நான் சினிமாவுக்கு வர காரணமே வீட்டுக் கடன்தான்..; பெப்சிக்கு 1 கோடி வழங்கிய விஜய்சேதுபதி

நான் சினிமாவுக்கு வர காரணமே வீட்டுக் கடன்தான்..; பெப்சிக்கு 1 கோடி வழங்கிய விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.

இதற்காக நடைபெற்ற விழாவில் பெஃப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி, செயலாளர் சபரீகீரிசன் மற்றும் 23 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் தயாரிப்பாளர் எஸ் தாணு, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பெஃப்ஸியின் தலைவர் ஆர்கே செல்வமணி உள்ளிட்ட பெஃப்ஸி நிர்வாகிகளிடம் வழங்கினார். முன்னதாக மேன் கைண்ட் ( Man Kind) என்ற நிறுவனம் சார்பில் முப்பத்தியோரு லட்ச ரூபாய் நிதி உதவியாக பெஃப்ஸி சம்மேளனத்தின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

பெஃப்ஸியின் தலைவர் ஆர்கே செல்வமணி பேசுகையில்,”இது ஒரு கனவு. ஒரு உதவி இயக்குனருக்கு திரைப்படம் இயக்க வேண்டும் என்பது எப்படி கனவாக இருக்கிறதோ.. அதேபோல் திரைப்படத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு கனவு.

நான் திரைத்துறைக்கு வருகை தந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. நான் திரைத்துறைக்கு வருகை தந்த காலகட்டத்தில் சென்னையில் குடியிருக்க வசதியில்லாமல் ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு வாடகை தர இயலாத நிலையில் தான் இருந்தேன். ஆனால் இன்று சென்னையில் சொந்தமாக வீடு, கார், மனைவி, மக்கள்.. என வசதியுடனும், மனநிறைவுடனும் வாழ்கிறேன். என்னுடைய இந்த நிலைமைக்கு நான் மட்டுமல்ல, என்னுடன் பணிபுரிந்த திரைப்பட தொழிலாளர்களும் தான் காரணம் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.

நான் ஒரு காட்சியை விவரித்தால்.. அதனை படமாக்க சாலக்குடி என்னுமிடத்தில் கிரேன் மற்றும் 40 கிலோ எடையுடைய மின்விளக்குகளைத் தூக்கிக்கொண்டு திரைப்பட தொழிலாளர்கள் உதவி செய்தனர். சாலக்குடி தற்போது மாற்றம் அடைந்திருக்கலாம். ஆனால் நான் படப்பிடிப்புக்கு செல்லும்போது அது ஒரு அடர்ந்த காடு.

அந்தத் தருணத்தில் 40 கிலோ எடையுடைய விளக்குகளை தூக்கிக்கொண்டு சென்று, அங்கு பொருத்தி எனக்கு உதவி செய்ததால்தான் வித்தியாசமான கோணங்களில் என்னால் காட்சிகளை படமாக்க முடிந்தது.

அதுபோன்ற தருணங்களில் கடுமையாக உழைக்கும் திரைப்படத் தொழிலாளர்களுக்கு ஏதேனும் ஒருவகையில் பிரதியுபகாரம் செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன். அனைவருக்கும் நலத்திட்டங்கள் செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன். அதன் போதுதான் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக பணியாற்றக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.

சென்னையைப் பொறுத்தவரை எங்களின் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது வீட்டு வாடகை தான். தொழிலாளர்களின் சம்பளத்தில் 50 சதவீதம் வாடகைக்கே செலவாகிறது. அதுவும் சென்னையின் மையப்பகுதியில் இல்லாமல் கூவம் கரையோரம் தான் வசிக்க வேண்டியதிருக்கிறது. ஒரே ஒரு அறை. அதிலேயே கழிப்பறை.. அதிலேயே சமையலறை… அதிலேயே படுக்கையறை.. அதிலேயே வரவேற்பறை.. இப்படி தான் எங்களின் காலம் செல்கிறது. இந்தநிலையில் தொழிலாளர்களின் மிகப்பெரிய தேவையாக இருப்பது சொந்த வீடு.

சென்னையில் வாடகை கொடுத்து விட்டு திரைப்பட தொழிலாளர்கள் வசிக்க இயலாது. திரைப்படத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவம் போன்ற பல வசதிகளை நல்ல மனம் படைத்த ஏ சி சண்முகம், டாக்டர் ஐசரி கணேஷ், எஸ் ஆர் எம் உள்ளிட்ட பல பெரியோர்கள் உதவி செய்கிறார்கள். இவர்களின் மூலம் ஆண்டுதோறும் நூறு மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வியும், இலவச மருத்துவ வசதியும் கிடைத்து வருகிறது. ஆனால் வீடு மட்டும் கனவாகவே இருந்து வருகிறது.

1995 ஆம் ஆண்டில் வேளச்சேரியில் எண்பத்தி ஐந்து ஏக்கர் நிலம் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்கு எங்களால் பல்வேறு காரணங்களால் வீடு கட்ட இயலவில்லை. அந்த இடத்தை மீண்டும் தமிழக அரசு எடுத்துக் கொண்டது. இன்றைக்கு அந்த இடத்தின் மதிப்பு 1,000 கோடி ரூபாய். அந்த நிலத்தின் மதிப்பு அன்றைய காலகட்டத்தில் எங்களுக்கு தெரியவில்லை.

அதன் பிறகு இயக்குனர் வி சி குகநாதன் மறைந்த இயக்குநர் ராமநாராயணன் இவர்களின் சீரிய முயற்சியால் 2010ஆம் ஆண்டில் 100 ஏக்கர் நிலம் திரைப்படத்துறைக்காக அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது. இதில் 65 ஏக்கர் பெப்சி தொழிலாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதிலும் 50 ஏக்கர் குடியிருப்புப் பகுதிகளாகவும், 15 ஏக்கர் படப்பிடிப்பு தளங்களாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இடத்தில் குடியிருப்புகள் கட்ட வேண்டும் என்பதற்காக கடந்த 10 ஆண்டுகளாக போராடிக்கொண்டே இருக்கிறோம். இன்று வரை நிறைவேறவில்லை .அது கனவாகவே தான் நீடிக்கிறது.

இந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பை நிர்மாணித்து தரும் கட்டிட கட்டுமான நிறுவனங்கள் எங்களிடம் முதல்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கும் பொழுது, அட்வான்ஸ் தொகை எவ்வளவு தருவீர்கள்? என கேட்டனர். அத்துடன் பணத்தை எந்த காலகட்டத்தில்… எவ்வளவு தருவீர்கள்? என்ற திட்டத்தையும் கேட்டனர். கட்டுமான பணியை தொடங்க வேண்டுமென்றால் திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதத்தை வழங்கவேண்டும் என்றும் சொன்னார்கள். இது இதன் திட்ட மதிப்பீடு 800 கோடி ரூபாய். இதன் 10 சதவீதம் என்பது 80 கோடி ரூபாய்.

நமக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிலத்தில் 9 ஆயிரம் குடியிருப்புகளை கட்ட இயலும். 9000 திரைப்பட தொழிலாளர்களின் கனவு நனவாகும். இதற்காக கடனுதவி பெறுவதற்கு வங்கிகளை அணுகும் போது எங்களிடம் அவர்கள் வருமான வரி சான்று உள்ளிட்ட பல விவரங்களை கேட்டனர்.

இங்கு யாரெல்லாம் வீடு கட்ட வேண்டும் என்று எண்ணுகிறார்களோ.. அவர்களிடம் வங்கி கேட்கும் எந்த விவரங்களும் இல்லை. இது தொடர்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் நாங்கள் பல்வேறு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம். எதிலும் வெற்றி கிடைக்கவில்லை.

இந்த தருணத்தில் கடவுளின் ஆசியாக.. தற்போதைய கட்டுமான நிறுவன உரிமையாளர் சுரேஷ்பாபு, உதவி இயக்குனர் ராஜசேகர் என்பவர் மூலம் அறிமுகமானார். அவர் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் மட்டுமல்ல, திரைப்படத் தயாரிப்பாளரும் கூட அவரை திரைப்பட சம்மேளனம் அலுவலகத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர் கட்டுமானத்தை நிறைவு செய்த பிறகு பணத்தை பெறுகிறேன் என்று கூறியதுடன், இதற்கான வங்கி கடனுதவி ஏற்பாடுகளையும் செய்கிறேன் என வாக்குறுதி அளித்தார்.

அப்போது அவரிடம் முன்பணமாக எதையும் வழங்க இயலாது என்றும், இரண்டு தளங்கள் எழுப்பப்பட்ட பிறகு எங்களுடைய உறுப்பினர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். அதன் பிறகு அவர்களிடமிருந்து வசூல் செய்து தருகிறோம் என தெரிவித்தோம். இந்த உறுதிமொழியை அவர் ஏற்றுக்கொண்டு, இங்கு வருகை தந்துள்ளார். அவருக்கு இந்த தருணத்தில் எங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிலையில் முதல் கட்டமாக ஆயிரம் பேருக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட திட்டமிட்ட போது, இதற்கு 20 கோடி ரூபாய் நிதி தேவைப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் இத்திட்டம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன், 200 லிருந்து 250 தொழிலாளர்கள் ஆர்வமுடன் இதில் இணைந்து பணம் கட்டத் தொடங்கினார். கொரோனா காலகட்டத்தில் அப்படியே ஸ்தம்பித்தது. பணம் செலுத்திய உறுப்பினர்கள், செலுத்திய பணத்தை திரும்ப பெற வாய்ப்பு இருக்கிறதா? என கேட்டார்கள். ஒரு கட்டத்தில் எனக்கும் கூட இந்த திட்டம் நிறைவேறாமல் போய்விடுமோ..! என்ற கவலை ஏற்பட்டது.

இந்த தருணத்தில் சிறிய நம்பிக்கை தரும் ஒளி தென்பட்டது. அவர்தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. ஒரு முறை அவரை தொடர்பு கொண்டு இது தொடர்பாக பேசியபோது, உங்களுக்கு எவ்வளவு நிதி உதவி வேண்டும்? எனக் கேட்டார். அதற்கான ஏற்பாடுகளை நான் செய்கிறேன் என வாக்குறுதி அளித்தார். அந்த தருணத்தில் எங்களுடைய இலக்கு 20 கோடி. இவரிடத்தில் 2 கோடி கேட்டாலும், அது அதிகம் என்று எண்ணி விடுவாரோ… என எண்ணி, உங்களால் எவ்வளவு கொடுக்க முடியுமோ அதை கொடுங்கள் என்று கேட்டோம். பிறகு 3 முதல் 5 கோடி ரூபாய் வரை தேவைப்படும் என விவரித்தோம்.

இதைக் கேட்டு அவர் கோபப்படவில்லை சலனப்படவில்லை. ஆறு மாத கால அவகாசம் தாருங்கள் அதன்பிறகு ஏதேனும் ஒரு தொகையை உதவியாக தருகிறேன் என சொன்னார். சொன்னது போல் ஓராண்டிற்குப் பிறகு என்னை தொடர்பு கொண்டு, ஒரு கோடி ரூபாயை தருகிறேன் என சொன்னார். இது போன்ற மனிதர்களால் தான் உலகம் தழைத்தோங்குகிறது. எந்த பிரதிபலனும் பாராமல் இவர் வழங்கும் இந்த நிதி உதவிக்காக பெப்சி தொழிலாளர்கள் என்றென்றைக்கும் அவருக்கு நன்றியுடன் இருப்பார்கள்.

எங்களின் குடியிருப்பு வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் மொத்தம் ஒன்பது தொகுதிகளாக கட்டப்பட இருக்கிறது . இதில் ஒரு தொகுதிக்கு 248 குடியிருப்புகள் இடம்பெறும். இதில் ஒரு குடியிருப்பு வளாகத்திற்கு ‘விஜயசேதுபதி டவர்’ என பெயரிட்டிருக்கிறோம். இந்த பெயர் சூட்டலுக்கு அவர் மறுப்பு தெரிவித்தாலும், அவருக்கு விருப்பம் இல்லை என்றாலும், நாங்கள் சூட்டி இருக்கிறோம். இந்த குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு, அவர்களின் ஆயுள் முழுவதும் விஜயசேதுபதி கடவுளாக தான் தெரிவார்.” என்றார்.

இவ்விழாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசுகையில்..

”பெஃப்ஸியின் தலைவரான ஆர்.கே. செல்வமணி திரைத்துறைக்கு அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார். ஆனால் திரைப்பட தொழிலாளர்களின் இன்றைய வாழ்வாதாரம் எப்படி இருக்கிறது? அவர்களின் அடிப்படைத் தேவை என்ன? அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் 50 சதவீதத்தை வாடகைக்காக செலவிடுகிறார்கள் என்ற மாதாந்திர கணக்கை ஆர்.கே செல்வமணி தற்போதுள்ள நிலையிலிருந்து சிந்தித்திருப்பது வியப்பாக இருக்கிறது.

அவர் படங்களை இயக்கியும் நீண்ட காலமாகிவிட்டது. இந்த நிலையில் தொழிலாளர்களுடன் பழகி, அவர்களின் இன்றைய வாழ்வியலை குறித்து அறிந்து கொண்டு, அவர்களின் அடிப்படை தேவையை புரிந்து கொண்டு, அதிலும் பிரதானமாக தேவையானது எது? என்பதை தெரிந்துகொண்டு, அதை எப்படி பூர்த்தி செய்வது என்பது குறித்து சிந்தித்து வருகிறார்.

எடப்பாடி கே பழனிச்சாமி முதல்வராக பணியாற்றிய போது நடைபெற்ற நிகழ்விலும் இது தொடர்பாக தெளிவாக எடுத்துரைத்தார். தற்போதும் கூட இதற்கான திட்டத்தை தெளிவாக முன்னெடுத்துக் கொண்டு செல்வதில் வல்லவராக இருக்கிறார். இதனால் அவர் மீது எனக்கு மரியாதை ஏற்பட்டிருக்கிறது. நம்முடைய தொழிலாளர் சம்மேளனத்திற்கு அருமையான தலைவர் கிடைத்திருக்கிறார் என்ற மகிழ்ச்சியும் உண்டு.. இதற்காக அவரை மனதார வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.

தெளிவான திட்டமிடலுடன் இத்தகைய பெரியதொரு திட்டத்தை முன்னெடுத்து செல்லும் ஆர் கே செல்வமணியின் செயல்பாடு உறுதியாக நிறைவேறும் என மனதார நம்புகிறேன்.

அவர் என்னிடம் இது தொடர்பாக வேண்டுகோள் விடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கும். என்னால் உதவி செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் இருந்து கொண்டே இருந்தது. உதவி செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. அதற்காக மன்னிப்பு கேட்பதற்காக தான் அவரை நான் தொடர்பு கொண்டேன்.

இந்த தருணத்தில் மேன் கைண்ட் மற்றும் காசா கிராண்ட் ஆகிய நிறுவனங்களின் விளம்பரத்தில் நடித்தேன். அதில் கிடைத்த ஊதியத்தை ஆர் கே செல்வமணியிடம் கொடுத்து விட வேண்டும் என முடிவு செய்தேன். ஏனெனில் ஒவ்வொரு முறையும் பணம் வரும் போதெல்லாம் ஏதேனும் கடன்காரர்களுக்கு கடனை திருப்பிக் கொடுப்பதற்கே சரியாகி விடுகிறது.

அதன் பிறகு, நாம் செய்வது ஏதோ பெரிய உதவி என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இந்தத் திட்டம் 800 கோடி மதிப்பிலானது. அதில் நான் கொடுப்பதெல்லாம் ஒரு சிறிய புள்ளி அவ்வளவுதான்.

இது ஒரு மிகப்பெரிய கனவு. மிகப் பெரிய முயற்சி. மிக சிறப்பாக தொடங்கி நல்லவிதமாக நிறைவடைய வேண்டும். நம்முடைய தொழிலாளர்கள் அனைவரும் அவருடன் இணைந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். குறுகிய காலத்திற்குள் இது நடைபெறும் என்றும், அதற்கு சரியான தலைவர் தான் இதற்கு பொறுப்பேற்றிருக்கிறார் என்றும் நான் முழுதாக முழுமனதுடன் நம்புகிறேன். வாழ்த்துக்கள்.

என்னுடைய உதவியை ஒரு கோடி ரூபாயுடன் நிறுத்திக் கொள்ளும் எண்ணமில்லை. தொடர்ந்து இந்த திட்டத்திற்கு என்னாலான உதவிகளை தொடர்ந்து செய்வேன்.

நான் திரைத்துறையில் வருவதற்கு முக்கியமான காரணம் என் தந்தையாரின் 10 லட்சம் கடன் தான். சிறிய வயதில் எனக்கு திரைப்படம் பார்க்கும் பழக்கமெல்லாம் இல்லை. துபாய்க்குச் சென்று சம்பாதித்து, கடனை அடைத்து விடலாம் என நினைத்தேன். அங்கு சென்று சம்பாதித்து, வட்டியை மட்டும் தான் கட்டினேன். அசலை கட்ட முடியவில்லை.

அதன் பிறகு வீட்டு வாடகை. இருபதாம் தேதி ஆனவுடன் எனக்குள் பதற்றம் தொற்றிக்கொள்ளும். அடுத்த மாதம் எப்படி வாடகை கொடுக்கப் போகிறோம் என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும்.

அதன்பிறகு எந்தவித அறிவிப்பும் இல்லாமல் வீட்டு உரிமையாளர்கள் திடீரென்று வீட்டு வாடகையை உயர்த்திவிடுவார்கள். என்ன கணக்கு என்று தெரியாது. விலைவாசி உயர்வை விட, வீட்டு வாடகை உயர்வு தான் அதிகம். இதுதான் பதற்றத்தை ஏற்படுத்தும்.

இதனால் எப்பாடுபட்டேனும் ஒரு சொந்த வீடு வாங்கிவிட வேண்டும். அப்பாவின் 10 லட்சம் கடனை அடைத்துவிட வேண்டும். இந்த இரண்டு விஷயத்திற்காக தான் சினிமாவின் நடிக்க தொடங்கினேன். இங்கு வந்தால் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்துடன் தான் நுழைந்தேன்.

இப்படி சினிமாவே தெரியாமல் தான் சினிமாவில் நடிக்க தொடங்கினேன். திட்டமிட்டு நடிக்க வரவில்லை. அப்படி ஒரு ஆசையும் இருந்ததில்லை.

வீட்டு வாடகை என்பது மிகப்பெரிய பாரம். சில இடங்களில் ஏதோ பாகிஸ்தானில் குடி இருக்கிறோம் என்ற உணர்வு வரும். வீட்டு உரிமையாளர்கள் விதிக்கும் நிபந்தனைகள் அப்படி இருக்கும். நான் நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் இடம் பெற்றது போல், துணி காய போடக்கூடாது. சுவற்றில் ஆணி அடிக்க கூடாது. இப்படிப் பலப்பல புதிய புதிய நிபந்தனைகள் இருக்கும். உறவினர்கள் வரக்கூடாது. வந்தால் உடனடியாகத் திரும்பி செல்ல வேண்டும். அவர்கள் இங்கு குளிக்க கூடாது.. என ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை விதிப்பார்கள்.

அதனால் சொந்த வீடு கனவு என்பது எல்லா தொழிலாளர்களுக்கும் இருக்கும் ஒரு கனவு. அந்தக் கனவு.. அந்த ஆசை.. இன்று நிறைவேறத் தொடங்குகிறது. கண்டிப்பாக இந்த கனவை என்னால் மட்டும் சுமக்க இயலாது. ஏனெனில் இதற்காக செல்ல வேண்டிய தூரம் அதிகம். அதனால் இந்த திட்டம் சிறப்பாக தொடங்கி, சிறப்பாக நிறைவடைய வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

ஆர்கே செல்வமணி கேட்ட 10 லட்ச ரூபாய் தொகையை அலுவலத்திற்கு சென்றவுடன் காசோலையாக தந்து விடுகிறேன்.

இந்த கனவுத் திட்டத்தை நிறைவேற்றும் கட்டுமான நிறுவன உரிமையாளர் சுரேஷ்பாபு அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடைய தொழிலாளர்களின் வீட்டினை தலைமுறை தலைமுறையாக உறுதியுடன் இருக்கும் வகையில் கட்டித் தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதற்காக எந்த சமரசத்தையும் மேற்கொள்ளாமல், தரமாக கட்டிடத்தை கட்டித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.

Vijay Sethupathi donated Rs 1 crore to FEFSI

ஆப்பிள் பாக்ஸில் ஏறி நின்று வில்லனுடன் நடித்த சிவகார்த்திகேயன்

ஆப்பிள் பாக்ஸில் ஏறி நின்று வில்லனுடன் நடித்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள “டாக்டர்” திரைப்படம், ரசிகர்களிடையேயும் வர்த்தக வட்டாரங்களிடையேயும் இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கபடும் படங்களில் ஒன்றாக உள்ளது. இப்படத்தை Sivakarthikeyan Productions உடன் இணைந்து, KJR Studios சார்பில் கோட்டபாடி J ராஜேஷ் தயாரித்துள்ளார். உலகமெங்கும் அக்டோபர் 9 ஆம் தேதி, இப்படம் வெளியாகவுள்ள நிலையில், பட வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில்

நடிகர் சுனில் ரெட்டி பேசியதாவது….

இந்தப்படத்தில் ரௌடியாக நடிக்கிறாயா என்று இயக்குநர் கேட்டார். நான் தயக்கத்தில் தான் ஓகே என்றேன். தாடி வளர்க்க சொன்னார் வளர்த்துக்கொண்டே இருந்தேன். படத்தில் மிக அழகாக என்னை பயன்படுத்தியுள்ளார்.
நான் பார்க்க தான் டெரர், உண்மையில் மிக பயந்த சுபாவம் தான். இந்தப்படம் ஒரு அழகான பொழுதுபோக்கு படம், அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் ரெடின் பேசியதாவது…

இந்தப்படம் மிக கலகலப்பாக இருந்தது. நான் நடித்த காட்சிகள் நிர்மல் கட் பண்ணிவிடுவாரோ என்ற பயம் இருந்தது. நெல்சன் என்னை வித்தியாசமாக காட்டியிருக்கிறார். படம் முழுக்க பிரமாண்ட செட் போட்டு தான் படம் எடுத்திருக்கிறோம். பாருங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை அர்ச்சனா பேசியதாவது…

இந்த மகிழ்ச்சியை தெரிவிக்க வார்த்தைகளே இல்லை. எனக்கும் என் மகளுக்கும் ஒரு சேஃபான உணர்வை தந்தார்கள். இந்தப்படத்தில் ஒரு குடும்பமாக தான் வேலை பார்த்தோம் மிக அழகான படமாக, அனைவருக்கும் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும். கண்டிப்பாக அனைவரும் தியேட்டரில் போய் படம் பாருங்கள் நன்றி.

நடிகர் வினய் பேசியதாவது….

நெல்சன், சிவா உங்கள் இருவருக்கும் நன்றி. இந்த 15 வருடத்தில் 15 படங்கள் பன்ணியிருக்கிறேன். அனைவருடனும் இன்றும் நல்ல உறவு இருக்கிறது. இந்தப்படத்தில் வாய்ப்பு கிடைத்ததே ஒரு கனவு நிறைவேறியது போலவே இருந்தது. இந்தப்படம் முழுதுமே ஒரு இனிமையான பயணமாக இருந்தது. அனைவருக்கும் இப்படம் பிடிக்கும். உங்களுடன் மீண்டும் இணைந்து பணிபுரிய காத்திருக்கிறேன் நன்றி.

நாயகி பிரியங்கா அருள் மோகன் பேசியதாவது ….
இப்படம் எனக்கு கிடைத்ததை ஆசிர்வாதமாகத்தான் பார்க்கிறேன். என்னுடைய அறிமுக படமே பெரிய படமாக கிடைத்தது மகிழ்ச்சி. SK நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என வளர்ந்துகொண்டே போகிறார் அவருக்கு நன்றி. என்னை அறிமுகப்படுத்திய இயக்குநருக்கு நன்றி. அனிருத் இசை அட்டாகாசமாக இருகிறது. அருண் எனக்கு அண்ணாவாக நடித்தார் உண்மையிலும் அண்ணாவாக இருந்தார். இப்படம் மிகப்பெரிய புகழை பெற்று தந்திருக்கிறது. மிகப்பெரிய சந்தோஷத்தை தந்துள்ளது. படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் நன்றி.

இயக்குநர் நெல்சன் பேசியதாவது….
முதலில் சிவகார்த்திகேயன் வழக்கமாக அவரது படங்கள் போல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று அவரிடம் பேசி தான் இப்படம் எடுக்கலாம் என முடிவு செய்தோம். அவரிடம் இரண்டு ஐடியா சொன்னேன் இரண்டுமே நல்லாருக்கு நீங்களே முடிவு பண்ணுங்கள் என்றார். என் கடமை அதிகமாகிவிட்டது. படம் எடுக்க ஆரம்பித்த இரண்டு வாரத்தில் இது நன்றாக வந்துவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. படம் நினைத்தது போலவே ஒரு நல்ல படமாக வந்துள்ளது. சிவகார்த்திகேயனே படத்தயாரிப்பாளர் என்பதால், அது எனக்கு உதவியாக இருந்தது. என்னை கேள்வி கேட்காமல் முழு சுதந்திரம் இருந்தது. விஜய் கார்த்திக் ஒவ்வொரு ஷாட்டுக்கும் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார். ஆனால் நினைத்ததை கொண்டு வந்து விடுவார். முழுப்படத்தையும் எடிட் பண்ணியதற்குப்புறம், எனக்கே தெரியாமல் எடிட் செய்துவிட்டார் நிர்மல். அந்தளவு படத்துடன் ஒன்றியிருப்பார். ப்ரியங்கா அவரது முழுத்திறமை இந்தப்படத்தில் வெளிப்படவில்லை, அவருடன் மீண்டும் படங்கள் செய்வேன். வினய் பார்த்து பழகும் போது அப்பாவியாக இருந்தார் ஆனால் படத்தில் வில்லனாக அசத்தியுள்ளார். அருணை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். அவரை எல்லாப்படத்திலும் வைத்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன் அவர் இல்லாதது மிகப்பெரும் வருத்தம். அனிருத்தை வைத்து தான் திரைக்கதையே எழுதுவேன் அவர் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம். படமும் நினைத்தது போல அழகாக வந்திருக்கிறது. படம் பாருங்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் பேசியதாவது

நான் ஒரு படத்திற்கு நோ சொல்லியிருக்கிறேன் அதையும் தாண்டி இந்தப்படத்திற்கு அழைத்ததற்கு சிவகார்த்திகேயனுக்கு நன்றி. படம் மிகப்பெரிய பொழுதுபோக்கு படமாக இருக்கும். நிறைய காட்சிகளில் நான் சிரித்து, கேமரா ஆடி, டேக் கட்டாகியிருக்கிறது. அந்த அளவு ரசிகர்களை இந்தப்படம் சிரிக்க வைக்கும்.

நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது….

இரண்டு வருடங்கள் கழித்து அனைவரையும் சந்தித்தது மகிழ்ச்சி. எனக்கு பாட்டு எழுதும் நம்பிக்கை எல்லாம் இருந்தது இல்லை. நெல்சன் தான் அவரது முதல் படத்தில் ஆரம்பித்து வைத்தார். இப்படத்தில் செல்லம்மா பாடல் எளிதாக இருந்தது. ஆனால் ஓ பேபி பாடல் கொஞ்சம் கஷ்டமாக பயமாக இருந்தது. அதிலும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மக்களுக்கு பிடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப்படத்தில் எனக்கு டயாலாக்கே இல்லை. மொத்தமாகவே ஒரு பத்து டயலாக் தான். எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும் போது நான் படத்தில் பேசாமல் இருந்தது கஷ்டமாக இருந்தது. ஆனால் நெல்சன் எப்படி என்னை இப்படி யோசித்தார் என்று தோன்றியது. வினய் உன்னாலே உன்னாலே படம் பார்த்ததில் இருந்து பிடிக்கும். நான் உயரமாக இருக்கிறேன் என்று நினைத்து கொண்டிருந்தேன் ஆனால் வினய் முன்னால் நடிக்கும் போது எனக்கே ஆப்பிள் பாக்ஸ் போட்டு தான் நின்றேன். மனுஷன் மிகப்பெரிய உயரமாக இருந்தார். அவரது குரலும் பாடியும் படத்திற்கு மிகப்பெரிய பலம். ப்ரியங்காவிற்கு தமிழ் தெரிந்தது மிகப்பெரிய உதவியாக இருந்தது. தமிழ் தெரிந்த நடிகையுடன் நடிக்கும் போது, படப்பிடிப்பிலேயே காட்சி எப்படி வரும் என்ற தெளிவு இருக்கும். ரெடின், யோகிபாபு இப்படத்தில் கலக்கியுள்ளனர். அருண் ப்ரோ அவர் இப்படத்தில் செய்தது காலாகாலத்திற்கும் பேசப்படும், அவரை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு படத்தில் அட்டகாசமாக இருக்கும், தியேட்டரில் பார்த்தால் உங்களுக்கு புரியும். அனிருத் தான் இந்தப்படத்தை அறிவித்ததிலிருந்தே, இதற்கு அடையாளமாக இருந்தவரே அவர்தான். இந்தப்படம் நடித்த அனைவருக்குமே முக்கியமான படமாக இருக்கும். இந்தப்படம் எல்லாருக்கும் பிடிக்கும் ஒரு படமாக இருக்கும் நன்றி.

நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கியுள்ள “டாக்டர்” திரைப்படத்தை , சிவகார்த்திகேயனின் Sivakarthikeyan Productions உடன் இணைந்து, KJR Studios சார்பில் கோட்டபாடி J ராஜேஷ் தயாரிக்கிறார். சிவகார்த்திகேயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் செய்துள்ளார். R. நிர்மல் எடிட்டிங் செய்துள்ளார். அக்டோபர் 9 ந்தேதி இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Sivakarthikeyan speech at Doctor press meet

சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து…; மாமனாருக்கு ரசிகர்கள் வாழ்த்து

சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து…; மாமனாருக்கு ரசிகர்கள் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர்.

இவர்களின் திருமண வாழ்க்கை 4 ஆண்டுகள் கூட நீடிக்காத நிலையில் தன் கணவரை பிரிவதாக சமூக வலைதளத்தில் அறிவித்தார் நடிகை சமந்தா.

இது இவர்களின் தென்னிந்திய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விவாகரத்து பற்றி நாக சைதன்யாவின் தந்தையும் பிரபல தெலுங்கு நடிகருமான நாகர்ஜுனா ட்வீட் செய்தார்.

அதில்…

சாம் மற்றும் சைய் இடையே நடந்தது துரதிர்ஷ்டவசமானது. கணவன், மனைவி இடையே நடந்தது பர்சனலானது.

சாமுடன் செலவிட்ட நேரத்தை என் குடும்பம் என்றும் மறக்காது. அவர் எப்பொழுதுமே எங்களுக்கு நெருக்கமானவர் தான். கடவுள் அவர்களுக்கு தெம்பை அளிக்கட்டும் என ட்வீட் செய்திருந்தார்.

மருமகள் சமந்தா பிரிந்து சென்ற போதிலும் அவரை உயர்வாக பேசும் (மாமனார்) உங்கள் மனசு தான் அண்ணய்யா கடவுள் என நாகர்ஜுனாவை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

South indian fans reaction on Chay – Sam divorce

30 வருடங்கள் கடந்தும் கலையுலகில் கலக்கும் நடிகர் விச்சு விஸ்வநாத்

30 வருடங்கள் கடந்தும் கலையுலகில் கலக்கும் நடிகர் விச்சு விஸ்வநாத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நவரசமான நடிப்புடன் நகைச்சுவை கலந்து நடித்த பல படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விச்சு விஸ்வநாத்.

குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவை நடிகராகவும் பல படங்களில் நடித்தவர் இவர்.

30 வருடங்களுக்கு மேலாக இந்த திரையுலகில் ஒரு நடிகராக நிலை நிறுத்தி கொண்டுள்ள நடிகர் விச்சு விஸ்வநாத் கூறுகையில்…

“30 ஆண்டுகளுக்கும் மேலாக பல படங்களில் நடித்துள்ளேன்.

நாம் சந்தோஷமாக இருந்தால் அந்த உணர்வு நம்மை சுற்றி உள்ளவர்களிடம் அதனுடைய ஆதிக்கத்தை செலுத்தும் என்று நம்புபவன் நான்.

அதனால் தானோ என்னவோ நான் குணசித்திரம் கலந்த நகைச்சுவை வேடங்களை தேர்ந்தெடுக்கிறேன்.

தற்போது இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரண்மனை 3’ படத்தில் நடித்துள்ளேன். அவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை 2 படத்திலும் நடித்துள்ளேன்.

அரண்மனையின் முதல் இரண்டு படங்களிலும் வித்தியாசமான தோற்றித்தில் நடித்ததை தொடர்ந்து தற்போது அரண்மனை 3 படத்திலும் அதே போல் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளேன்.

எனக்கு இந்த வாய்ப்பை அளித்த இயக்குனர் சுந்தர்.C அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி ‘அரண்மனை 3’ படம் அமைந்துள்ளது.” என்றார்.

Actor Vichu Viswanath completes 30 years in cine industry

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் ‘உடன் பிறப்பே’ பட ட்ரைலர் ரிலீஸ் அப்டேட்

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் ‘உடன் பிறப்பே’ பட ட்ரைலர் ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகி வரும் நான்கு திரைப்படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

அதன்படி ’ஜெய்பீம்’, ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’, ‘ உடன் பிறப்பே‘, ‘ ஓ மை டாக் ‘ உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் பெற்றுள்ளது.

இதில் ஒன்றான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம் ஓடிடியில் ரிலீசாகிவிட்டது.

சூர்யா நடித்துள்ள ‘ஜெய்பீம்’ படம் தீபாவளி விருந்தாக நவம்பர் 2ல் வெளியாகிறது.

மற்றொரு படமான ‘உடன்பிறப்பு’ படம் ஜோதிகாவின் 50 வது படமாக தயாராகி உள்ளது.

இந்தப் படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் ஜோதிகா நடித்துள்ளார்.

மாதங்கியும், வைரவனும் உடன்பிறப்புகள். மாதங்கியின் கணவன் சற்குணத்தால் இவர்கள் உறவில் விரிசல் விழுகிறது.

அண்ணனா,? கணவனா? என்ற இரு துருவங்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு தவிப்பவராக மாதங்கியின் கேரக்டர் எழுதப்பட்டுள்ளது.

இதில் மாதங்கியாக ஜோதிகாவும், உடன்பிறந்த சகோதரன் வைரவனாக சசிகுமாரும், மாதங்கியின் கணவன் சற்குணமாக சமுத்திரக்கனியும் நடித்துள்ளனர்.

முக்கிய வேடத்தில் கலையரசன் மற்றும் சூரி நடித்துள்ளனர்.

இமான் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் படம் தயாராகி உள்ளது. சரவணன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

இவர் 2015ல் வெளியான கத்துக்குட்டி படத்தை இயக்கியவர்.

வருகிற அக்டோபர் 14ல் ஆயுதபூஜை ஸ்பெஷலாக அமேசானில் ‘உடன்பிறப்பு’ வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று அக்டோபர் 4ஆம் தேதி மாலை 5 மணிக்கு இப்பட ட்ரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

உடன் பிறப்பு…
தயாரிப்பு – 2 டி என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – இரா.சரவணன்
இசை – இமான்
நடிப்பு – சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, கலையரசன், சூரி மற்றும் பலர்.
பிஆர்ஓ – யுவராஜ்

The trailer of Udan Pirappe is dropping today at 5PM

‘சீன் நம்பர் 62’ படத்தின் மூலம் அறிமுகமாகும் மலையாள பாடகி நஞ்சியம்மா

‘சீன் நம்பர் 62’ படத்தின் மூலம் அறிமுகமாகும் மலையாள பாடகி நஞ்சியம்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல மலையாள பாடகி நஞ்சியம்மா ‘சீன் நம்பர் 62’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

‘ஐயப்பனும் கோஷியும்’ படத்தில் அவர் பாடிய ‘கலக்காத…’ பாடல் மிகப்பெரிய வெற்றி அடைந்து யூடியூபில் 4 கோடி பார்வைகளை நெருங்கி வருகிறது.

‘சீன் நம்பர் 62’ திரைப்படத்திற்காக உயிரோட்டமுள்ள பாடல் ஒன்றை அவர் பாடியுள்ளார்.

மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த பாடல் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பிக் பாஸ் புகழ் ஆஜீத் காலிக்கும் இப்படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார்.

திரைப்படத்துறை குறித்து தமிழில் ஏற்கனவே படங்கள் வெளியாகி உள்ள போதிலும், இது வரை யாரும் தொடாத ஒரு கதைக்களத்தில் உருவாகி வருகிறது, திகில் கலந்த கிரைம் திரில்லரான ‘சீன் நம்பர் 62’.

‘ஆதாம்’ திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் தடம் பதித்த ‘ஆதாம்’ சமரின் இயக்கத்தில் வளர்ந்து வரும் ‘சீன் நம்பர் 62’ திரைப்படத்தை வேணு ஜி ராமின் நவமுகுந்தா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

பவன்புத்ரா பிலிம் புரொடக்ஷனின் நிகில் ஆர் இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் ஆவார்.

பௌதிஷ், அமல்தேவ், கோகிலா கோபால், ஜாய்ஸ் எலிசபெத், வி ஜே வைத்தி, ஐஸ்வர்யா நாயர் மற்றும் ராகந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சென்னை, புதுச்சேரி, கொடைக்கானல் மற்றும் பொள்ளாச்சியில் ‘சீன் நம்பர் 62’ படமாக்கப்பட்டுள்ளது.

தமிழில் ‘இரட்டையர்’ மற்றும் தெலுங்கில் ‘ஓய் இடியட்’ ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜிகேவி, ‘சீன் நம்பர் 62’-க்கு இசை அமைக்கிறார்.

விஜய் வெங்கட் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘சதுரங்க வேட்டை’, ‘பாம்பு சட்டை’, ‘ஜோதி’ மற்றும் ‘டைரி’ ஆகிய திரைப்படங்களின் படத்தொகுப்பாளரான எஸ் ஆர் ராஜா சேதுபதி ‘சீன் நம்பர் 62’-ன் எடிட்டர் ஆவார்.

பரப்பரப்பான சண்டைக் காட்சிகளை ‘மிரட்டல்’ செல்வா மற்றும் ஹைப்ரிட் களரி அர்ஜுன் வடிவமைத்துள்ளனர். கலை இயக்கத்தை டி கே தினேஷ்குமார் கையாண்டுள்ளார்.

அன்சாரி இஸ்மாக் ஒப்பனையையும், சோஹிப் ஜயி உடைகளையும், விளம்பர வடிவமைப்பை சரோவ்வும் கையாண்டுள்ளனர்.

ரஜீஷ் பதம்குளம் மற்றும் ரினீஷ் திட்ட வடிவமைப்பாளராக பொறுப்பேற்றுள்ளனர். மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனிக்கிறார்.

ரசிகர்களை கவரும் பல்வேறு அம்சங்களோடு ‘சீன் நம்பர் 62’ விரைவில் வெளியாகவுள்ளது.

Malayali singer Nanjiyamma sung one song in scene no 62

More Articles
Follows