‘வள்ளி மயில்’ படம் இந்திய சினிமாவில் முக்கியமானதாக இருக்கும்.; சுசீந்திரன் – விஜய்ஆண்டனி நம்பிக்கை

‘வள்ளி மயில்’ படம் இந்திய சினிமாவில் முக்கியமானதாக இருக்கும்.; சுசீந்திரன் – விஜய்ஆண்டனி நம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் “வள்ளிமயில்”.

80களின் நாடகக்கலை பின்னணியில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில்…

வசனகர்த்தா பாஸ்கர் சக்தி கூறியதாவது..,
குறுகிய காலத்தில் கணிசமான படங்களை கொடுத்து, வெற்றியை கண்டவர் சுசீந்திரன்.

எனது நாவலை படித்துவிட்டு, அதை அழகர்சாமியின் குதிரை என்ற படமாக மாற்றினார். வள்ளி மயில் திரைக்கதையை வெகுநாட்களாக பேசிகொண்டிருந்தோம். கடுமையான உழைப்பில் உருவான கதை ‘ வள்ளி மயில்’.

இந்த திரைப்படம் திரைத்துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது உங்களுக்கு நிச்சயம் பிடித்தபடமாக இருக்கும்.

விஜய்ஆண்டனி-யின் ‘வள்ளி மயிலை’ திண்டுக்கல்லில் தொடங்கிய சுசீந்திரன்

ஆடை வடிவமைப்பாளர் ராதிகா கூறியதாவது..

இந்த படம் 80 காலகட்டத்தில் இருப்பதால் எனக்கு அதிக வேலை இருந்தது. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளோம், பெரும் உழைப்பை கொடுத்துள்ளோம். இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை. நன்றி

கலை இயக்குனர் உதயகுமார் கூறியதாவது..

பீரியட் படம் பண்ணுவது சவாலான விஷயமாக இருக்கும். ஒவ்வொரு கலை இயக்குனருக்கும் பீரியட் படம் பண்ண வேண்டுமென்பது கனவு. எனக்கு இந்த படத்தில் அது நிறைவேறியுள்ளது. இந்த படத்தில் குழுவாக சேர்ந்து பெரும் உழைப்பை கொடுத்துள்ளோம். படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.

பாடலாசிரியர் விவேகா கூறியதாவது..

இந்த படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளேன். விஜய் ஆண்டனி சார் கதாநாயகன் ஆன பிறகு, நான் அவருக்கு எழுதும் முதல் பாடல். இந்த படத்தின் பாடல்கள் பிரமாதமாக வரும். இந்த படத்தில் பணியாற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகள்.

நடிகை கனி கூறியதாவது..

நிறைய நுணுக்கமான விஷயங்களை திரையில் கூறுபவர் சுசீந்திரன். எனக்கு பீரியட் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் தான் இந்த படத்தில் நடிக்க ஒத்துகொண்டேன். எனக்கு வாய்ப்பளித்த படக்குழுவிற்கு நன்றி.

நடிகர் தயாளன் கூறியதாவது..

இயக்குனர் உடன் பணிபுரிந்த அனுபவம், எங்களுக்கு பெரிய பொறுப்புணர்வை கொடுத்தது. அவருடைய அர்பணிப்பு எங்களையும் ஊக்கபடுத்தியது. படம் கண்டிப்பாக பிடித்தமான ஒன்றாக இருக்கும். படத்திற்கு உங்கள் ஆதரவை தர வேண்டும்.

நடிகை அறந்தாங்கி நிஷா கூறியதாவது..

சில படங்கள் பண்ணி இருந்தாலும், காமெடி கதாபாத்திரத்தில் என்னை வெளிப்படுத்திக்கொள்ள, எனக்கு பெரிய வாய்ப்பாக இந்த படம் அமைந்துள்ளது. கலைஞர்களின் பரிந்துரைகளுக்கு மரியாதை கொடுப்பவர் இயக்குநர். எனக்கு அனைவரையும் ஈர்க்கும் ஒரு கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார்.

இந்த படம் பெரிய வெற்றியை கொடுக்கும். விஜய் ஆண்டனி சார் மற்ற கலைஞர்களை பாராட்டும் குணம் கொண்டவர். தமிழ் சினிமாவிற்கு ஃபரியா எனும் சிறந்த நடிகை இந்த படத்தின் மூலம் கிடைத்துள்ளார்.

வள்ளி மயில் திரைப்படம் நாடக கலைஞர்களை போற்றும் ஒரு படமாக இருக்கும். இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்.

நடிகை ஃபரியா அப்துல்லா கூறியதாவது..

நான் தியேட்டர் கலைஞராக தான் என் பயணத்தை தொடங்கினேன். சுசீந்திரன் உடைய பொறுமை தான், இந்த கதை சிறப்பாக உருவாக காரணம். அவர் என்னிடம் கதை சொல்லும்போதே மியூசிக் எல்லாம் போட்டுக்காட்டினார், நான் இயக்குநரின் பார்வையை முழுமையாக நம்பி தான் இந்த படத்தில் நடிக்க ஒத்துகொண்டுள்ளேன். இந்த கதை நிச்சயம் எல்லோருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை

இயக்குநர் சுசீந்திரன் கூறியதாவது..,

இந்த படத்தின் கதையை நான்கு வருடமாக நான் எழுதி வருகிறேன். இந்த படம் நிச்சயமாக இந்திய சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும். இது எல்லோரும் எளிதில் ரிலேட் செய்துகொள்ளும் படமாக இருக்கும். இந்த படம் நிறைய உழைப்பை வாங்கியுள்ளது. வள்ளி மயில் கதாபாத்திரத்தில் ஃபரியா நடிக்கிறார். அவர் தான் இந்த படத்தின் உயிர். இது எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

நடிகை கல்பனா உடைய மகள் இந்த படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார், கனி அகத்தியன் இந்த படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார். எனக்கு இந்த திரைப்படம் முக்கியமான திரைப்படம்.

இமான் கடினமான உழைப்பாளி, அவருடன் நான் 9 படங்கள் பணியாற்றியுள்ளேன். இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் முழு அர்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். ஆக்‌ஷன், காமெடி, எமோஷன் என அனைத்தும் கலந்த ஒரு நல்ல படைப்பாக இது இருக்கும். “

நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது..

இந்த படத்தில் சுசீந்திரன் அவர்களிடம் இருந்து நான் இயக்கத்தை கற்றுக்கொண்டேன்.

இயக்கத்தில் நானும் இறங்கியதால் நான் ஒவ்வொன்றையும் கவனிக்கிறேன், படத்தை தரமாக உருவாக்குகிறார் இயக்குநர் சுசீந்திரன்.

இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளம் நடிக்கின்றனர். அவர்களுடைய நடிப்பு திறமை அபாரமானது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், நன்றியையும் கூறிகொள்கிறேன்.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். பாஸ்கர் சக்தி வசனம் எழுதுகிறார். ஒளிப்பதிவு – விஜய் சக்ரவர்த்தி, எடிட்டர் – ஆண்டனி, ஆர்ட் டைரக்டர் – உதயகுமார், மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM), பப்ளிசிட்டி டிசைன்ஸ் – ட்யூனி ஜான் ஆகியோர் குழுவில் பணியாற்றுகின்றனர்.

இவர்களுடன் அறந்தாங்கி நிஷா, கனி அகத்தியன், புஷ்பா புகழ் சுனில், ரெடின் கிங்ஸ்லி, ஜி பி முத்து, தயாளன் உட்பட பல நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

‘Vallimayil’ will be important in Indian cinema; Suchindran

விஜயகாந்த் பாக்யராஜ் விஜய் அஜித் ஆகியோருடன் பணிபுரிந்த சின்னா மரணம்

விஜயகாந்த் பாக்யராஜ் விஜய் அஜித் ஆகியோருடன் பணிபுரிந்த சின்னா மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சினிமா பாடலை நாம் ரசிக்க முக்கிய காரணம் அதன் இசையும் அந்த பாடல் வரிகளும் தான்.

அதன் பின்னரே பாடகர் யார் என்பதை நாம் அறிந்து கொள்ள முயல்வோம்.

ஆனால் பலருக்கும் அறியாத ஒரு விஷயம் என்னவென்றால் அந்த பாடலுக்கு நடனம் அமைத்தவர் யார்.?

ஒரு பாடலைக் கேட்க பாடல் வரிகள் மிக முக்கிய காரணமாக இருக்கலாம். ஆனால் ஒரு பாடலைப் பார்த்து ரசிக்க காரணமாக அமைவது நிச்சயமாக நடனம்தான்.

ஒரு பாடலைப் பார்த்த உடனே நாமும் ஆட தோன்றினால் அது தான் நடன இயக்குனரின் வெற்றி ஆகும்.

இந்த வரிசையில் பல படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்த சின்னா என்பவர் இன்று மரணமடைந்தார்

பாக்யராஜ் நடித்த முந்தானை முடிச்சு, தூரல் நின்னு போச்சு, தாவணி கனவுகள், அஜித் நடித்த அமராவதி, விஜயகாந்த் நடித்த வைதேகி காத்திருந்தாள், வானத்தை போல, விஜய் நடித்த செந்தூர பாண்டி, நேசம் உட்பட 200 க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய சின்னா வயது 69 இன்று மரணமடைந்தார்.

Dance master Chinna passed away

சத்யராஜ் – RJ பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’ பற்றி சொல்லும் ஊர்வசி

சத்யராஜ் – RJ பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’ பற்றி சொல்லும் ஊர்வசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய திரையுலகில் மிக முக்கியமான நடிகையாக போற்றப்படும் நடிகை ஊர்வசியின் பங்கு, அவர் நடிக்கும் திரைப்படங்களின் மதிப்பை உயர்த்துகிறது.

குறிப்பாக, படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்தால், ​​பார்வையாளர்களின் இதயங்களிலும் மனதிலும் என்றென்றும் நிலைத்திருக்கும் ஒரு நடிப்பை வெளிப்படுத்தி முழுத் திரையையும் ஆட்கொண்டுவிடுவார்.

ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளிவரத் தயாராக இருக்கும் RJ பாலாஜி நடித்த “வீட்ல விசேஷம்” திரைப்படத்தில் அத்தகைய ஒரு பாத்திரத்தில் அவர் மீண்டும் நடித்துள்ளார்.

இது குறித்து நடிகை ஊர்வசி கூறியதாவது…

“வீட்ல விசேஷம் திரைப்படம் எனக்கு முழு திருப்தியை கொடுத்தது. மிகவும் அரிதாகவே, ஒரு கலைஞருக்கு மதிப்புமிக்க கதை, தெளிவான பார்வை கொண்ட நல்ல திரைப்பட இயக்குநர்கள் மற்றும் அற்புதமான சக நடிகர்கள் கொண்ட ஒரு படம் கிடைக்கிறது.

இந்தப் படம் எனக்கு அப்படிப்பட்ட ஒரு படமாக அமைந்தது. நான் மலையாளத்தில் இதே போன்ற திரைப்படங்களை செய்திருந்தாலும், இது மிகவும் சிறப்பு வாய்ந்தது, இந்த படத்தினுடைய படப்பிடிப்பின் ஒவ்வொரு நொடியும் என்னை உற்சாகப்படுத்தியது. சத்யராஜ் சாருடன் திரையை பகிரும் வாய்ப்பு ஒரு முக்கியமான காரணம்.

நல்ல நடத்தை மற்றும் நடிப்பின் மூலமாக மற்றவ்ர்களை ஈர்க்கும் திறமை பெற்ற நடிகர்களுடன்பணியாற்றுவதை நான் எப்போதும் ரசிப்பேன், அப்படிபட்ட ஒரு நடிகர் சத்யராஜ். இது எனது பாத்திரத்தையும் சிறப்பாக வழங்க உதவியது.

நான் இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்புவதற்கு மற்றொரு காரணம் என்னவென்றால், RJ பாலாஜி தான், அவருடைய படங்களில் எனக்கு ஒரு குறிப்பிடத்தக்க, தனித்துவமான பாத்திரம் கிடைக்கும். RJ பாலாஜி புத்திசாலித்தனமிக்க ஒரு தெளிவான திரைப்பட இயக்குநர், மேலும் அவரது குழுவினரிடமிருந்து சிறந்த உழைப்பை பெற்று விடுவார்.

RJ .பாலாஜி ஜாலியாகவும் துடிப்பாகவும் இருக்கும் போது, ​​NJ .சரவணன் அமைதியாகவும், இறுதி வெளியீட்டைப் பெறுவதில் கெட்டிகாரராகவும் இருக்கிறார்.

திரைப்பட இயக்குநர்களின் இந்த கலவையானது படப்பிடிப்பின் போது குழுவில் உள்ள அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் நிலைமையை சமாமாக வைத்துக்கொண்டது.

வீட்ல விசேஷம் படத்தின் மூலம் பார்வையாளர்களுக்கு கிடைக்க போகும் அனுபவங்களை பற்றி ஊர்வசி கூறும்போது…

​​“சமீப காலமாக, ஒரு குறிப்பிட்ட குழுவினரின் ஆர்வத்தையும் ரசனையையும் பூர்த்தி செய்யும் திரைப்படங்களை நாம் பார்க்கிறோம். இருப்பினும், வீட்ல விசேஷம் திரையரங்குகளில் அனைவரையும் மகிழ்விக்கும் மற்றும் திருப்திப்படுத்தும் படமாக இருக்கும்” என கூறினார்.

‘வீட்ல விசேஷம்’ படத்தை RJ பாலாஜி-NJ சரவணன் இயக்கியுள்ளனர் மற்றும் Zee Studios & Bayview Projects LLP சார்பில் போனி கபூர், Romeo Pictures இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தியில் சூப்பர் ஹிட்டான ‘பதாய் ஹோ’ படத்தின் ரீமேக்கான இப்படத்தில் RJ .பாலாஜி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Urvasi talks about RJ Balaji’s ‘Veetla Vishesham’

இமான் இசையில் அசோக்செல்வன் நடித்த ‘வேழம்’ பட பாடல்கள் வெளியானது

இமான் இசையில் அசோக்செல்வன் நடித்த ‘வேழம்’ பட பாடல்கள் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில், K4 Kreations சார்பில் கேசவன் தயாரிப்பில், சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் உருவாகியுள்ள “வேழம்” திரைப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் இமான் “ மாறும் உறவே” பாடலின் வீடியோவை இன்று அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார்.

வித்தியாசமான கதைக்களங்களில் அசத்தும் நடிகர் அசோக் செல்வன், தனது சிறப்பான நடிப்பினால், பாக்ஸ் ஆபிஸில் ஒரு முக்கியமான நட்சத்திரமாக மாறியுள்ளார்.

தொடர்ந்து நம்பிக்கைக்குரிய நல்ல படைப்புகளை வழங்கி வருவதால், அவரது வரவிருக்கும் திரைப்படமான ‘வேழம்’ மீதான எதிர்பார்ப்புகள் பெருமளவில் அதிகரித்துள்ளது,

குறிப்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட டிரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை சந்தீப் ஷியாம் இயக்குகிறார், K4 Kreations சார்பில் கேசவன் தயாரித்துள்ளார்.

இத்திரைப்படம் ஜூன் 24, 2022 அன்று உலகம் முழுவதும் திரைப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு எஃப்எம் நிலையத்தில் நடைபெற்றது.

மேலும் இசையமைப்பாளர் D இமான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘மாறும் உறவே’ என்ற வீடியோ பாடலை வெளியிட்டுள்ளார்.

படத்தின் தொழில்நுட்ப குழு:
சக்தி அரவிந்த்- ஒளிப்பதிவு, A.K. பிரசாத் – எடிட்டர், சுகுமார் R – கலை இயக்குனர், தினேஷ் சுப்புராயன்- சண்டை பயிற்சி, M.சரவணக்குமார் – சவுண்ட் மிக்ஸிங், சுரேஷ் சந்திரா ரேகா D’ One – மக்கள் தொடர்பு.

ராஜ கிருஷ்ணமூர்த்தி(கிட்டி), சங்கிலி முருகன், மற்றும் மராத்தி நடிகர் மோகன் அகாஸ்தே, உடன் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

SP Cinemas இப்படத்தினை உலகமெங்கிலும் தியேட்டரில் வெளியிடுகின்றனர். படம் ஜூன் 24, 2022 அன்று தியேட்டரில் வெளியாகிறது.

Ashok Selvan starrer ‘Velam’ audio released

கிரேஸ் குறையாத ‘சிவாஜி தி பாஸ்’..; 15 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் ரஜினி டீம்

கிரேஸ் குறையாத ‘சிவாஜி தி பாஸ்’..; 15 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் ரஜினி டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2007 ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் நடிப்பில் ஏவிஎம் தயாரிப்பில் வெளியான திரைப்படம் சிவாஜி த பாஸ்.

ஷங்கர் இயக்கிய இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்க முக்கிய வேடத்தில் விவேக் சுமன் மணிவண்ணன் வடிவுக்கரசி சாலமன் பாப்பையா பட்டிமன்றம் ராஜா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

கேவி. ஆனந்த் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

சிவாஜி பட ஸ்டைலில் சிவகார்த்திகேயன் போடும் ‘சிங்க பாதை’..?

இந்தப் படத்தில் முதல்முறையாக ரஜினிகாந்த் மொட்டை அடித்து நடித்து இருந்தார். அந்த MOTTAI BOSS கேரக்டர் பரபரப்பாக பேசப்பட்டது.

ஏவிஎம் ரஜினிகாந்த் ஷங்கர் ஏ ஆர் ரகுமான் ஆகிய பிரம்மாண்ட கூட்டணியில் உருவான இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்த படத்தின் பாடல்களும் ஆக்சன் காட்சிகளும் பெரிய அளவில் பேசப்பட்டது. ‘அதிரடிக்காரன் மச்சான் மச்சான்…’ பல்லேலக்கா பல்லேலக்கா… சஹானா சாரல் தூவுதோ… ஆகிய பாடல்கள் எவர் கிரீன் ஹிட் சாங் வரிசையில் இன்றும் உள்ளன.

இந்த சிவாஜி படத்திற்கு முன்பு வெளியான படங்கள் மிகவும் குறைந்த அளவில் தியேட்டர்களில் மட்டூமே வெளியானது.

ஆனால் சிவாஜி படத்திற்கு தான் முதன்முதலாக அதிகப்படியான எண்ணிக்கையில் தியேட்டர்களில் படம் வெளியானது.

தமிழ் சினிமாவை உலகளவில் கொண்டு சென்ற முக்கியமான படங்களில் ஒன்று என்று சிவாஜி-யை கூறினால் அது மிகையல்ல.

இந்த படத்தின் வியாபார வெற்றியை பார்த்து தான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதன் முறையாக தயாரிப்பு துறையில் இறங்கியது. அப்போதுதான் ரஜினி ஷங்கரை வைத்து எந்திரன் படத்தை உருவாக்கினார்.

இப்படி பல வியாபார நோக்கத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது ரஜினி நடித்த சிவாஜி படம் தான்.

இந்த நிலையில் இன்று ஜூன் 15ஆம் தேதி 15வது வருடத்தை கொண்டாடுகிறது சிவாஜி.

ரஜினியுடன் நடித்த அங்கவை.. சங்கவை.;. அடடா.. ரெண்டு பேரும் இம்புட்டு சிகப்பழகா..?!

இதனை முன்னிட்டு ரஜினியை தன் மகள் அதிதி (விருமன் பட நாயகி) உடன் சந்தித்தார் இயக்குனர் ஷங்கர்.

மேலும் ஏவிஎம் நிறுவனமும் தன் சமூக வலைத்தள பக்கங்களில் சிவாஜி படம் குறித்து செய்திகளை பதிவிட்டு வருகின்றனர். ரகுமானும் சிவாஜி படத்தை பற்றி பதிவிட்டுள்ளார்.

ஆக 15 வருடத்திற்கு பிறகும் சிவாஜி படத்திற்கு உள்ள கிரேஸ் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி தி பாஸ்

சிவாஜி தி பாஸ்

Rajini team celebrates 15 years of Sivaji

தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி

தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இதனால் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.

ஆனால் இதற்கு பின் வெளியான ‘ஜகமே தந்திரம்’ மற்றும் ‘மாறன்’ உள்ளிட்ட படங்கள் படு தோல்வியை தழுவியது.

எனவே ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக பணியாற்றி வருகிறார் தனுஷ்.

தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் கேரக்டர் குறித்த அறிவிப்பை கடந்த சில நாட்களாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது..

‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷ் மற்றும் 3 ஹீரோயின்ஸ் கேரக்டர் அப்டேட்ஸ்

முதல் கட்டமாக அனுஷா என்ற கேரக்டரில் ராஷிகண்ணா நடித்து வருவதாக வீடியோ வெளியிட்டனர். இவர் தனுஷின் பள்ளி தோழியாக நடித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து கிராமத்து தென்றல் ரஞ்சனி என்ற கேரக்டரில் பிரியா பவானி சங்கர் நடித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

சீனியர் திருச்சிற்றம்பலம் கேரக்டரில் இயக்குனர் பாரதிராஜா, இன்ஸ்பெக்டர் நீலகண்டன் கேரக்டரில் பிரகாஷ்ராஜ், தனுஷின் தோழி ஷோபனா என்ற கேரக்டரில் நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருவதாகவும் ஒவ்வொரு வீடியோவாக அறிவித்தனர்.

இதனை அடுத்து தனுஷின் கேரக்டர் எப்போது வெளிவரும் என தனுஷ் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் ’திருச்சிற்றம்பலம்’ கேரக்டரில் தான் தனுஷ் நடித்து வருகிறார் என்ற வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தனுஷ் நடித்துள்ள மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படம் ஆகஸ்ட் 18ல் தியேட்டர்களில் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Official release date of Dhanush starrer ‘Tiruchitrambalam’ is here

More Articles
Follows