பிளாஸ்டிக்கு தடை செய்ய விவேக்-சூர்யா-ஜோதிகா-கார்த்தி பிரச்சாரம்

suriya and jyothika in plastic awareness adசுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தமிழக அரசு வருகிற 2019 ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை கண்காணிக்கும் வகையிலும், இது தொடர்பாக அரசுத் துறைகளால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும், மூத்த ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட, “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” என்ற வலைதளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார்.

மேலும் பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்ப்பது மற்றும் மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திடும் வகையில் தயாரிக்கப்பட்ட குறும்படங்களையும் அவர் வெளியிட்டார்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

இதன் தொடாச்சியாக, மாவட்ட அளவில் “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” பிரச்சாரத்தை வருகிற நாளை 25-ந்தேதி மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் துவக்கி வைப்பார்கள்.

பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்வதற்கு விளம்பரத் தூதுவர்களாக நடிகர்கள் விவேக், சூர்யா, கார்த்திக், நடிகை ஜோதிகா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Latest Post