தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கேடி. குஞ்சுமோன் தயாரிப்பில் வெளியான ‘ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஷங்கர்.
இந்த படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். அந்த படம் முதல் ஷங்கரின் 95% படங்களுக்கு ரஹ்மான் தான் இசை.
இடையில் அந்நியன் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார்.
தற்போது தயாரிப்பில் இருக்கும் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
அப்போதே ஷங்கர் ரஹ்மான் கூட்டணி முறிவா? என சலசலப்பு உருவானது.
தற்போது தனது அடுத்த படத்திற்கும் இசையமைப்பாளரை மாற்றியிருக்கிறார் ஷங்கர்.
தெலுங்கு நடிகர் ராம் சரண் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோரின் இரு படங்களை இயக்கவுள்ளார் ஷங்கர்.
‘அந்நியன்’ பட ஹிந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார்.
ஷங்கர் – ராம் சரண் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகுகிறது.
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை தயாரிக்கிறார்.
இந்த நிலையில் ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளார்.
ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தில் நடித்த தமன், தற்போது ஷங்கர் படத்துக்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷங்கர் படத்தில் பணியாற்றுவது குறித்த தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் தமன்.
Thaman to compose music for director Shankar’s next