சிறை பின்னணியில் மலைவாழ் மக்களை பற்றிய படம் திட்டி வாசல்

சிறை பின்னணியில் மலைவாழ் மக்களை பற்றிய படம் திட்டி வாசல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thitti vasal stillsகதை பிடித்துப்போய் தன் நெருக்கடியான தேதிகளை அனுசரித்து நாசர் கால்ஷீட் கொடுத்து நடித்துள்ள படம்தான் ‘திட்டி வாசல்’.

இது மலைவாழ் மக்களின் பிரச்சினைகள், போராட்டங்கள் பற்றியும் அவர்களின் வாழ்வியல் பற்றியும் பேசுகிற ஒரு படமாக உருவாகியுள்ளது.

திட்டிவாசல் என்றால் சிறையில் இருக்கும் சிறிய கதவுடைய வழியைக் குறிப்பதாகும்.

படத்தை இயக்கியுள்ளவர் எம். பிரதாப் முரளி.
“படம் பற்றி அவர் பேசும்போது. “போலீஸ் ஸ்டேஷனில் போடப்படும் எப்.ஐ.ஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கையைப் பொறுத்தே வழக்கின் தன்மை இருக்கும். ஆனால் அதிலுள்ள உண்மை நிலை தெரிவதற்குள் பல்வேறு சம்பவங்கள் நடக்கும். அந்தப் பாதிப்புகள் பற்றிய கதைதான் திட்டிவாசல் படம்.

இது முழுக்க முழுக்க சிறை பின்னணியில் நடக்கும் கதை. இது மலைவாழ் மக்களின் வாழ்க்கையையும் பிரச்சினைகளையும் யதார்த்தமாகப் பேசுகிறது. ” என்கிறார்.

படத்தில் நாசர் முக்கிய பாத்திரம் ஏற்றுள்ளார். முன்னணி கதை மாந்தர்களாக மகேந்திரன், கன்னட நடிகர் சின்னிவினோத் வருகிறார்கள். தனு ஷெட்டி, ஐஸ்வர்யா, அஜய்ரத்னம், தீரஜ்அஜய்ரத்னம், ஸ்ரீதர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

இது தனி ஒருவரின் கதையல்ல. ஒரு விளிம்புநிலை சமூகம் சார்ந்த பதிவு .

ஒளிப்பதிவு ஜி.ஸ்ரீனிவாசன்.
ஹரீஷ், சத்தீஷ், ஜெர்மன்விஜய் என மூவர் இசையமைத்துள்ளனர். பாடல்கள்- நா.முத்துக்குமார், சதீஷ், சிவ முருகன்.

நடனம் -‘தில்’ சத்யா, ராஜு. ஸ்டண்ட், ‘வயலன்ட் ‘வேலு, த்ரில்லர் மஞ்சு.

படம் பற்றி இயக்குநர் மேலும் பேசும் போது “இன்று மக்களிடம் உள்ள பிரச்சினைகளும் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கைச் சூழலும் தான் அவர்களில் சிலரை மாவோயிஸ்ட், நக்சலைட் என்று தீவிரவாத வழிகளில் செல்ல வைக்கிறது. ஆனால் என்றுமே வன்முறை பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது. ஜனநாயக புரட்சி வழியில்தான் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் .அது எப்படி சாத்தியம்? சிறு சிறு குழுக்களாக இயங்கும் மக்கள் ஒரே சக்தியாக இணைய வேண்டும். அப்போது வெற்றி நிச்சயம் என்று படத்தில் சொல்லியிருக்கிறோம்” என்கிறார்.

சென்னை , கோத்தகிரி, கேரளா, வயநாடு ,கோவா போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

முப்பத்தைந்து நாட்களில் காடு, மலை சார்ந்த பகுதிகளிலேயே முழுப்படப்பிடிப்பும் நடத்தி தங்கள் தொழில் வேகத்தைக் காட்டியுள்ளது. படக்குழு.

இப்படத்தை ‘கே 3 ‘சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீனிவாசராவ் தயாரித்திருக்கிறார்.

‘திட்டிவாசல்’ படம் செப்டம்பர் 22-ல் திரையரங்கு வாசல் வருகிறது.

வாருங்கள். புதிய யதார்த்த வாழ்வியலைத் திரையில் கண்ட அனுபவத்தைப் பெற்றிடுங்கள்

ரஜினியுடன் இணையாமல் இருப்பேனா? அரசியல் கட்சி குறித்து கமல் பேச்சு

ரஜினியுடன் இணையாமல் இருப்பேனா? அரசியல் கட்சி குறித்து கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini and kamalபிரபல பத்திரிகையின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கமல்ஹாசன் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

உங்களின் தனிக்கட்சியில் ரஜினி இணைந்தால் என்ன பதவி கொடுப்பீர்கள்? என்றனர்.

ஆண்டி கூடி மடம் கட்டிய கதை. கற்பனையின் எல்லைக்கு போய்விட்டார். எனக்கு இங்கிருந்து (மக்களை பார்த்து) சமிக்ஞை கிடைக்கட்டும். அவர் வரட்டும் பேசலாம்.

உங்களோடு இணைபவன் அவருடன் இணைய மாட்டேனா? அவருடன் பேசமாட்டேன் என்று நினைக்கிறீர்களா? இல்லை

அவரிடம் பேசுவதை உங்களிடம்தான் சொல்வேன் என்று நினைக்கிறீர்களா?

மேலும் அரசியல் கட்சி தொடக்கத்தை புரட்சி பிறந்த நாளில் அறிவிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

சினிமா/அரசியல்..? ரசிகர்களை சந்திக்கும்போது ரஜினி அறிவிப்பு..?

சினிமா/அரசியல்..? ரசிகர்களை சந்திக்கும்போது ரஜினி அறிவிப்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor rajinikanthபெப்சி ஸ்டிரைக்கால் ரஜினிகாந்த் நடித்து வரும் காலா பட சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

பெப்சி அமைப்பு வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றதால் காலா சூட்டிங் ஆரம்பம் ஆனது.

இதன் சூட்டிங் இன்னும் 40 நாட்களில் நிறைவு பெறும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் காலா சூட்டிங் முடித்தவுடன் அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பர் மாதத்தில் ரசிகர்களை ரஜினி சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே அவரின் அடுத்த கட்டம் அரசியலா அல்லது சினிமா? என்பது அப்போது தெரிய வரும் எனவும் அப்போது அதை பற்றிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஷ்ணுவிஷால் படத்திற்கு இசையமைக்கும் பாடகர் கிரிஷ்

விஷ்ணுவிஷால் படத்திற்கு இசையமைக்கும் பாடகர் கிரிஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Play back Singer Krish compose music for Vishnu Vishal movieகதாநாயகன் படத்தை தொடர்ந்து ராட்சன், சிலுக்குவார்ப்பட்டி சிங்கம், பொன் ஒன்று கண்டேன் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் விஷ்ணுவிஷால்.

இதனையடுத்து பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இப்படத்திற்கு பிரபல நடிகரும் பாடகரும் நடிகை சங்கீதாவின் கணவருமான கிரிஷ் இசையமைக்கவிருக்கிறாராம்.

அறிமுக இயக்குனர் வெங்கடேஷ் இப்படத்தை இயக்குகிறார்.

Play back Singer Krish compose music for Vishnu Vishal movie

மெர்சல் படத்துடன் இணைந்தது டிக் டிக் டிக்

மெர்சல் படத்துடன் இணைந்தது டிக் டிக் டிக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tik Tik Tik movie TN theatrical rights bagged by Sri Thenandal filmsசக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம்ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அஜிஸ், ஜெயப்பிரகாஷ், ரமேஷ்திலக் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் டிக்டிக்டிக்.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தை ஹித்தேஷ் ஜபக் தயாரித்துள்ளார்.

இந்தாண்டு இறுதியில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்நிறுவனம் விஜய்யின் மெர்சல் படத்தை தயாரித்து வருவதும் இதை தீபாவளிக்கு வெளியிடவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மெர்சல் படம் வெளியாகும் தியேட்டர்களில் டிக் டிக் டிக் டீசர்/ட்ரைலர் திரையிடப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tik Tik Tik movie TN theatrical rights bagged by Sri Thenandal films

அர்ஜீன் ரெட்டி ரீமேக் எதிரொலி; தனுஷ் ஏமாற்றம்; காட்சிகள் நிறுத்தம்

அர்ஜீன் ரெட்டி ரீமேக் எதிரொலி; தனுஷ் ஏமாற்றம்; காட்சிகள் நிறுத்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arjun Reddy tamil remake rights bagged by E4 entertainmentசந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்த படம் அர்ஜீன் ரெட்டி.

தெலுங்கில் ரூ. 4 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

எவரும் எதிர்பாரா வகையில் கிட்டதட்ட 10 மடங்கு லாபத்தை இப்படம் கொடுத்துள்ளதாம்.

எனவே தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படத்தை ரீமேக் செய்ய பலத்த போட்டி நிலவியது.

தமிழ் ரீமேக் உரிமைக்கு தனுஷ் பேச்சுவார்த்தை நடத்தியும், அது பலனிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இதன் தமிழ், மலையாள மற்றும் கன்னட டப்பிங் மற்றும் ரீமேக் உரிமைகளை கைப்பற்றியுள்ளதாம்.

இதனையடுத்து சென்னையில் சில தியேட்டர்களில் திரையிடப்பட்ட இப்படக் காட்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Arjun Reddy tamil remake rights bagged by E4 entertainment

More Articles
Follows