சிம்புவை எல்லோரும் தப்பாவே புரிஞ்சுக்கிறாங்க… – ஸ்ரீகாந்த்

சிம்புவை எல்லோரும் தப்பாவே புரிஞ்சுக்கிறாங்க… – ஸ்ரீகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கே.கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தி பெட்’ (The Bed). வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் மணிபாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஸ்ரீகாந்த் நாயகனாகவும், நாயகியாக சிருஷ்டி டாங்கேயும் நடித்துள்ளனர்.

மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கோகுல் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைத்துள்ளார்.

“தி பெட்” படத்தின் டீசர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் மதியழகன், தயாரிப்பாளர் சங்க (கில்ட்) செயலாளர் ஜாக்குவார் தங்கம், மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் ரஷீக் ஆகியோர் கலந்துகொண்டனர். .

தயாரிப்பாளர் வி.விஜயகுமார் பேசும்போது, “இயக்குநர் மணிபாரதி எனது இருபது வருட கால நண்பர்.. பேச்சுவாக்கில் இந்தப்படத்தை ஆரம்பித்து, நல்லபடியாக முடித்துக் கொடுத்துள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த் கோத்தகிரி கடுங்குளிரிலும் கூட பத்து நிமிடம் முன்னாடியே படப்பிடிப்புக்கு வந்துவிடுவார். சிருஷ்டி டாங்கேவும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்.. படம் சிறப்பாக வந்துள்ளது” எனக் கூறினார்.

நடிகை தேவிபிரியா பேசும்போது, “இந்த படத்தில் நான் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.. என்னுடைய கதாபாத்திரம் குறைவான நேரமே வந்தாலும் போலீஸ் என்றதும் உடனே ஒப்புக்கொண்டேன்.. அதிலும் ஜான் விஜய் சாருக்கு அசிஸ்ட்டெண்ட் என்றதும் டபுள் ஓகே சொல்லி விட்டேன்” எனக் கூறினார்.

தயாரிப்பாளர் எட்செட்ரா என்டர்டெயின்மெண்ட் மதியழகன் பேசும்போது, “என்னுடைய மகா படத்திலும் ஸ்ரீகாந்த் நடித்து வருகிறார். 20 வருடத்திற்கு முன்பு ரோஜாக்கூட்டம் படத்தில் எப்படி பார்த்தோமோ அதே போல எப்போதும் மார்க்கண்டேயன் ஆகவே இப்போதும் இருக்கிறார். ”தி பெட் படத்தின் டீசர் சிறப்பாக வந்துள்ளது. படமும் வெற்றியடைய எனது வாழ்த்துகள் என வாழ்த்தினார்.

நாயகி சிருஷ்டி டாங்கே பேசும்போது, “இந்த படத்தில் கடும் குளிரில் நடுங்கிக்கொண்டே நடிக்க வேண்டி இருந்தது. சில நேரங்களில் குளிர் ஜுரம் கூட வந்துவிட்டது.. அந்த சமயத்தில் ஸ்ரீகாந்த் எனக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து காட்சிகளில் எளிதாக நடிக்க உதவினார்.. அதேபோல படப்பிடிப்பில் நடிகர் ஜான் விஜய் எப்போதும் எல்லாரையும் கலாய்த்துக் கொண்டு இருப்பார்.. ஆனால் நானும் பதிலுக்கு அவரை திருப்பி ஓட்டுவேன் என்பதால் இந்த பெண்ணிடம் மட்டும் எந்த வம்பு வைத்துக் கொள்ளக்கூடாதுப்பா என்று பயந்துகொண்டு என் பக்கமே வர மாட்டார்” என புதுத் தகவல் ஒன்றைக் கூறினார். .

இயக்குநர் மணிபாரதி பேசும்போது, “படப்பிடிப்புக்கு முதல் நாள் தான் இந்த படத்தின் கதையை முழுவதுமாக ஸ்ரீகாந்திடம் கூறினேன்.. அவருக்கு சிறிது தயக்கம் இருந்தது.. என்னிடம் சில கரெக்சன்களும் ஆலோசனைகளும் கூட சொன்னார்.. ஆனால் கடைசி நாள் படப்பிடிப்பு வரை நான் பிடிவாதமாக இருந்து அவரை கன்வின்ஸ் செய்து படப்பிடிப்பை நடத்தி முடித்தேன்..

ஒரு வசனத்தைக் கூட மாற்ற ஒப்புக்கொள்ளவில்லை. அந்த வகையில் அவரை நான் நிறையவே டார்ச்சர் செய்து இருக்கிறேன்.. ஆனால் அவையெல்லாம் படத்திற்காக மட்டுமே.. இருந்தாலும் அதற்காக அவரிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்..

நடிகர் ஸ்ரீகாந்த் பேசும்போது, “இந்த சமயத்தில் இப்படி ஒரு பிரஸ்மீட் வைக்க வேண்டுமா என்கிற தயக்கம் என்னிடம் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர், மக்கள் தொடர்பாளர் இருவரும் மிகுந்த நம்பிக்கை வைத்து இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்தார்கள்..

ஆனால் இவ்வளவு பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை ஏனென்றால் இந்த இரண்டு வருடமாக கோவிட்டால் எல்லாமே மாறிப்போயிருந்தது..

படம் துவங்கும் தேதியையும் முடிக்கும் தேதியையும் முன்கூட்டியே தீர்மானித்து விட்டு நடந்தாலே தயாரிப்பாளர் தப்பித்து விடுவார்.

முதலில் டைட்டிலைக் கேட்டதுமே சற்று தயக்கமாகத்தான் இருந்தது.. கதையும் ஏதாவது சர்ச்சையைக் கிளப்புமோ என்கிற பயமும் இருந்தது.. சில பேர் சொல்லும்போது ஒன்றாகவும், படமாக்கும்போது வேறு ஒன்றாகவும் செய்வார்கள்.. படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பின்னர் அதிலிருந்து பின்வாங்கவும் முடியாது. அப்படி செய்தால் வேறு சிலருடன் ஒப்பிட்டுப் பேச ஆரம்பித்து விடுவார்கள்..

எல்லோருக்கும் சிம்பு மாதிரி தைரியம் இருக்காது.. ஹேட்ஸ் ஆப் சிம்பு.. ஏனென்றால் பல பேர் சிம்புவை சரியாகப் புரிந்து கொள்ளவே மாட்டார்கள். யாரும் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத நடிகர் சிம்பு என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் அவர் ஒரு அற்புதமான மனிதர்.. படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு டோட்டலாக இயக்குநரிடம் தன்னை ஒப்படைத்து விடுவார்.. சிலர் வேறு மாதிரி கதையை குழப்பினாலும் கூட கண்டுகொள்ள மாட்டார்..

படங்களில் அர்ப்பணிப்பு உணர்வுடன் நடிக்கும்போது சில விஷயங்களில் நம் யோசனையை சொல்வோம்.. அது ஒரு நடிகர் என்று இல்லாமல் பார்வையாளரின் கண்ணோட்டத்திலும் இருக்கும்.

எல்லா இயக்குநர்களும் அவர்கள் மனதில் கதையை எப்படி உருவாக்கி வைத்திருக்கிறார்களோ அப்படித்தான் எடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.. ஆனால் படம் வெளியான பிறகு உண்மையான வெற்றி பார்வையாளர்களிடம் இருந்து தானே கிடைக்கும்..?

அதனால் ஹீரோக்கள் சொல்லும் சில விஷயங்களையும் ஏற்றுக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை..

என்னைப் பொருத்தவரை ஐடியா கொடுப்பது தவறில்லை.. ஆனால் குறுக்கீடு செய்யக்கூடாது க்ளைமாக்ஸில் கூட எனக்கு சற்று கருத்து மாறுபாடு இருந்தது.. இயக்குநரிடம் அதை மாற்றி விடலாமா எனக் கூறினேன்.. ஆனாலும் தான் இப்படித்தான் மனதில் உருவகப்படுத்தி வைத்திருப்பதாக அவர் சொன்னார்.. சரி என அவர் விருப்பத்திற்கு விட்டு விட்டேன்.. அவர் என்னிடம் என்ன சொன்னாரோ அதைக் கொஞ்சமும் மாற்றாமல் அவர் போக்கிலேயே எடுத்துவிட்டார்..

அதேசமயம் தி பெட் என பெயர் வைத்திருந்தாலும் குடும்பத்துடன் பார்க்கும் அழகான படமாக இது இருக்கும். இந்த டீசர் எல்லோரையும் கவரும் என்று நான் சொல்ல மாட்டேன்.. ஆனால் படம் சூப்பராக வந்திருக்கிறது என்பதை மட்டும் உறுதியாக சொல்வேன்..

இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதுமே படத்திற்கான ஒளிப்பதிவாளரை நான் சிபாரிசு செய்யலாமா எனக் கேட்டேன்.. ஆனால் ஏற்கனவே கோகுலை ஒப்பந்தம் செய்து விட்டேன்.. அவர்தான் என் முதல் சாய்ஸ் என்று இயக்குநர் மணிபாரதி கூறினார்.. ஆனால் படப்பிடிப்பின்போதுதான், நான் என்னுடைய தவறை உணர்ந்தேன்.. ஒருவரை பற்றி எதுவுமே தெரியாமல் அவரது திறமையை எடைபோடுவது எவ்வளவு தவறு என்பதை கோகுல் எனக்கு உணர்த்தினார் அந்த அளவுக்கு அற்புதமாக காட்சிகளை படமாக்கியதுடன் என்னை மிகவும் அழகாக காட்டியுள்ளார்.

ஊட்டி குளிரில் குறைந்த அளவு ஆடையுடன் நடுங்கிக்கொண்டே சிரமப்பட்டு நடித்தார் சிருஷ்டி டாங்கே. ஆனால் இயக்குனரோ ஸ்வெட்டர் குல்லா என குளிருக்கு இதமாக அணிந்துகொண்டு மானிட்டருக்கு பின் ரொம்ப பாதுகாப்பாக அமர்ந்து கொண்டிருந்தார். ஏன், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு வருவதுபோல கதை எழுத கூடாதா என்று கூட அவரிடம் கேட்டுவிட்டேன்.” என அருவி போல தன் மனதில் இருந்ததை எல்லாம் மேடையில் கொட்டி தீர்த்தார் ஸ்ரீகாந்த்.

*நடிகர்கள் ;*

ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில்

-தொழில் நுட்பக் கலைஞர்கள் விபரம்*

இயக்குநர் ; எஸ்.மணிபாரதி

ஒளிப்பதிவு ; கே.கோகுல்

படத்தொகுப்பு ஜே.பி

இசை ; தாஜ்நூர்

பாடல்கள் ; யுகபாரதி

கலை ; பழனிவேல்

சண்டைப் பயிற்சி ; ஆக்சன் பிரகாஷ்

ஸ்டில்ஸ் ; ராஜ் பிரபு

நிர்வாக தயாரிப்பாளர் ; A.V. பழனிச்சாமி

தயாரிப்பாளர் ; வி.விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் மற்றும் கே.கந்தசாமி, கே.கணேசன்

தயாரிப்பு நிறுவனம் ; ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் & ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ்

மக்கள் தொடர்பு ; A ஜான்

Srikanth praises STR at the bet teaser launch

‘வலிமை’ படத்தின் ஸ்டோரி இதுதான்..; சென்சார் போர்டு வெளியிட்ட தகவல்

‘வலிமை’ படத்தின் ஸ்டோரி இதுதான்..; சென்சார் போர்டு வெளியிட்ட தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வலிமை’ படம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று உலகமெங்கும் திரைக்கு வருகிறது.

இந்த்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் & இந்தி என 4 மொழிகளிலும் ரிலீஸ் ஆகவுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

தமிழில் ‘வலிமை’ படம் CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றது. 178 நிமிடங்கள் (2:58) மணி படம் ஓடும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் வலிமை படத்தின் கதை குறித்து ஒன்லைனை பிரிட்டிஷ் அரசின் சென்சார் போர்டு அறிவித்துள்ளது.

பிரிட்டிஷ் அரசின் சென்சார் இணையத்தில் படத்தின் கதை, சென்சார் போர்டு மூலம் (BBFC) நீக்கப்பட்ட காட்சிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

“கஞ்சா ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள் வியாபாரத்தில் உலகளவில் ஈடுபட்டுள்ள கிரிமினல் பைக்கர் கும்பலை தமிழக காவல்துறை எப்படி கண்டுபிடித்து வேட்டையாடுகின்றனர்” என ஒன்லைனை குறிப்பிட்டுள்ளனர்.

Valimai story leaked by censor board ?

ரஜினிகாந்துடன் இணையும் விஜய் – சிவகார்த்திகேயன் பட டைரக்டர்

ரஜினிகாந்துடன் இணையும் விஜய் – சிவகார்த்திகேயன் பட டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அண்ணாத்த’ படத்திற்கு ரஜினியை இயக்கப் போகும் அடுத்த இயக்குனர் யார்? என்பதே கோலிவுட்டின் கேள்வியாக உள்ளது.

தேசிங்கு, நெல்சன், பாண்டியராஜ் சிவா, கேஎஸ் ரவிக்குமார் என பல பிரபல இயக்குனர்களின் பெயர்கள் பேசப்பட்டன.

இந்த பலத்த போட்டியில் நெல்சன் திலீப்குமார் முன்னணியில் இருக்கிறார் என தெரிய வந்துள்ளது.

நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’ படம் வெற்றி பெற்றதை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தை இயக்கினார்.

இந்த படம் வெளியாகி பெரும் வெற்றி பெறும் முன்னரே விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் நெல்சன்.

‘அண்ணாத்த’ வெற்றிக்கு பின்னர் நெல்சன் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்து விட்டதால் உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைப்பார் எனவும் தகவல்கள் வந்துள்ளன

Beast director joins next with Rajinikanth

நல்லவர்கள் வருவதில்லை… மோசமான காவல்துறை..; முதல்வருக்கு கடிதம் எழுதிய ரிட்டையர்டு போலீஸ்

நல்லவர்கள் வருவதில்லை… மோசமான காவல்துறை..; முதல்வருக்கு கடிதம் எழுதிய ரிட்டையர்டு போலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதல்வரின் கவனத்திற்கு

எனது பெயர் சிவக்குமார், எனது சொந்த ஊர் நீலகிரி மாவட்டம். எனது தந்தை காவல்துறையில் 33 ஆண்டுகள் பணி செய்து எந்தவித தண்டனையும் இல்லாமல் கோயமுத்தூர் இருப்பு பாதை காவல்நிலையத்தில் 1964 ம் ஆண்டு பணி செய்து கொண்டிருக்கும் போது தங்க கட்டிகள் (18) கடத்தி வந்தவரை கைது செய்தவர்.

நானும் 1993ம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு கடைசியாக இரயில்வே திருப்பூரில் பணி செய்து வந்தேன்.

நான் சிறுவயதில் உதகை பஸ் நிலையம் அருகே நியூஸ்பேப்பர் விற்பனை செய்தும், கட்டிடம் வேலை செய்தும் பின்பு ஓட்டலில் வேலை செய்து பின்பு தான் காவல்துறையில் சேர்ந்தேன்.

நான் இரயில்வே காவல் நிலையத்தில் வேலை செய்து வரும்போது 2015ஆம் ஆண்டு என்னை வேண்டும் என்றே திருப்பூர் இரயில்வே காவல்நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு காவல்நிலையத்தில் 1 மாதம் தனி அலுவலாக அனுப்பி வைத்தனர்.

நானும் அதிகாரிகளின் ஆணையை மதித்து செங்கல்பட்டு இரயில்வே காவல்நிலையத்திற்கு சென்றேன்.

அப்போது எனது மகள் 12ஆம் வகுப்பு படித்து பொதுத்தேர்வு எழுதும் சமயத்தில் பணிமாறுதல். நான் செங்கல்பட்டு இரயில்வே காவல்நிலையத்திற்கு 1 மாதம் தனி அலுவல் முடிந்தும் என்னை மாற்றம் செய்யாமல் இருந்ததால் நான் மருத்துவ விடுப்பில் சென்றேன்.

அப்போது எனக்கு இரண்டு மாதம் சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. நானும் அதிகாரிகளை சந்தித்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

எனக்கு பதவி உயர்வு ஒன்றரை வருடம் கழித்து தான் HC to SSI வழங்கப்பட்டது. காரணம் கேட்டால் சர்வீஸ்புக் காணாமல் போய்விட்டது என்று கூறினார்கள்.
பிறகு மீண்டும் திருப்பூர் இரயில்வே காவல்நிலையத்திற்கு வந்து பணி செய்து கொண்டிருக்கும்போது மீண்டும் திருப்பூர் இரயில்வே காவல்நிலையத்தில் இருந்து காட்பாடி இரயில்வே காவல்நிலையத்திற்கு மாற்றம் செய்தார்கள்.

அப்போது எனது மகன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சமயத்தில் பணி மாறுதல் ஏன் பழி வாங்குகிறார்கள். எனது குழந்தைகளின் வாழ்க்கை கல்வியை நான் எப்படி பார்ப்பது? மேலும் காட்பாடி இரயில்வே காவல் நிலையத்திற்கு இருந்து மேட்டுப்பாளையம் இரயில்வே காவல்நிலையத்திற்கு மாற்றுதல் வாங்கி வந்தேன்.

ஆனால் என்னை 1 மாதம் கூட வேலை செய்யவிடாமல் கோயமுத்தூர் இரயில்வே காவல்நிலையம் ஈரோடு இரயில்வே காவல்நிலையம் ஆகிய காவல்நிலையங்களில் அடிக்கடி மாற்றம். ஏன் என்று கேட்டால் நீங்கள் தான் அனுபவசாலி என்று கூறி கொடுமை செய்தார்கள்.

பிறகு திருப்பூர் இரயில்வே காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் யாரும் இல்லை. நீங்கள் தான் வந்து வேலை செய்ய வேண்டும்.

கட்டாயப்படுத்தி மீண்டும் திருப்பூர் இரயில்வே காவல் நிலையத்திற்கு பணி மாறுதல் வந்து வேலை செய்து கொண்டிருக்கும் போது காவல் ஆளினர்கள் யாரும் சரியான நேரத்திற்கு பணிக்கு வரமாட்டார்கள்.

இரவு பணிக்கும் 8.00 மணிக்கு வரவேண்டும். ஆனால் காவல் ஆளினர்கள் 10.00 மணிக்கு வருவார்கள். வரும்போது மதுபோதையில் தான் வருவார்கள்.

இரவு 1 மணி வரை வேலை செய்வார்கள். அதற்கு அவர்களை பார்க்கவே முடியாது எங்கே படுத்து எந்திரித்து காலை 6.00 மணிக்கு வந்து அறிக்கை செய்வார்கள். யாரையும் கேள்வி கேட்ககூடாது. அவர்கள் வைத்ததுதான் சட்டம். காரணம் எஸ்.பி., டிஐஜி, ஐஜி அதிகாரிகள் சென்னையில் இருப்பதால் யாரும் கண்டுகொள்வதில்லை. ஒரு காவலர் பணிக்கு வராமல் 3 நாட்கள் இருந்தவரை அழைத்து அறிவுரை வழங்கியபோது என்னை வசைச்சொல்லில் திட்டினார்.

நான் மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்க அவர் அந்த காவலர் எந்த ஜாதி என்று கேட்கிறார். இப்படி காவல்துறை சென்று கொண்டிருப்பதால் மனமுடைந்து இனிமேல் காவல்துறையில் நல்லவர்கள் வேலை செய்ய முடியாது என்று முடிவு செய்து கடந்த 2020ம் தேதி விருப்ப ஓய்வுக்கு மனு சமர்ப்பித்தேன்.

விருப்ப ஓய்வு பெற்று 1 வருடம் ஆகியும் எனக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம் இதுவரை வழங்கப்படவில்லை. எஸ்.பி., டிஐஜி அவர்களிடம் பலமுறை தெரிவிக்க எந்த தகவலும் இல்லை.

நான் காவல்துறையில் 28 ஆண்டுகள் வேலை செய்து எந்தவித தண்டனையும் இல்லாமல் சிறப்பாக வேலை செய்து வந்தேன்.

நான் திருப்பூர் இரயில்வே காவல்நிலையத்தில் பணி செய்து வந்தபோது என்னால் ஒருவரின் உயிரையும் காப்பாற்றி உள்ளேன். இதுதான் எனக்கு சந்தோஷம். நல்லவர்கள் வேலை செய்ய வருவது இல்லை. காவல்துறை ரொம்ப மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

– சிவக்குமார், தலைமை காவலர் எண் 110

An ordinary police requests Tamil Nadu cm

காதலர் தினத்தில் ‘அரபி குத்து..’ போடும் விஜய் சிவகார்த்திகேயன் அனிருத் கூட்டணி

காதலர் தினத்தில் ‘அரபி குத்து..’ போடும் விஜய் சிவகார்த்திகேயன் அனிருத் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் ரிலீஸ் செய்திட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் “அரபி குத்து” பிப்ரவரி மாதம் 14 ஆம் நாள் காதலர் தினத்தை ஒட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார்.

இது பற்றிய அறிவிப்பில்… கோலமாவு கோகிலா & டாக்டர் பட பாடல்கள் ப்ரோமோ போல இந்த பாடலுக்கும் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இந்த ப்ரோமோ வீடியோவில் சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சன் ஆகியோருடன் மற்றும் விஜய்யின் குரலும் இடம்பெற்றுள்ளது.

Arabic Kuthu – Beast First Single Promo is here

‘மாலை’ படத்தில் மாஸ்டர் ரீ-என்ட்ரி..; மகுடம் சூடுவாரா..?

‘மாலை’ படத்தில் மாஸ்டர் ரீ-என்ட்ரி..; மகுடம் சூடுவாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடன இயக்குநர் ராபர்ட் மறுபிரவேசம் செய்யும் ‘மாலை’ படத்தின் தொடக்க விழா!

நடனத்தில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துப் பிரபலமானவர் ராபர்ட் மாஸ்டர். இவர் சற்று இடைவெளிக்குப் பின் மறுபிரவேசமாக ரீ-என்ட்ரி கொடுக்கும் படம் ‘மாலை’.

இப்படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா சென்னை ஆலப்பாக்கம் பிள்ளையார் கோவிலில் விமரிசையாக நடைபெற்றது.

ராபர்ட் மாஸ்டர் கதை நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை இயக்குபவர் ராஜேஷ் ராஜா. இவர் சில குறும்படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர்.

இயக்குநர் ராஜேஷ் ராஜா அரை மணி நேரத்தில் சொன்ன கதை பிடித்துப்போய் படத்தில் நடிக்கச் சம்மதிக்கும் அளவிற்கு அவர் கதை சொல்லும் விதம் ராபர்ட் மாஸ்டருக்குப் பிடித்து இருந்ததாகக் கூறுகிறார்.

அதை மீண்டும் விரிவாகச் சொல்லக் கேட்டபோதும் அவ்வளவு தெளிவாகக் கதை சொன்னதால் உடனே நடிக்க சம்மதித்து விட்டார்.

இப்படத்தில் சங்கீதா முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கு முன் அவர் சின்னச்சின்ன வேடங்களில் சில படங்களில் தலைகாட்டியவர் .

மகாலட்சுமி என்கிற குழந்தை நட்சத்திரம் படத்தில் அறிமுகமாகிறது. மகாலட்சுமியின் நடிப்பாற்றலை இயக்குநர் சோதித்துப் பார்த்தபோது நடித்துக் காட்டிய விதம் இயக்குநரை வியக்கவைத்திருக்கிறது.

மேலும் பல அறிமுகமான முகங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை பாலகங்கா கிரியேஷன்ஸ் ஜி கே எம் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கும் ‘மாலை’ படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாகும்.

Dance Master Robert re entry in Maalai

More Articles
Follows