தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பரதன் இயக்கும் பைரவா படத்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார் விஜய்.
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகும் இப்படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார்.
இப்பாடல்கள் டிசம்பர் மாதம் வெளியாகும் என கூறப்பட்டு வரும் நிலையில், இப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பாடலாக அறிமுகப் பாடல் அமைந்துள்ளது.
எனவே, நேற்று
பட்டையக் கெளப்பு
குட்டையக் குழப்பு
பட்டையக் கெளப்பு
பட்டி தொட்டி எல்லாம்
பட்டையக் கெளப்பு
என்ற பாடல் வரிகளை வெளியிட்டார் வைரமுத்து.
இதனால் இன்ப அதிர்ச்சியில் திளைத்தனர் விஜய் ரசிகர்கள்.
இன்று மற்றொரு பாடலான மஞ்சள் மேகம் என்ற பாடல் வரிகளையும் வெளியிட்டுள்ளார்.
இசையோடு கேட்க, இன்னும் சில நாட்கள் காத்திருங்கள் ரசிகர்களே எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த பாடல் வரிகளை படமாக (இமேஜ்) ஆக பதிவிடாமல் உங்களுக்காக (காப்பி செய்து கொள்ள) இங்கே கொடுத்திருக்கிறோம்.
பட்டையக் கெளப்பு பாடல்…
பட்டையக் கெளப்பு
குட்டையக் குழப்பு
பட்டையக் கெளப்பு
பட்டி தொட்டி எல்லாம்
பட்டையக் கெளப்பு
குரவ மீனப் புடிக்கக்
குட்டையக் குழப்பு
கட்டுக் கட்டா – சேத்த
நோட்டுக் கட்டு – பெரும்
பூட்டுப் போட்டுக் கெடக்கு
பறவைக் கெல்லாம்
ஒரு வங்கி இல்ல – அது
பட்டினியா கெடக்கு?
**
காசை எடு
காத்தும் திசையை மாத்தும்
காசை எடு
ஓ… கடலில் ரயிலும் போகும்
காசை எடு
இமயம்
கொஞ்சம் குனியும்
காசை எடு
பூட்டி வச்சு என்ன பண்ணப் போற? … ஓ
அள்ளிக் கொடு – இல்ல
ஆட்டம் போடு
சிங்கம் எல்லாம்
சேமிக்காது
ஜில்லென்று கொண்டாடு
கட்டு கட்டாச் – சேத்த
நோட்டுக் கட்டு – பெரும்
பூட்டு போட்டுக் கெடக்கு
பறவைக் கெல்லாம் – ஒரு
வங்கி இல்ல – அது
பட்டினியா கெடக்கு?
**
வாழணுமே
ஏழை பாளை நம்மை
வாழ்த்தணுமே
எதிரி வந்தால்
மோதிப் பாக்கணுமே
ஏய்க்கும் கூட்டம் என்றால்
சாய்க்கணுமே
நீதி கேட்டு – தம்பி
நீயே நில்லு
தப்பாதப்பா
விஜயன் வில்லு
ரெண்டாயிரம் – ஆண்டா
வாழப்போற? – சும்மா
பூட்டிவச்சு எதுக்கு?
பறவைக் கெல்லாம் – ஒரு
வங்கி இல்ல – அது
பட்டினியா கெடக்கு?
மஞ்சள் மேகம் பாடல்…
மஞ்சள் மேகம் – ஒரு
மஞ்சள் மேகம் – சிறு
பெண்ணாகி முன்னே போகும்
பதறும் உடலும் – என்
கதறும் உயிரும் – அவள்
பேர்கேட்டுப் பின்னே போகும்
செல்லப் பூவே – நான்
உன்னைக் கண்டேன்
சில்லுச் சில்லாய் – உயிர்
சிதறக் கண்டேன்
நில்லாயோ நில்லாயோ
உன்பேர் என்ன
உன்னாலே மறந்தேனே
என்பேர் என்ன
*
கனவா கனவா – நான்
காண்பது கனவா – என்
கண்முன்னே கடவுள் துகளா
காற்றின் உடலா – கம்பன்
கவிதை மடலா – இவள்
தென்னாட்டின் நான்காம் கடலா
சிலிக்கான் சிலையோ
சிறுவாய் மலரோ
வெள்ளை நதியோ
வெளியூர் நிலவோ
நில்லாயோ நில்லாயோ
உன்பேர் என்ன
உன்னாலே மறந்தேனே
என்பேர் என்ன
*
செம்பொன் சிலையோ – இவள்
ஐம்பொன் அழகோ
பிரம்மன் மகளோ – இவள்
பெண்பால் வெயிலோ
நான் உன்னைப் போன்ற
பெண்ணைக் கண்டதில்லை
என் உயிரில் பாதி
யாரும் கொன்றதில்லை
முன்னழகால் முட்டி
மோட்சம் கொடு – இல்லை
பின் முடியால்
என்னைத் தூக்கிலிடு