நாட்டுக்காக நல்ல விஷயங்கள் செய்ய ரெடியாகும் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்

நாட்டுக்காக நல்ல விஷயங்கள் செய்ய ரெடியாகும் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்‘ (Tamil Movie Journalist Association – TMJA) சார்பில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடன இயக்குநர் ஸ்ரீதர் உறுப்பினர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து பேசியபோது…

”இன்னைக்கு நடிகர், நடிகைகள், மற்ற திரைப்பட கலைஞர்கள் எல்லாம் அடிமேல் அடிவெச்சு வளர்ந்து ஜொலிக்கிறாங்கன்னா அதுக்கு பத்திரிகையாளர்களான நீங்கதான் காரணம்.

1996லேருந்து ஃபீல்டுல இருக்குற நான் ஒரு டான்ஸ் மாஸ்டரா பேர் வாங்கி இருக்கேன்னா அதுக்கும் பத்திரிகையாளர்கள் சிலர்தான் காரணம்.

தமிழ்நாட்டுக்காக சில நல்ல விஷயங்கள் செய்ய ஐடியா வெச்சிருக்கோம். தொடர்ந்து உங்க சப்போர்ட் வேண்டும்” என்றார்.

TMJA pongal celebration speech in dance master Sridhar

மன்மத ராசா பாட்டாலதான் அது நடந்துச்சி.. – இசையமைப்பாளர் தினா

மன்மத ராசா பாட்டாலதான் அது நடந்துச்சி.. – இசையமைப்பாளர் தினா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்‘ (Tamil Movie Journalist Association – TMJA) சார்பில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இசையமைப்பாளர் தினா பேசும்போது…

”அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். பத்திரிகையாளர்கள் சினிமா கலைஞர்களைப் பற்றி எழுதினதாலதான் சினிமா கலைஞர்கள் அவங்களால் கோடி கோடியா சம்பாதிக்கிறாங்க.

என்னையும் பத்திரிகையாளர்கள் தான் வளர்த்து விட்டாங்க. குறிப்பா நான் சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்துல மன்மத ராசா பாட்டு வெளியான நேரத்துல என்னைப் பத்தி பத்திரிகையாளர் சபீதா ஜோசப் எழுதின ரைட்டப்தான் என்னை பெருசா அடையாளம் காட்டுச்சு.

எல்லாரையும் கோடீஸ்வரங்களாக்கியவர்கள். அதெல்லாம் சரி செய்ய, எப்படி அரசாங்கத்தோட நல வாரியத்துல உறுப்பினரா இருக்கிற பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்டங்கள் கிடைக்குதோ, அதே மாதிரி உங்களுக்கும் அரசாங்கத்தோட நலத்திட்டங்கள் கிடைக்க இந்த சங்கத்தின் தலைவி கவிதா அவர்கள் முயற்சி எடுக்க வேண்டும்” என்றார்.

TMJA pongal celebration speech in Music composer deena

படைப்புக்கு உதவி செய்பவர்களும் படைப்பாளிகள்தான்..- சிலிர்க்கும் சீனு ராமசாமி

படைப்புக்கு உதவி செய்பவர்களும் படைப்பாளிகள்தான்..- சிலிர்க்கும் சீனு ராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்‘ (Tamil Movie Journalist Association – TMJA) சார்பில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இயக்குநர்’ சீனு ராமசாமி, நடன இயக்குநர் ஸ்ரீதர், திரையிசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தினா, திரையிசைக் கலைஞர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோனட் , நடிகர் ‘டைகர் கார்டன்’ தங்கதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் பேசும்போது…

“உங்களையெல்லாம் பார்த்து பொங்கல் வாழ்த்து சொல்ல வேண்டும்; பார்வையில் நன்றி சொல்ல வேண்டும் உட்பட பல காரணங்களுக்காகத்தான் நான் இங்கு வந்தேன். உங்களை எல்லாம் பார்த்ததில் சந்தோஷம்.

நான் கவிதை புத்தகம் ஒன்று வெளியிட்டிருக்கிறேன். பத்திரிகையாளர்கள் என்றாலே அவர்கள் படைப்பாளிகள்தான். படைப்புக்கு உதவி செய்பவர்களும் படைப்பாளிகள்தான். இன்றைய படைப்பாளிகள் நாளைய பத்திரிகையாளர்கள்.

இப்படி படைப்பாளிகளுக்கும் பத்திரிகையாளர்களுக்குமான உறவு தாய்க்கும் பிள்ளைக்குமான உறவு போன்றது. அப்படியான பத்திரிகையாளர்களில் மூத்த பத்திரிகையாளர்களுக்கு என்னுடைய புத்தகத்தை தர விரும்புகிறேன்” என்றார்.

அதையடுத்து, அவர் எழுதிய ‘புகார் பெட்டியில் படுத்துறங்கும் பூனை’ என்ற கவிதை தொகுப்பை மூத்த பத்திரிகையாளர்களுக்கு வழங்கி நூல் அறிமுகம் செய்தார்.

நூலை காலஞ்சென்ற கவிஞர் நா.முத்துக்குமாருக்கு சமர்ப்பணம் செய்திருந்த கவிதையை தலைவர் கவிதா வாசித்தார்.

TMJA pongal celebration speech in seenu ramasamy

ஒரே நேரத்தில் அஜித் பட இயக்குனர்கள் இருவர் சபரிமலை பயணம்.; யார் யார்.?

ஒரே நேரத்தில் அஜித் பட இயக்குனர்கள் இருவர் சபரிமலை பயணம்.; யார் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ படம் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியானது.

வினோத் இயக்கிய இந்த படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இயக்குனர் வினோத் சபரிமலை பயணம் செய்துள்ளார். அவர் ஐயப்பனை தரிசிக்க சென்று வீடியோ தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க உள்ள விக்னேஷ் சிவனும் தற்போது சபரிமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.

அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

H Vinoth Vignesh Shiva Travels to Sabarimalai temple

வதந்தி இயக்குனருக்கு 1.. FIR இயக்குனருக்கு 1.; பிரகாசிக்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ்

வதந்தி இயக்குனருக்கு 1.. FIR இயக்குனருக்கு 1.; பிரகாசிக்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்த ‘சிங்கம் 2’.. கார்த்தி நடித்த ‘தேவ்’ & ‘சர்தார்’.. சசிகுமார் நடித்த ‘காரி’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த நிறுவனம் பிரின்ஸ் பிக்சர்ஸ்.

இந்த நிறுவனம் ஏற்கெனவே சில தினங்களுக்கு முன் தங்கள் புதிய படைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

அதில்.. புதிய படத்தை இயக்குபவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்குகிறார் என அறிவித்தனர்.. இவர் விஜய் ஆண்டனி நடித்த ‘கொலைக்காரன்’ மற்றும் எஸ் ஜே சூர்யா நடித்த ‘வதந்தி’ என்ற வெப் தொடரை இயக்கியிருந்தார்.

இந்த அறிவிப்பை ஜனவரி 5ல் வெளியிட்டனர்.

இந்த நிலையில் தற்போது மற்றொரு படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த படைப்பை விஷ்ணு விஷால் நடித்த எஃப் ஐ ஆர் பட இயக்குனர் மனு ஆனந்த் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

விரைவில் இந்த படத்தில் பணியாற்ற உள்ள கலைஞர்கள் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

[email protected]_Pictures announce that they have signed @itsmanuanand (FIR Fame) for his next. Interesting updates are on the way!

@lakku76 @venkatavmedia @johnmediamanagr https://t.co/nfW4Db0quS

Prince Pictures announce that have signed FIR Fame for his next

ஜெயம் ரவியின் ‘அகிலன்’ படம் பிப்ரவரியில் ரிலீஸ்…

ஜெயம் ரவியின் ‘அகிலன்’ படம் பிப்ரவரியில் ரிலீஸ்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘அகிலன்’.

இப்படத்தில் தான்யா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷனில் உள்ளது.

இந்நிலையில், இப்படத்தை பிப்ரவரியில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம், பிப்ரவரி 17 அல்லது பிப்ரவரி 24 அன்று வெளியாகும் என்று தெரிகிறது. படத்தின் வெளியீட்டு தேதியை இன்னும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Jayam Ravi’s ‘Akilan’ is releasing in February

More Articles
Follows