2ஜி தீர்ப்பால் பின்னாடி ஃபயர் ஆனவர்களுக்கு உதயநிதி கொடுத்த மருந்து

2ஜி தீர்ப்பால் பின்னாடி ஃபயர் ஆனவர்களுக்கு உதயநிதி கொடுத்த மருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

udhaya burningஇந்தியாவையே உலுக்கிய 2ஜி வழக்கின் தீர்ப்பு நேற்று டெல்லி கோர்ட்டில் வழங்கப்பட்டது.

இதில் குற்றம்சாட்டப்பட்டவர்களான கனிமொழி, ஆ. ராசா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தன் ட்விட்டரில் கருணாநிதியின் பேரனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் இந்த தீர்ப்பால் பலருக்கு பின்னால் பயர் ஆக வாய்ப்புள்ளது. எனவே மருந்து தடவிக் கொள்ளுங்கள் என கொச்சையான ஒரு படத்தை போட்டுள்ளார்.

எந்த மாவட்ட ரசிகர்களை எந்த தேதியில் சந்திக்கிறார் ரஜினி..?

எந்த மாவட்ட ரசிகர்களை எந்த தேதியில் சந்திக்கிறார் ரஜினி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthவருகிற டிசம்பர் 26 முதல் 31 வரை தன் ரசிகர்களை 2ஆம் கட்டமாக சந்திக்கிறார் ரஜினிகாந்த்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் காலை 7 மணி முதல் 3 மணி வரை இந்த சந்திப்பு நிகழ்கிறது.

6 நாட்கள் நடக்கும் இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் போது தினமும் 1000 ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

இதில், எந்த தேதியில் எந்தெந்த மாவட்ட ரசிகர்களை ரஜினி சந்திக்க இருக்கிறார் என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு….

26-12-17 – காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி.
27-12-17 – நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்.
28-12-17 – மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம்.
29-12-17 – கோவை, திருப்பூர், வேலூர், ஈரோடு.
30-12-17 – வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை
31-12-17 – வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை

இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் போது ரஜினி ரசிகர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில், ரஜினிக்கு சால்வை, மாலைகள் ஏதும் அணிவிக்கக் கூடாது என்றும், காலில் விழக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் போது ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிவி. சிந்து பங்கேற்கும் சென்னை ஸ்மாசர்ஸ் அணியை அறிமுகப்படுத்தினார் விஜயகாந்த் மகன்

பிவி. சிந்து பங்கேற்கும் சென்னை ஸ்மாசர்ஸ் அணியை அறிமுகப்படுத்தினார் விஜயகாந்த் மகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chennai smashersபிரிமியர் பேட்மின்டன் லீக் தொடரில் விளையாடும் சென்னை ஸ்மாசர்ஸ் அணி வீரர்களின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

பிரிமியர் பேட்மின்டன் லீக்கின் 3-வது தொடர் வரும் 23ம் தேதி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரை உரிமையாளராக கொண்ட சென்னை ஸ்மோஷர்ஸ் அணி 2வது சீசனில் அசத்தி சாம்பியன் பட்டத்தை வென்று, முன்பேவிட அதிக பலத்துடன் களம் காண்கிறது.

இந்நிலையில் சென்னை ஸ்மாசர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களை அறிமுகப்படுத்தும் விழா, சென்னை வடபழனியில் உள்ள போரம் மாலில் நடைபெற்று வருகிறது. இதில் பி.வி.சிந்து, கிரிஸ் அட்காக், கேபி அட்காக் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில் வீரர்கள் லுங்கி டான்ஸ் பாடலுக்கு நடனம் ஆடியது அனைவரையும் கவர்ந்தது.

தமிழ்நாட்டிலிருந்தும் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களை எங்கள் அணியில் விளையாட வைப்போம்.
CSK சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியை நினைவுபடுத்தும் வகையில் தான் எங்கள் அணிக்கு மஞசள் உடைகளும் சிங்க லோகோவையும் வைத்திருக்கிறோம்.
CSK சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் போல் எங்கள் அணியும் புகழ் பெறும். கடந்த இரண்டு வருடங்களாக சென்னையில் டிசமபர் மாதங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளால் சென்னயில் எங்களால் விளையாட முடியாமல் போனது.
இந்த முறை சென்னையில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பது  பெரும் மகிழ்ச்சி. இந்த ஆண்டும் கோப்பையை கண்டிப்பாக வெல்வோம் என்று விஜய பிரபாகரன் பேசினார்.
இந்த பேட்மிட்டன் போட்டிகள் டிசம்பர் 23 முதல் ஜனவரி 14 வரை நடைபெறுகிறது.
தெலுங்கில் ஹிட் அடித்த நெப்போலியனை தமிழுக்கு கொண்டு வரும் ஆர்.கே.சுரேஷ்

தெலுங்கில் ஹிட் அடித்த நெப்போலியனை தமிழுக்கு கொண்டு வரும் ஆர்.கே.சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RK Sureshதெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற ‘நெப்போலியன்’ படத்தை உரிமை வாங்கி ஸ்டுடியோ 9 சார்பில் ஆர்.கே.சுரேஷ் தமிழில் ரீமேக் செய்து தயாரிக்கவுள்ளார்.

தன் ஸ்டுடியோ 9 நிறுவனம் தயாரித்து வெற்றிப் படமான ‘தர்ம துரை ‘ க்குப் பிறகு வித்தியாசமான நல்லதொரு கதைக்குக் காத்திருந்த ஆர்.கே. சுரேஷுக்கு நெப்போலியன் படத்தின் கதை மிகவும் பிடித்துப் போகவே ரீமேக் உரிமையை வாங்கி விட்டார்.

இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார் ஆர்.கே.சுரேஷ். மேலும் எதிர்பாராத பல முக்கியமான நடிகர்களும் நடிக்கவுள்ளனர். இந்தியிலிருந்து பெரிய நட்சத்திர நடிகர் ஒருவரும் இதில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

முக்கிய கேரக்டரில் சமுத்திரக்கனி நடிக்கிறாராம்.

மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள ‘நெப்போலியன் ‘படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.

ஓகி புயல் பாதிப்பு; கிரௌட் பண்ட் மூலம் நிதி திரட்டும் ஜிவிபிரகாஷ்

ஓகி புயல் பாதிப்பு; கிரௌட் பண்ட் மூலம் நிதி திரட்டும் ஜிவிபிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash crowdfunds to help families affected by Ockhi cycloneசில நாள்களுக்கு முன்பு ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

கடலோரப் பகுதிகளில் இருந்த மீனவக் குடும்பங்கள் அதிக பாதிப்புகளை சந்தித்தன. இதனால், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட ஐநூறு மீனவர்கள் மற்றும் விவசாய மக்களுக்கு உதவுவதற்காக முதன்முதலில் கிரௌட் பண்ட் என்ற முறையில் நிதி திரட்டப்படுகிறது.

இதற்கான முயற்சியை இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ்குமார் தொடங்கியுள்ளார்.

எதுதர்மா (Edudharma) என்ற பெயரில் இயங்கும் வலைதள முகவரி மூலமாக இந்த நிதி திரட்டுப்பட்டு வருகிறது. இதுதொடர்பான பணிகளை ஜி.வி.பிரகாஷின் நண்பரும், சமூக சேவகருமான குணசேகரன் மேற்கொண்டுவருகிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது…

”தென் கடலோர மாவட்டங்களில் ஒகி புயலால் மக்கள் பாதிக்கப்பட்டபோது கன்னியாகுமரிக்கு நேராக சென்று நடிகர் ஜி.வி.பிரகாஷ் தன்னால் முயன்ற உதவிகளைச் செய்தார்.

மேலும், அப்போது குடும்ப உறுப்பினர்களை முழுவதுமாக இழந்து தனியாளாக ஆதரவற்று நின்ற சின்னத்துறையைச் சேர்ந்த செல்வராணி என்ற பெண்மணிக்கு தன்னாலான உதவிகளைச் செய்தார்.

அப்போது அங்குள்ளவர்கள் எங்களுக்கும் ஜி.வி பிரகாஷ்குமார் ஏதேனும் உதவி செய்யமாட்டாரா? என ஏக்கத்துடன் கேட்டனர். அதற்காகவும், கல்வி மற்றும் உடல் நலம் குறித்த திட்டங்களுக்காகவும் அங்கு பாதிக்கப்பட்ட மக்கள்குறித்த தகவலை எங்களுடைய உறுப்பினர்கள் மூலம் சேகரித்து, அதில் முதலில் ஐநூறு பேருக்கு கிரௌட் பண்ட் என்ற உத்தி மூலம் நிதி திரட்டி ஆதரிக்க எண்ணினோம்.

இத்திட்டத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டதுடன், தன்னுடைய பங்களிப்பாக ஒரு சிறிய தொகையைக் கொடுத்து இந்த கிரௌட் பண்ட் நிதி திரட்டும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்” என்றார்.

இதுதவிர, ஜி.வி பிரகாஷ்குமார் ஏற்கெனவே இந்த எதுதர்மா என்ற அறக்கட்டளை மூலம் கதிரவன் என்ற தடகள வீரர் பயிற்சியை மேற்கொள்வதற்குத் தேவையான நிதி உதவியான ஒரு லட்சத்தை வழங்கியிருக்கிறார் என்பதும், கள்ளக்குறிச்சி என்ற ஊரில் உள்ள அரசு பள்ளிக்கு கழிப்பறை ஒன்றைக் கட்டிக் கொடுக்க நிதி உதவி அளித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

GV Prakash crowdfunds to help families affected by Ockhi cyclone

gv prakash

புருஸ்லீ மாதிரி உள்குத்து இருக்காது… ஜிவி. பிரகாஷ் பட இயக்குனர் கிண்டல்

புருஸ்லீ மாதிரி உள்குத்து இருக்காது… ஜிவி. பிரகாஷ் பட இயக்குனர் கிண்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ulkuthuகார்த்திக் ராஜீ இயக்கத்தில் விட்டல் ராஜ் தயாரித்துள்ள படம் உள்குத்து.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தில் தினேஷ், நந்திதா, சரத் லோகித், ஆர்ஜெய், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்த இப்படம் ஒருவழியாக இந்த மாதம் டிசம்பர் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

எனவே இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான புரூஸ் லீ பட இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது…

உள்குத்து படம் நன்றாக வந்துள்ளது. இப்படம் நிச்சயமாக நான் இயக்கிய புரூஸ்லீ படம் போல இருக்காது.” என்று தன் படத்தையே கலாய்த்துக் கொண்டு பேசினார்.

More Articles
Follows