அரசியல் கட்சி இல்லை…; ரஜினி முடிவுக்கு நன்றி தெரிவித்த விஜய்சேதுபதி

vijay sethupathi rajinikanthலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இவ்வாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி தமிழ், ஹிந்தி & தெலுங்கு மொழிகளில் தியேட்டர்களில் வெளியாகிறது.

இந்த நிலையில் ஒரு பிரபல பத்திரிகைக்கு இப்படம் பற்றி விஜய்சேதுபதி பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அரசியல் கட்சி இல்லை என ரஜினி கூறியிருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டு்ளது

அதற்கு விஜய்சேதுபதி பதிலளிக்கும் போது.. “அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வச்சிட்டார் ரஜினி.

அரசியலுக்கு வருவது அவர் விருப்பம். அதில் கருத்து சொல்ல எனக்கு உரிமை இல்லை.

ஆனால் ரொம்ப நாளா அவர் வருவாருன்னு எதிர்ப்பார்த்தோம். சினிமாவிலும் விழாக்களிலும் அந்த எதிர்பார்ப்புக்கு பதில் சொல்லிட்டு இருந்தார்.

அதுக்கெல்லாம் இப்போ முற்றுப்புள்ளி வச்சிட்டார். அதுக்கு என் நன்றி.”

இவ்வாறு விஜய்சேதுபதி பேசியுள்ளார்.

Vijay Sethupathi thanked Rajinikanth for his political decision

Overall Rating : Not available

Latest Post