தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா நோய் பரவலை தடுக்க அது விழிப்புணர்வு வீடியோக்களை பிரபலங்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் காமெடி நடிகர் சூரி அவரது பாணியில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அது வைரலாகி வருகிறது.
அதில் தனது மகனை குளிப்பாட்டுவது போலவும் பாத்ரூமை க்ளீன் செய்தும் வருகிறார். இடை இடையே விழிப்புணர்வை ஏற்படுத்து பேசுகிறார்.
’மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன். வீட்டுக்குள் இருந்தால் கொரோனா கட்டுப்படும் என்றும் கூறுகிறார்கள். அது வாஸ்தவம் தான்.
ஆனா வீட்டுக்குள் இந்த பக்கிகள் தொல்லையை தாங்கல. எவ்வளவு வேண்டுமானாலும் உதவி செய்றோம்.
எப்படியாவது அந்த கொரோனாவை வெளக்கமாத்தாலே அடித்து துரத்தி விடுங்கள்.
அந்த சீனா பிரதமருக்கு ஒரு போன் போட்டு கொரோனா பிரச்சினைக்கு மூல காரணமாக இருந்த அந்த வவ்வாலையும் பாம்பையும் சாப்பிட்ட பக்கி பயல்களை இனிமேல் சாப்பிடுவியா என வெளக்கமாத்தாலே அடிக்க சொல்லுங்கள். அப்பத்தான் அவர்களுக்கு புத்தி வரும் என பேசியுள்ளார் சூரி.
சத்தியமாக சொல்கிறேன் நம்ம வீட்டின் கழிப்பறையைப் கழுவும் போதே நம்முடைய மூச்சு முட்டுகிறது.
ஆனா சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் ஒவ்வொருவரின் கஷ்டம் எப்படி இருக்கும் என்பது இப்போ தான் எனக்கு புரிந்தது.
உண்மையாகவே சுத்தமானவர்கள் அவர்கள்தான். நீங்கள் எப்போதுமே நன்றாக இருக்கவேண்டும்’ என்று தூய்மைப் பணியாளர்களுக்கும் வணக்கத்தை தெரிவித்துள்ளார்.
Corona day-8 #corona #lockdown #stayhome #staysafe #stayhealthy pic.twitter.com/Ld8DjlCXgb
— Actor Soori (@sooriofficial) April 1, 2020