தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2016-ம் ஆண்டு விஜய்குமார் என்பவர் இயக்கி நாயகனாக நடித்த உறியடி படம் வெளியானது.
இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இதன் இரண்டாம் பாகத்தை நடிகர் சூர்யா தன் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக தயாரித்து வருகிறார்.
இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் விஜய்குமாரே இயக்கி நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கேரளாவைச் சேர்ந்த விஸ்மயா நடித்திருக்கிறார்.
அண்மையில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட `96’ படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பாடல் உரிமையை சோனி மியூசிக் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.
இதன் சூட்டிங் குற்றாலம், தென்காசி போன்ற பகுதிகளில் நடந்துவந்த நிலையில் படப்பிடிப்புகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
இப்பட சூட்டிங்கை வெறும் 36 நாட்களிலேயே விஜய்குமார் இயக்கி முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Vijaykumar completed his Uriyadi2 Shooting in 36 days