விபச்சாரத்தில் ஈடுபட்டதாக வாணி ராணி சீரியல் நடிகை கைது

விபச்சாரத்தில் ஈடுபட்டதாக வாணி ராணி சீரியல் நடிகை கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TV Serial Actress Sangeetha has been arrested in Prostitution caseசென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக சென்னை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

இதில் சின்னத்திரை நடிகை சங்கீதா உட்பட பாலியல் தொழில் செய்ததாக மேலும் சிலரை போலீசார் கைது செய்தனர்.

நடிகை சங்கீதா, இளம் நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருடன் 3 இளம் நடிகையும் கைது செய்யப்பட்டுள்ளாராம்.

கைது செய்யப்பட்டுள்ள சங்கீதா பிரபல வாணி ராணி தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

TV Serial Actress Sangeetha has been arrested in Prostitution case

காவிரிக்காக காலா வசூலை தியாகம் செய்யும் ரஜினிகாந்த்

காவிரிக்காக காலா வசூலை தியாகம் செய்யும் ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanths Kaala movie will not release in Karnatakaரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் உலகமெங்கும் வரும் ஜூன் 7ம் தேதியன்று வெளியாக உள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

தமிழகத்தில் இப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா மிகப்பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

ஆனால் தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தைக் காரணம் காட்டி, தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பாடல்கள் வெளியீட்டு விழாவை நடத்த ரஜினிகாந்த் மறுத்துவிட்டார்.

இருந்தபோதிலும் காலாவுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் படத்தை கர்நாடகாவில் வெளியிட கர்நாடகா திரைப்பட வர்த்தகை சபை தடை விதித்துள்ளது.

மக்கள் விரும்பினால் படத்தை வெளியிடுவோம் என கர்நாடக முதல்வர் குமாரசாமியும் கூறிவிட்டார்.

ரஜினிகாந்த்தே நேரடியாக களத்தில் இறங்கினால் ஏதாவது நடக்க வாய்ப்புள்ளது.

ஆனால், அரசியலில் ரஜினி இறங்கவிருப்பதால் தமிழகத்திற்கு எதிராக ரஜினியும் எதையும் செய்ய மாட்டார். மேலும் தற்போது தமிழக அரசியல் சூழ்நிலையில் மிகவும் மோசமாக உள்ளதால் கடும் விமர்சனங்களை அவர் சந்திக்க நேரிடும்.

எனவே கர்நாடகத்தில் காலா வெளியாவது சந்தேகம்தான்.

கர்நாடகாவில் ‘காலா’ வெளியாகவில்லை என்றால் சுமார் ரூபாய் 20 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என்கிறார்கள். இருப்பினும் அந்தத் தொகையை வேறு வழியில் ஈடு செய்துவிடலாம் என்று நினைக்கிறார்களாம் படக்குழுவினர்.

தமிழகத்திற்காக காவிரிக்காக ‘காலா’வை கர்நாடகாவில் தியாகம் செய்துவிட்டார் என்ற பெயர் நிச்சயம் ரஜினிக்கு நிச்சயம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

எனவே தமிழகத்திற்கு வந்துதான் கர்நாடக ரஜினி ரசிகர்கள் காலாவை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும் எனத் தெரிகிறது.

Rajinikanths Kaala movie will not release in Karnataka

கலக்க போவது யாரு இயக்குனர் ராஜ்குமாரின் முதல் படம் செயலி

கலக்க போவது யாரு இயக்குனர் ராஜ்குமாரின் முதல் படம் செயலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kalakka Povathu Yaaru fame Rajkumar turns Film Director in Seyaliகலக்க போவது யாரு, அசத்த போவது யாரு போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இயக்கி புகழ் பெற்ற இயக்குனர் ராஜ்குமார் முதல் முறையாக “செயலி” என்ற திரைப்படத்தை இயக்குகிறார்.

OCEANAA AJR CINE ARTS PRIVATE LIMITED மிகுந்த பொருட்ச்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கும் காமெடி கலந்த திரில்லர் படம் “செயலி”.

இப்படத்தின் துவக்க விழா இன்று காலை GK VISION TIME படப்பிடிப்பு அரங்கில் திரு. நக்கீரன் கோபால் அவர்களின் தலைமையில் இனிதே துவங்கியது.

தம்பி ராமையா, VTV கணேஷ், சிங்கம்புலி, ரோபோ ஷங்கர், மொட்ட ராஜேந்தர், ஸ்ரீமன், பிரேம், இனியா, தேவதர்ஷினி இவர்களுடன் 5 பள்ளி குழந்தைகள் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – U.K. Senthilkumar

இசை – L.V. முத்து கணேஷ்

பாடல்கள் – பா. விஜய்

படத்தொகுப்பு – அன்டனி

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ராஜ்குமார்

மக்கள் தொடர்பாளர் – டைமண்ட் பாபு

இது ஒரு குறுகியகால பிரமாண்ட தயாரிப்பு

Kalakka Povathu Yaaru fame Rajkumar turns Film Director in Seyali

நாளை ஜூன் 3ஆம் தேதி சாமி-2 படத்தின் மெகா ட்ரீட்

நாளை ஜூன் 3ஆம் தேதி சாமி-2 படத்தின் மெகா ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Saamy Square movie trailer release on 2nd June 2018ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், சூரி, ராதாரவி, பாபி சிம்ஹா, பிரபு, ஜான் விஜய், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் `சாமி ஸ்கொயர்’.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த போஸ்டரில் மே 26ஆம் தேதி டிரைலர் ரிலீஸ் என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் தூத்துக்குடி கலவரத்தில் அப்பாவி மக்கள் உயிரிழந்த நிலையில், படத்தின் டிரைலர் ரிலீஸை படக்குழு தள்ளி வைத்தது.

தற்போது நாளை ஜீன் 3ஆம் தேதி காலை 11 மணிக்கு இதன் ட்ரைலரை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்க்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

படம் வருகிற 2018 அக்டோபரில் ரிலீசாகும் எனத் தெரிகிறது.

Saamy Square movie trailer release on 3rd June 2018

பாலிவுட் படத்திற்காக நடந்த மிகப்பெரிய ஆடீசனில் தேர்வான வேதிகா

பாலிவுட் படத்திற்காக நடந்த மிகப்பெரிய ஆடீசனில் தேர்வான வேதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vedhikaபரதேசியில் அதர்வா முரளியை மிரட்டியும் விரட்டியும் காதலித்து அங்கம்மாவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் வேதிகா. தமிழிலிருந்து பாலிவுட் போய் சாதித்த கதாநாயகிகளின் பட்டியலில் அவருக்கும் ஓரிடம் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாபநாசம் படமெடுத்த ஜித்து ஜோசப் இந்தியில் களமிரங்கும் கிரைம் திரில்லர் படத்தில் வேதிகா நடிக்கிறார். 2012 ல் வெளிவந்த ” த பாடி ” என்ற ஸ்பானிஷ் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது.

இம்ரான்ஹாஸ்மி கதாநாயகனாகவும் முக்கிய வேடத்தில் ரிஷி கபூரும் நடிக்கும் இந்த படத்தில், காலகண்டி பட நடிகை ஷோபிதா துலிபாலா மற்றொரு முக்கிய வேடத்திற்கு ஒப்பந்தமாகி உள்ளார்.

தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு படங்களில் நடித்துள்ள வேதிகாவுக்கு 2013 ல் வெளிவந்த பாலாவின் பரதேசி படம் நல்ல புகழை தேடிதந்தது.

பாலிவுட் படவாய்ப்பு குறித்து கேட்டபோது, இந்தி பட உலகில் நுழைவதற்கு நல்ல வாய்ப்பை எதிர்பார்திருந்தேன், இப்பொழுது இந்த வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி என்றார் வேதிகா.

வேதிகா தேர்வு செய்யப்பட்டது குறித்து, நாடு முழுவதும் நடத்திய தேடுதல் வேட்டையில் பல ஆடிஷன்களுக்கு பிறகு தங்களிடம் வேதிகா சிக்கியதாக கூறுகிறார் இயக்குனர் ஜித்து ஜோசப்.

அப்பாவித்தனம் கலந்த இளம் கல்லூரி மாணவி கதாபாத்திரம் அவருக்கு அழகாக பொருந்துகிறது என்றும் இம்ரான்- வேதிகா ஜோடி ரசிகர்களை கவர்ந்திழுக்கும் என்றும் இயக்குனர் கூறுகிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் மும்பையில் தொடங்கியது, அடுத்த கட்ட படப்பிடிப்பு மொரீஷியசில் விரைவில் தொடங்கவுள்ளது.

இளையராஜா பிறந்தநாளுக்கு தமிழில் வாழ்த்தினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

இளையராஜா பிறந்தநாளுக்கு தமிழில் வாழ்த்தினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ilayaraaja and ramanth govindஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்த இளையராஜா இன்று ஜூன் 2 தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

பல திரையுலக பிரபலங்களும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் தமிழில் வாழ்த்தியுள்ளார்.

“இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும், ஒப்பற்ற கலைஞர் ,இசை மாமேதை, தன்னேரில்லா இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

இவ்வாண்டுத் தொடக்கத்தில்,அன்னாருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியதை யான் பெற்ற பெரும்பேறாகக் கருதுகிறேன் – குடியரசுத் தலைவர் கோவிந்த்.” என அவர் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என மூன்று மொழியிலும் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் இளையராஜாவுக்கு தான் வழங்கிய பத்ம விபூஷண் விருது கொடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஜனாதிபதி இணைத்து பதிவிட்டுள்ளார்

தனது பிறந்தநாளையொட்டி ரசிகர்களுடன் போட்டோ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் இளையராஜா.

அதன்படி இந்தாண்டும் தமிழ்நாடு முழுவதிலிருந்து ஏராளமான ரசிகர்கள் இளையராஜாவிற்கு நேரில் வாழ்த்து சொல்லி அவருடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.

சென்னை, வடபழனியில் உள்ள இளையராஜாவின் ஸ்டுடியோவில் இந்த சந்திப்பு நடந்தது.

More Articles
Follows