விஜய்சேதுபதிக்கு வில்லனாக வைபவ்வின் ப்ரதர் சுனில் அறிமுகம்

விஜய்சேதுபதிக்கு வில்லனாக வைபவ்வின் ப்ரதர் சுனில் அறிமுகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vaibhavs Brother Sunil Debuts As Baddie In Vijay Sethupathis Seethakaathiபாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள படம் சீதக்காதி.

இதில் நடிகர் வைபவ்வின் மூத்த சகோதரர் சுனில், வில்லனாக நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

“உண்மையில், இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகரை கண்டுபிடிப்பது மிகப்பெரிய ஒரு சவாலாக இருந்தது. இது கதாபாத்திரத்தின் இயல்பு அதற்கு முக்கிய காரணம்.

திரைக்கதையை எழுதும்போதே, இந்த கதாபாத்திரம் வழக்கமான ஒன்றாக இல்லாமல், புதுமையாக இருக்க வேண்டும் என்ற தெளிவான பார்வை இருந்தது.

இந்த கதாபாத்திரம் உங்களை வெறுப்புக்கு ஆளாக்காமல், சிறு புன்னகைக்கு ஆட்படுத்தும். தோற்றத்தை பொறுத்தவரை சில அசாதாரண தேர்வுகளை செய்தோம். இந்த கதாபாத்திரத்துக்கு நாங்கள் சில பிரபலமான பெயர்களை கூட பரிசீலனை செய்தோம்.

அவர்களுக்கு கதாபாத்திரம் பிடித்திருந்தாலும் அவர்களது கால சூழலால் இதை செய்ய முடியவில்லை. ஒரு எதிர்பாராத திருப்புமுனையாக நடிகர் வைபவ்வின் மூத்த சகோதரர் சுனில் அவர்களை ஒரு பிறந்த நாள் விழாவில் சந்தித்தேன்.

உடனடியாக என் வில்லனை அங்கு கண்டேன். ஆடிஷன் செய்ய அவருக்கு தயக்கம் இருந்தது. இறுதியில் அந்த முயற்சியை மேற்கொண்டார். அந்த கதாபாத்திரத்தில் பொருந்தினார்.

குறுகிய கால நடிப்பு பயிற்சியோடு இந்த படத்துக்குள் வந்தார். ரசிகர்கள் படம் முடிந்து போகும்போது சீதக்காதி (விஜய் சேதுபதி) கதாபாத்திரத்தை மட்டுமல்லாமல் இந்த வில்லன் கதாபாத்திரத்தையும் நினைத்துக் கொள்வார்கள்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பக்ஸ் கதாபாத்திரம் அளவுக்கு இந்த கதாபாத்திரமும் இருக்கும், பேசப்படும் என்றார் இயக்குனர் பாலாஜி தரணீதரன்.

பேஸ்ஸன் ஸ்டுடியோஸ் இந்த சீதக்காதி படத்தை தயாரித்திருக்கிறது. ஏற்கனவே விஜய் சேதுபதியின் தோற்றம் மூலம் படத்தின் மீதான நமது ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.

கோவிந்த் வசந்தாவின் முதல் சிங்கிள் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, ரசிகர்களிடம் அதிகமான தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Vaibhavs Brother Sunil Debuts As Baddie In Vijay Sethupathis Seethakaathi

குரு வணக்கம் & சிலம்பாட்டத்துடன் தன்ஷிகாவின் பிறந்த நாள் விழா

குரு வணக்கம் & சிலம்பாட்டத்துடன் தன்ஷிகாவின் பிறந்த நாள் விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Sai Dhanshika Birthday Celebration newsகபாலி படத்தில் ரஜினியின் மகளாக நடித்தவர் நடிகை தன்ஷிகா.

இவர் தனது பிறந்த நாளை தனது சிலம்பாட்டம் குருவான பாண்டியன் மாஸ்டர் அவர்களின் இடத்தில் கொண்டாடினார்.

தனது பிறந்தநாளின் முதல் நிகழ்வாக தனது குருவிற்கு வணக்கம் செலுத்தியவர் அங்கு குழுமியிருந்த பல்வேறு மாவட்ட ரசிகர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் நடன இயக்குனர் ஸ்ரீதர் கலந்து கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் பல்வேறு தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நடிகர் நடிகைகள் அலைபேசி வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

ரசிகர்களின் அன்பிற்கிணங்க நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக தன்ஷிகா சிலம்பாட்டம் செய்து காட்டினார். நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் விருந்தளிக்கப்பட்டது.

Actress Sai Dhanshika Birthday Celebration news

கஜா பாதிப்பு; 1 கோடியே 1 லட்சம் கொடுத்த 2.0 பட நிறுவனம் லைகா

கஜா பாதிப்பு; 1 கோடியே 1 லட்சம் கொடுத்த 2.0 பட நிறுவனம் லைகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyca Subaskaran contributes towards Cyclone Gaja reliefஓரிரு தினங்களுக்கு முன் கஜா புயல் தமிழகத்தின் 7 மாவட்டங்களை கடுமையாக தாக்கியது.

புயல் கரையை கடந்து ஒரு வாரம் ஆன நிலையிலும் மக்கள் இன்னும் முழுமையான இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை.

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.

இந்நிலையில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் நிறுவனமான லைகா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடியே 1 லட்சம் ரூபாயை அளித்துள்ளது.

இதற்கான அறிவிப்பை அவர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் லைகா நிறுவனம் பதிவிட்டுள்ளது.

Lyca Subaskaran contributes towards Cyclone Gaja relief

lyca gaja donation

கஜாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 லட்சத்தை வாரி வழங்கிய ரஜினி

கஜாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 லட்சத்தை வாரி வழங்கிய ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth donated Rs 50 Lakhs to Gaja Cyclone Reliefகஜா புயலால் நாகை, வேதாரண்யம், தஞ்சை, திருவாரூர், கோடியக்கதை திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இதனால் மக்கள் தங்கள் வாழ்வதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.

நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சமும், விஜய்சேதுபதி ரூ.25 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சமும் வழங்கியுள்ளனர்.

மேலும் வைரமுத்து 5 லட்சமும், இயக்குனர் ஷங்கர் 10 லட்சமும் வழங்கியுள்ளனர்.

கவிஞர் வைரமுத்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குக் ரூ.5 லட்சம் வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்கள் மூலம் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ரஜினி மக்கள் மன்றம் மூலம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Rajinikanth donated Rs 50 Lakhs to Gaja Cyclone Relief

பீர் பாட்டிலுடன் சமூகப் பொறுப்புள்ள விஷால்.?; ராமதாஸ் கண்டனம்

பீர் பாட்டிலுடன் சமூகப் பொறுப்புள்ள விஷால்.?; ராமதாஸ் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PMK Ramadoss condemns Vishal and Ayogya First look posterவிஷால் நடித்துள்ள “அயோக்யா” பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.

பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஷால் போலீஸ் ஜீப்பில் உட்கார்ந்து கொண்டு, கையில் பீர் பாட்டிலை வைத்திருக்கிறார்.

வெங்கட் மோகன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்.

பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த போஸ்டரை நீக்கச் சொல்லியும் வலியுறுத்தியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது…

பீர் பாட்டிலுடன் நடிகர் விஷால் தோன்றும் விளம்பரமும், முதல் சுவரொட்டியும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த விளம்பரம் மூலம் அவரது ரசிகர்களுக்கு நடிகர் விஷால் சொல்ல வரும் செய்தி என்ன? நடிகர் சங்க பொதுச்செயலாளரிடமிருந்து சமூக அக்கறையை எதிர்பார்க்கிறேன்!

‘அயோக்யா’ திரைப்பட விளம்பரத்தில் கதாநாயகர் விஷால் பீர் புட்டியுடன் தோன்றுகிறார். நடிகர் சங்க பொதுச்செயலர் என்ற முறையில் புகைக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிப்பதை தடை செய்ய வேண்டும் என கடிதம் எழுதினேன். இப்போது புகையை தாண்டி பீர் பாட்டிலுடன் நடிக்கிறார். என்னவொரு சமூகப் பொறுப்பு!

என கிண்டலடிக்கும் வகையில் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

PMK Ramadoss condemns Vishal and Ayogya First look poster

அயோக்ய பயலே… நண்பர் விஷாலை திட்டிய விஷ்ணு விஷால்

அயோக்ய பயலே… நண்பர் விஷாலை திட்டிய விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishnu Vishal reaction to Vishals Ayogya first look posterவிஷாலின் ‘அயோக்யா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகிறது.

அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகி ஹைதராபாத், விசாகபட்டினம் தொடர்ந்து இப்பொழுது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்காக தனது தோற்றத்தை கடின முயற்சியால் ஆஜானுபாகுவாக மாற்றியிருக்கிறார் விஷால்.

தெலுங்கில் அனைவரின் மனதையும் கவர்ந்த ராஷி கண்ணா இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் B.மது தயாரிக்கும் இப்படத்தை வெங்கட் மோகன் இயக்குகிறார். R.பார்த்திபன், KS ரவிக்குமார், சச்சு, வம்சி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் –

இசை – சாம் CS,
ஒளிப்பதிவு – VI கார்த்திக்,
கலை – SS மூர்த்தி,
படத்தொகுப்பு – ரூபன்,
சண்டைப்பயிற்சி – ராம் லக்ஷ்மன்,
நடனம் – பிருந்தா ஷோபி,
உடை உத்ரா மேனன்,
பாடல்கள் – யுகபாரதி-விவேக்,
மூலக்கதை – வெக்காந்தம் வம்சி,
தயாரிப்பு மேற்பார்வை – முருகேஷ்,
தயாரிப்பு நிர்வாகம் – ஆண்டனி சேவியர்.

ஜனவரி 2019-ல் ‘அயோக்யா’ உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நடிகர் விஷால் தன் ட்விட்டர் பதிவிட்டு இருந்தார். இதை கண்ட விஷாலின் நண்பரும் நடிகருமான விஷ்ணு விஷால்.. … அயோக்ய பயலே ஆல் தி பெஸ்ட் என அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்துள்ளார்.

Vishnu Vishal reaction to Vishals Ayogya first look poster

VISHNUU VISHAL – VV‏Verified account @vishnuuvishal
VISHNUU VISHAL – VV Retweeted Vishal
Ayogya payale;);) all d best:) looks good

More Articles
Follows