட்கள் ஒதுக்கிய வகையில் இதில் டொவினோ தாமஸ் இன்னும் கொஞ்சம் அதிகம் சிரமங்களை பட்டு நடித்தார்.

*பட்ஜெட்டில் மட்டுமல்லாமல், இந்த படத்தை தயாரிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களையும் தயாரிப்பாளர் புரிந்துகொண்டனரா..? அவர்களை எப்படி கன்வின்ஸ் செய்தீர்கள் ?*

மலையாள சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்திற்கு இவ்வளவுதான் என ஒரு பட்ஜெட் இருக்கிறது. அதை தாண்டி படம் பண்ணுவதற்கு தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இந்த படம் பண்ண வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருந்ததால், இதற்காகவே பிளான் ஏ, பிளான் பி, பிளான்சி என மாற்றுத்திட்டங்களை எல்லாம் வைத்து தேவைப்பட்ட இடங்களில் அவற்றை செயல்படுத்தினேன். இதனால் நான் தீர்மானித்திருந்த பட்ஜெட்டிற்குள் இந்த படத்தை எடுக்க முடிந்தது.

2018

*இந்த படம் இந்த அளவுக்கு வசூலில் சாதனை படைக்கும் என நினைத்தீர்களா..?*

படம் எடுத்த போதும் சரி, வெளியான போதும் சரி.. கேரளாவில் உள்ள மூன்றரை கோடி மக்களும் பார்க்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருந்தது. மற்றபடி இது எவ்வளவு வசூலிக்கும் என்றோ இவ்வளவு பெரிய வெற்றியை பெறும் என்றோ அந்த சமயத்தில் நான் நினைக்கவே இல்லை. 200 கோடி வசூல் என்பதை விட மக்கள் அனைவரிடமும் இந்தப்படம் சென்று சேர்ந்து இருக்கிறது என்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி. அது மட்டுமல்ல இதுபோன்று இன்னும் பல படங்கள் வரவேண்டும்.. மலையாள திரை உலகின் எல்லை இன்னும் விரிவடைய வேண்டும் என்பதுதான் என் ஆசை.

*இந்த படத்துக்கு உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு யார்கிட்டே இருந்து ?*

மம்முட்டி இந்த படத்தை பார்த்துவிட்டு நிஜமாகவே ஒரு ஹாலிவுட் படம் பார்ப்பது போல இருக்கிறது. எப்படி இந்த படத்தை எடுத்தாய் என ஆச்சரியப்பட்டார். ஒவ்வொரு டெக்னிக்கல் விஷயங்களையும் கேட்டு தெரிந்து கொண்டார். நிறைய பாராட்டுக்கள் வந்தாலும் மலையாள சினிமாவின் மூத்த இயக்குனர் பாசில் என்னை அழைத்து பாராட்டியதுடன் நீங்கள் தான் இந்த மலையாள சினிமாவின் மிகப்பெரிய இயக்குனர் என்று கூறினார். நான் அதை ஒப்புக்கொள்ள மறுத்தபோது, இந்த மாதிரி நிறைய நட்சத்திரங்களை வைத்து பாடல்கள், சண்டை என கமர்சியல் அம்சங்கள் இல்லாமல் ஒரு படத்தை எடுத்து இவ்வளவு பெரிய அளவிற்கு வெற்றி பெற செய்துள்ளீர்கள் என்பதால் தான் நான் அப்படி கூறினேன் என்று சொன்னார்.

*அல்போன்ஸ் புத்ரன், வினீத் சீனிவாசன் போன்றவர்கள் தமிழ் சினிமாவுடன் தொடர்பில் இருக்கிறார்கள். நீங்கள் தமிழில் படம் பண்ண விரும்புகிறீர்களா ?*

2018 படத்தை பார்த்துவிட்டு தமிழகத்திலிருந்து ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் தொலைபேசியில் அழைத்து பாராட்டினார்கள். பிரபலங்கள் என யாரிடமும் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை.

தமிழ் சினிமாவில் யாராவது ஒரு நடிகர் இந்த படத்தை பார்த்துவிட்டு வாடா இப்படி ஒரு படம் எடுப்போம் என்று அழைப்பு விடுப்பார்களா என்று காத்திருக்கிறேன்.. இங்கே தமிழில் படம் பண்ண வேண்டும்.. அதிலும் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களின் படங்களை இயக்க வேண்டும் என எனக்கும் ஆசை இருக்கிறது. நிச்சயம் ஒரு நாள் இதில் ஒன்றாவது நிறைவேறும் என நம்புகிறேன்.

*இடையில் டைரக்சனில் இருந்து ஒதுங்கியது போல நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தீர்களே.. ?*
எனக்கு நடிப்பு, டைரக்ஷன் இரண்டுமே பிடிக்கும் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்ததால் அப்படியே பயணப்பட ஆரம்பித்து விட்டேன். ஆனால் நடிப்பு என்பது எனக்கு ஒரு வேலை மட்டும் தான்.. டைரக்ஷன் என்பது என்னுடைய வேட்கை.

*உங்களது அடுத்த படம் ?*

அடுத்து எனது முதல் பட ஹீரோ நிவின்பாலியுடன் இணைந்து படம் பண்ணும் திட்டம் இருக்கிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் .

2018

2018 movie director Jude Antony Joseph waiting for Rajini Vijay Ajith call sheets

More Articles
Follows