ஆர்.ஜே.பாலாஜியுடன் இணையும் வடிவேலு.; மீண்டும் ‘எம்டன் மகன்’ கூட்டணி

ஆர்.ஜே.பாலாஜியுடன் இணையும் வடிவேலு.; மீண்டும் ‘எம்டன் மகன்’ கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vadivelu rj balajiசின்னத்திரை டிவி சீரியல்களில் கலக்கிக் கொண்டிருந்த இயக்குனர் திருமுருகன் வெள்ளித்திரையில் கலக்கிய படம் ‘எம்டன் மகன்’.

பரத், கோபிகா, நாசர், சரண்யா நடித்திருந்த இந்த படத்தில் வடிவேலுவின் நடிப்பை யாராலும் மறக்க முடியாது.

பின்னர் டிவி சீரியல்களில் பிஸியாகி விட்டார் திருமுருகன்.

தற்போது மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

இதில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடிக்க இருக்கிறார்

இவருடன் முக்கிய வேடத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க போகிறாராம்

இந்த படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

இப்படம் குறித்த பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vadivelu and RJ Balaji joins for Thiru Murugan’s next

‘நெஞ்சம் மறப்பதில்லை’ பட பாணியில் யோகி பாபு நடிக்கும் ‘கங்கா தேவி’

‘நெஞ்சம் மறப்பதில்லை’ பட பாணியில் யோகி பாபு நடிக்கும் ‘கங்கா தேவி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yogi Babu‘ஸ்ரீகருணை ஆனந்தா மூவிஸ்’ தயாரிப்பில், இயக்குநர் ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்குநராக இருந்து, ‘சண்டிமுனி’ படத்தை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்த மில்கா செல்வகுமார் இயக்கும் புதிய படத்துக்கு ‘கங்கா தேவி’ என பெயரிடப்பட்டுள்ளது.

யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில், முன்னணி நடிகை ஒருவர் ஹீரோயினாகவும், வில்லனாக ‘சூப்பர்’ சுப்புராயனும் நடிக்கவிருக்கிறார்கள்.

இவர்களோடு சாம்ஸ், ஆர்த்தி கணேஷ் என நகைச்சுவை நடிகர்கள் பலரும் இணைகிறார்கள்.

‘காக்கா முட்டை’ பட இயக்குநர் மணிகண்டனின் உதவியாளர் டி. சுரேஷ் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணிபுரிகிறார்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டால்…

”ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதை. அதுவும் கங்கா – தேவின்னு இரட்டை வேடம்.

குறிப்பிட்ட ஒரு விளையாட்டை மையப்படுத்தி, சஸ்பென்ஸ், திரில்லர், ஹாரர், காமெடி எல்லாமும் கலந்து திரைக்கதை உருவாக்கியிருக்கோம்.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் மாதிரி பூர்வஜென்ம கதையும் பின்னிப் பிணைஞ்சிருக்கும்.

குடும்பத்தோட சிரிச்சு ரசிக்கிற படமா இருக்கும். ரொம்பப் பெரிய இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்கப் போறார்.

அது பத்தியெல்லாம் அடுத்த மாசம் ஷூட்டிங் தொடங்குறப்போ சொல்றோம்!” என்றார்.

Yogi Babu’s next film is titled Ganga Devi

விஜய்-கார்த்தி பட நடிகருக்கு பதவி உயர்வு அளித்த காவல்துறை

விஜய்-கார்த்தி பட நடிகருக்கு பதவி உயர்வு அளித்த காவல்துறை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bigil vijayan (2)கேரள மாநில காவல் துறையில் போலீஸாக பணியாற்றி வருபவர் விஜயன்.

இவர் முன்னாள் இந்திய கால்பந்து வீரர்.

இந்திய கால்பந்து அணிக்காக 65க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

2000 – 2004ம் ஆண்டு வரை இந்திய ஃபுட்பால் அணியின் கேப்டனாக இருந்துள்ளார்.

பின்னர் கால் பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்று போலீஸ் வேலையில் சேர்ந்தார்.

மேலும் தமிழில் திமிரு, கொம்பன், பிகில் போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விஜயனுக்கு கேரள காவல்துறை பதவி உயர்வு வழங்கி உள்ளது.

இதற்கு ரசிகர்களும் அவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Bigil Vijayan gets promotion

வசந்தபாலன் & அர்ஜுன் தாஸ் கூட்டணியில் இணையும் ‘பிக் பாஸ்’ பிரபலம்

வசந்தபாலன் & அர்ஜுன் தாஸ் கூட்டணியில் இணையும் ‘பிக் பாஸ்’ பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

biss boss suresh chakravarthiகே பாலசந்தர் இயக்கிய ‘அழகன்’ படத்தில் இணைந்து முக்கிய கேரக்டரில் நடித்தவர் சுரேஷ் சக்கரவர்த்தி.

நடிகர் இயக்குநர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்டவர் இவர்.

தற்போது யூடியூப்பில் சமையல் சேனல் நடத்தி வருகிறார் சுரேஷ் சக்கரவர்த்தி.

சமீபத்தில் ‘பிக் பாஸ் சீசன் 4’ நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பிரபலமானார்.

விஷாலின் ‘துப்பறிவாளன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்திலும் சுரேஷ் சக்கரவர்த்தி நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Bigg Boss contestant joins Vasantha Balan – Arjun Das film

‘வலிமை’ அப்டேட் இல்லை.. ‘பில்லா’ ரீ-ரிலீஸ்..; அஜித் ஃபேன்ஸ் செம ஹாப்பி

‘வலிமை’ அப்டேட் இல்லை.. ‘பில்லா’ ரீ-ரிலீஸ்..; அஜித் ஃபேன்ஸ் செம ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith billaதோல்வி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த நடிகர் அஜித்திற்கு பெரும் திருப்புமுனையாக அமைந்த படம் ‘பில்லா’ (2007).

இது ரஜினியின் ‘பில்லா’ பட ரீமேக் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா, நமீதா ஆகியோர் நடித்திருந்தனர்.

தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தை அடுத்த மாதம் (மார்ச் 12-ந் தேதி) தமிழகம் முழுவதும் பில்லாவை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளனர்.

விஷ்ணுவர்தன் இயக்கிய இப்படத்திற்கு யுவன் இசையமைத்து இருந்தார்.

இவரது இசையில் வெளியான பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

‘வலிமை’ பட அப்டேட் கிடைக்காத அஜித் ரசிகர்களுக்கு ‘பில்லா’ ரி-ரிலீஸ் மகிழ்ச்சியான செய்தி்தானே..

Ajith’s billa to be re released in TN

தியேட்டரை விட்டு ஓடும் ‘சக்ரா’..; தயாரிப்பாளர்கள் மீது செம கடுப்பில் தியேட்டர் உரிமையாளர்கள்

தியேட்டரை விட்டு ஓடும் ‘சக்ரா’..; தயாரிப்பாளர்கள் மீது செம கடுப்பில் தியேட்டர் உரிமையாளர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chakra Vishal (2)2021 பொங்கலை முன்னிட்டு மாஸ்டர் & ஈஸ்வரன் ஆகிய படங்கள் தியேட்டர்களில் ரிலீசானது.

கொரோனா பயத்தை கடந்தும் இந்த படத்தை மக்கள் தியேட்டரில் பார்த்தனர்.

அதன் பின்னர் தியேட்டர்களுக்கு போதுமான கூட்டம் வரவில்லை என கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம்.. பட ரிலீசின் போது போதுமான விளம்பரங்கள் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த வாரம் ‘சக்ரா’ மற்றும் ‘கமலி From நடுக்காவேரி’ ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளியானது.

கமலிக்கு கிடைத்த புரோமோசன் அளவில் சிறியளவில் கூட ‘சக்ரா’ வுக்கு செய்யவில்லை என தியேட்டர் உரிமையாளர்களே தெரிவிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

‘சக்ரா’ படத்திற்கு பிரஸ்மீட் எதுவும் நடக்கவில்லை. இரண்டு முறை நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டனர்.

இதனால் விஷால் படம் வெளியானது கூட பலருக்கும் தெரியவில்லை என தியேட்டர் உரிமையாளர்களே வருத்தப்படுகின்றனர்.

ஒருவேளை பிரஸ்மீட் நடைபெற்று இருந்தால் நாளிதழ்கள், வார இதழ்கள், டிவிக்கள், இணையதளங்களில் அது பற்றிய பேச்சு இருந்திருக்கும்.

மக்களும் அந்த படத்தை பார்க்க ஆவலாக இருந்திருப்பார்கள் என கருத்து தெரிவித்துள்ளனர்.

Theatre owners blames Chakra producers

More Articles
Follows