தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை உதயநிதி நிரூபித்துவிட்டார்..; டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், சசிகலா குறித்தும் தொடர்புபடுத்தி அண்மையில் பேசினார் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி.

எனவே பெண்கள் மத்தியிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதுகுறித்து டி.டி.வி.தினகரன் தன் ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில்…

‘’பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மிகப்பெரிய தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்தி பேசிய தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை மு.க.ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார்.

கண்ணியத்திற்கும் தி.மு.கவுக்கும் ஒரு நாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு இது இன்னொரு சாட்சி.

நெஞ்சம் முழுக்க அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய ஒருவரால்தான் இப்படி வக்கிரமாக பேச முடியும். தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டு பேசியிருக்கிறார்.

அவர் வந்த வழி அப்படி! பெண்களை பெரிதும் மதிக்கிற தமிழ்ச் சமூகத்தில் இத்தகைய குணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது’’ எனப் பதிவிட்டுள்ளார்.

Overall Rating : Not available

Latest Post