கமல் அண்ணன் சந்திரஹாசனின் கடைசி படம்.; கை கொடுக்கும் விஜய்சேதுபதி

உலகநாயகன் கமல்ஹாசன் அண்ணன் சந்திரஹாசன் மற்றும் சாருஹாசன்.

சில வருடங்களுக்கு முன்பு சாருஹாசன் 90 வயதில் நாயகனாக நடித்த ‘தாதா 87′ படம் வெளியானது.

அதுபோல் மற்றொரு அண்ணன் சந்திரஹாசன் கடைசியாக நடித்த படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

தயாரிப்பாளருமான சந்திரஹாசன் கடந்த 2017ல் மார்ச் மாதத்தில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82.

அந்த வயதிலும் அவர் நாயகனாக நடித்த படம் தான் ‘அப்பத்தாவ ஆட்டய போட்டாங்க’.

இந்த வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்ட படத்தினை ஸ்டீபன் ரங்கராஜ் என்பவர் இயக்கியுள்ளார்.

சந்திரஹாசனுடன் இளவரசு, டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் சந்திரஹாசனுக்கு ஜோடியாக, நடிகர் விக்ராந்தின் அம்மா ஷீலா நடித்துள்ளார்.

இவர்களுடன், காத்தாடி ராமமூர்த்தி, ஷண்முகசுந்தரம், ஜெயராவ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பிரவீன் குமார்.என்.,
இசை – அஸ்வமித்ரா,
படத் தொகுப்பு – சி.எஸ்.பிரேம்,
பாடல்கள் – செல்வகுமார், கலை – ஏ.கே.முத்து, இணை தயாரிப்பு – செல்வகுமார், தயாரிப்பு – பிரான்சிஸ் ஆல்பர்ட், ஆண்டனி, வி.எஸ்.ராஜ்குமார், எழுத்து, இயக்கம் – என்.ஸ்டீபன் ரங்கராஜ்.

ஒரு முதியோர் இல்லத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

முதுமை காலத்தில் காதலை அனுபவிக்க எண்ணும் ஒரு ஜோடி.. அவர்களின் காதலை தடுக்க நினைக்கும் உறவுகள்.. காதலை காப்பாற்ற கைக்கொடுக்கும் நண்பர்கள்.. இறுதியில் காதல் ஜோடிகள் ஒன்று சேர்ந்தார்களா? என்பதை நகைச்சுவையாக புதுமுக இயக்குநரான ஸ்டிபன் ரங்கராஜ் சொல்லியிருக்கிறார்.

இப்படத்தின் போஸ்டர்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் நாளை 2021 ஏப்ரல் 4ஆம் தேதி காலை 11 மணிக்கு இப்பட டிரைலரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிடுகிறார்.

Vijay Sethupathi releases the trailer of Appaththava Aattaya Pottutanga

Overall Rating : Not available

Related News

Latest Post