ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி விருந்தளிக்கும் விஜய்சேதுபதி

ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி விருந்தளிக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், கலையரசன், சாய் தன்ஷிகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘லாபம்’.

இயற்கை, ஈ, பேராண்மை ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்பி. ஜனநாதன். இவர் அண்மையில் காலமானார். எனவே மற்ற படக்குழுவினர் இணைந்து படத்தின் மீத பணிகளையும் போஸ்ட் புரொடக்சன் பணிகளை முடித்தனர்.

லாபம் படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

ஆறுமுகக்குமார் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்த படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் வாங்கியதாக கூறப்பட்டது.

தற்போது தியேட்டர்களும் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் முடங்கியிருந்த படங்கள் அனைத்தும் ரிலீஸ் தேதியை அறிவித்து வருகின்ற நிலையில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி விநாயகர் சதுர்த்தியை (செப்டம்பர் 10) முன்னிட்டு லாபம் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Vijay Sethupathi’s Laabam Grand Release On September 9th

பெண்களுக்காக ‘பூமித்ரா’ என்ற நிறுவனத்தை தொடங்கிய கீர்த்தி சுரேஷ்

பெண்களுக்காக ‘பூமித்ரா’ என்ற நிறுவனத்தை தொடங்கிய கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கீர்த்தி சுரேஷ் தனது புது நிறுவனம் குறித்து ரசிகர்களுக்கு சமீபமாக பல யூகங்களை அறிவித்து வந்திருந்தார்.

இன்று, நடிகை கீர்த்தி சுரேஷ் தொழில் முனைவோர்களான ஷில்பா ரெட்டி மற்றும் காந்தி தத் ஆகியோருடன் இணைந்து, சுத்தமான மற்றும் இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்ட சரும பராமரிப்பு தயாரிப்புகளை வழங்கும் பூமித்ரா என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த முயற்சியானது சுற்றுச்சூழல் உணர்வுள்ள நுகர்வோருக்கு ஒரு தனித்துவமான பிராண்டா இருக்கும், மேலும் இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவதன் பல நன்மைகளைப் ஊக்குவிப்பதாக, இயற்கை சார்ந்த வாழ்க்கைக்கான நுகர்வோரின் மனநிலையில் மாற்றத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது இந்நிறுவனம்.

பூமித்ரா சரும தயாரிப்புகள் , ஒவ்வொரு நவீன சருமத்திற்கும் ஏற்ற சரும பராமரிப்பு பொருட்களை, நம் பண்டைய கால அழகு பராமரிப்பை தழுவி, நவீன காலத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு வழங்குகிறது.

தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஒவ்வொருவரின் தோல் மற்றும் கூந்தலுக்கும் பொருந்தும் வகையில் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

சரும தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் முழுமையான ஆய்வுக்குப் பிறகு, மிகுந்த கவனத்துடன் கலவை செய்யப்படுகிறது.

பூமித்ராவின் தயாரிப்புகள் சுத்தமானவை, பாதுகாப்பானவை, சைவ பொருட்கள் மட்டுமே கொண்டு தயாரிக்கப்படுபவை. மேலும் இத்தயாரிப்ப்புகள் சுற்றுசூழல் சுழற்சியை கருத்தில் கொண்டு தயாரிக்கப்படுபவை.

தனது இந்த புதிய பயணத்தை பற்றி நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியதாவது…

“ஒரு குழந்தையாக, என் பாட்டி முதலான பெண்கள் அவர்களின் அழகை பராமரிக்க இயற்கை பொருட்களை நம்பியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன், அது இன்றுவரை என் மனதில் பசுமையாக இருக்கிறது.

பண்டைய இயற்கை பொருட்களின் செயல்திறன் எனது தோலுக்கு முழுமையான மற்றும் நீடித்த நன்மைகளை மட்டுமே வழங்கியது.

பூமித்ரா மூலம், இயற்கையான தோல் பராமரிப்பின் இந்த நன்மையை அனைவருக்கும் அளிக்க விரும்புகிறேன். இதன் மூலம் ஒவ்வொரு தோல் வகைக்கும் தனித்த்னமை மிக்க தயாரிப்புகள் கொண்டு அழகை பராமரிக்கலாம்.

இன்று வாடிக்கையாளர்கள் சுற்றுச்சூழல் சுகாதாரம் பற்றிய விழிப்புடன் இருக்கிறார்கள் மற்றும் தோல் பராமரிப்பில் தேர்வுகள் செய்யும் போது சுற்றுசூழல் நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள்.

பூமித்ரா அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு சரியான தோல் பராமரிப்பு தீர்வுகளை வழங்கும், அதே நேரத்தில் பெரிய எண்ணிக்கையிலான மக்களிடையே இயற்கை பொருட்களின் பயன்பாட்டை பரிந்துரைக்கும் புதிய தயாரிப்பாகவும் இது இருக்கும்

கீர்த்தி சுரேஷ் பூமித்ரா தயாரிப்புகள் குறித்து கூறியதாவது. “இயற்கையானது, நிலையானது மற்றும் சிறப்பான பயனை தருவது” என்றார்.

Actress Keerthy Suresh new venture as an entrpreneur with boomithra

சாந்தனுவின் இராவண கோட்டத்தில் நுழைந்த பாக்யராஜ்

சாந்தனுவின் இராவண கோட்டத்தில் நுழைந்த பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த பொதுமுடக்க கால கட்டம் திரைப்படத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், நடிகர் சாந்தனு பாக்யராஜ் கடந்த இரண்டு வருடங்களாக, Netflix உடைய பாவ கதைகள் ஆந்தாலஜி மற்றும் வானம் கொட்டட்டும், விஜய்யின் மாஸ்டர் போன்ற முக்கிய திரைப்படங்களில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததில், தனது சிறந்த நடிப்பு திறமைக்காக பாராட்டுகளைப் பெற்றார்.

தற்போது அவர் நம்பிக்கை தரும், பல வித்தியாசமான திரைப்படங்களில் அடுததடுத்து நடித்து வருகிறார் சாந்தனு.

இது அவரது திரை நட்சத்திர மதிப்பை பெருமளவில் கூட்டியுள்ளது.

அவரது அடுத்த பிரமாண்டமான திரைப்படங்களில் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்று தான் ‘இராவண கோட்டம்’.

லாக்டவுன் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நடிகர் சாந்தனு ராமநாதபுரத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.

அவரது பிறந்தநாளிலும் விடுப்பு எடுத்துகொள்ளாமல் அவர் நடித்து வர, அவரது தந்தையும் முன்னணி இயக்குநருமான பாக்யராஜ் அவர்கள், சாந்தனு நண்பர்களுடன் இணைந்து, (ஆகஸ்ட் 24, 2021) சாந்தனு பிறந்தநாளில் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

நடிகர் சாந்தனு ‘இராவண கோட்டம்’ படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினருடன், தனது தந்தை கொண்டு வந்த கேக்கை வெட்டி பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.

இயக்குநர் பாக்யராஜ் அவர்களின் வருகை இராவண கோட்டம் படத்தின் மொத்த படக்குழுவினரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.

இயக்குநர் விக்ரம் சுகுமாரன் எழுதி இயக்கும் ‘இராவண கோட்டம்’ படத்தினை Kannan Ravi Group சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் “முருங்கைக்காய் சிப்ஸ்” திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

மேலும் இயக்குநர் சிம்பு தேவனின் இயக்கத்தில் ‘கசட தபற’ திரைப்படம் ஆகஸ்ட் 27, 2021 SONYLIV தளத்தில் வெளியாகிறது.

Bhagyaraj’s surprise visit at Ravana Kottam shooting spot

கோலிவுட்டின் டாப் டைரக்டர்கள் இணையும் ‘ரெயின் ஆன் பிலிம்ஸ்’..; என்னமோ திட்டமிருக்கு.!

கோலிவுட்டின் டாப் டைரக்டர்கள் இணையும் ‘ரெயின் ஆன் பிலிம்ஸ்’..; என்னமோ திட்டமிருக்கு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் நடிகர்களைப் போல ஒரு சில இயக்குனர்களுக்கும் ரசிகர்கள் உண்டு.

மணிரத்னம், ஷங்கர், ஏஆர் முருகதாஸ், வெற்றிமாறன், கவுதம் மேனன், மிஷ்கின், சசி, வசந்தபாலன், லோகேஷ் கனகராஜ், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி ஆகியோருக்கு அதில் முக்கிய இடம் உண்டு.

இவர்கள் இணைந்து ‘ரெயின் ஆன் பிலிம்ஸ்’ என்ற ஒரு புதிய நிறுவனத்தை தொடங்கவுள்ளனர்.

இதில் ஒரு சில இயக்குனர்கள் ஏற்கெனவே தயாரிப்பு நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர்.

இதில் முதல் தயாரிப்பை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என கூறப்படுகிறது.

A production house has been launched by 10 directors named Rain on films

தடுப்பூசி செலுத்திய விவேக் மரணம்.; புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றது.

தடுப்பூசி செலுத்திய விவேக் மரணம்.; புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றது.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980கள் இறுதியில் தொடங்கி இந்தாண்டு 2021 வரையிலும் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக தன் நகைச்சுவையாலும் சிந்திக்க வைக்க காமெடியாலும் ரசிகர்களை கவர்ந்தவர் விவேக்.

இறப்பதற்கு முன் முதன்முறையாக கமலுடன் ‘இந்தியன் 2’ படத்தில் இணைந்து நடித்து இருந்தார். அந்த படம் இன்னும் முடிவடையவில்லை.

மேலும் லெஜண்ட் சரவணா ஸ்டோர் அருள் உடனும் ஒரு படத்திலும் நடித்துள்ளார். அந்த படமும் இன்னும் ரிலீசாகவில்லை.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் கருத்துகளை தீவிரமாக பின்பற்றி வந்தவர் இவர்.

ஒருமுறை அப்துல் கலாம் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஒரு கோடி மரம் நடுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து லட்சக்கணக்கான செடிகளை தன் வாழ்நாளில் நட்டுவந்தார் விவேக்.

கொரோனா தடுப்பூசி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.

பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடுவதில் அச்சம் இருந்த வகையில் சென்னை அரசு மருத்துவமனையில் ஏப்ரல் 15-ம் தேதி தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

ஆனால், அதற்கு அடுத்த நாளே மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கு அடுத்த நாள் உயிரிழந்தார்.

இது தடுப்பூசி அச்சத்தை மேலும் அதிகப்படுத்தியது.

எனவே விவேக்கின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தன.

அந்த சமயத்தில் ‘தடுப்பூசி போட்டதால் விவேக் இறந்துவிட்டார் என்பது தவறானது. விவேக்கின் மரணத்துக்கும் தடுப்பூசிக்கு எந்த தொடர்பும் இல்லை” என விளக்கம் அளித்தார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,

ஆனாலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்து இருந்தார்.

இந்த நிலையில், நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

The national human rights comission to investigate actor Vivek’s death

யூடியூபர்களை கலாய்க்கும் யோகி பாபு.; வீரப்பன் குடும்பத்தாரால் படத்தலைப்புக்கு வந்த வில்லங்கம்

யூடியூபர்களை கலாய்க்கும் யோகி பாபு.; வீரப்பன் குடும்பத்தாரால் படத்தலைப்புக்கு வந்த வில்லங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

’ராட்சசி’ பட இயக்குநர் சை கெளதம் ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் ஆகியோர் இணைந்து கதை எழுத, அறிமுக
இயக்குநர் யாசின் இயக்கும் ‘வீரப்பனின் கஜானா’ காடுகளின் பெருமையை திகைப்பு மற்றும் நகைச்சுவை கலந்து கூறும் படமாக உருவாகி வருகிறது.

இப்படத்தில் யோகி பாபு இதுவரை நடித்திராத வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

ஆம், யோகி பாபு முதல் முறையாக யூடியூபர்
வேடத்தில் நடிக்கிறார்.

எந்த வேடமாக இருந்தாலும், அதில் தனது டைமிங் காமெடி மூலம் ரசிகர்களை குலுங்க குலுங்க
சிரிக்க வைக்கும் யோகி பாபு, தற்போது டிரெண்டிங்கில் உள்ள யூடியூபர்களை கலாய்த்து தள்ளுவதற்கு தயராகி விட்டார்.

யோகி பாபு நடிக்கும் கதாப்பாத்திரம் ரசிகர்களுக்கு புதிதாக இருப்பதோடு, அவர்களிடம் கூடுதல் கவனம் பெரும் விதமாகவும்
அமைக்கப்பட்டுள்ளது.

மொட்டை ராஜேந்திரனும் இணைந்திருப்பதால், இவர்களுடைய கூட்டணியின் காமெடி காட்சிகள்
ரொம்ப தூக்கலாகவே வந்திருக்கிறதாம்.

இப்படம் பற்றி வெளியாகும் ஒவ்வொரு தகவல்களும் ரசிகர்களிடமும், திரையுலகினரிடமும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது படத்தில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று நடைபெற உள்ளது. ஆம், ‘வீரப்பனின் கஜானா’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும், இப்படத்தின் கதைக்கும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

முழுக்க முழுக்க சிறுவர்களை ஈர்க்கும் வகையிலும், பெரியவர்களை சிரிக்க வைக்கும் வகையிலும் காட்டையும், அதனைச் சார்ந்த விஷயங்களையும் சுவாரஸ்யமாக சொல்லும் வகையில் தான் இப்படத்தின் திரைக்கதையும், காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், படத்தின் தலைப்பு தொடர்பாக படக்குழுவினரை தொடர்பு கொண்டு பேசிய மறைந்த வீரப்பன் குடும்பத்தார், வீரப்பன் என்ற பெயரை பயன்படுத்த வேண்டாம், என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவர்களின் வேண்டுகோளை ஏற்று படக்குழுவினர் ‘வீரப்பனின் கஜானா’ என்ற தலைப்பை மாற்ற முடிவு செய்துள்ளனர்.

எனவே, இப்படத்தின் புதிய தலைப்பு, இதைவிட சுவாரஸ்யமான தலைப்பாக விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

காடுகள் என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். அதுவும் குழந்தைகள் என்றால், காடுகளைப் பற்றி கேட்கவும் காட்சிகளாக பார்க்கவும் உற்சாகமாகிவிடுவார்கள். அந்தக் காட்டின் பெருமையை பேன்டஸி, காமெடி, த்ரில்லர் கலந்து பொழுதுபோக்கிற்கு பஞ்சம் வைக்காமல் பேசும் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் குழந்தைகள் ரசிக்கும் அளவுக்கு காட்டு விலங்குகளையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.

விலங்கு நல அமைப்பின் வழிகாட்டின் பேரில் படத்தின் பயன்படுத்தப்பட்டிருக்கும் விலங்குகள் வரும் காட்சிகள் அனைத்தும் குழந்தைகளை குஷிப்படுத்தும் என்பது உறுதி.

ஃபோர் ஸ்கொயர்ஸ் ஸ்டுடியோஸ் பிரபாதீஸ் ஷாம்ஸ் தயாரிக்க, ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா என யூத் காம்போவுடன்,
யோகி பாபு மற்றும் மொட்டை ராஜேந்திரனின் காம்போவால் இப்படம் பெரியவர்கள், குழந்தைகள், பெண்கள் என அனைத்து
தரப்பினரும் பார்த்து மகிழும் ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்.

அடர்ந்த காடுகளிலும், காடுகள் சார்ந்த பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி, தளக்கனம்,
நாகர்கோவில் உள்ளிட்ட இயற்கை எழில் மிகுந்த பகுதியில் நடைபெற்றது.

தற்போது படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியுள்ளன. கலகலப்பான காமெடி
படமாக இருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாகவும் படம் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

குறிப்பாக படத்தின் வி.எஃப்.எக்ஸ் பணி படத்தில் முக்கிய பங்கு வகிப்பதோடு, பெரும் பாராட்டு பெறும் விதத்திலும் இருக்கும், என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Yogi Babu’s new film title gets changed

More Articles
Follows