டபுள் மீனிங் படத்தில் கிராமத்து இளைஞனாக நடிகர் சிம்பு..?

டபுள் மீனிங் படத்தில் கிராமத்து இளைஞனாக நடிகர் சிம்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuவெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள ’மாநாடு’ படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு.

இந்த படத்தின் சூட்டிங் கொரோனா பிரச்சினைக்கு பிறகு தொடங்கவுள்ளது.

இந்த படத்திற்கு சிம்புவை இயக்கவுள்ள ஓரிரு இயக்குனர்கள் காத்திருக்கின்றனர்.

அந்த வரிசையில் தற்போது சுசீந்திரன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சுசீந்திரன் சொன்ன கிராமத்து கதை சிம்புவை கவர்ந்துவிட்டதாகவும் விரைவில் அந்த படத்தில் நடிப்பார் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

இப்படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் என்று கூறப்படுகிறது.

சிம்புவின் படங்கள் பெரும்பாலும் சிட்டி சப்ஜெக்ட் படங்களாவே இருக்கும்.

சிம்பு நடிப்பில் கோவில் மற்றும் சிலம்பாட்டம் உள்ளிட்ட ஒரு சில படங்கள் மட்டுமே கிராமத்து படங்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

STR – Susenthiran new movie updates

நிஜத்தில் ஆண்; சீரியலில் பெண்… பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமாவின் குழந்தை ரகசியம்

நிஜத்தில் ஆண்; சீரியலில் பெண்… பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமாவின் குழந்தை ரகசியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pandian stores meena babyசீரியல் என்றாலும் சரி.. ரியால்ட்டி ஷோ என்றாலும் சரி… பிக்பாஸ் என்றாலும் சரி.. ரசிகர்களை கவருவதில் விஜய் டிவி வித்தியாசமான ஒன்றுதான்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ரசிகர்கள் ஏராளம்.

அதில் மீனா என்ற கேரக்டரில் நடிப்பவர் நடிகை ஹேமா.

இந்த தொடரின் கதைப்படி ஹேமா கர்ப்பம் தரித்தார். அதுவே அவரின் நிஜ வாழ்க்கையில் நடந்தது. எனவே அவருக்கு வளைகாப்பு நடத்தி அதை சீரியலுக்கு பயன்படுத்தினர்.

அந்த ஒரு நாள் மட்டும் வளைகாப்பு நிகழ்ச்சி 3 மணி நேரம் ஒளிப்பரப்பானது.

இது பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

சீரியல் கதைப்படி மீனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் நிஜத்தில் நடிகை ஹேமாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Pandian Stores Meena blessed with baby boy in real

தன் பழைய பட டைட்டிலையே லோகேஷ் படத்துக்கு வைக்க கமல் முடிவு?

தன் பழைய பட டைட்டிலையே லோகேஷ் படத்துக்கு வைக்க கமல் முடிவு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal guruஓரிரு தினங்களுக்கு முன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள அவரின் 232வது பட அறிவிப்பு வெளியானது.

இந்த படத்தை கமலே தன் சொந்த பேனரில் தயாரிக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த பட அறிவிப்பு வெளியான போது #எவனென்று நினைத்தாய் என்ற வாசகமும் டிரெண்டிங் ஆனது. ஆனால் இது டைட்டில் இல்லை என அப்போதே நாம் தெரிவித்து இருந்தோம்.

இந்த நிலையில் இப்படத்துக்கு ‘குரு’ என்று டைட்டில் வைக்கவுள்ள கூறப்படுகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் நடிப்பில் ‘குரு’ என்ற தலைப்பில் வெளியானது.

இவையில்லாமல் 40 வருடங்களுக்கு முன்பே கமல், ஸ்ரீதேவி நடிப்பில் ‘குரு’ என்ற படம் வெளியானது.

அந்த தலைப்பை தான் இப்போது கமல் பயன்படுத்த உள்ளதாக தெரிகிறது.

ஒரே தலைப்பு வேறு நடிகர்கள் என்றால் கூட குழப்பம் வராது. ஆனால் ஒரே தலைப்பு அதே நடிகர் என்றால் கொஞ்சம் குழப்பம் வரத்தானே செய்யும்.

ஒருவேளை குரு (#எவனென்று நினைத்தாய்) என்ற வார்த்தையும் இணைந்து வருவோம் என எதிர்பார்க்கலாம்.

லோகேஷ் தற்போது இயக்கியுள்ள விஜய்யின் மாஸ்டர் என்ற வாசகத்தின் தமிழ் பொருள் குரு என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Lokesh Kanagaraj to repeat Kamalhaasan’s old title

போற போக்குல’ விஜய் எடுத்த செல்ஃபி. ஷாரூக் சாதனையை சாச்சுடுட்டே

போற போக்குல’ விஜய் எடுத்த செல்ஃபி. ஷாரூக் சாதனையை சாச்சுடுட்டே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay neyveli slefieகடந்த பிப்ரவரி மாதம் நெய்வேலியில் லோகேஷ் இயக்கி வந்த மாஸ்டர் பட சூட்டிங்கில் நடித்து வந்தார் விஜய்,

அப்போது வருமான வரித்துறையினர் விஜய் வீட்டில் சோதனை நடத்தினர்.

மேலும் விசாரணைக்காக நெய்வேலியில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டார் விஜய்.

இது வழக்கமான சோதனை தான் என்றாலு இது அரசியல் விவகாரமாக பார்க்கப்பட்டது.

வருமான வரித்துறை சோதனைக்குப் பின்னர் படப்பிடிப்பு தளத்திற்கு விஜய் வந்த போது அவரை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.

எனவே அருகேயிருந்த வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார் தளபதி.

அதை தன் ட்விட்டரிலும் பகிரவே பல பிரபலங்கள் அதை ரீட்வீட் செய்தனர்.

இந்த நிலையில் இந்தியாவில் அதிகம் பேரால் ரீட்வீட் செய்யப்பட்ட செல்ஃபி என்ற சாதனையை விஜய்யின் செல்ஃபி பெற்றுள்ளதாம்.

இதற்கு முன்பு பாலிவுட் ஷாரூக்கானின் ட்விட்டர் பதிவுதான் முதலிடத்தில் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தளபதி ரசிகர்கள் #INDIAsMostRTedVIJAYSelfie என்ற ஹேஷ்டேக்கில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Vijays neyveli selfie creates records

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளில் லைகா-வின் மெகா கிப்ட்

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளில் லைகா-வின் மெகா கிப்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மையில் கர்மயோகி திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

அதாவது… நம்முடைய செயல் எப்போதும் சேவை மனப்பான்மையோடு இருக்கவேண்டும்.

ஏதோ கடமைக்காக செய்தோம் சம்பளம் வாங்கினோம் என இருக்கக் கூடாது.

யார் அரசுப் பணியில் தன்னை முழுமையாக அர்பணித்து கொள்கிறார்களோ அவர்களே கர்மயோகி.

அனைத்து அரசுப்பணியாளர்களையும் கர்மயோகிகளாக மாற்றுவதே மிஷன் திட்டத்தின் நோக்கமாகும்.

முக்கியமாக சிவில் சர்வீசஸ் பணியில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற உயர் பணியில் இருப்பவர்களுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி பிறந்த நாளில் ‘கர்மயோகி’ பட அறிவிப்பை வெளியிட்டு மோடிக்கு பரிசளிப்பதாக அறிவித்துள்ளது லைகா.

அவர்களில் அறிக்கையில்…

மோடியின் வரலாற்று வாழ்க்கை திரைப்படமான கர்மயோகி படத்தை தமிழில் வழங்கவுள்ளோம்.

மஹாவீர் ஜெயின் தயாரிக்க சஞ்சய் லீலா பன்சாலி வழங்குகிறார்.

சஞ்சய் திரிபாதி இயக்குகிறார். செயல் ஹாடா இசையமைப்பாளர்.

மோடியின் இளமைப்பருவத்தை அடிப்படையாக கொண்ட இந்த படம் விரைவில் வெளியாகிறது. தமிழில் லைகா நிறுவன சார்பில் சுபாஷ்கரன் வெளியிடுகிறார்.

karma yogi

Lyca Productions to present Karma Yogi

மறு தேர்தல்? வாக்கு எண்ணிக்கை? விஷால் கார்த்தி & எதிரணி செப். 24க்குள் பதிலளிக்க ஐகோர்ட் ஆர்டர்

மறு தேர்தல்? வாக்கு எண்ணிக்கை? விஷால் கார்த்தி & எதிரணி செப். 24க்குள் பதிலளிக்க ஐகோர்ட் ஆர்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal Karthiதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் 22ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தல் சமயத்தின் போது சங்க உறுப்பினர்கள் பலர் நீக்கப்பட்டனர்.

மேலும் தபால் வாக்குகள் அளிக்கப்படாதது தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தபால் வாக்கு பிரச்சினையால் ரஜினிகாந்த் வாக்களிக்கவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சங்க தேர்தலுக்கு ரூ.30 லட்சம் செலவிடப்பட்டுள்ளதால் மறுதேர்தல் நடத்துவது என்பது சாத்தியம் இல்லை.

மேலும், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண உத்தரவிட வேண்டும் என விஷால் தரப்பு வாதிட்டது.

ஆனால் தேர்தலை தனி நீதிபதி ரத்து செய்துள்ளதால் நியாயமான முறையில் மறுதேர்தல் நடத்த தயார் என ஏழுமலை தரப்பில் கூறப்பட்டது.

இருதரப்பினர் வாதத்தை கேட்ட நீதிபதி…

சட்ட போராட்டம் மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள்? என கேள்வி எழுப்பினார்.

மேலும் நடிகர் சங்கத்திற்கு மறு தேர்தல் நடத்துவதா; வாக்கு எண்ணிக்கை நடத்துவதா நடிகர்கள் விஷால், கார்த்தி மற்றும் எதிர்தரப்பினர் செப்டம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

High courts asks vishal team for sangam election issue

More Articles
Follows