தியேட்டர் ஓப்பனிங்.. சூட்டிங் ஸ்டார்ட் எப்போது..? அமைச்சருடன் ஆலோசனை

தியேட்டர் ஓப்பனிங்.. சூட்டிங் ஸ்டார்ட் எப்போது..? அமைச்சருடன் ஆலோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

darbar celebraionகொரோனா வைரஸை தடுக்க விடப்பட்டுள்ள பொது முடக்கத்தால் 2 மாதங்களாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

தற்போது சில தளர்வுகளுடன் கடைகள் & வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு ஒரு சில பகுதிகளில் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிப்பது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆலோசனை.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திரையரங்க உரிமையாளர் பன்னீர்செல்வம், இயக்குனர் ஆர் வி உதயகுமார் ஆர் கே செல்வமணி ஆகியோரும் உடனிருந்தனர்.

மேலும் திரைப்படம் படப்பிடிப்பு தொடங்குவதற்கு அனுமதி வழங்கக் கோரி கோரிக்கை விடுத்தனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவியளித்த வேலம்மாள் நெக்ஸஸ்

மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவியளித்த வேலம்மாள் நெக்ஸஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nasscom in Association with Velammal undertakes Corona relief measuresநாட்டில் நிலவும் ஊரடங்கு கருத்தில் கொண்டு வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் வாழும் ஏழை எளியோருக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறது.

ஊரடங்கு தொடங்கியதிலிருந்து இதுவரை பல ஆயிரக்கணக்கான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இந்த நிவாரணப் பொருட்களில் அரிசி, கோதுமை மாவு, துவரம் பருப்பு, உப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கும்.

இந்த முயற்சியால் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்துள்ளனர். மேலும் அத்தியாவசிப் பொருள்கள் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு, 8056063519 என்னும் அலைபேசியைத் தொடர்பு கொள்ளவும்

Velammal undertakes Corona relief measures

மே 19 முதல் புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகள் திறப்பு; மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி

மே 19 முதல் புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகள் திறப்பு; மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Liquor shops will reopen in Puducherry state tomorrow onwards says CM Narayanasamyபுதுச்சேரிகாரரா..? காரைக்கால்காரரா.? அப்படின்னா அதிர்ஷ்டசாலிப்பா… அங்க சரக்கு கம்மி ரேட்டுல கிடைக்கும். அவிங்க ஜாலியா இருப்பாங்க என்பதே பலரின் நினைப்பா இருக்கும்.

ஆனால் அங்கும் பலர் குடிக்காமல் இருக்கிறார்கள் என்பது வேறுக்கதை.

சரி நாம விஷயத்துக்கு வருவோம்.

கொரோனா பொது முடக்கம் காரணமாக மதுபானக்கடைகள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன.

சில தினங்களுக்கு முன் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

ஆனால் புதுச்சேரியில் இன்றுவரை 55 நாட்களாக மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.

புதுச்சேரியில் 450-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் மார்ச் 23-ம் தேதி மூடப்பட்டன.

தற்போது இரு மாதங்களை நெருங்கும் வேளையில் நாளை மே 19 முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் மத்திய அரசு அறிவித்த பொதுமுடக்கம் புதுச்சேரியில் மே 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நாளை முதல் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படும்.

புதுச்சேரிக்குள் தனிமனித இடைவெளியுடன் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படும்.

அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், ஆலைகள், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.

திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் கலந்துக் கொள்ளலாம். துக்க நிகழ்ச்சிகளில் 20 பேர் மட்டுமே கலந்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கும் காரைக்காலிலிருந்து புதுச்சேரிக்கும் பேருந்துக்கள் இயக்க தமிழக அரசுடன் பேசி முடிவு வழியில் எங்கேயும் நிறுத்தாமல் நேரடியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு இடையில் கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழக பகுதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Liquor shops will reopen in Puducherry state tomorrow onwards says CM Narayanasamy

நாங்க இப்போ பிஸி…; சந்தானத்தின் பிஸ்கோத் டைரக்டர் சொல்லிட்டாரு

நாங்க இப்போ பிஸி…; சந்தானத்தின் பிஸ்கோத் டைரக்டர் சொல்லிட்டாரு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

santhanamஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம்  ஹீரோவாக நடித்து வரும் படம் ‘பிஸ்கோத்’.

மசாலா பிக்ஸ், எம்.கே.ஆர்.பி.புரடொக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

 

சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பலா ஆகியோர் நடித்துள்ளனர்.

 

இந்த நாயகிகளுடன் பிரபல சௌகார் ஜானகி, ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

கொரோனா ஊரடங்கு காரணமாக இப்பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் அனைத்தும் தடைபட்டது.

தற்போது தமிழக அரசு அனுமதி அளித்ததையடுத்து இதன் பணிகள் வேகமெடுத்துள்ளன.

 

இந்நிலையில், இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஆர்.கண்ணன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

 

பிஸ்கோத் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது. இந்த மாத இறுதிக்குள் இது முடிவடைந்துவிடும். எடிட்டர் செல்வா உடன் பணி புரிகிறேன் என தெரிவித்துள்ளார்.

மீண்டும் காப்பான் இயக்குனருடன் இணையும் சூர்யா

மீண்டும் காப்பான் இயக்குனருடன் இணையும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya kv anandஇறுதிச் சுற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

கொரோனா பொது முடக்கத்தால் ரிலீஸ் எப்போது என அறிவிக்கவில்லை.

இப்படத்தை அடுத்து ஹரி இயக்கத்தில் அருவா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இந்த படங்களை முடித்துவிட்டு கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பார் என கூறப்படுகிறது.

ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் அயன், மாற்றான், காப்பான் ஆகிய 3 படங்கள் உருவாகின.

இதில் அயன் தவிர மற்ற இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

லாக்டவுன் முடிந்த பின் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

சிம்பு-விஜய் ஆண்டனி-உதயநிதி ஆகியோருடன் நடித்தது பற்றி ஸ்ரீகாந்த்

சிம்பு-விஜய் ஆண்டனி-உதயநிதி ஆகியோருடன் நடித்தது பற்றி ஸ்ரீகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor srikanth‘மிருகா’ படத்தின் வெளியீடு குறித்தும் தான் நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் குறித்தும் நடிகர் ஸ்ரீகாந்த் சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

“மிருகா படத்தின் படப்பிடிப்பு 144 தடை உத்தரவு போடும் முன்பே முடிந்துவிட்டது. தற்போது, அனைத்து பணிகளும் முடிந்து வெளியாகத் தயாராகவுள்ளது. ஊரடங்கு முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியதும், திரையரங்குகள் திறக்கப்படும். அப்போது வெளியாகும் முதல் படமாக ‘மிருகா’ இருக்கும். இதில் ராய் லட்சுமி நாயகியாக நடிக்கிறார்.

மேலும், ‘மிருகா’ படத்திற்குப் பிறகு நானும், ஹன்சிகா மோத்வானியும் இணைந்து நடிக்கும் ‘மஹா’ படத்தில் நடிகர் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். கருணாகரன், தம்பி ராமையா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படம் துப்பறியும் திரில்லர் படமாக உருவாகி வருகிறது. பாதி படம் முடிந்து விட்டது.

அதேபோல், நானும், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் இணைந்து நடிக்கும் படம் ‘காக்கி’. இப்படத்தில் இரு கதாநாயகிகள். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இந்துஜாவும், எனக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகையும் நடிக்கிறார்கள்.

ஆனால், அவர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பும் கொரோனா ஊரடங்கால் பாதியிலேயே நிற்கிறது.

‘காக்கி’ படத்தை ‘வாய்மை’யை இயக்கிய செந்தில் குமார் இயக்குகிறார். மேலும், இப்படம் சமுதாய சிந்தனையைக் கொடுக்கும் படமாக இருக்கும். எனக்கும், விஜய் ஆண்டனிக்கும் சரிசமமான பாத்திரங்கள் இருக்கிறது. மிகவும் உணர்வுப்பூர்வமான படமாக இருக்கும்.

அடுத்து, உதயநிதி நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். இதுவும் பாதியில் நிற்கிறது”என தெரிவித்துள்ளார் ஸ்ரீகாந்த்.

More Articles
Follows