தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித் நடித்த ராஜா படத்தில் வடிவேலு இணைந்து நடித்திருந்தார்.
ஆனால் சில காரணங்களால் அதன்பின்னர் இருவரும் தொடர்ந்து நடிக்கவில்லை.
இதனையடுத்து வடிவேலு ஹீரோவாகி விட்டதால், இவர்கள் இணைய வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
தற்போது மீண்டும் காமெடி வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு வருகிறார்.
விஷாலுடன் கத்தி சண்டை படத்தில் நடித்தார்.
அட்லி இயக்கும் விஜய் 61 படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கத்தில் மௌன போராட்டம் நடைபெற்றது.
இதில் அஜித்தும் வடிவேலுவும் சந்தித்துள்ளனர்.
அப்போது விரைவில் இணைந்து நடிப்போம் என்று வடிவேலுவிடம் உறுதியளித்தாராம் அஜித்.
எனவே அஜித் 58 படத்தில் வடிவேலு நடிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Vadivelu may join with ajith in Thala 58