‘நடிகைகளுக்கு புதிய சங்கம்…’ வரலட்சுமி சரத்குமார் அதிரடி

‘நடிகைகளுக்கு புதிய சங்கம்…’ வரலட்சுமி சரத்குமார் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Varalakshmi Sarathkumarநடிகை பாவனா கடத்தப்பட்டு, பாலியல் தொல்லை செய்யப்பட்டது தொடர்பாக அந்த குற்றவாளிகளை கேரளா போலீசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து நடிகை காதல் சந்தியாவும் தனக்கு இப்பிரச்சினை இருந்தது என பேட்டியளித்தார்.

இதனிடையில் பாவனாவுக்கு ஆதரவாக தன் கருத்தை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

அதில் கடுமையாக சாடியிருந்தார்.

varu sarathkumar‏Verified account @varusarath Feb 19
What the hell is going on??!!! #WomenSafety has become a joke.. hang those bloody b@st@rds.. strength to #bhavna … they will be punished

இதனைத் தொடர்ந்து தற்போது பெண்களுக்காகவும் நடிகைகளுக்காகவும் ஒரு சங்கம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

வருகிற மார்ச் 8ஆம் தேதி இந்த சங்கம் தொடங்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அன்றைய தினத்தில், Save Sakthi என்ற பெயரில் திட்டத்தை தொடங்கி அன்றைய நாள் முழுவதும் தனக்கு ஆதரவளிப்பவர்கள் கையெழுத்து வாங்க திட்டமிட்டு இருக்கிறாராம்.

Varalakshmi Sarathkumar going to start Actress Association on Womens day

ஓரிரு தினங்களுக்கு முன்பு பெண்கள் பாதுகாப்பு குறித்து தன் ட்விட்டரில் வரலட்சுமி பதிவிட்ட கடிதம் இதோ…

varu letter

 

 

விவசாயிகளுக்காக குரல் கொடுக்க நெடுவாசல் செல்லும் விஷால்

விவசாயிகளுக்காக குரல் கொடுக்க நெடுவாசல் செல்லும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishalதமிழகம் என்ன பாவம் செய்தததோ? என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து ஒவ்வொரு பிரச்சினைகளாக சந்தித்துக் கொண்டே இருக்கிறது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டம் வரை தமிழகம் பரபரப்பாக இருக்கிறது.

தற்போது ஹைட்ரோகார்பன் என்னும் மீத்தேன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

இதற்கு ஆதரவளிக்க இன்று நெடுவாசல் சென்று விவசாயிகளுக்காக குரல் கொடுக்கவிருக்கிறார் விஷால்.

இதனை நேற்று நடைபெற்ற ‘ஒரு கனவு போல’ இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.

அப்போது பேசியபோது, அரசியல்வாதிகளுக்கு நான் இதை முக்கிய வேண்டுகோளாக முன்வைக்கிறேன். ‘விவசாயிகளைக் காப்பாற்றுங்கள், நெடுவாசலைக் காப்பாற்றுங்கள். எனவும் தெரிவித்தார்.

இவருடன் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி மற்றும் பேரரசு ஆகியோரும் செல்லக்கூடும் எனத் தெரிகிறது.

Vishal going to Neduvasal to support Tamilnadu farmers in HydroCarbon issue

மார்ச் 3ல்… தமிழர்களுக்கு ரஜினியும் கன்னடர்களுக்கு அஜித்தும் விருந்து

மார்ச் 3ல்… தமிழர்களுக்கு ரஜினியும் கன்னடர்களுக்கு அஜித்தும் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Ajithதிரையுலகில் ரஜினி மற்றும் அஜித் படங்களுக்கு மாபெரும் எதிர்பார்ப்பு எப்போதும் இருந்து வருகிறது.

இந்நிலையில் கிட்டதட்ட 22 வருடங்களுக்கு பிறகு, ரஜினியின் பாட்ஷா தமிழகத்தில் மார்ச் 3ஆம் தேதி ரீரிலீஸ் ஆகிறது.

அதுபோல் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் கன்னட டப்பிங் வருகிற மார்ச் 3ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

கௌதம் மேனன் இயக்கிய இப்படம் கன்னடத்தில் சத்யதேவ் ஐபிஎஸ் என்ற பெயரில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் தமிழக மற்றும் கன்னட ரசிகர்கள், தங்கள் அபிமான நடிகர்களின் பட ரிலீசை கொண்டாட இருக்கிறார்கள்.

Rajini and Ajith movies release treat on 3rd March 2017

baasha rajini ajith

 

ரஜினி பாராட்டு; எமன் வசூல்… விஜய் ஆண்டனி மகிழ்ச்சி

ரஜினி பாராட்டு; எமன் வசூல்… விஜய் ஆண்டனி மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and vijay antonyபிச்சைக்காரன், சைத்தான் படங்களை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான எமன் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

முற்றிலும் அரசியல் விருந்தான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னையில் ஒரு கோடி வசூலை கடந்துள்ள இப்படம் தமிழகத்தில் மூன்றே நாட்களில் 8 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.

‘எமன்’ படத்தின் வரவேற்பை அறிந்த ரஜினி படத்தை பார்த்தாராம்.

அவரும் படக்குழுவினருக்கு தன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம் வசூல் வேட்டை மற்றொரு பக்கம் ரஜினியின் பாராட்டு என இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறாராம் விஜய் ஆண்டனி.

சாந்தனுவின் ‘முப்பரிமாணம்’ படத்தை பார்த்த சுசீந்திரன் கடிதம்

சாந்தனுவின் ‘முப்பரிமாணம்’ படத்தை பார்த்த சுசீந்திரன் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

_Suseenthiranசாந்தனு, ஸ்ருஷ்டி டாங்கே இணைந்து நடித்துள்ள படம் முப்பரிமாணம்.

அதிரூபன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிவி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

வருகிற மார்ச் 3ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சினிமா துறையைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்பு காட்சியை திரையிட்டுள்ளனர்.

அப்படத்தை பார்த்த இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளதாவது…

படத்தின் இடைவேளை வரை இதுவும் பொழுதுபோக்கு படம்தான் என்றுதான் நினைத்தேன்.

ஆனால் இடைவேளைக்கு பிறகு இப்படம் முற்றிலும் வேறு ஒரு கதைகளத்தில் இருந்தது.

சாந்தனு மற்றும் ஸ்ருஷ்டியின் நடிப்பு அருமை என கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

Suseenthiran letter about Shanthanus Mupparimanam movie

அந்த கடிதம்…

susee letter

ரஜினியை எப்படி இயக்க வெங்கட் பிரபுக்கு ஆசை தெரியுமா?

ரஜினியை எப்படி இயக்க வெங்கட் பிரபுக்கு ஆசை தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Venkat Prabhuசினிமாவின் எந்த துறையை சேர்ந்தவராக இருந்தாலும், அவர்களுக்கு ரஜினியுடன் ஒரு படத்திலாவது இணைந்து பணிபுரிய வேண்டும் என்பதே கனவாக இருக்கும்.

அதுபோன்ற ஆசை இயக்குனர் வெங்கட் பிரபுவையும் விட்டுவைக்கவில்லை.

அவரின் சமீபத்திய பேட்டியில் அதுபற்றி தெரிவித்துள்ளார்.

அதில்… “ரஜினிக்கு இயல்பாகவே காமெடி சென்ஸ் அதிகம். அவர் ஒரு மாஸ் ஹீரோ என்றாலும் காமெடியிலும் கலக்குவார்.

எனவே எனக்கு ரஜினியை முழுக்க முழுக்க காமெடி செய்ய வைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதற்கு ரஜினி சம்மதிப்பாரா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Venkat Prabhu wish to direct Rajinikanth

More Articles
Follows