• ‘அப்பா’வுக்காக சூர்யா-கார்த்தியின் ‘சித்திரச்சோலை’

  sivakumar suriya karthiசூர்யா, கார்த்தி நடத்தும் சிவகுமாரின் சித்திரச்சோலை கண்காட்சி கோயம்புத்தூரில் 3 நாட்கள் நடைபெறுகிறது.

  தன்னிகரில்லா நடிகர் சிவகுமாரின் 75 –வது பிறந்தநாளை சென்னையில், அவர் வரைந்த ஓவியங்களை கொண்டு கண்காட்சி விழா நடத்தி அப்பாவின் வாழ்த்துகளை பெற்றார்கள் சூர்யா, கார்த்தி.

  பல்லாயிரகணக்கான பொதுமக்களும், சினிமா மற்றும் பிரபலங்களும் கண்டுகளித்தனர்.

  இதைபோல் கோயம்புத்தூர் மக்களும் தங்களது விருப்பங்களை தெரிவிக்க, வருகிற 14,15,16 தேதிகளில் நடத்துகிறார்கள்.

  கோயம்புத்தூர் G.D. அரங்கம், எண்: 734 பிரசிடன்ட் ஹால் , அவினாசி ரோடு விலாசத்தில் நடக்கவிருக்கும் இக்கண்காட்சி 14 –ம் தேதி மாலை 5 மணி முதல் 8 மணி வரை 15,16 தேதிகளில் காலை 10.30 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெறுகிறது.

  சூர்யா, கார்த்தி இணைந்து நடத்தும், இந்த சிவகுமாரின் சித்திரச்சோலை ஓவியகண்காட்சியில் தினமும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை சிவகுமார் கலந்து கொள்வார்.

  Suriya and Karthi Organizing their Dad #Sivakumar ‘s Chithira Cholai

  Overall Rating : Not available

  Leave a Reply

  Your rate

  Latest Post