ஶ்ரீகாந்த் வெற்றி அபூர்வா ராவ் இணைந்து நடிக்கும் ‘தீங்கிரை’

ஶ்ரீகாந்த் வெற்றி அபூர்வா ராவ் இணைந்து நடிக்கும் ‘தீங்கிரை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Theenkiraiசஹானா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.கே.குமார் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘தீங்கிரை’.

இதில் பல இளம் ரசிகைகளின் உள்ளத்தை கொள்ளை கொண்ட நாயகன் ஶ்ரீகாந்த்தும், 8 தோட்டாக்கள் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் வெற்றியும் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.

நாயகியாக அபூர்வா ராவ் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி நடிக்கிறார்.

இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் பிரகாஷ் ராகவதாஸ் இயக்குகிறார். சூழ்நிலை சிலரை இரையாக்கும்.

அதில் வெகுசில தருணங்களில் அந்த இரையே வேட்டையாடத் துவங்கி தீங்கு செய்யும் செயலே ‘தீங்கிரை’.

சைக்கோ கிரைம் திரில்லர் ஜானரில் கொரியன் படங்களுக்கு கொஞ்சமும் சளைக்காத வித்தியாசமான கதைக்களத்துடன் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இப்படம் உருவாக இருக்கிறது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பரபரப்பாக மிகுந்த பொருட்செலவில் படமாக இருக்கிறது.

பிரகாஷ் நிக்கி இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரண் கௌசிக் ஒளிப்பதிவு செய்கிறார்.

கலை இயக்குனராக என்.கே. ராகுல். மணிகுமரன் சங்கரா படத்தொகுப்பை கவனிக்கிறார்.

நிர்வாக தயாரிப்பாளர் ஆம்ஸ்ட்ராங் பிரவீன் மற்றும் ப்ரோடக்ஷன் கண்ட்ரோல் கே.எஸ். ஷங்கர்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி பிரகாஷ் ராகவதாஸ் இயக்குகிறார்.

Srikanth and Vetri joins for Theengirai

அரசியல் ஆசை இருக்கு… விரைவில் வருவேன்.. – பார்த்திபன்

அரசியல் ஆசை இருக்கு… விரைவில் வருவேன்.. – பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

parthibanபுதுச்சேரி அரசு சார்பில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்துக் கொண்டார் , இயக்குநரும் நடிகருமான பார்த்திபன்.

அப்போது அவர் பேசியதாவது…

“திரைத்துறையினர் அரசியலுக்கு வந்து சிறப்பான ஆட்சி தந்துள்ளனர்.

தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்களும் சிறப்பான ஆட்சி தருவார்கள் என நம்புகிறேன்.

தனக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது. நிச்சயமாக எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன்.

இளைஞர்களும் அரசியலுக்கு வரவேண்டும்” என்று பேசினார் பார்த்திபன்.

Actpr Parthiban talks about his political entry

சித்ராவின் ஜெராக்ஸ் காப்பி போல இருக்காரே.. அப்படின்னா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை இவர்தானா..?

சித்ராவின் ஜெராக்ஸ் காப்பி போல இருக்காரே.. அப்படின்னா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை இவர்தானா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chitra keerthana dinakatஅண்மையில் டிவி சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்துக் கொண்டார்.

போலீசார் விசாரணை நடத்திய நிலையில் சித்ராவின் நடத்தையில் சந்தேகமிட்டு சண்டை போட்டதை ஒப்புக்கொண்ட அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டார்.

தற்போது ஹேமந்த் பொன்னேரியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனால் முல்லை கேரக்டரில் யாரை நடிக்க வைப்பது? என சீரியல் தரப்பினர் நடிகையை தேடி வருகின்றனர்.

முழுசா சித்ரா வாக மாறிய பிரபல தொகுப்பாளினி .. புகைபடங்கள் உள்ளே

இந்த நிலையில் மறைந்த சித்ரா போன்றே உள்ள இளம் பெண்ணின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி் வருகிறது..

கீர்த்தனா தினகர் என்பவர் சமூக வலைதளத்தில் முல்லை கேரக்டர் சித்ராவை போன்று போட்டோ ஷுட் நடத்திய போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்த்துள்ளார்.

VJ Chitra’s Lookalike anchor Keerthana Dinakar Recreates Mullai From Pandian Stores

ஜெயம் ரவி & அருண் விஜய் மகனை தொடர்ந்து சினிமாவில் அறிமுகமாகும் சந்தானம் மகன்

ஜெயம் ரவி & அருண் விஜய் மகனை தொடர்ந்து சினிமாவில் அறிமுகமாகும் சந்தானம் மகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

santhanam sonலொள்ளு சபா, சகளை vs ரகளை ஆகிய டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான சந்தானம் அவர்களை ‘மன்மதன்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகம் செய்தார் சிம்பு.

அதன்பின்னர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உருவானார் சந்தானம்.

ரஜினி முதல் வளரும் ஹீரோக்கள் வரை அனைவரது படங்களில் காமெடியனாக நடித்தார்.

தில்லுக்கு துட்டு, இனிமே இப்படித்தான், A1 ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார்.

தற்போது ஜான்சன் கே இயக்கத்தில் “பாரிஸ் ஜெயராஜ்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் சந்தானத்தின் மகன் நிபுன் திரையுலகில் அறிமுகமாகிறாராம்.

பிரபுதேவா ஹிந்தியில் இயக்க உள்ள ஒரு படத்தில் சந்தானத்தின் மகன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அண்மையில் டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவியுடன் அவரது மகன் நடித்தார்.

அதுபோல் நடிகர் சூர்யா தயாரிக்கவுள்ள படத்தில் அருண் விஜய் மகன் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Santhanam’s son to make his debut soon

கமல் படத்தை பார்த்தால் குடும்பமே காலி..; ‘பிக்பாஸ்’ பார்ப்பவர்கள் கெட்டுப் போவார்கள்… – கமல் மீது பாய்ந்த CM பழனிச்சாமி

கமல் படத்தை பார்த்தால் குடும்பமே காலி..; ‘பிக்பாஸ்’ பார்ப்பவர்கள் கெட்டுப் போவார்கள்… – கமல் மீது பாய்ந்த CM பழனிச்சாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanஅரியலூர் மாவட்டத்தில் இன்று புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது…்”லஞ்சம் ஊழலில் அரசு எவ்வழியோ அதிகாரிகள் அவ்வழி’ என கமல் போட்ட ட்வீட் குறித்து முதல்வரிடம் கேள்விகள் கேட்டனர் செய்தியாளர்கள்.

“’கமல் சினிமாவில் ரிட்டையர்ட் ஆகி அரசியலுக்கு வந்துள்ளார்.

கமல் நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதாக இல்லை. நல்லாயிருக்கும் குடும்பத்தை கெடுப்பதுதான் அவர் வேலை.

பிக்பாஸ் நடத்துபவர்கள் அரசியல் செய்தால் எப்படியிருக்கும்?

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை கெட்டுப் போவார்கள்.

எம்.ஜி.ஆர் நாட்டு மக்களுக்காக பாடல்கள் பாடியிருக்கிறார். ஆனால் மக்களுக்காக ஆக்கப்பூர்வமான ஒரு பாடலையாவது பாடியிருக்கிறாரா?

அவருடைய படத்தை பார்த்தால் அதோடு அந்தக் குடும்பம் காலி.

எனவே கமல் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை’’ என கடுமையாக பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

CM Edappaadi Palanisamy slams Kamal Haasan

அனு சித்தாராவின் ‘அமீரா’..; நிரபராதியை தண்டித்தமைக்கு பிராயச்சித்தம் தேடும் போலீசாக சீமான்

அனு சித்தாராவின் ‘அமீரா’..; நிரபராதியை தண்டித்தமைக்கு பிராயச்சித்தம் தேடும் போலீசாக சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ameera filmதம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘அமீரா’.

சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா நாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தை இயக்குநர் ரா.சுப்ரமணியன் இயக்கியுள்ளார்..

படம் பற்றி இயக்குநர் ரா.சுப்ரமணியன் கூறும்போது…

“ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரி, ஒரு கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்து, தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நிறுத்தி, பத்து வருட தண்டனையும் பெற்றுக் கொடுத்து வருகிறார்.

ஆனால் தண்டனைக்காலம் முடிந்து, அந்த குற்றவாளி சிறையில் இருந்து திரும்பிய பின், ஏதேச்சையாக அவரை சந்திக்கும் அந்த போலீஸ் அதிகாரிக்கு, உண்மையான குற்றவாளி அவர் இல்லை என்றும், அவருக்கு தவறாக தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டோம் என்பதும் தெரிய வருகிறது.

இதனால் ஏற்படும் குற்ற உணர்ச்சி காரணமாக, அதற்கு பிராயச்சித்தம் தேடும் விதமாக, உண்மையான குற்றவாளி யார் என தேடி பத்து வருடம் கழித்து மீண்டும் பயணப்படுகிறார் அந்த போலீஸ் அதிகாரி. இதுதான் அமீராவின் கதை” என்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தை வரும் ஜனவரியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளார்கள்..

பல சர்வதேச விருதுகளை குவித்த டூலெட் படத்தின் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான செழியன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

Anu Sithara and Seeman joins for Ameera

More Articles
Follows