‘டான்’ படத்தில் வெற்றி கூட்டணி..: கலாய்த்த சிவகார்த்திகேயனுக்கு செம கவுண்ட்டர் கொடுத்த சூரி

sivakarthikeyan sooriசிவகார்த்திகேயன் & சூரி இணைந்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களில் காமெடிக்கு பஞ்சமிருக்காது.

இந்த படங்களில் ஹீரோயினை விட சூரியுடன் தான் செம கெமிஸ்டரியில் இருந்தார் சிவகார்த்திகேயன்.

இந்த வெற்றி கூட்டணி தற்போது ‘டான்’ படத்தில் இணைகிறது.

இந்த அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

இதனால் டான் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் திரையை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் சந்திப்போம் நண்பா -என்று டுவிட் போட்டார் சூரி.

அதில், ”நண்பா… பஸ்ட் டுவீட்ட ஒழுங்கா படிங்க. அம்புட்டும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்” என்று அவரை கலாய்த்து பதிவிட்டு இருந்தார் சிவகார்த்திகேயன்.

இதற்கு கொஞ்சமும் அசராமல் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட காமெடி காட்சியை பதிலாக பகிர்ந்துள்ளார் சூரி.

Happy to share the scren pace once akain vith my dear most buddy @Siva_Kartikeyan see you at the cambus buddy.. #DON

Buddy first tweeta olunga padi… ambuttum spelling mistake…

Soori’s timing counter to Siva Karthikeyan

Overall Rating : Not available

Related News

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள…
...Read More

Latest Post